GK Today - ISRO Robot Vyomamitra for Gaganyaan Mission

ISRO விண்வெளிக்கு அனுப்பும் பேசும் பெண் ரோபோ ‘வயோம மித்ரா’
  • விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ‘வியோம மித்ரா’ (Robot Vyomamitra) என்னும் பேசும் பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. 
  • இந்த ரோபோ விண்வெளியில் வீரர்களின் செயல்பாடுகளை மிகச்சரியாக உருவகப்படுத்தும். அமைப்பு (சிஸ்டம்) சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கும். மனிதர்கள் விண்வெளிக்கு செல்கிறபோது, இந்த ரோபோ உதவிகரமாக இருக்கும்.
Robot Vyomamitra for Gaganyaan Mission
ISRO Robot Vyomamitra for Gaganyaan Mission

ககன்யான் திட்டம்
  • இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானிகள், 2021 டிசம்பர் மாதம் விண்வெளிக்கு விண்கலத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். Gaganyaan: India's maiden human spaceflight mission.
  • இதற்கு முன்னோடியாக இஸ்ரோ, 2020 டிசம்பர் மாதமும், 2021 ஆண்டு ஜூன் மாதமும் ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கிறது.
  • இந்த ஆளில்லா விண்கலத்தில் வயோம் மித்ரா என்ற பேசும் பெண் ரோபோவை இஸ்ரோ அனுப்பி வைக்க உள்ளது.
  • வயோம மித்ரா
  • வயோம் மித்ரா என்பது வயோம், மித்ரா என்ற இரு சமஸ்கிருத வார்த்தைகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள பெயர். வயோம் என்றால் விண்வெளி, மித்ரா என்றால் தோழி என பொருள் ஆகும்.
  • பெங்களூருவில் அறிமுகம்
  • வயோம மித்ரா பேசும் பெண் ரோபோ, பெங்களூருவில் ஜனவரி 22-அன்று ‘மனித விண்வெளிப்பயணம் மற்றும் ஆய்வு, தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால போக்கு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
Previous Post Next Post