TNPSC Current Affairs December 6-7, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 6, 2019 and December 7, 2019 for forthcoming various TNPSC and Governmnet exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 6-7, 2019
சர்வதேச நிகழ்வுகள்
இணைய வர்த்தக துரித சேவை நாடுகள் பட்டியல் - இந்தியா 73-வது இடம்
 • ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டின் மின்னணு வணிகம் தொடர்பான குறியீட்டு எண்ணில் 152 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 
 • இந்தியா 73-வது இடம்: இணைய வர்த்தக துறையில் துரித சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் இருக்கிறது.
 • நெதர்லாந்து முதலிடம்: இப்பட்டியலில் நெதர்லாந்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து (2), சிங்கப்பூர் (3), பின்லாந்து (4), இங்கிலாந்து (5) முதல் 5 இடங்களில்) உள்ளன.
ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவர் 'உர்சுலா வான் டெர் லேயன்'
 • சமீபத்தில் உர்சுலா வான் டெர் லேயன் (வயது 60) என்ற பெண்மணி ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக டிசம்பர் 1, 2019 முதல் பொறுப்பேற்றுள்ளார். 
 • உர்சுலா (Ursula von der Leyen), ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான முதல் பெண் தலைவர் ஆவார். 
 • உர்சுலா மகப்பேறு மருத்துவர் மற்றும் ஒரு ஜெர்மன் அரசியல்வாதி ஆவார். 
 • ஐரோப்பிய ஆணையம் (European Commission) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) நிர்வாகக் கிளையாகும், இது சட்டத்தை முன்மொழிகிறது, முடிவுகளை செயல்படுத்துகிறது, ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தங்களை நிலைநிறுத்துகிறது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்றாட வணிகத்தை நிர்வகிக்கிறது.
மொரீஷியஸின் புதிய அதிபர் 'பிரிதிவிராஜிங் ரூபன்'
 • மொரீஷியஸின் புதிய அதிபராக 'பிரிதிவிராஜிங் ரூபன்' (Pritivirajsing Roopun) நியமிக்கப்பட்டுள்ளார், டிசம்பர் 3, 2019 அன்று பொறுப்பேற்றார்.
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவின் முதல் கடல்சார் அருங்காட்சியகம் - லோத்தல்
 • இந்தியாவின் முதல் கடல்சார் அருங்காட்சியகம் (Maritime Museum) குஜராத் மாநிலத்தின் லோத்தல் (Lothal) எந்த இடத்தில் நிறுவப்பட உள்ளது.
 • இந்த அருங்காட்சியகம், இந்தியப் பெருங்கடல் பெருங்கடல் பகுதிகளில் மீட்கப்பட்ட கடற்சார் பொருட்களின் காட்சியைக் கொண்டிருக்கும், கடல்சார் தொல் பொருட்களுக்கான ஒரு சுயாதீன ஆராய்ச்சி மையமாகவும் செயல்படஉள்ளது. 
 • லோத்தல் பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின் தெற்கில் அமைந்த நகரம் ஆகும், தற்போது குஜாராத்தில் ஷம்சினித்துள்ளஸிஹி/ பால் பகுதியில் அமைந்துள்ளது.
இந்தியாவின் முதல் 'ஈட் ரைட் ஸ்டேஷன்' - மும்பை மத்திய முனையம்
 • மும்பை நகரத்தின் மத்திய ரயில் நிலையம் (Mumbai Central Terminus) உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான FSSAI-அமைப்பின் மூலம் ‘ஈட் ரைட் ஸ்டேஷன்’ (Eat Right Station) என்று சான்றிதழ் பெற்ற முதலாவது ரயில் நிலையம் என்ற சான்றிதழ் பெற்றுள்ளது.
கீரிப்பிள்ளையை பாதுகாக்க 'ஆபரேஷன் கிளீன் ஆர்ட்' 
 • இந்தியாவில் கீரிப்பிள்ளை (Mongoose) இனத்தை பாதுகாக்க ஆபரேஷன் கிளீன் ஆர்ட் (Operation Clean Art) என்ற நடவடிக்கை வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் (WCCB) மேற்கொண்டுள்ளது. 
 • கீரிப்பிள்ளை முடியின் சட்டவிரோத வர்த்தகத்தை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
 • WCCB: Wildlife Crime Control Bureau.
ஸ்வீடன் உதவியுடன் இந்தியாவில் 'சுகாதார கண்டுபிடிப்பு மையம்'
 • ஸ்வீடன் நாட்டின் உதவியுடன் இந்தியா சுகாதார கண்டுபிடிப்பு மையம் (Healthcare Innovation Centre) அமைக்க உள்ளது. தொற்றுநோயற்ற துறைகளில் பரவலாக இந்திய தொடக்க நிலை நிறுவனங்களுக்கு உதவும் வகையிழும், இந்தியா-ஸ்வீடன் சுகாதார ஒத்துழைப்பின் 10 ஆண்டுகளை குறிக்கும் வகையிலும் இந்த சுகாதார கண்டுபிடிப்பு மைய ஒப்பந்தம் கையெதிடப்பட்டுள்ளது.
ஒடிசா அரசின் 'பிஜு சாஷ்திகாரன் யோஜனா'
 • ‘பிஜு சஷ்திகாரன் யோஜனா’ (Biju Sashaktikaran Yojana) என்ற திட்டத்தின் கீழ் திறமையான பிளஸ் டூ (+2)மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.
வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2019 
 • கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதற்காக 2019 டிசம்பர் 2 ஆம் தேதி மக்களவையில் வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2019 (Taxation Laws (Amendment) Bill, 2019) நிறைவேற்றபட்டது. இதற்காக வருமான வரி சட்டம் 1961-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
STRIDE திட்டம் - தமிழ்நாட்டில் 4 பல்கலைக்கழகங்கள், 3 கல்லூரிகள் தேர்வு
 • இந்தியாவின் வளரும் பொருளாதார ஒழுங்கு ஆராய்ச்சி திட்டம் (STRIDE) என்ற திட்டம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சாகத்தால் ஜூலை 1, 2019 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அதன் ஆராய்ச்சித்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. 
 • நடப்பு கல்வியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் செயல்பட, நாடு முழுவதும் உள்ள 16 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
 • தமிழ்நாட்டில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அவினாசி லிங்கம் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களும், வ.உ.சி., ஹோலி கிராஸ் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் ஆகிய 3 கல்லூரிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 • STRIDE: Scheme for Trans-disciplinary Research for India’s Developing Economy
பாதுகாப்பு/விண்வெளி
ஹேண்ட்-இன்-ஹேண்ட் கூட்டு இராணுவப் பயிற்சி-2019
 • ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைப்படி பயங்கரவாத எதிர்ப்பு கருப்பொருளைக் கொண்ட 8-வது இந்தியா-சீனா கூட்டு இராணுவப் பயிற்சி 2019, ‘HAND-IN-HAND 2019’ என்ற பெயரில், டிசம்பர் 07 முதல் 20 வரை மேகாலயாவின் உம்ரோய் நகரில் நடத்தப்படுகிறது.
TNPSC Current Affairs December 6-7, 2019 - View and as Download PDF

RISAT-2BR1 செயற்கோள் - தகவல்கள் 
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO), பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ‘RISAT-2BR1’ செயற்கைகோளை சுமந்தபடி PSLV-C48 ராக்கெட், டிசம்பர் 11-ந்தேதி மாலை 3.25 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்படுகிறது. 
 • இந்த ராக்கெட்டில் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள்கள் வீதம் 3 செயற்கைகோள்களும், அமெரிக்காவை சேர்ந்த 6 செயற்கைகோள்களும் என மொத்தம் 9 செயற்கைகோள்கள் வணிக ரீதியிலாக விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.
 • RISAT-2BR1 என்பது ‘ராடார் இமேஜிங் சாட்டிலைட்’ (Radar imaging earth observation satellite) ஆகும். 
 • PSLV-C48, பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 50-வது ராக்கெட்டாக இது திகழ்கிறது. மோட்டார்களில் திட எரிபொருள் நிரப்பப்படாமல் அனுப்பப்படும் 16-வது ராக்கெட்டும் இது ஆகும். அதேபோல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டில் இது 75-வது ராக்கெட்டாகும். 
 • முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 37-வது ராக்கெட் என்ற பெருமையையும் இது பெறுகிறது. பூமியில் இருந்து 576 கி.மீ. தூரத்தில் உள்ள புவிவட்டப்பாதையில் 37 டிகிரியில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட உள்ளது.
மாநாடுகள்
நேட்டோ உச்சி மாநாடு 2019 
 • 2019-ஆண்டுக்கான நேட்டோ உச்சி மாநாடு (2019 NATO Summit) லண்டன் நகரில் டிசம்பர் 3-4 தேதிகளில் நடைபெற்றது.
 • வட அட்லாண்டிக் கூட்டணி என்றும் அழைக்கப்படும் NATO அமைப்பு 29 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ஒரு இராணுவக் கூட்டணியாகும். இந்த அமைப்பு ஏப்ரல் 4, 1949 இல் கையெழுத்திடப்பட்ட வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்துன் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
குறும்படப் போட்டி 'வட்டாவரன்-2019' 
 • சுற்றுச்சூழல் குறித்த வட்டாவரன்-2019 (VATAVARAN-2019) என்ற பெயரிலான, முதலாவது குறும்படப் போட்டி மற்றும் விருதுகள் வழங்கும் விழா, புது தில்லி நகரத்தில் நவம்பர் 27 முதல் 30 அரை நடைபெற்றது. 
 • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF & CC) ஏற்பாட்டில் இந்த விழா நடைபெற்றது.
விருதுகள்
உறுப்பு தான விருதுகள்-2019
 • 10-வது தேசிய உறுப்பு தானம் தினம் விருதுகள் (Organ Donation Awards 2019) வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது. 2019-ஆண்டிற்கான உறுப்பு தானம் விருதுகள் பெற்ற மாநிலங்கள்/மருத்துவமனை விவரம்: 
 • உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநில விருது (Best State Award in cadaveric organ donation) தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக வழங்கப்பட்டது.
 • மத்தியப் பிரதேசம், சிறந்த சோட்டோ மாநில உறுப்பு திசு மாற்று அமைப்பு விருது (Best SOTTO) வென்றது.
 • சிறந்த செயல்திறன் கொண்ட மருத்துவமனை விருதை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வென்றது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
குழந்தைகள் மருத்துவமனையில் 'இயற்கை மருத்துவ சிகிச்சை' அறிமுகம்
 • ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை எழும் பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
தேசிய சீக்கிய விளையாட்டு 2020 
 • 2020 தேசிய சீக்கிய விளையாட்டு (National Sikh Games), புதுடெல்லியில், 2020 ஜனவரி 9-11 வரை நடைபெறுகிறது. குரு நானக் தேவின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது.
கிரிக்கெட்

ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது 2019: நியூசிலாந்து
 • நியூசிலாந்து 2019 கிறிஸ்டோபர் மார்ட்டின்-ஜென்கின்ஸ் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வென்றது.
 • நியூசிலாந்தின் தேசிய கிரிக்கெட் அணிக்கு 2019-ஆம் ஆண்டிற்கான கிறிஸ்டோபர் மார்ட்டின்-ஜென்கின்ஸ் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது (Christopher Martin-Jenkins Spirit of Cricket award 2019) வழங்கப்பட்டது. 
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் - ஆமதாபாத், குஜராத் 
 • உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. 
 • ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தை விட பெரியதாகும். மொத்தம் 11 ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது. மழை பெய்தால் 30 நிமிடத்திற்குள் தண்ணீர் வெளியேறும் வகையில் நவீன வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 
 • சர்தார் பட்டேல் பெயரிலான இந்த புதிய ஸ்டேடியம், 2020 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மைதானம் தயாராகி விடும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை - டிசம்பர் 4, 2019
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை டிசம்பர் 4-அன்று வெளியிட்டது. 
 • இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘முதல்’ இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 • மட்டை வீச்சாளர் 
  1. விராட் கோலி (இந்தியா)
  2. ஸ்டிவன் சுமித் (ஆஸ்திரேலியா)
  3. கேனே வில்லியம்சன் (நியூசிலாந்து) 
  4. சித்தேஸ்வர் புஜாரா (இந்தியா)
  5. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
 • பந்து வீச்சாளர் 
  1. பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
  2. காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா)
  3. ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) 
  4. நீல் வாக்னெர் (நியூசிலாந்து) 
  5. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)
 • அணிகள் தரவரிசை
  1. இந்தியா
  2. நியூசிலாந்து 
  3. இங்கிலாந்து 
  4. தென்ஆப்பிரிக்கா
  5. ஆஸ்திரேலியா 
பாப் வில்லீஸ் காலமானாா்
 • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பாப் வில்லீஸ் (70) உடல்நலக்குறைவால் காலமானாா்.
செஸ்

செஸ் தரவரிசை 2600 புள்ளிகள்: முதல் இளம் இந்திய வீரா் - பிரக்ஞானந்தா
 • சா்வதேச செஸ் தரவரிசையில் 2600 (Elo rating) புள்ளிகளை குவித்த முதல் இளம் இந்திய வீரா் மற்றும் உலகின் இரண்டாவது வீரா் என்ற சாதனையை தமிழகத்தின் ஆா்.பிரக்ஞானந்தா (R. Praggnanandhaa) படைத்துள்ளாா்.
 • சென்னையைச் சோ்ந்த பிரக்ஞானந்தா, தற்போது இந்திய செஸ் வட்டாரத்தில் அனைவராலும் திரும்பிக் பாா்க்கப்படம் வீரராக திகழ்கிறாா்.
முக்கிய தினங்கள்  
பழங்குடியினர் நம்பிக்கை தினம் - டிசம்பர் 1 
 • அருணாச்சல பிரதேசத்தின் தேஜு நகரில் பழங்குடியினர் நம்பிக்கை தினம் (Indigenous Faith Day), 2019 டிசம்பர் 1 அன்று கொண்டாடப்பட்டது.
 • இந்த நாள் மாநிலத்தின் வளமான கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.
சர்வதேச சிவில் விமான நாள் (International Civil Aviation Day) - டிசம்பர் 7
 • 2019 சர்வதேச சிவில் விமான தின மையக்கருத்து: 75 Years of Connecting the World
கொடிநாள் - டிசம்பர் 7
 • முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரா்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரா்களை, அவா்களது குடும்பத்தினரைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிச. 7 அன்று படைவீரா் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
 • கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.
Previous Post Next Post