TNPSC Current Affairs December 4-5, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 4, 2019 and December 5, 2019 for forthcomong various TNPSC and Governmnet exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 4-5, 2019
சர்வதேச நிகழ்வுகள்
கிம் ஜாங் அன்-இன் கனவு நகரம் ‘சம்ஜியோன்’ 
  • வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் (Kim Jong-un, North Korea) தனது கனவு திட்டங்களில் ஒன்றான நவீன நகரத்தை, நவம்பர் 3-அன்று  திறந்துவைத்தார். 
  • Samjiyon: இந்த நகரத்துக்கு ‘சம்ஜியோன்’ (Samjiyon) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம் ஒரு “சோசலிச கற்பனாவாதமாக” நகரமாக  (Socialist Utopia) கருதப்படுகிறது. 
  • கிம் ஜாங் அன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்டு மலைக்கு (Mount Paektu) அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன்அமைந்துள்ள இந்த நகரத்தில் 4000 குடும்பங்கள் வாசிக்க முடியும்.
இந்தியா-ஸ்வீடன் - 'சுகாதாரத் துறை ஆராய்ச்சி ஒப்பந்தம்'
  • இந்தியாவும், ஸ்வீடனும் சுகாதாரத் துறையில் ஒருங்கிணைந்து பணியாற்றத் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, ஜோத்பூா் எய்ம்ஸ் மருத்துவமனை, ஸ்வீடன் வா்த்தக ஆணையம் ஆகியவை சுகாதார ஆராய்ச்சிக்கான மையத்தை அமைக்க ஒப்புக்கொண்டன. 
  • இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது. புற்றுநோய், தொற்றாநோய் தடுப்பு ஆராய்ச்சியில் இந்த மையம் ஈடுபடவுள்ளது. 
இந்திய நிகழ்வுகள்
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் '2020 ஜூன் 1 முதல் அமல்'
  • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் (One Nation One Ration Card), 2020 ஜூன் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி தகுதியுள்ள பயனாளிகள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் அதே ரேஷன் கார்டு மூலம் வாங்க முடியும்.
  • இந்திய தர அமைப்பு (BIS): இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்டத்தை இந்திய தர அமைப்பை (BIS-Bureau of Indian Standards) தயாரித்துள்ளது. இந்திய தர அமைப்பு 20 ஆயிரம் பொருட்களுக்கு இந்திய தரத்தை முறைப்படுத்தி உள்ளது. 51 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பல்வேறு தயாரிப்புகள் இந்திய தரத்துக்கு இருப்பதாக அனுமதி வழங்கி உள்ளது.
பஞ்சாபில் 'பெண்களுக்கு இரவில் இலவச போலீஸ் வாகன வசதி' திட்டம் 
  • இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை (Free Police Drop Fcility for Women at Night)  பஞ்சாப் மாநில அரசு டிசம்பர் 3-அன்று அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 
  • இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களுக்கான இலவச வாகன வசதி அளிக்கப்பட உள்ளது. 
  • "100, 112, 181 ஆகிய அவசர உதவி எண்களில் தொடர்புகொண்டு, காவல்துறையிடம் பாதுகாப்பான பயண வசதியை பெண்கள் கோரலாம்.
SPG சட்டத் திருத்த மசோதா-2019: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் 
  • முன்னாள் பிரதமா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்யும் நோக்கில் சிறப்பு பாதுகாப்புப் படை (SPG Amendment Bil 2019) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
டாமன்-டையூ, தாத்ரா-நாகா் ஹவேலி இணைப்பு மசோதா - நிறைவேற்றம் 
  • குஜராத்துக்கு அருகே அமைந்துள்ள டாமன்-டையூ மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களை ஒன்றாக இணைப்பதற்கான மசோதா (Dadra and Nagar Haveli and Daman and Diu (Merger of Union Territories) Bill, 2019) நாடாளுமன்றத்தில் (இரு அவைகளிலும்) டிசம்பர் 3-அன்று நிறைவேறியது. 
  • புதிய யூனியன் பிரதேசம், ‘தாத்ரா-நாகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ’ (Dadra and Nagar Haveli and Daman) என்று அழைக்கப்படவுள்ளது. 
  • 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 10-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக தாத்ரா-நாகா் ஹவேலி பகுதி, யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
  • 12-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் டாமன்-டையூ பகுதி, யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 
நியமனங்கள்
ஆல்ஃபாபெட் தலைமைச் செயல் அதிகாரியாக 'சுந்தர் பிச்சை' நியமனம்
  • தொழில்நுட்ப பெருநிறுவனமான கூகுளின் (Google) தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (Chief Executive Officer), கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை (Sundar Pichai) டிசம்பர் 3-அன்று நியமிக்கப்பட்டார். 
  • இந்த நியமனம் மூலம், கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் ஆகிய இரு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக இனி சுந்தர் பிச்சை செயல்படவுள்ளார்.
  • ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராகவும் சுந்தர் பிச்சை தொடர்கிறார்.
  • கூகுள் இணை நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் ப்ரின் ஆகியோர் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக ஆதிகாரி, பங்குதாரர்கள் ஆகிய பணிகளில் தொடர்ந்து பணியாற்றவுள்ளனர். 
விருதுகள்
பேலன் தோர் கால்பந்து விருதுகள் 2019 


2020 Ballon d'Or receipents
2019 Ballon d'Or Receipents
  • பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதுகள், பேலன் தோர் விருது (Ballon d’Or 2019) என்ற பெயரில் வழங்கப்படுகிறது. 
  • 2019 பேலன் தோர் விருதுகள் 
    • சிறந்த கால்பந்து வீரர் - லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), அர்ஜென்டினா
    • சிறந்த கால்பந்து வீராங்கனை - மேகன் ராபினோ (Megan Rapinoe), அமெரிக்கா 
    • சிறந்த ஆண் கோல்கீப்பருக்கான யாஷின் கோப்பை (Yashin Trophy) - அலிசன் பெக்கர் (Alisson Becker), பிரேசில்.
    • 21 வயதுக்குட்பட்ட ஆண் வீரருக்கான கோபா கோப்பை (Kopa Trophy) -  மத்திஜ்ஸ் டி லிக்ட் (Matthijs de Ligt), நெதர்லாந்து.
பொருளாதார நிகழ்வுகள் 
ரூ.17,900 கோடி நிதி மோசடி - 51 பேர் வெளிநாடுகளில் தலைமறைவு 
  • இந்தியாவில் ரூ.17,900 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்து விட்டு 51 போ் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த நிதி மோசடி தொடா்பாக 66 வழக்குகளை CBI பதிவு செய்துள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
2020-இல் இதுவரை இல்லாத வகையில் அதிகரிக்கும் 'புவி வெப்பம்' 

  • ஐ.நா.வின் ‘உலக வானிலை அமைப்பு’ 2020-ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு புவியின் வெப்பம் அதிகரிக்கும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் விவரம்:
  • அதிக புவி வெப்பம் கொண்ட ஆண்டு 2019: தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட உலகின் வெப்பநிலை இந்த ஆண்டில் இதுவரை 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. இதன் மூலம், இதுவரை 
  • பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக புவி வெப்பம் கொண்ட 3 ஆண்டுகளில் ஒன்றாக 2019-ஆம் ஆண்டு ஆகியுள்ளது.
  • பெட்ரோலியப் பொருள்களை எரிப்பது, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, பயிா் வளா்ப்பு, சரக்குப் போக்குவரத்து ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு காா்பன் பொருள்கள் இந்த ஆண்டு கலக்கவிருக்கின்றன. இதன் காரணமாக, புவியின் வெப்பம் மேலும் அதிகரிக்கும். 
  • பதின்ம ஆண்டுகளிலேயே 2020-ஆம் ஆண்டில் முடியும் பதின்ம ஆண்டில்தான் புவியின் வெப்பம் மிக அதிகமாக இருக்கவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 'கம்முரி புயல்'

  • பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசோன் தீவை டிசம்பர் 3-அன்று சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலுக்கு ‘கம்முரி’ என பெயரிடப்பட்டுள்ளது.
  • கம்முரி புயல் இந்த ஆண்டு பிலிப்பைன்சை தாக்கிய 20-வது புயல் ஆகும்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
குடிநீர், கழிவுநீர் மேலாண்மை - ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.1,475 கோடி நிதியுதவி
  • தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டம்: ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி பெற்று குறிப்பிட்ட சில நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிக்காக ரூ.1209.87 கோடி செலவிடப்பட்டு, தற்போது அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இதன் இரண்டாவது திட்டத்திற்காக, தமிழகத்தின் 10 நகரங்களில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.1,474.75 கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளன. 
  • 10 நகரங்கள்: இதன் மூலம் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 10 நகரங்களில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. 
  • இலக்கில் 4 நகரங்கள்: இந்தத் திட்டம் தற்போது ஆம்பூர், திருச்சி, திருப்பூர், வேலூர் ஆகிய 4 நகரங்களை இலக்காக கொண்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2020
  • 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 2020 ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது, மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.
துப்பாக்கி சுடுதல்

உலகின்முதல்நிலை வீராங்கனை இளவேனில் (10 மீ. ஏா் ரைபிள் பிரிவு)
  • துப்பாக்கி சுடுதல் மகளிா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற தகுதியை பெற்றுள்ளார். 
  • ஆண்கள் பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வார் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
தெற்காசிய விளையாட்டு (நேபாள்) 2019
  • 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா டிசம்பர் 3-அன்று 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது. 
  • பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்/வீராங்கனைகள் விவரம்:
    • கைப்பந்து: இரட்டை தங்கப்பதக்கம் (ஆண்கள், பெண்கள் அணி)
    • தடகளம்: 
      • அர்ச்சனா சுசீந்திரன் - தங்கப்பதக்கம் (பெண்கள் 100 மீ. ஓட்டப்பந்தயம், 11.80 வினாடி)
      • ஜாஷ்னா - தங்கப்பதக்கம் (பெண்கள் உயரம் தாண்டுதல், 1.73 மீ.)
      • ருபினா யாதவ் - வெண்கலப்பதக்கம் (பெண்கள் உயரம் தாண்டுதல், 1.69 மீ)
      • சர்வேஷ் அனில் குஷாரே - தங்கப்பதக்கம் (ஆண்கள் உயரம் தாண்டுதல், 2.21 மீ)
      • சேத்தன் பாலசுப்பிரமன்யா - வெள்ளிப்பதக்கம் (ஆண்கள் உயரம் தாண்டுதல், 2.16 மீ)
      • அஜய்குமார் சரோஜ் - தங்கப்பதக்கம் (ஆண்கள் 1,500 மீ. ஓட்டப்பந்தயம்)
      • அஜீத் குமார் - வெள்ளிப்பதக்கம் (ஆண்கள் 1,500 மீ. ஓட்டப்பந்தயம்) 
      • சண்டா - வெள்ளிப்பதக்கம் (பெண்கள் 1,500 மீ. ஓட்டப்பந்தயம்) 
      • சித்ரா பாலாகீஸ் - வெண்கலப்பதக்கம் (பெண்கள் 1,500 மீ. ஓட்டப்பந்தயம்) 
      • கவிதா யாதவ் - வெள்ளிப்பதக்கம் (பெண்கள் 10,000 மீ. ஓட்டப்பந்தயம்) 
    • துப்பாக்கி சுடுதல்
      • இந்திய அணி - தங்கப்பதக்கம் (பெண்கள் 10 மீ. ஏர் ரைபிள் அணிகள் பிரிவு)
      • மெகுலி கோஷ் - தங்கப்பதக்கம் (பெண்கள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவு)
      • ஸ்ரீயங்கா சடாங்கி - வெள்ளிப்பதக்கம் (பெண்கள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவு)
      • ஸ்ரேயா அகர்வால் - வெண்கலப்பதக்கம் (பெண்கள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவு)
    • டேபிள் டென்னிஸ்: இரட்டை தங்கப்பதக்கம் (ஆண்கள், பெண்கள் அணி)
பேட்மிண்டன்

பேட்மிண்டன் தரவரிசை - டிசம்பர் 3, 2019
  • சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை டிசம்பர் வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர்/வீராங்கனைகள் பெற்றுள்ள தரவரிசை விவரம்:
  • தரவரிசையில் டாப்-30 இடத்திற்குள் 6 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 
  • ஆண்கள் பிரிவு - சாய் பிரனீத் (11), ஸ்ரீகாந்த் (12), காஷ்யப் (23), சமீர் வர்மா (26), பிரனாய் (27), சவுரப் வர்மா (29), 
  • பெண்கள் பிரிவு - பி.வி.சிந்து (6), சாய்னா நேவால் (10).
முக்கிய தினங்கள்  
டிசம்பர் 4 

இந்திய கடற்படை தினம் - டிசம்பர் 4, 2019

  • இந்திய கடற்படை தினம் (Indian Navy Day) ஆண்டுதோறும் டிசம்பர் 4-ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்திய கடற்படைகளின் சாதனைகள் மற்றும் பங்கை போற்றும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 
  • பின்னணி: 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது டிசம்பர் 4-ம் தேதி கராச்சி துறைமுகம் மீது, இந்திய கடற்படை ரகசிய தாக்குதல் நடத்தியது. 
  • இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் போர் கப்பல்களான ஹபீஸ், கைபார் ஆகிய இரு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது. மேலும் ஷாஜகான் எனும் கப்பல் பலத்த சேதத்திற்கு உள்ளானது. 
  • இந்த தாக்குதல்களுக்கு 'திரிசூலம்' மற்றும் 'மலைப்பாம்பு' எனப் பெயரிடப்பட்டது. இந்த வெற்றியினை கொண்டாடும் விதமாக டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உலக மண் தினம் - டிசம்பர் 5 
  • உணவு பாதுகாப்பு, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் மனித நல்வாழ்வு ஆகியவற்றிற்காக மண்ணின் தரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணரவை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும், டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் (World Soil Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 உலக மண் தின மையக்கருத்து: "Stop Soil Erosion, Save our Future" என்பதாகும். 
சர்வதேச தன்னார்வலர் தினம் - டிசம்பர் 5 
  • தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்ளின் பங்களிப்புகளைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 5 அன்று சர்வதேச தன்னார்வலர் தினம் (International Volunteer Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 சர்வதேச தன்னார்வலர் தின மையக்கருத்து: "Volunteer for an inclusive future" என்பதாகும்.
கன்னிமாரா பொது நூலகம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நாள் - டிசம்பர் 5 
  • சென்னை கன்னிமாரா பொது நூலகம், பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 
  • அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.
  • இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். .
  • இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.

Previous Post Next Post