TNPSC Current Affairs December 23-24, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 23-24, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 23-24, 2019
சர்வதேச நிகழ்வுகள்
மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டி 2019 
  • புது டெல்லியில் டிசம்பர் 19-அன்று நடைபெற்ற, 2019 மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டியில் (Miss Teen International), இந்தியாவின் வதோதராவைச் சேர்ந்த ஆயுஷி தோலாகியா (Aayushi Dholakia, வயது 16) மகுடம் சூடினார். 
தென்சீன கடல் பகுதியில் உள்ள ‘நைன் டேஷ் லைன்’
  • ஐ.நா.வில் போட்டியிடவிருக்கும் ‘நைன் டேஷ் லைன்’ (Nine Dash Line) தென்சீன கடல் பகுதியில் உள்ள தென் சீனக் கடலில் ஒரு எல்லைக் கோடு ஆகும். 
  • தென் சீனக் கடலின் பெரும்பகுதியின் மீது இறையாண்மையைக் கோருவதற்கு இது சீனாவால் இந்த கோடு பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த எல்லை கொட்டின் மீதான தனது உரிமையை மலேஷியா, ஐக்கிய நாடுகள் சபையில் ‘பிரத்தியேக பொருளாதார மண்டலம்’ கருத்துடன் கோரியுள்ளது. 
மேற்கு ஆசியாவில் (இஸ்ரேல்) போர்க்குற்றங்களை ஆராயும் 'ICC'
  • நெதர்லாந்தின் தி ஹேக்கில் உள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரோம் சட்டபிரிவு (Rome Statute) ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்டது. இந்த நீதிமன்றம், மேற்கு ஆசியாவில் காசா மற்றும் மேற்குக் கரை பிராந்தியத்தில் இஸ்ரேல் நாடு மீதான போர்க்குற்றங்கள் குறித்து ஆராய முயல்கிறது. இருப்பினும், இஸ்ரேல் ரோம் சட்டத்தில் தான் கையொப்பமிடவில்லை, எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகார வரம்பு கீழ் இசுரேல் வரவில்லை எண்டு தெரிவிக்கிறது.
  • ICC: International Criminal Court.
போப் பிரான்சிஸ் றது செய்த் 'போன்டிஃபிகல் ரகசிய விதி'
  • சிறார்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளுக்கு பொருந்தக்கூடிய ‘போன்டிஃபிகல் ரகசிய விதி'யை (pontifical secrecy’ rules) தற்போதைய போப் ஆண்டவர் போப் பிரான்சிஸ் (Pope Francis) அவர்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • போன்டிஃபிகல் ரகசியம் என்பது, ரோமன் கத்தோலிக்க திருச்சபையும், போப்பாண்டவர் தூதரகங்களுக்கிடையேயான தகவல்தொடர்புகள் போன்ற சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க அனுமதிக்கிறது. இது ‘ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் நியதிச் சட்டத்திற்கு’ உட்பட்டது.
ரஷ்யா மீது பொருளாதார தடை ஏற்படுத்தும் 'DASKA' சட்டம் 
  • அமெரிக்கா அரசால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் 'DASKA', ரஷ்யா நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துகிறது.
  • நேட்டோ மீதான உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துதல், இணைய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் - பல முனைகளில் ரஷ்யாவை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் திறனை வலுப்படுத்த இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • DASKA: Defending American Security from Kremlin Aggression Act.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தியா-சீனா கூட்டு இராணுவப் பயிற்சி 'HAND-IN-HAND 2019'
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைப்படி பயங்கரவாத எதிர்ப்பு கருப்பொருளைக் கொண்ட, “கையோடு கை-2019” (HAND-IN-HAND 2019) என்னும் பெயரில், இந்தியா-சீனா கூட்டு இராணுவப் பயிற்சி, டிசம்பர் 7 முதல் 20 வரை, மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரிலுள்ள உம்ராய் (Umroi, Meghalaya) ராணுவ முகாமில் நடைபெற்றது.
  • இரு நாட்டுத் தரைப்படைகள் நடத்திய 8-ஆவது பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுப் பயிற்சி, மற்றும், இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது கூட்டுப் பயிற்சி இதுவாகும்.
  • 14 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டுப் பயிற்சியில், இரு நாடுகள் முறையே 130 படை அதிகாரிகளை அனுப்பி அணிகளை உருவாக்கின.
விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள் 2019
  • 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு அவர்களால் டிசம்பர் 23-அன்று வழங்கப்பட்டது  
    • தாதாசாகேப் பால்கே விருது (2018) - நடிகா் அமிதாப் பச்சன்
    • சிறந்த திரைப்படம் - ‘ஹெல்லாரோ’ (குஜராத்தி) 
    • சிறந்த நடிகா் - விக்கி கெளசால் (உரி: சா்ஜிக்கல் ஸ்டிரைக்), ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்)
    • சிறந்த திரைப்பட இயக்குநா் - ஆதித்ய தா் (உரி: சா்ஜிக்கல் ஸ்டிரைக்) 
    • தில்லியில் உள்ள விக்யான் பவனில் விருது விழா நடைபெறவுள்ளது.
நியமனங்கள்
கியூபா பிரதமர் - மானுவல் மரேரோ கிருஸ்
  • கியூபா நாட்டின் பிரதமராக, 'மானுவல் மரேரோ கிருஸ்' (Manuel Marrero Cruz) நியமிக்கப்பட்டுள்ளார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல் அவர்களால் பிரதமர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • புரட்சியின் மூலம் கியூபாவின் ஆட்சியை கடந்த 1956-ஆம் ஆண்டு கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ, அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அந்த நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு மாற்றிய அவர், 1976-ஆம் ஆண்டில் அதிபராகப் பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு, கியூபாவில் பிரதமர் பதவியே இல்லாமல் இருந்து வந்தது. 
அமெரிக்க FCC முதல் பெண் தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரி: 'மோனிஷா கோஷ்'
  • அமெரிக்க தகவல் தொடா்பு ஆணையத்தின் (Federal Communications Commission), முதல் பெண் தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக (Chief Technology Officer) மோனிஷா கோஷ் (Monisha Ghosh) என்ற இந்திய அமெரிக்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆப்கானிஸ்தான் அதிபராக மீண்டும் 'அஷ்ரப் கனி
  • ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதய அதிபர் அஷ்ரப் கனி (Ashraf Ghani) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
மாநாடுகள்
இந்தியா-ஈரான் 19-ஆவது கூட்டுக் குழுக் கூட்டம்-2019
  • இந்தியா-ஈரான் இடையேயான 19-ஆவது கூட்டுக் குழுக் கூட்டம் டிசம்பர் 23-24 தேதிகளில் ஈரானில் நடைபெறுகிறது. 
  • சாப்ஹாா் துறைமுகம்: ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து சாப்ஹாா் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது. இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சா்களிடையே அண்மையில் நடைபெற்ற 2+2 பேச்சுவாா்த்தையின்போது, சாப்ஹாா் துறைமுகப் பணிகளுக்குப் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்களிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது. 
  • சாப்ஹாா் ஒப்பந்தத்தின் கீழ் 'மர்மகோவா துறைமுகம்: சாப்ஹாா் ஒப்பந்தத்தின் கீழ் மர்மகோவா (Mormugoa) துறைமுகம் சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. ஈரானில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சபாஹர் துறைமுகத்தை இந்தியாவுடன் இணைக்கும் வகையில் ஏற்கனவே ஜே.என்.பி.டி, முந்த்ரா, காண்ட்லா மற்றும் கொச்சின் புதிய மங்களூர் துறைமுகங்கள் இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை இணைந்து மேற்கொண்ட சபாஹர் ஒப்பந்தத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.
CII வருடாந்திர சுற்றுலா உச்சி மாநாடு 2019
  • 15-ஆவது CII வருடாந்திர சுற்றுலா உச்சி மாநாடு 2019, டிசம்பர் 19-21 தேதிகளில் புது டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிதிஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் பங்கேற்ற்றார்.
  • இந்தியா கடந்த 2018-ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையின் மூலம் 2,860 கோடி டலாா் வருவாய் ஈட்டியது. இதனை நாம் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 5,000 கோடி டாலராக அதிகரிக்க வேண்டும்.
  • சா்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருவாயைப் பொருத்தவரை, மொத்த உலகளாவிய வருவாயில் இந்தியா 1.97 சதவீத பங்கை கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையின் எண்ணிக்கையிலும் 1.2 சதவீத பங்கை இந்தியா பெற்றுள்ளது. 
ஹார்பின் பனி திருவிழா 2020
  • ஹார்பின் பனி திருவிழா (Harbin Ice Festival 2020) என்பது சீனாவில் ஒரு கருப்பொருளுடன் நடைபெறும் ஆண்டு குளிர்கால விழாவாகும். இது உலகின் மிகப்பெரிய பனி திருவிழாவாகும்.
  • 2020-ஆம் ஆண்டின் பனி திருவிழா ஜனவரி 5 முதல் பிப்ரவரி 17-வரை, "20-year Grand Ceremony & Review" என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
காலநிலை மாற்றம்: அரசாங்கம் பொறுப்பு - நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு 
  • காலநிலை மாற்ற நடவடிக்கைக்கு அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும் என நெதர்லாந்து நாட்டின் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • அடுத்த ஆண்டு இறுதிக்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அரசாங்கம் 25% குறைக்க வேண்டும் என்று அடிப்படை உரிமை: நெதர்லாந்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மேலும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கு உண்டு என்பதையும் இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியது. 
அறிவியல் தொழில்நுட்பம்
மனித செயல்களை பிரதிபலிக்கும் ரோபோ 'T-HRS3' 
  • மனித செயல்களை பிரதிபலிக்கும் திறன் கொண்ட 'T-HRS3' என்ற மனித ரோபோவை, டொயோட்டா மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த ரோபோவை ஹெட்செட் மற்றும் வயரிங் பொருட்களை பயன்படுத்தி தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். 
முக்கிய நபர்கள் 
எழுத்தாளர் நஞ்சுண்டன் - காலமானார் 
  • எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் டிசம்பர் 21-அன்று காலமானார். 
  • சேலத்தில் பிறந்த நஞ்சுண்டன் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பேராசியராக பணிபுரிந்தார். 'சிமெண்ட் பெஞ்சுகள்', 'மாற்றம்' என்ற கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் பல ஆண்டுகள் பகுதி நேர ஆலோசகராக பணிபுரிந்தார். நல்ல மொழிபெயர்ப்பாளர், கவிஞரான இவர், கன்னடத்திற்கும் தமிழுக்கும் இடையில் இலக்கியம் வழியான இணைப்பை முன்னெடுத்தவர்.
விளையாட்டு நிகழ்வுகள்
கால்பந்து

கிளப் உலக கோப்பை 2019: 'லிவர்பூல் அணி' சாம்பியன் 
  • கத்தாரில் நடந்த கிளப் அணிகளுக்கான, FIFA 2019 உலக கோப்பை கால்பந்து போட்டியில், லிவர்பூல் (இங்கிலாந்து) அணி சாம்பியன் பட்டம் வென்றது. லிவர்பூல் கிளப் அணி 1-0 என்ற கோல் கணக்கில், பிளமிங்கோ (பிரேசில்) அணியை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை வென்றது. சாம்பின்ய்ஸ் லீக் கோப்பை, UEFA சூப்பா் கோப்பை போன்றவற்றுடன், கிளப் உலகக் கோப்பையையும் லிவா்பூல் அணி வென்றுள்ளது.
கார்பந்தயம்

FMSCI தேசிய கார்பந்தயம் 2019 - 'கௌரவ் கில்' சாம்பியன்
  • கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற 2019 FMSCI தேசிய காா்பந்தய போட்டியில் முதல்நிலை வீரா் கௌரவ் கில் (ஜே.கே.டயா் அணி), 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா்.
டென்னிஸ்

முபாடலா உலக டென்னிஸ் 2019: 'ரபெல் நடால்' சாம்பியன்
  • அபுதாபியில் நடந்த, முபாடலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் (Mubadala World Tennis Championship) போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
ITF உலக சாம்பியன் விருதுகள் 2019
  • சா்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ITF) உலக சாம்பியன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2020 ஜூன் 2 அன்று பாரிஸ் நகரில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 
    • ஆண்கள் பிரிவு - ரபேல் நடால் (ஸ்பெயின்)
    • பெண்கள் பிரிவு - ஆஷ்லி பா்டி (ஆஸ்திரேலியா)
    • ATP மீண்டு வந்த வீரா் விருது - ஆன்டி முா்ரே (இங்கிலாந்து)
  • ஆஷ்லி பா்டி: உலகின் நம்பா் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பா்டி, 2019 பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தையம், 2019 WTA இறுதி சுற்று பட்டத்தையும் வென்றவர்ஆவார். 
  • ரபேல் நடால்: உலகின் நம்பா் ஒன் வீரராக நான்காவது முறையாக சீசனை நிறைவு செய்யும் நடால், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் பட்டங்களை வென்றாா். மேலும் டேவிஸ் கோப்பை பட்டத்தை ஸ்பெயின் வெல்லவும் உதவினாா். இதற்காக அவருக்கு ITF-ன் ஸ்டெபான் எட்பா்க் விருது மூன்றாவது முறையாக தரப்படுகிறது. 
கிரிக்கெட் 

இந்திய-மே.இ.தீவுகள் ஒரு நாள் தொடர் 2019
  • இந்திய அணி கைப்பற்றியது: இந்திய-மே.இ.தீவுகள் அணிகள் இடையே இடையாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது. 
  • 10ஆவது ஒருநாள் தொடர்: இது இந்தியா தொடா்ந்து கைப்பற்றும் 10ஆவது ஒருநாள் தொடராகும்.
  • மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக. T20 போட்டி தொடரையும் 2-1 என ஏற்கெனவே இந்திய அணி கைப்பற்றியது. 
ஒரு நாள் கிரிக்கெட் 2019: ரோகித் சர்மா (1,490 ரன்கள்) முதலிடம் 
  • இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 2019-ஆம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 சதம், 6 அரைசதம் உள்பட 1,490 ரன்கள் (28 ஆட்டம்) குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். 
  • 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் (1,377 ரன்), 3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப்பும் (1,345 ரன்) உள்ளனர்.
ஒரு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் - ரோகித் சர்மா (2,442 ரன்கள்)
  • ரோகித் சர்மா இந்த ஆண்டில் மூன்று வடிவிலான சர்வதேச போட்டியையும் சேர்த்து (ஒரு நாள் போட்டியில் 1490 ரன், டெஸ்டில் 556 ரன், 20 ஓவர் போட்டியில் 396 ரன்) மொத்தம் 2,442 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் என்ற இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவின் (1997-ம் ஆண்டில் 2,387 ரன்) 22 ஆண்டு கால சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
முக்கிய தினங்கள் 
விவசாயிகள் தினம் - டிசம்பர் 23 
  • ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' (National Farmers Day 2019)கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 1979 ஜூலை மாதம், நாட்டின் 5-வது பிரதமராக பதவியேற்ற சவுத்ரி சரண் சிங் (Chaudhary Charan Singh), 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டம், 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா' ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.
  • தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
Previous Post Next Post