TNPSC Current Affairs December 25, 2019 - View and Download PDF

Current Affairs December 25th 2019

TNPSC Current Affairs December 25, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 25, 2019
சர்வதேச நிகழ்வுகள்
ஆப்பிரிக்காவின் கொம்பு - சிறு தகவல் 
 • 2019 அமைதிக்கான நோபல் பரிசு வென்ற எத்தியோப்யா நாட்டு பிரதமர் அபி அகமது, சமீபத்தில் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா (Horn of Africa) பகுதியில் அமைதி நிலவ வென்றும் என்று அழைப்பு விடுத்திருந்தார். 
 • ஆப்பிரிக்காவின் கொம்பு (ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா) என்பது ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியில் ஒரு தீபகற்ப பகுதி (Peninsula) ஆகும். 
 • இது அரேபிய கடலில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. இது ஏடன் வளைகுடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளான ஜிபூட்டி, எரிட்ரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு பண்பாட்டு தாயகமாக கருதப்படுகிறது.
Horn of Africa horn
Horn of Africa
நேபாளத்தில் திறக்கப்பட்ட 'கீர்த்திபூர் பெண்கள் விடுதி'
 • நேபாள நாட்டின் போலீஸ் ஆயுத படைக்காக காத்மாண்டு மாவட்டம் கீர்த்திபூர் அருகே பெண்கள் விடுதி (Kirtipur Girls’ Hostel) ஒன்று இந்திய அரசால் கட்டப்பட்டு, டிசம்பர் 22 அன்று திறந்து வைக்கப்பட்டது.
வைரஸால் ஏற்படும் 'கடும் சுவாச நோய்த்தொற்று'
 • கடும் சுவாச நோய்த்தொற்று (Acute Respiratory Infection), அண்மையில் பங்களாதேஷ் நாட்டில்16 உயிர்களைக் கொன்றது, தீவிர தொற்றுநோய் வைரஸ் (Virus) உயிரினத்தால் ஏற்படுகிறது.
 • இது பொதுவாக மூக்கு, மூச்சுக்குழாய் அல்லது நுரையீரலில் வைரஸ் தொற்றுநோயாகத் தொடங்குகிறது. நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது முழு சுவாச அமைப்புக்கும் பரவுகிறது.
எபோலா தடுப்பூசி - 'எர்வெபோ' 
 • அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சமீபத்தில் எர்வெபோ (Ervebo) என்ற தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
 • மெர்க் நிறுவனம் (Merck) எபோலா தொற்றுநோய்க்கான எர்வெபோ தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
 • இது எபோலா நோய்வெடிப்பிற்கு மிகவும் பொதுவான காரணமான வைரஸ் இனமான ஜைர் எபோலா (Zaire Ebola Virus) வைரஸிலிருந்து பாதுகாக்கிறது.
 • காங்கோ குடியரசு நாட்டில் நீண்டகாலமாக எபோலா தோற்றுநோய் ஏற்பட்டதற்கு ஜைர் எபோலா வைரஸ் கரணம் ஆகும்.
இந்திய நிகழ்வுகள்
DNA பகுப்பாய்வு மையம், சண்டிகர் 
 • சண்டிகரில் புதிதாக திறக்கப்பட்ட DNA பகுப்பாய்வு மையம் (DNA analysis centre) நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
 • இது நவீன டி.என்.ஏ விவரக்குறிப்பு கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் விளங்கும் இந்த மையம் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை பிரிவு, தந்தைவழி பிரிவு, மனித அடையாள பிரிவு மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ பிரிவுக்கான வசதிகளை வழங்குகிறது.
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2019 - முடிவுகள் 
 • ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்- ராஷ்டிரீய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 
 • ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் (JMM) செயல் தலைவர் ஹேமந்த் சோரன் (Hemant Soren) முதலமைச்சர் ஆகிறார். 
 • 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
 • கட்சிகள் வென்ற தொகுதிகள் எண்ணிக்கை: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 3, காங்கிரஸ் - 15, ராஷ்டிரீய ஜனதாதளம் - 1, பாரதிய ஜனதா - 26, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா - 3, ஜார்கண்ட் மாணவர் சங்கம் - சுயேச்சைகள் - 2, தேசியவாத காங்கிரஸ் - 1 மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி -1 
பாதுகாப்பு/விண்வெளி
QRSAM ஏவுகணை சோதனை வெற்றி
 • ஒடிஸா மாநிலம், பாலாசூா் மாவட்டத்தின் சந்திப்பூா் பகுதியில் , எதிரி நாட்டு போா் விமானங்கள், ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவற்றைத் தரையிலிருந்து தாக்கி அழிக்கவல்ல 'QRSAM' என்ற அதிவிரைவு ஏவுகணை, டிசம்பர் 23-அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, 360 டிகிரி கோணத்தில் சுழன்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை.
 • QRSAM ஏவுகணை 2021-ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.
 • இந்திய ராணுவத்தில் தற்போது இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பைடா் ரக ‘கியூஆா்-எஸ்ஏஎம்’ ஏவுகணைகள் இணைக்கப்பட்டுள்ளன.
உர்சிட்ஸ் என்ற 'எரிகல் பொழிவு'
 • உர்சிட்ஸ் (Ursids) என்பது ஒரு எரிகல் பொழிவு (Meteor Shower) ஆகும். உர்சைட் விண்கல் செயல்பாடு (Urside Meteor} ஆண்டுதோறும் டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்கி 25 அல்லது 26 ஆம் தேதி வரை ஒரு வாரம் தொடர்கிறது.
 • இது உர்சா மைனர் (Ursae Minoris) விண்மீன் கூட்டத்தில் பீட்டா உர்சே மினோரிஸுக்கு அருகில் அமைந்துள்ள அதன் கதிரியக்க புள்ளிக்கு உர்சிட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. 
டிசம்பர் 26-அன்று 'வளைய சூரிய கிரகணம்' 
 • பகுதியளவு அல்லது வளைய சூரிய கிரகணம் (partial solar eclipse) இந்தியா முழுவதும் டிசம்பர் 26-அன்று நிகழ உள்ளது. 
விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள்-2019
 • 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், டெல்லியில் டிசம்பர் 23-அன்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்களால் வழங்கப்பட்டது. 
 • 66-வது தேசிய திரைப்பட விருதுகள்-விவரம்:
  1. சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)
  2. சிறந்த நடிகர் விருது: ஆயுஷ்மான் (படம்: அந்தாதுன்), விக்கி (படம்: உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்) 
  3. சிறந்த தயாரிப்பாளர் விருது - அக்ஷய் குமார் 
  4. சிறந்த இயக்குநர் விருது - ஆதித்ய தர் (உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்)
  5. சிறந்த இசையமைப்பாளர் விருது - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)
  6. தமிழில் சிறந்த திரைப்பட விருது - பாரம் (இயக்கம்: பிரியா கிருஷ்ணசாமி)
  7. சிறந்த முழுநீள திரைப்பட விருது - ஹெல்லாரோ (குஜராத்தி) 
  8. சிறந்த பொழுதுபோக்கு திரைப்பட விருது - பதாய் ஹோ 
  9. சிறந்த துணை நடிகை விருது - நடிகை சுரேகா சிக்ரி (பதாய் ஹோ)
  10. சிறந்த துணை நடிகர் விருது - ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக், மராத்தி) 
  11. சிறந்த இந்தி பட விருது - அந்தாதுன் (இயக்கம்: ஸ்ரீராம் ராகவன்)
  12. சிறந்த திரைக்கதை வசன கர்த்தா விருது - ஸ்ரீராம் ராகவன், அரிஜித் விஸ்வாஸ், பூஜா லதா சுர்தி, ஹேமந்த ராவ்
  13. சிறந்த நடுவர் விருது - நீலம் பஞ்சால் 
  14. தேசிய ஒருமைப்பாடு நர்கிஸ் தத் விருது - "ஒந்தல்ல இரடல்ல' (கன்னடப்படம்)
  15. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது - பாணி
  16. சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் விருது: பி.வி.ரோஹித் ("ஒந்தல்ல இரடல்ல'), சமீப் சிங் ரனாத் ("ஹர்ஜீதா'), அர்ஷத் ரிஷி ("ஹமீத்'), ஸ்ரீநிவாஸ் பொகாலே ('நால்') 
  17. சிறந்த சண்டைப் பயிற்சி விருது - அன்புமணி, அறிவுமணி (அன்பறிவ்) கே.ஜி.எஃப். 
  18. சிறந்த அறிவியல் தொழில்நுட்ப ஆவணப்பட விருது - 'ஜிடி நாயுடு த எடிசன் ஆஃப் இந்தியா' (இயக்கம்: ரஞ்சித்குமார்)
  19. சிறந்த சூழலியல் பட விருது - சுப்பையா நல்லமுத்து 
  20. 2018-ஆம் ஆண்டுக்கான "தாதாசாகேப் பால்கே' விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்படுகிறது.
நியமனங்கள்
இந்திய வெளியுறவு செயலர் - 'ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா'
 • இந்திய வெளியுறவுச் செயலராக ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருக்கிறாா்.
 • தற்போது வெளியுறவுச் செயலராக இருக்கும் விஜய்கேசவ் கோகலேவின் பதவிக்காலம் 2020 ஜனவரி 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா ஜனவரி 30-ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
 • ஷ்ரிங்லா 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய அயல்பணி அதிகாரியாவாா்.
FICCI புதிய தலைவர் - சங்கீதா ரெட்டி 
 • இந்திய தொழில் வா்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) புதிய தலைவராக அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிா்வாக இயக்குநா் சங்கீதா ரெட்டி பொறுப்பேற்றுள்ளாா்.
 • FICCI: Federation of Indian Chambers of Commerce & Industry.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
கலபகோஸ் தீவுகள் - சிறு தகவல் 
 • தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள ஈக்வடார் குடியரசு நாட்டில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான கலபகோஸ் தீவுகளுக்கு (Galapagos Islands) அருகே. டிசம்பர் 22 அன்று 6000 கேலன் (2,500 லிட்டர்) டீசல் எண்ணெயைக் கொண்ட கப்பல் மூழ்கியது. 
 • இதை அடுத்து ஈக்வடார் நாடு அவசரநிலையை அறிவித்துள்ளது.
 • டார்வின் பரிணாம வளர்ச்சி: கலபகோஸ் தீவுகள் டார்வின் பரிணாம (Charles Darwin) வளர்ச்சியைப் பற்றி ஆழமான ஊகங்களுக்கு பெயர்பெற்றவை ஆகும்.
மேற்கு ஐரோப்பாவை தாக்கிய 'எல்சா புயல் & ஃபேபியன் புயல்கள்'
 • எல்சா மற்றும் புயல் ஃபேபியன் புயல்கள் (Storm Elsa and Storm Fabien) அண்மையில் மேற்கு ஐரோப்பா பகுதிகளான ஸ்பெயினையும் போர்ச்சுகலையும் கடுமையாக பாதிபடையச்செய்தன. 
அறிவியல் தொழில்நுட்பம்
வாகனங்களுக்கான 'மைக்ரோடாட் தொழில்நுட்பம்'
 • மைக்ரோடாட் அடையாளங்காட்டிகள் (Microdot technology) குறித்த விதிகளை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. மைக்ரோடாட் தொழில்நுட்பம், வாகனங்களுக்கு தனித்துவமான அடையாளத்தை Vehicle ID வழங்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
 • மைக்ரோடாட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாகனங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீது நுண்ணிய புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் திருட்டு மற்றும் போலி உதிரி பாகங்களை தடுப்பதோடு, பாதுகாப்பை மேம்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை: 6,00,01,329 
 • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேர். பெண்கள் 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பேர். 
 • மூன்றாம் பாலினத்தவர் 5,924 பேர். ஆண்களைவிட பெண்கள் 7 லட்சத்து 2 ஆயிரத்து 831 பேர் அதிகம்.
 • சோழிங்கநல்லூர்: மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக 6 லட்சத்து 46 ஆயிரத்து 73 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. 
 • துறைமுகம்: குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்களுடன் துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் 88,483 ஆண்கள், 81,087 பெண்கள், 50 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 3 மீன்பிடி துறைமுகங்கள்: FIDF ரூ.453 கோடி கடன் உதவி 
 • தமிழ்நாட்டில் 3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.453 கோடி கடன் வழங்க மத்திய மீன்வளம் மற்றும் மீன் உற்பத்தி மேம்பாட்டு நிதி நிறுவனம் ஒப்புக்கொண்டது.
 • இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் டிசம்பர் 23-அன்று மத்திய மீன்வளத் துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு, நபார்டு வங்கி ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது. 
 • FIDF: Fisheries and Aquaculture Infrastructure. Development Fund.
ஹூஸ்டன்-தமிழ் இருக்கை: தமிழக அரசு ரூ.1 கோடி நிதிஉதவி
 • அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
முக்கிய நபர்கள்
எழுத்தாளா் டி.செல்வராஜ் காலமானாா்
 • சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் டி. செல்வராஜ் (வயது 87), உடல் நலக்குறைவு காரணமாக டிசம்பர் 20-அன்று காலமானாா்.
 • இதில் திண்டுக்கல் பகுதியிலுள்ள தோல் பதனிடும் தொழிலாளா்கள் குறித்து இவா் எழுதிய தோல் நாவல், கடந்த 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. இந்த நாவலுக்கு தமிழ்நாடு அரசின் விருதும் கிடைத்தது. இவரது தேனீா் நாவல், தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் வாழ்க்கை சூழலை வெளிப்படுத்தியது.
 • திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தை அடுத்துள்ள தென்கலம் பகுதியை பூா்வீகமாக கொண்டவா், மதுரை உயா்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா். தோல், மலரும் சருகும், தேனீா், மூலதனம் உள்ளிட்ட நாவல்களையும், 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 70-க்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களையும் இவா் எழுதியுள்ளாா்.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்

ஒரு நாள் போட்டி தரவரிசை - டிசம்பர் 23, 2019
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை டிசம்பர் 23-அன்று வெளியிட்டது. மட்டை வீச்சாளர்கள் (முதல் 5 இடங்கள்)
 • 1. விராட் கோலி (இந்தியா), 2. ரோகித் சர்மா (இந்தியா), 3. பாபர் அசாம் (பாகிஸ்தான்), 4. பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா), 5. ராஸ் டெய்லர் (நியூசிலாந்து).
 • பந்து வீச்சாளர்கள் (முதல் 5 இடங்கள்)
 • 1. பும்ரா ( இந்தியா), 2. டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), 3. முஜீப்-உர்-ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்), 4. காகிஸோ ரபடா (தென்ஆப்பிரிக்கா), 5. பாட் சும்மின்ஸ் (ஆஸ்திரேலியா).
பத்தாண்டுகளுக்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் 'சிறந்த கிரிக்கெட் வீரர்கள்' 
 • கடந்த பத்தாண்டுகளுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதித்துள்ள வீரர்களைக் கெளரவப்படுத்தும் விதமாக, சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 
 • டெஸ்ட் அணிக்கு விராட் கோலியும் ஒருநாள் அணிக்கு தோனியும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஒருநாள் அணியில் தோனி, ரோஹித் சர்மா, கோலி ஆகிய மூன்று இந்திய வீரர்களும் டெஸ்ட் அணியில் கோலியும் இடம்பெற்றுள்ளார்கள். 
 • கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒருநாள் அணி: ரோஹித் சர்மா, ஆம்லா, விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஷகிப் அல் ஹசன், ஜாஸ் பட்லர், தோனி (கேப்டன்), ரஷித் கான், ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், மலிங்கா.
 • கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி: அலாஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெயின், நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன். 
எம்.எஸ். தோனியின் 15 ஆண்டுக்கால கிரிக்கெட் பயணம் 
 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ். தோனி தனது 15 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை டிசம்பர் 23-அன்று நிறைவு செய்துள்ளாா்.
 • 17,266 ரன்கள்: ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சோ்ந்த தோனி, கடந்த 2004-இல் கங்குலி தலைமையிலான அணியில், வங்கதேசத்துக்கு எதிரானஆட்டத்தில் அறிமுகமானாா். 
 • 38 வயதான தோனி இதுவரை டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டிலும் மொத்தம் 17,266 ரன்களை எடுத்துள்ளார்.
 • 829 போ் அவுட்: 350 ஒருநாள், 90 டெஸ்ட், 98 T20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக ஆடியுள்ள தோனி, மொத்தம் 829 பேரையும் கீப்பிங் மூலம் அவுட் செய்துள்ளாா்.  
 • 03 ICC கோப்பை வென்ற ஒரே கேப்டன்: 2007 டி20 உலக சாம்பியன், 2011 ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன்: 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பை பட்டம் என கிரிக்கெட்டின் உயா்ந்த போட்டிகளில் இந்தியாவுக்கு பட்டம் பெற்றுத் தந்தாா் தோனி. சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 3 பெரிய கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே ஆவாா்.
 • ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் ஐசிசி தரவரிசையில் நம்பா் ஒன் இடத்தை பெறச் செய்தாா் தோனி.
 • சென்னை சூப்பா் கிங்ஸ்: IPL அணிகளில் ஒன்றான சென்னை சூப்பா் கிங்ஸ் 3 முறை சாம்பியன் பட்டம், 2 சாம்பியன்ஸ் லீக் 20 கோப்பைகளையும் வெல்ல உதவினாா்.
 • 2019 ICC ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசியாக ஆடினாா் தோனி.
2019-இல் அதிக ரன்கள் எடுத்த வீரா் - விராட் கோலி
 • 2019-ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் அதிக ரன்களை குவித்த வீரா் (2455 ரன்கள்) என்ற சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
 • 26 ஒருநாள் ஆட்டங்களில் 1377 ரன்களையும், 8 டெஸ்ட்களில் 612 ரன்களையும், 10 T20 ஆட்டங்களில் 466 ரன்களையும், எடுத்துள்ளாா் கோலி. 
 • 2019-இல் கோலி 7 சதங்களையும், ரோஹித் 10 சதங்களையும் எடுத்துள்ளனா்.
  1. விராட் கோலி - 2455 ரன்கள்
  2. ரோஹித் சா்மா (இந்தியா) - 2442 ரன்கள்
  3. பாபா் ஆஸம் (பாகிஸ்தான்) - 2082 ரன்கள்
  4. ராஸ் டெய்லா் (நியூஸிலாந்து) - 1820 ரன்கள்
  5. ஜோ ரூட் (இங்கிலாந்து) - 1790 ரன்கள்.
பளுதூக்குதல்

கத்தார் சர்வதேச பளுதூக்குதல் கோப்பை 2019 
 • 2019 டிசம்பர் 20 ஆம் தேதி தோஹாவில் நடைபெற்ற 6-வது கத்தார் சர்வதேச கோப்பையில் இந்தியா வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள் விவரம்:
 • சைகோம் மீராபாய் சானு (Saikhom Mirabai Chanu) - தங்கப்பதக்கம் (பெண்கள் 49 கிலோ பிரிவு) 
 • ராக்கி ஹால்டர் (Rakhi Halder) - வெண்கலப்பதக்கம் (பெண்கள் 64 கிலோ பிரிவு). 
முக்கிய தினங்கள் 
தேசிய நுகர்வோர் தினம் - டிசம்பர் 24 
 • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 அன்று தேசிய நுகர்வோர் தினம் (National Consumer Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 1986 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
 • 2019-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “மாற்று நுகர்வோர் குறை / தகராறு நிவாரணம்” (Alternate Consumer Grievance/Dispute Redressal) என்பதாகும்.
 • அண்மையில் 2019-நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவிற்கு இந்திய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.இது நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நல்நிர்வாக தினம் - டிசம்பர் 25
 • 2014 ஆம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதி, "நல்நிர்வாக தினமாக" (Good Governance Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format
Previous Post Next Post