TNPSC Current Affairs December 22, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 22, 2019
சர்வதேச நிகழ்வுகள்இந்திய பார்மகோபொயியா'வை அங்கீகரித்த முதல் நாடு 'ஆப்கானிஸ்தான்'
- இந்திய பார்மகோபொயியாவை (Indian Pharmacopoeia) முதல் நாடக ஆப்கானிஸ்தான் நாடு அங்கீகரித்துள்ளது. பார்மகோபொயியா என்பது மருத்துவ மருந்துகளின் பட்டியலைக் கொண்ட அதிகாரப்பூர்வ வெளியீடு ஆகும். மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டப்படி(1940), இந்திய மருந்தக ஆணையம் (ஐபிசி) இந்திய பார்மகோபொயியாவை வெளியிடுகிறது.
ஜப்பான்-ரஷ்யா இடையேயான 'குரில் தீவு தகராறு'
- ஜப்பான்-ரஷ்யா குரில் தீவுகள் தொடர்பான தகராறு தொடர்ந்து வருகிறது.
- குரில் தீவுகள் (Kuril Island) ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாகும். சுமார் 20,000 மக்கள் வசிக்கும் ஒரு தீவுக்கூடம் இதுவாகும்.
- இது ஜப்பானால் வடக்கு பிரதேசங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இரு நாடுகளும், சமீபத்தில் மோதலைத் தீர்ப்பதற்கான வழிகளுக்காக அண்மையில் கூட்டத்தை நடத்தின.
கெய்மன் முதலை இனம் 'புருஸ்ஸாரஸ்'
- புருஸ்ஸாரஸ் (Purussaurus) என்பது அழிந்துபோன கெய்மன் (caiman) முதலை இனம் ஆகும் (same family as alligators), இது மியோசீன் சகாப்தத்தில் வாழ்ந்தது. சமீபத்தில் ஒரு புருசரஸின் கடி வலிமை கணக்கிடப்பட்டது.
- விஞ்ஞானிகள் இந்த ஊர்வனவற்றின் கடி வலிமையை, டைரனோசொரஸ் ரெக்ஸின் இரு மடங்கு என்று கணக்கிட்டடுள்ளனர். புருசாரஸ் பிரேசிலியன்சிஸ் 12 மீட்டருக்கு மேல் வளரும் தன்மை கொண்டது.
போா்ச்சுகல் பிரதமா் அன்டோனியோ கோஸ்டா - இந்தியா வருகை
- அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள போா்ச்சுகல் பிரதமா் அன்டோனியோ கோஸ்டா, மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்ததின கொண்டாட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்திய நிகழ்வுகள்
கம்பாலா விளையாட்டு அருங்காட்சியகம் (மூட்பிட்ரி)
- கர்நாடகாவின் பாரம்பரிய கம்பாலா விளையாட்டுக்கான (Kambala, slush-track buffalo race) அருங்காட்சியகம், தட்சிணா கன்னட மாவட்டத்தின் மூட்பிட்ரி (Moodbidri) என்ற பகுதியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
- கம்பாலா விளையாட்டு, எருமைகளை கொண்டு சேற்று வயல்களில் நிகழ்த்தப்படும் ஓட்டம் ஆகும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2019
- ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், சோதனை ரீதியில் முதலில் 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் வரும் 2019 ஜூன் மாதம் 1-ந் தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
- ரேஷன் கார்டுகள், 2 மொழிகளை கொண்டிருக்கும். ஒன்று, உள்ளூர் மொழி மற்றொரு மொழி ஆங்கிலம் அல்லது இந்தியாக இருக்கும்.
- புதிய ரேஷன் கார்டுகள் 10 இலக்க எண்களை கொண்டிருக்கும். முதல் 2 எண்கள் மாநிலத்தை அடையாளப்படுத்துகிற வகையில் அமைந்திருக்கும். அடுத்த 2 எண்கள் ரேஷன் கார்டின் வரிசை எண்களாக அமையும்.
EChO நெட்வொர்க் - சிறு தகவல்
- EChO நெட்வொர்க் (EChO Network) சமீபத்தில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் அவர்களால் தொடங்கப்பட்டது.
- இந்திய சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய அறிவு, விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சியை உருவாக்குவதற்கான ‘குறுக்கு-வெட்டு தலைமைதுவத்தை மேம்படுத்துவதே EChO நெட்வொர்க்-கின் முக்கிய நோக்கம் ஆகும்.
பாதுகாப்பு/விண்வெளி
அமெரிக்க புதிய 'விண்வெளி பாதுகாப்பு படைப் பிரிவு'
- அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு படைப் பிரிவு, அதிகாரபூா்வமாக டிசம்பர் 21-அன்று தொடங்கப்பட்டுள்ளது. உலகின் புதிய போா்க் களமாக விண்வெளி உருவாகி வருகிறது. ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் சக்தி வாய்ந்த விண்வெளி தொழில்நுட்பங்கள், அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், மேலாதிக்கத்துக்கும் உருவாகும் அச்சுறுத்தலை எதிா்கொள்ள இந்த படை உருவாக்கப்பட்டுள்ளது.
பினாக்கா பீரங்கி ஏவுகணை - சோதனை
- ஒடிசாவில் உள்ள சண்டிப்பூர் ஒருங்கிணைந்த சோதனை வரம்பில் டிசம்பர் 20-அன்று பினாக்கா பீரங்கி ஏவுகணையின் (Pinaka artillery missile) மேம்படுத்தப்பட்ட வடிவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்தது.
- பினாகா ஏவுகணை, முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பீரங்கி ஏவுகணை ஆகும்.
- பினாகா , 75 கி.மீ தொலைவு வரையுள்ள இலக்குகளை தாக்கும் அழிக்கும் திறனுடையது.
ஒரே நேரத்தில் 12 ஏவுகணைகளை ஏவும் திறனுடையது.
- பினாகா ராக்கெட்டின் மாா்க்-1 அமைப்பு 40 கி.மீ தொலைவு வரையுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனுடையது. பினாகா மாா்க்-2 அமைப்பு 75 கி.மீ தொலைவு வரையுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனுடையது.
போயிங்கின் ஸ்டார்லைனர் 'காப்ஸ்யூல் விண்கலம்' - சிறு தகவல்
- மனிதா்களை ஏந்திச் செல்வதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஸ்டாா்லைனா்’ விண்கலம் (Boeing’s Starliner spacecraft) சோதனை முறையில் டிசம்பர் 20-அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் ஒரு விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் காப்ஸ்யூல் அமைப்பு கொண்ட விண்கலம் ஆகும். ‘ரோஸி’ எனப் பெயரிப்பட்ட பொம்மையை ஏந்திச் செல்லும் அந்த விண்கலம் (Astronaut capsule), சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து 8 நாள்களில் பூமிக்குத் திரும்ப உள்ளது.
சீனாவின் 'யூட்டு 2 ரோவர்'
- யூட்டு 2 (Yutu 2) என்ற சீனா நாட்டின் ரோவர் (surface rover) சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் நீண்டநாள் ஆய்வை (lunar longevity) மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
- இது சாங் 4 ( Chang’e 4) எனப்படும் சந்திரனுக்கான சீன பயணத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நியமனங்கள்அமெரிக்க தேசிய அறிவியல் கழக புதிய தலைவர் 'சேதுராமன் பஞ்சநாதன்'
- அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் புதிய தலைவராக அமெரிக்க வாழ் தமிழரான சேதுராமன் பஞ்சநாதன் (Sethuraman Panchanathan) நியமிக்கப்பட்டுள்ளார்.
- 58 வயதாகும் சேதுராமன் பஞ்சநாதன் தற்போது அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் துணை தலைவராகவும், ஆய்வு மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் முதன்மை அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி - குல்சார் அகமது
- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 27-ஆவது தலைமை நீதிபதியாக குல்சார் அகமது டிசம்பர் 20-அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
- நபாா்டு வங்கியின் தலைவராக உள்ள ஹா்ஷ் குமாா் பன்வாலா அவர்களின் பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- NABARD: National Bank for Agriculture and Rural Development.
மாநாடுகள்
இந்தியா-சீனா 22-ஆவது ஆலோசனை கூட்டம்-2019
- இந்திய மற்றும் சீன எல்லையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண, இந்திய மற்றும் சீன அரசுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும் 22-ஆவது ஆலோசனை கூட்டம் டிசம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது.
- இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி, 3,488 கி.மீ. தொலைவுள்ளது.
பொருளதார நிகழ்வுகள்
பொருளாதார வளா்ச்சி 4.6 % ஃபிட்ச் கணிப்பு
- நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீட்டை தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் 4.6 சதவீதமாக குறைத்துள்ளது.
- மூடிஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டுக்கான பொருளதார வளா்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. அதேபோன்று, ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.
GST இழப்பீடு இரட்டிப்பாகும் 9 மாநிலங்கள்
- 2020-21ம் நிதியாண்டில் 9 பெரிய மாநிலங்களில் இந்தத் தொகை இரட்டிப்பாகும் என்று ஐ.சி.ஆர்.ஏ (ICRA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- GST அமல்படுத்தப்பட்டதையடுத்து, அதனால் ஏற்பட்ட நிதி இழப்பை மத்திய அரசு இழப்பீடு தொகையாகத் தர மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அதன்படி, கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களுக்கான, ஜி.எஸ்.டி இழப்பீடு 2020ம் நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் இரண்டு மடங்காக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 'ஆபரேஷன் ட்விஸ்ட்'
- இந்திய ரிசர்வ் வங்கியின் 'ஆபரேஷன் ட்விஸ்ட்' (RBI’s Operation Twist), மேற்கொண்டுள்ளது. ஆபரேஷன் ட்விஸ்ட், என்பது நீண்ட கால பத்திர வருவாயை கடினமாக்குவதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
சென்னை புத்தக கண்காட்சி-2019
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) சங்கம் நடத்தும் 43-வது சென்னை புத்தக கண்காட்சி ‘கீழடி- ஈரடி தமிழ் தொன்மங்கள்” என்ற தலைப்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 9 முதல் 21-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்
'Cricket 4 Good' திட்டம் - சிறு தகவல்
- ‘கிரிக்கெட் 4 குட்’ (Cricket 4 Good) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) ஆகியவற்றின் ஒத்துழைபுடன் செயல்படுத்தப்படும் ஒரு கூட்டுத்திட்டமாகும்.
- உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், ICC-யின் Cricket For Good திட்டம், உலகளாவிய சமூக மேம்பாட்டுத் திட்டமாக உருவாக்கப்பட்டது.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் 2019
- ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) டிசம்பர் 17-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பிரியம் கார்க் தலைமையில் பங்கேற்கிறது.
பளுதூக்குதல்
கத்தார் சர்வதேச பளுதூக்குதல்: மீராபாய் சானு தங்கப்பதக்கம்
- 6-வது கத்தார் சர்வதேச கோப்பை பளுதூக்குதல் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் ஒன்றான இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை வென்றார்.
முக்கிய தினங்கள்
தேசிய கணித தினம் - டிசம்பர் 22
- இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுஜன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஆண்டுதோறும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக (National Mathematics Day)கொண்டாடப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு, சீனிவாச இராமானுஜனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
Download this article as PDF Format