TNPSC Current Affairs December 20-21, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 20, 2019 and December 21, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 20-21, 2019
சர்வதேச நிகழ்வுகள்
உலக அளவில் அறிவியல் கட்டுரைகள்: இந்தியா 3-வது இடம்
 • உலக அளவில் அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் இந்தியாவுக்கு (5.31 சதவீதம்) 3-வது இடம் கிடைத்து இருக்கிறது. முதல் 2 இடங்களை சீனா (20.67) மற்றும் அமெரிக்க (16.54) நாடுகள் பிடித்து உள்ளன. அதைத்தொடர்ந்து ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, ரஷியா, இத்தாலி, தென்கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்த முதல் 10 இடத்தில் உள்ளன. 
 • 2008-ம் ஆண்டில், 48 ஆயிரத்து 998 அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகளை இந்தியா வெளியிட்டு உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 2018-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 788-ஆக உயர்ந்து இருக்கிறது.
இன்கிர்லிக் விமானத் தளம் (துருக்கி) 
 • இன்கர்லிக் என்ற விமானத் தளம் (Incirlik Air Base) துருக்கியில் அமைந்துள்ளது. இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விமான தளத்தை (strategically important air base) மூட துருக்கி திட்டமிட்டுள்ளது. 
 • சிரியாவில் இஸ்லாமிய அரசு / ஐ.எஸ் படைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்க விமானப்படை இந்த தளத்தைப் பயன்படுத்துகிறது.
இரஷியா-ஐரோப்பா எரிவாயுக் குழாய் இணைப்பு திட்டம் 'நாா்ட் ஸ்ட்ரீம் 2' 
 • நாா்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) என்றழைக்கப்படும் திட்டம், ரஷியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு (ஜொ்மனிக்கு) எரிவாயுக் குழாய் இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். இந்த எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 - சிறு தகவல்
 • குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 (CAA), டிசம்பர் 11 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து துன்புறுத்தல் காரணமாக தப்பி இந்தியா வந்த, இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ மத சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்குவதற்கான பாதையை வழங்குகிறது. இதற்காக1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் (Citizenship Act of 1955) திருத்தப்பட்டது. 
 • அரசியலமைப்பு பிரிவு 5 முதல் 11 (பகுதி II): இந்திய அரசியலமைப்பின் பிரிவு 5 முதல் 11 (பகுதி II) (Article 5 to 11 (Part II), இந்தியாவில் குடியுரிமையைப் பற்றி கையாள்கிறது. 
 • CAA: Citizenship (Amendment) Act, 2019
தேசிய குடியுரிமை பதிவேடு: யார் இந்திய குடிமக்கள்
 • நாடு முழுவதும் NRC என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார். யார்-யார் இந்திய குடிமக்கள் என்பது பற்றி மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் வருமாறு: 
 • குடியுரிமை சட்டத்தில் 2004-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தவிர, பிற இடங்களில் பெற்றோர் இந்தியராக இருந்தாலோ அல்லது சட்டவிரோத குடியேறியவர்களாகவோ இல்லாதபோது அவர்கள் இந்தியர்கள் என கூறப்பட்டுள்ளது.
 • இந்தியாவில் 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந் தேதி அல்லது அந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் அவர்களின் குழந்தைகள் சட்டப்படி இந்திய குடிமக்கள் ஆவர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் 2019-க்காகவோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காகவோ கவலைப்பட தேவையில்லை.
இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரி - ஹசன் சபீன்
 • குஜராத்தை சேர்ந்த ஹசன் சபீன் 22 வயதில் இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாகி சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 570-வது ‘ரேங்க்’ பெற்று சபீன் ஐ.பி.எஸ்.-ஆக தேர்வானார். இதனையடுத்து வருகிற 23-ந்தேதி ஜாம்நகர் போலீஸ் துணை சூப்பிரண்டாக பொறுப்பேற்க உள்ளார்.
டெல்லி நகரத்தில் இலவச ‘வை-பை’ திட்டம் 
 • டெல்லி நகரத்தில் இலவச ‘வை-பை’ திட்டம் டிசம்பர் 19-அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உலகிலேயே இலவச வை-பை திட்டம் தொடங்கப்பட்டுள்ள முதல் நகராக டெல்லி இருக்கும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். 
ஒடிசா அரசின் வேளாண் கொள்கை 'சம்ரிதி'
 • ஒடிசா மாநில அமைச்சரவை சம்ரிதி (SAMRIDHI) என்ற வேளாண் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், காலநிலை மாற்றத்திற்கான தழுவல், (சந்தைகள்) உள்நாட்டு மற்றும் உலகளாவிய, உடல் மற்றும் நிதி, வள பயன்பாட்டு 
 • திறன் மற்றும் அதிக உற்பத்தித்திறன் மற்றும் பொருத்தமான உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகிய 8 கூறுகளை (8 components) அடிப்படையாகக் கொண்டது.
மின்-அமைச்சரவை - சில தகவல் 
 • அண்மையில் மக்களவை சபாநாயகர் மின்-அமைச்சரவை (e-cabinet solution) அமல்படுத்தப்படுவதை வலியுறுத்தினார். 2017-ஆம் ஆண்டில், மின்-அமைச்சரவை தீர்வை அமல்படுத்திய முதல் வடகிழக்கு மாநிலம் என்ற சிறப்பை அருணாச்சல பிரதேசம் பெற்றது.
 • அமைச்சரவைக் கூட்டங்களை ஆவணங்களைப் பயன்படுத்தாமல் தயாரிக்கவும், நடத்தவும், மறுஆய்வு செய்யவும் அமைச்சர்களை இந்த தீர்வு அனுமதிக்கிறது. அமைச்சர்களுக்கு தொலைநிலை அணுகலை இது வழங்குகிறது.
பாரத் வந்தனா பூங்கா (புது தில்லி)
 • ரூபாய் 550 கோடி செலவில், பாரத் வந்தனா (Bharat Vandana Park) என்ற பூங்கா புது தில்லியில் துவாரகா பகுதியில் கட்டப்பட்டுவருகிறது.
ஆபிரகாம் கோஷி கமிட்டி - சில தகவல் 
 • ஆபிரகாம் கோஷி குழு, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) ஆலோசனைக் குழுவாக அமைக்கப்பட்டது. முதலீட்டாளர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆராய இது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
 • ஆபிரகாம் கோஷி கமிட்டி (Abraham Koshy Committee) என்பது எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஆகும்.
ஒடிசா அரசின் 'ஜலசதி திட்டம்'
 • அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக ஒடிசா மாநில அரசால் அண்மையில் ஜலசதி (Jalasathi program) என்ற திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
ஆந்திர மாநில அரசின் பயங்கரவாத எதிர்ப்புபடை 'ஆக்டோபஸ்'
 • ஆக்டோபஸ் (OCTOPUS) என்பது ஆந்திரா மாநில அரசின் பயங்கரவாத எதிர்ப்புபடை ஆகும்.இது ஒரு உயரடுக்கு பாதுகாப்பு பிரிவான இது, சமீபத்தில் மாநில முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்கும் படையாக நியமிக்கப்பட்டது.
 • OCTOPUS: Organisation for Counter-Terrorist Operations.
சத்தீஸ்கர் அரசின் 'சுபோஷன் அபியான்' திட்டம்
 • சுபோஷன் அபியான் (Suposhan Abhiyan) என்பது சத்தீஸ்கர் மாநில அரசின் திட்டமாகும். சத்தீஸ்கர் மாநில வன பிராந்தியத்தின் உள்ள வனவாசிகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு அரசாங்க திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்த 
 • திட்டத்தின் கீழ் உள்ளூர் மொழிகளில் தகவல் பரப்புதல் இயக்கங்களை சமீபத்தில் அரசு நடத்தியது.
பாதுகாப்பு/விண்வெளி
இந்திய-நேபாள கூட்டு இராணுவப்பயிற்சி 'சூர்யா கிரண் 2019'
 • இந்தியா நேபாள நாடுகள் இடையே 'சூர்யா கிரண்' (Surya Kiran 2019) என்ற பெயரில், வருடாந்திர இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சி 2019, நேபாளத்தின் ரூபேந்தேஹி மாவட்டத்தின் சாலிஹாண்டி பகுதியில் டிசம்பர் 3-16 தேதிகளில் நடைபெற்றது.
இந்தியா- ரஷ்யா பாதுகாப்புப் பயிற்சி 'இந்திரா 2019' 
 • இந்திரா 2019 (INDRA 2019) என்ற பெயரில் இந்தியா- ரஷ்யாவுக்கும் இடையிலான முத்தரப்பு பாதுகாப்புப் பயிற்சி, புனே (மகாராஷ்டிரா), கோவா மற்றும் பாபினா (உத்திரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் டிசம்பர் 10 முதல் 19 வரை நடைபெற்றது. இந்த பயிற்சியில் இரு நாடுகளின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை பங்கேற்றன.
முத்தரப்பு கடல்சார் கூட்டுப்பயிற்சி 'மலபார்' 
 • இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே நடைபெறும் முத்தரப்பு கடல்சார் கூட்டுப்பயிற்சி 'மலபார்' எனப்படுகிறது. 
 • 23-வது முத்தரப்பு கடல்சார் கூட்டுப்பயிற்சி மலபார்-2019, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பான் கடற்கரை பகுதிகளில் நடைபெற்றது.
கடத்தல் எதிர்ப்பு கடற்படை பயிற்சி 'அஃபரன்' 
 • சமீபத்தில் ‘அஃபரன்’ பயிற்சி (Apharan) கொச்சி துறைமுகத்தில் நடத்தப்பட்டது. இது இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை நடத்திய கடத்தல் எதிர்ப்பு பயிற்சியாகும். 
புதிய வெளிக்கோள்கள் - பைடூரி மற்றும் இன்டான்
 • ஃபார்னாக்ஸ் (Fornax) என்ற விண்மீன் தொகுப்பில் சமீபத்தில் கண்டறியப்பட்ட வெளிக்கோள்கள் (host star and exoplanet), HD 20868 மற்றும் HD 20868b ஆகியவற்றுக்கு பைடூரி (Baiduri) மற்றும் இன்டான் (Intan) என சர்வதேச வானியல் ஒன்றியம் பெயரிட்டுள்ளது.
 • இந்த இரு பெயர்கள், மலாய் மொழியில் இருந்து பெறப்பட்டன. இவை ரத்தினக் கற்களுக்கான பெயர்கள் ஆகும். 
நகாம்பே நட்சத்திரம் - சிறு தகவல் 
 • எரிடனஸ் என்ற விண்மீன் தொகுப்பில் நகாம்பே (Nakambe) என்ற நட்சத்திரம் கண்டறியப்பட்டது. புர்கினா பாசோ (Burkina Faso) என்ற சர்வதேச வானியல் ஒன்றியம், 'நகாம்பே' என்ற ஆப்பிரிக்க தேசத்தின் பெரிய நதியின் பெயரை இந்த நட்சத்திரத்திற்கு சூட்டியது. 
விருதுகள்
சாகித்ய அகாடமி விருது 2019
 • 2019 சாகித்ய அகாடமி விருது: சோ.தர்மன் (சூல்): 2019-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது, தமிழில் சிறந்த நாவலுக்காக கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு அவரது ‘சூல்’ நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தபோது இங்கிருந்த 39,640 கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதே இந்நாவலின் மையக்கரு. 
 • கரிசல் பூமியான கோவில்பட்டிக்கு அருகில் உள்ள உருளைக்குடியில் பிறந்த சோ.தா்மன், கரிசல் பூமியில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகள் தொடா்பாக தொடா்ந்து எழுதி வருகிறாா். இவரது இயற் பெயா் சோ.தா்மராஜ். 
 • சோ.தர்மன் இதுவரை 4 நாவல்கள் (‘தூா்வை’, ‘கூகை’, ‘சூல்’, ‘வில்லிசை வேந்தா் பிச்சைக்குட்டி), 8 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். இதில் ‘கூகை’ என்ற நாவல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ளது. 
 • சாகித்ய அகாதெமி 23 மொழிகளுக்கான விருதை டிசம்பர் 18-அன்று அறிவித்தது. இதில், ஏழு கவிதைப் புத்தகங்கள், நான்கு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று கட்டுரைத் தொகுப்பு, அபுனைவு, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுக்கு தலா ஒரு புத்தகங்களுக்கு 
 • விருது கிடைத்துள்ளது. விருது பெற்றவா்களுக்கு பட்டயம், சால்வையுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். தில்லியில் 2020, பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
 • ஆங்கில மொழிக்கான விருது, பிரபல ஆங்கில எழுத்தாளரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா் எழுதிய ‘அன் எரா ஆஃப் டாா்க்னஸ்’ (An Era of Darkness: The British Empire in India) என்ற நூலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியாவின் வளங்களை எவ்வாறு சுரண்டியது என்பதை இந்த நூல் தெளிவாக விவரிக்கிறது. ஹிந்தி மொழிக்கான விருது, புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான நந்த் கிஷோா் ஆச்சாா்யாவின் ‘சில்டே ஹியு ஆப்னே கோ’ என்ற கவிதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
 • தெலுங்கு மொழிக்கான விருது பந்தி நாராயண சாமி எழுதிய ‘செப்தபூமி’ என்ற நாவலுக்கும், மலையாள மொழிக்கான விருது வி.மதுசூதனன் நாயா் எழுதிய ’அச்சன் பிராண வீடு’ என்ற கவிதைத் தொகுப்புக்கும், கன்னட மொழிக்கான விருது விஜயா என்ற எழுத்தாளா் எழுதிய ‘குடி எசரு’ என்ற சுயசரிதைப் புத்தகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 2018 சாகித்ய அகாடமி விருது: எஸ். இராமகிருஷ்ணன்: 2018-ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்களுக்கு “சஞ்சாரம்” புதினத்திற்காக அறிவிக்கப்பட்டது.
 • 'சஞ்சாரம்' புதினத்தை 2014-ஆம் ஆண்டு எழுதினார். கரிசல் மண்ணில் வறிய நிலையில் வாழும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிக் கூறும் படைப்பாக 'சஞ்சாரம்' உருவாக்கப்பட்டுள்ளது. 
  • சாகித்ய அகாதமி விருது (1955): தேசிய அளவில் இலக்கியத்திற்காக, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் சாகித்ய அகாதமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 
  • இந்திய இலக்கியங்களுக்காக வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருது ஆகும். 
  • ஞான பீட விருது இந்திய அரசால் வழங்கப்படும் முதலாவது மிக உயரிய விருது ஆகும்.
  • சாகித்ய அகாதமி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கியம், இலக்கிய விமர்சனம் உள்ளிட்ட எழுத்தாக்கங்களுக்கு சாகித்ய அகாதமி ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • சாகித்ய அகாதமி விருது, பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் கொண்டதாகும்.
 • சாகித்ய அகாதமி முதல் விருது (1955) - ரா. பி. சேதுப்பிள்ளை: கித்ய அகாதமி விருது 1955 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. தமிழில் முதன்முதலாக, 1955 ஆம் ஆண்டு தமிழ் இன்பம் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலிற்காக ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • Sahitya Akademi Award Winners 2019 - Download as PDF
 • சாகித்ய அகாதமி விருது பட்டியல் (1955-2019): தமிழில் சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளர்கள் பட்டியல் (1955-2019) இந்த தொகுப்பில் விரிவாக தரப்பட்டுள்ளது.
 • Tamil Sahitya Akademi Award Winners Upto 2019 - Download as PDF
ஐ.நா. பதக்கம் பெற்ற 850 'இந்திய அமைதி காக்கும் படையினர்' 
 • சமீபத்தில், தெற்கு சூடான் நாட்டில் UNMISS என்று ஐ,நா. அமைப்புடன் இணைந்து பணியாற்றும் 850 இந்திய அமைதி காக்கும் படையினருக்கு தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக ஐ.நா. பதக்கம் (UN Medal) வழங்கப்பட்டது.
 • UNMISS: United Nations Mission in South Sudan.
தமிழ்நாட்டிற்கு 13 தேசிய விருதுகள்
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டிற்காக 13 தேசிய விருதுகள் டெல்லியில் டிசம்பர் 19-அன்று நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் வழங்கினார். 
மாநாடுகள்
உலகளாவிய அகதிகள் மன்றக் கூட்டம்-2019
 • முதலாவது உலகளாவிய அகதிகள் மன்றக் கூட்டம் 2019 (Global Refugee Forum meeting), ஐக்கிய நாடுகள் சபையின் UNHCR நிறுவனத்தால் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் டிசம்பர் 17-18 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது.
 • UNHCR: United Nations High Commissioner for Refugees.
இந்தியா, அமெரிக்கா 2+2 பேச்சுவாா்த்தை 2019
 • இந்தியா, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கும் இரண்டாவது 2+2 பேச்சுவாா்த்தை வாஷிங்டனில் டிசம்பர் 18-அன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பேயோ, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பா் ஆகியோா் பங்கேற்றனா்.
 • இந்தியா-ஜப்பான் 2 + 2 உரையாடல்: இந்தியாவும் அமெரிக்காவும் பங்கேற்ற 2 + 2 உரையாடல் போன்று ஜப்பான் நாட்டுடன் 2 + 2 உரையாடலை இந்தியா மேற்கொண்டு வருகிறது. 
GST கவுன்சிலின் 38-வது கூட்டம்
 • GST கவுன்சிலின் 38-வது கூட்டம் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டிசம்பர் 18-அன்று நடைபெற்றது. கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகளும் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியாா் லாட்டரிகளுக்கு ஒரே விதமாக 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டது.
வேந்தரின் இலக்கு 2030 - உயர்கல்வி மாநாடு 2019
 • சென்னை கிண்டி ராஜ்பவன் மற்றும் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் இணைந்து ‘வேந்தரின் இலக்கு 2030 - தொழில்துறை சகாப்தத்தில் (4.0) புதுமையான கல்விமுறை’ என்ற தலைப்பில் 2 நாள் உயர்கல்வி மாநாடு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் டிசம்பர் 19-20 தேதிகளில் நடைபெற்றது.
ரைசினா உரையாடல் 2020 (புது டெல்லி)
 • ஐந்தாவது ரைசினா உரையாடல் 2020 (Raisina Dialogue 2020), புது டெல்லியில் 2019 ஜனவரி 14 முதல் 16 வரை நடைபெறுகிறது.
 • 2020 ரைசினா உரையாடல், 'New Geometrics | Fluid Partnerships | Uncertain Outcomes' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. 
 • ரைசினா உரையாடல் என்பது, இந்தியாவின் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும், புவிசார் அரசியல் (geopolitical) மற்றும் புவிசார் மூலோபாய (Geostrategic) மாநாடு ஆகும்.
அறிவியல் தொழில்நுட்பம்
ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் இந்தியா முன்னிலை 
 • 'ரேன்சம்வேர் வைரஸ்' - கணினி யுகத்தை ஆட்டிப் படைக்கும் சைபர் ஆயுதம். ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
"பாதிக்கப்படக்கூடிய" பறவை இனம் - ஹூபரா பஸ்டார்ட்ஸ் 
 • பாகிஸ்தானில் உள்ள 'ஹூபரா பஸ்டார்ட்ஸ்' பறவை இனத்தை"பாதிக்கப்படக்கூடிய" இனங்கள் (vulnerable species) என்ற வகைப்பாட்டில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) வைத்துள்ளது. பாகிஸ்தான் நாடு கத்தார் அரச குடும்பத்திற்கு இந்த 
 • பறவைகளை வேட்டையாட சிறப்பு அனுமதி வழங்கியது. இதற்காக சர்வதேச அளவில் பாக்கிஸ்தான் விமர்சிக்கப்பட்டது.
 • 'ஹூபரா பஸ்டார்ட்ஸ், பறவைகள் வேட்டையாடுதல் மற்றும் பொறி காரணமாக தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. தற்போதைய மதிப்பீடுகள்படி, சுமார் 50,000 முதல் 10,000 வரை உள்ளன.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் 'காற்று மாசு பிரச்னை'
 • இந்திய மக்களின் உடல்நலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் காற்று மாசு பிரச்னைக்கு தீா்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 • 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் மரணமடைந்த 8 பேரில், ஒருவரின் உயிரிழப்புக்கு காற்று மாசுடன் தொடா்பு இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் அதே ஆண்டில் மொத்தம் 12.4 லட்சம் பேரின் மரணத்துடன் காற்று மாசுக்கு தொடா்புள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
சென்னை போலீசில் பெண் போலீஸ் சிறப்பு படை & ‘இ-ஸ்கூட்டர்’ அறிமுகம் 
 • சென்னை நகர போக்குவரத்து போலீசில் பெண் போலீஸ் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாகனங்களை சோதனை செய்தல், பெண்கள் நடத்தும் போராட்டங்கள் போன்றவற்றின் போது இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள். 
‘இ-ஸ்கூட்டர்’ ரோந்து வாகனம்
 • சென்னை போக்குவரத்து போலீசில் ‘இ-ஸ்கூட்டர்’ எனப்படும் நவீன ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் - குல்தீப் யாதவ்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சிறப்பை 25 வயதான இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இந்திய-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டவது ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
2017-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இலங்கை வீரர் மலிங்கா 3 முறை ஹாட்ரிக் நிகழ்த்தியுள்ளார்.
அதிக முறை 150 ரன்கள் - ரோகித் 
 • ஒரு போட்டியில் அதிக முறை 150 ரன்களை கடந்தவர்களில் ரோகித் சர்மா முதலிடத்தில் (8 முறை) தொடருகிறார்.
ஒரே ஓவரில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் (31)
 • விசாகப்பட்டினத்தில் இந்திய-வெஸ்ட் இண்டீஸ் நடந்த இரண்டவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் வீசிய ஆட்டத்தின் 47-வது ஓவரில் இந்திய அணி ஒரே ஓவரில் 31 ரன்கள் எடுத்தது. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு ஓவரில் இந்தியா பெற்ற அதிகபட்ச ரன் இதுவாகும்.
முக்கிய தினங்கள்
 • சர்வதேச மனித ஒருமைப்பாட்டு நாள் - டிசம்பர் 20
 •  (International Human Solidarity Day) 
Download this article as PDF Format
Previous Post Next Post