TNPSC Current Affairs December 12-13, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 12, 2019 and December 13, 2019 for forthcomong various TNPSC and Governmnet exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 12-13, 2019
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் புதிய தேசமாக மாறும் 'பூகேன்வில்லே'
Bougainville Map
 • பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியாவைச் சோ்ந்த பூகேன்வில்லே (Bougainville) தீவுகளில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், அந்தத் தீவுகளை தனி நாடாக அறிவிப்பதற்கு பெருவாரியான வாக்காளா்கள் பூகேன்வில்லே தீவு ஆதரவளித்துள்ளனா்.
 • பூகேன்வில்லே தீவின்  தலைநகரம் புகா (Buka) நகரம் ஆகும்.
 • பொது வாக்கெடுப்பு: இந்த தீவில் 20,000 போ் உயிரிழப்புக்குக் காரணமாக உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, 2001-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், சுமார் 98% வாக்காளர்கள் (1,76,928 பேர்) பப்புவா நியூ கினியாவிலிருந்து சுதந்திரத்தை பெற ஆதரித்ததாக வாக்கெடுப்பு ஆணையத்தின் (Referendum Commission) தலைவர் பெர்டி அஹெர்ன் (Bertie Ahern) டிசம்பர் 11-அன்று அறிவித்தார்.
27 ஆண்டுகளில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்ட நாடு 'மலேஷியா' 
 • 27 ஆண்டுகளில் முதல் முறையாக போலியோ வழக்கை சமீபத்தில் மலேஷியா நாடு பதிவு செய்துள்ளது. டிசம்பர் 6, 2019 அன்று மூன்று மாத குழந்தைக்கு போலியோ இருப்பது கண்டறியப்பட்டது. தடுப்பூசி மூலம் பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை 1 (VDPV1) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
மனித மேம்பாடு குறியீடு 2019 இந்தியா 129-வது இடம் 
 • ஐ.நா. மேம்பாட்டு திட்டம், ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்கள் வளர்ச்சியை ஒப்பீடு செய்து, ஆண்டுதோறும் பட்டியல் தயாரித்து வருகிறது. இதில், 189 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த பட்டியலில், கடந்த ஆண்டு 130-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி, 129-வது இடத்தை அடைந்துள்ளது.
உலகின் முதல் 10 தூய்மையான நதிகளில் ஒன்று 'கங்கை நதி'
 • சமீபத்திய அறிக்கையின்படி, கங்கை நதி, உலகின் தூய்மையான 10 நதிகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று மத்திய நீர் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத், புதுடில்லியில் நடைபெற்ற 2019 இந்தியா நீர் தாக்க உச்சி மாநாட்டில் இந்த தகவலை தெரிவித்தார்.
 • உலகின் குடிநீரில் இந்தியாவில் 4% மட்டுமே உள்ளது, அதே நேரத்தில் உலகின் 18% மனித மற்றும் அதற்கு சமமான கால்நடை மக்கள் தொகையை இந்தியா கொண்டுள்ளது. 
 • கங்கா அமந்திரன் அபியான் (Ganga Aamantran Abhiyan) என்ற படகு பயணத்திட்டம், 10 அக்டோபர் 2019 அன்று தொடங்கப்பட்டது. தூய்மையான கங்கா நிதியை (CGF) நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • CGF: Clean Ganga Fund.
குடியுரிமை திருத்த மசோதா 2019 - நிறைவேற்றம் 
 • குடியுரிமை திருத்த மசோதா 2019 (Citizenship (Amendment) Bill, 2019), இந்திய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. குடியுரிமைச் சட்டம், 1955-இல் திருத்தம் செய்ய இந்த மசோதா மக்களவையில் டிசம்பர் 9 அன்றும், மாநிலங்களவையில் டிசம்பர் 11 அன்றும் நிறைவேறியது.
மனித நூலக நிகழ்வு 2019 (மைசூரு)
 • கர்நாடகா மைசூருவில், டிசம்பர் 8- அன்று, மனித நூலக நிகழ்வு (Human Library event) நடைபெற்றது. மனித நூலகம் என்பது, புத்தகங்களுக்கு மாற்றாக மனிதர்களை ஏற்படுத்த முற்படும் ஒரு கருத்தாக்கம் ஆகும்.
 • மனித நூலகம் இந்தியாவில் ஹைதராபாத், மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
புகழ்பெற்ற புனித யாத்திரை மையம் 'ஓம்கரேஷ்வர்' 
 • மத்திய பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற புனித யாத்திரை மையம் ஓம்கரேஷ்வர் (Omkareshwar) ஆகும், இது உஜ்ஜைன் ஓம்கரேஷ்வர் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகும். இது இந்தூரிலிருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அண்மையில் ஓம்கரேஷ்வரின் வளர்ச்சிக்காக மத்திய பிரதேச மாநில அரசு ரூ.156 கோடியை அனுமதித்தது.
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், குருகிராம்
 • ஹரியானாவில் மாநிலத்தின் குருகிராம் (Gurugram) நகரத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) திறக்கப்பட்டது. ரூ.38 கோடி செலவில் கட்டப்பட்ட ICCC மையம், பொலியுறு நகர பயன்பாடுகளுடன் தொடர்புடைய அனைத்து இணைய 
 • தரவுகளுக்கும் ஒரு சந்திப்பு மையமாக (nodal point) இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • ICCC: Integrated Command and Control Centre.
பாதுகாப்பு/விண்வெளி
RISAT-2BR1 செயற்கோள் - தகவல்கள் 
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO), பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ‘RISAT-2BR1’ செயற்கைகோள், PSLV-C48 ராக்கெட் மூலம் டிசம்பர் 11-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 1-வது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. பூமியில் இருந்து 576 கி.மீ. தூரத்தில் உள்ள புவிவட்டப்பாதையில் 37 டிகிரியில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது.
 • 10 செயற்கைகோள்கள்: இந்த PSLV-C48 ராக்கெட்டில் RISAT-2BR1 செயற்கோளுடன், இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள்கள் வீதம் 3 செயற்கைகோள்களும், அமெரிக்காவை சேர்ந்த 6 செயற்கைகோள்களும் என மொத்தம் 9 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டன. இவை அனைத்தும் நியூஸ்பேஸ் இந்தியா லிட். நிறுவனத்தின் மூலம் வணிக ரீதியாக அனுப்பப்பட்டன.
 • ரீசாட்-2பிஆர்1: RISAT-2BR1 என்பது ‘ராடார் இமேஜிங் சாட்டிலைட்’ (Radar imaging earth observation satellite) ஆகும். இந்த செயற்கைகோள், முக்கியமாக ராணுவ பயன்பாட்டுக்காக விண்ணில் அனுப்பப்பட்டு உள்ளது. நாட்டின் எல்லை பாதுகாப்பை விண்ணில் இருந்தவாறே இந்த செயற்கைகோள் உறுதி செய்யும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
 • PSLV-C48-சிறப்புகள்: PSLV-C48 ராக்கெட், பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 50-வது ராக்கெட் (பொன்விழா ராக்கெட்) ஆகும். 
 • மோட்டார்களில் திட எரிபொருள் நிரப்பப்படாமல் அனுப்பப்படும் 16-வது ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டில் இது 75-வது ராக்கெட் மற்றும் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 37-வது ராக்கெட் இதுவாகும். 
 • பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள்: கடந்த 26 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. இவற்றில், 48 திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் சந்திரயான்-1, மங்கள்யான், 104 விண்கலங்கள் சாதனை போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இதைப்போல கடந்த 1993-ம் ஆண்டு முதல் இதுவரை 310 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் இந்த ராக்கெட்டுகள் சுமந்து சென்றுள்ளன.
 • 52 டன் செயற்கைகோள்கள்: 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைகோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைகோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. 
 • ஆதித்யா எல்1 விண்கலம்: சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட உள்ளது. இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. 
 • துச்சிஃபாட்-3 செயற்கைக்கோள்: பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட்டில் இருந்து ஏவப்படவுள்ள துச்சிஃபாட்-3 (Duchifat 3) செயற்கைக்கோள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது. துசிஃபாட் 3 என்பது இஸ்ரேலிய பள்ளி மாணவர்கள் தயாரித்த மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் குழந்தைகளுக்கு சேவைகளுக்கான புவி கண்காணிப்பு செயற்கைகோள் ஆகும். 
சோஹே சேட்டிலைட் ஏவுதளம், வட கொரியா 
 • சோஹே சேட்டிலைட் ஏவுதளம் (Sohae Satellite Launching Station) வட கொரியா நாட்டில் அமைந்துள்ளது. சோஹே வட கொரியாவின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. வட கொரியா தனது நீண்ட தூர ராக்கெட்கள் ஏவுதளமான சோஹே சேட்டிலைட் ஏவுதள நிலையத்தில் 8 டிசம்பர் 8-அன்று மிக முக்கியமான சோதனையை மேற்கொண்டது. 
விருதுகள்
அமைதிக்கான நோபல் பரிசு 2019
 • 2019-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமா் அபி அகமது அலிக்கு டிசம்பர் 10-அன்று வழங்கப்பட்டது. நோபல் பதக்கமும் சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் நடைபெற்றது. அபி அகமது அலிக்கு, நாா்வே நோபல் பரிசுக் குழுவின் தலைவா் பெரிட் ரைஸ் ஆண்டா்சன் நோபல் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினாா். அமைதிக்காக வழங்கப்படும் 100-ஆவது நோபல் பரிசு இதுவாகும்.
 • எரித்ரியா பிரச்னை: 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எத்தியோப்பிய பிரதமராகப் பொறுப்பேற்ற அபி அகமது அலி (வயது 43), எரித்ரியாவுடன் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டாா். இதன் காரணமாக, 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனை சா்வதேச சமூகம் பாராட்டும் வகையில் அவா் இவ்வாண்டுக்கான அமைதி நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தீபாவளி - பவர் ஆஃப் ஒன்- 2019 ’விருதுகள் 
 • ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகத்திற்கு பணியாற்றியதற்காக, நான்கு புகழ்பெற்ற தூதர்களுக்கு, ‘தீபாவளி - பவர் ஆஃப் ஒன்’ விருது (Diwali-Power of One- 2019), நியூயார்க் நகரத்தில் வழங்கப்பட்டது.
 • விருது பெற்ற தூதர்கள் 
  1. கைரத் அப்த்ரக்மனோவ் (கஜகஸ்தானின் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி)
  2. நிக்கோலஸ் எமிலியோ (சைப்ரஸின் ஐ.நாவுக்கான முன்னாள் நிரந்தர பிரதிநிதி) 
  3. ஃபிரான்டிசெக் ருசிகா (ஸ்லோவாக்கியாவின் ஐ.நாவுக்கான முன்னாள் நிரந்தர பிரதிநிதி) 
  4. வோலோடிமிர் யெல்சென்கோ (உக்ரைனின் ஐ.நாவுக்கான முன்னாள் நிரந்தர பிரதிநிதி) 
 • தற்போது 'ஆஸ்கார் ஆஃப் டிப்ளமோசி' (Oscars of Diplomacy) என்று அழைக்கப்படும் இந்த விருதுகள் தீபாவளி பவுண்டேஷன் அமைப்பால் 2017-இல் நிறுவப்பட்டது. 
'லோக்மத்' சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதுகள் 2019 
 • மராட்டிய மாநில மீடியா குழுமம் ‘லோக்மத்’ சார்பில், 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதுகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களால் புதுடெல்லியில் வழங்கப்பட்டன. விருது பெற்றோர் விவரம்:
  1. சிறந்த மாநிலங்களவை எம்.பி. விருது - திருச்சி சிவா
  2. சிறந்த மக்களவை எம்.பி. விருது - சாகத் ராய்
  3. மக்களவை சிறந்த பெண் எம்.பி விருது - சுப்ரியாசுலே
  4. மாநிலங்களவை சிறந்த பெண் எம்.பி. விருது - விப்லப் தாகூர் 
  5. சிறந்த நாடாளுமன்றவாதி வாழ்நாள் சாதனையாளர் விருது - சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் 
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹன்ச ஆராய்ச்சி மானியம் - விடிதா வைத்யா
 • ரூ.3 கோடி மதிப்புள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹன்ச ஆராய்ச்சி மானியத்தை 'விடிதா வைத்யா' என்பவர் வென்ற்றுள்ளார். இளம் விஞ்ஞானி விடிதா வைத்யா (Vidita Vaidya) டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
நியமனங்கள் 
தென்மண்டல தலைமை ராணுவ அதிகாரி - பி.என்.ராவ் 
 • தென்மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பி.என்.ராவ் சென்னையில் 1டட்ம்பர் 0-அன்று பொறுப்பேற்றார். சென்னையில் உள்ள அவரது தலைமையகம் இந்திய ராணுவத்தின் தெற்குப் பிரிவு கமாண்டுக்கு உட்பட்டதாகும். 
பொருளாதார நிகழ்வுகள்
GST பங்குதாரர் கருத்தளிப்பு தினம் - டிசம்பர் 7
 • மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் பங்கேற்ற சரக்கு மற்றும் சேவை வரி பங்குதாரர் கருத்தளிப்பு தினம் (GST Stakeholder Feedback Diwas), டிசம்பர் 7, 2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 • இந்த நிகழ்வின் நோக்கம், அடுத்த நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள GST வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான புதிய முறைக்கு ஆலோசனையையும் பெறுவதாகும். புதிய வருவாய் படிவம் 2020 ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
சிவகளை மற்றும் கொடுமணல் அகழ்வாராய்ச்சி - மத்திய அரசு அனுமதி 
 • 2003-04, 2004-05-ம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த ஆய்வறிக்கைகள் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளன. கி.மு. 600-ம் நூற்றாண்டை சார்ந்த சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினால் ஆன பானை பொருட்களும், பல்வேறு சித்திரங்களுடன் கூடிய கலைப் பொருட்களும், இரும்பிலான அம்புகள், கத்தி, வளையல்கள், கல் மணிகள் போன்ற அரிய பொருட்களும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்றுள்ளன.
 • ‘சிவகளை மற்றும் கொடுமணல் ஆய்வுகளுக்கு மத்திய அரசிடம் திட்டம் இல்லை. ஆனால் தமிழக அரசின் தொல்லியல்துறைக்கு சிவகளை, கொடுமணல் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
திருவண்ணாமலை மகாதீபம்
 • அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திரு விழாவை முன்னிட்டு நவம்பர் 10-அன்று 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
காஞ்சீபுரம் அருகே 2-வது விமான நிலையம்
 • சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மீனம்பாக்கத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் காஞ்சீபுரம் அருகே உள்ள பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
முக்கிய நபர்கள்
பிரஜ் பிஹாரி குமார்
 • இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR ) தலைவர் பிரஜ் பிஹாரி குமார் (Braj Bihari Kumar), டிசம்பர் 8, 2019 அன்று காலமானார்.
விளையாட்டு நிகழ்வுகள்
தெற்காசிய விளையாட்டு 2019
 • 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்ட் மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் டிசம்பர்1 முதல் 10 வரை நடைபெற்றது.
 • 7 நாடுகள்: இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.
 • பதக்கப்பட்டியல் - இந்தியா முதலிடம் 
  • பதக்கப்பட்டியலில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என்று மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் இது வாகும்.
  1. இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் - 312 பதக்கங்கள் 
  2. நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலம் - 206 பதக்கங்கள் 
  3. இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் - 251 பதக்கங்கள்
  4. பாகிஸ்தான் 31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலம் - 131 பதக்கங்கள்
கூடைப்பந்து

சர்வதேச கூடைப்பந்து நடுவராக 'துரைராஜ் ரமேஷ்குமார்' தேர்வு
 • சர்வதேச கூடைப்பந்து போட்டி நடுவராக தஞ்சாவூரைச் சேர்ந்த 'துரைராஜ் ரமேஷ்குமார்' தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றுவதற்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தஞ்சையை சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து போட்டி நடுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் சர்வதேச 
 • கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராக 2021 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பணியாற்றவுள்ளார்.
கிரிக்கெட்

பாகிஸ்தானில் 10 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்
 • பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் நடக்கிறது. இலங்கை-பாகிஸ்தான் மோதும் இந்த டெஸ்ட் ராவல்பிண்டியில் டிசம்பர் 11-அன்று தொடங்குகிறது.
T20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர் - விராட் கோலி
 • T20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர் (2,563 ரன்கள்) என்ற சிறப்பை இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றார்.
 • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் (டிசம்பர் 8, 2019), விராட் கோலி 17 ரன்கள் எடுத்தபொது இந்த சிறப்பை பெற்றார்.
  1. விராட் கோலி - 2,563 ரன்கள் 
  2. ரோஹித் சர்மா - 2, 562 ரன்கள்.
முக்கிய தினங்கள்  
உலக சுகாதார பாதுகாப்பு தினம் - டிசம்பர் 12
 • உலக சுகாதார அமைப்பால் ஆண்டுதோறும் டிசம்பர் 12 அன்று, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் (Universal Health Coverage Day) கடைபிடிக்கப்படுகிறது.
 • 2019 உலக சுகாதார பாதுகாப்பு தின மையக்கருத்து: 'Keep the promise'.
சர்வேதச நடுநிலை நாள் - டிசம்பர் 12 
 • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி, துர்க்மேனிஸ்தானால் அறிமுகப்படுத்த "ஐக்கிய நாடுகள் சபை நிரந்தரமாக நடுநிலை வகிக்கும் தீர்மானம்" அங்கீகரிக்கப்பட்ட நாள் டிசம்பர் 12, ஆகும்.  
 • ஐக்கிய நாடுகள் சபை நிரந்தரமாக நடுநிலை வகிப்பதை உறுதி செய்யும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் நினைவாக ஆண்டுதோறும் "சர்வேதச நடுநிலை நாள்" டிசம்பர் 12 அன்று (International Day of Neutrality) கடைபிடிக்கப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post