TNPSC Current Affairs December 10-11, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 10, 2019 and December 11 2019 for forthcomong various TNPSC and Governmnet exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 10-11-, 2019
சர்வதேச நிகழ்வுகள்
2019 பிரபஞ்ச அழகியாக 'சோசிபினி துன்சி' தேர்வு
  • 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்சி (வயது 26) என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  • 2018-ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிலிப்பைன்சை சேர்ந்த கேட்ரியோனா கிரோ மகுடம் சூட்டினார்.
  • இதில் இந்தியாவை சேர்ந்த மாடல் அழகி வர்திகா சிங் கலந்து கொண்டார். 
  • 2-வது இடம்- மேடிசன் ஆண்டர்சன் (பியூர்டோ ரிகோ) 
  • 3-வது இடம் - சோபியா (மெக்சிகோ).
உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020
  • உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020 (Global Migration Report 2020) எந்த அமைப்பால் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ( International Organisation for Migration) அண்மையில் வெளியிடப்பட்டது.
  • சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து அதிக அளவில் புலம்பெயர்ந்துள்ளனர். உலகெங்கிலும் 17.5 மில்லியன் இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடமிருந்து 78.6 பில்லியன் டாலர் பணம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • 2019 இல் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை உள்ளது. இப்போது 270 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது அதிக புலம் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் (51 மில்லியன்) நாடக அமெரிக்கா உள்ளது. 
இந்திய நிகழ்வுகள்
குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 - சில தகவல்கள் 
  • குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 (Citizenship (Amendment) Bill, 2019) இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • குடியுரிமைச் சட்டம், 1955-இல் திருத்தம் செய்ய இந்த மசோதா முன்மொழிகிறது. 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முஸ்லிமல்லாதவர்களுக்கு (இந்து, புத்த, கிறிஸ்தவ, பார்சி, 
  • ஜெயின் மற்றும் சீக்கியர்கள்) குடியுரிமை வழங்க மசோதா வழிவகை செய்கிறது.
  • இந்த மசோதா, மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் தங்குமிடம் பெற வேண்டிய கட்டாயத்தில் இருபவர்களுக்கு இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு உதவும்.
  • இந்த மசோதா பொருந்தாத பகுதிகள்: அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவின் பழங்குடிப் பகுதிகள்.
பைகா கிளா்ச்சி நினைவிடம் - அடிக்கல் நாட்டு விழா 
  • பைகா கிளா்ச்சி நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் டிசம்பர் 8-அன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினாா்.
  • கஜபதி பேரரசின் ஆட்சிக் காலத்தில் 1817-ஆம் ஆண்டில் பிரிட்டீஷாா் ஒடிஸாவில் நில அபகரிப்பில் ஈடுபடு முயன்றபோது பைகா சமூகத்தினா் கிளா்ச்சி செய்தனா். ஜெய ராஜகுரு என்ற புரட்சியாளா், பிரிட்டீஷாரின் சூழ்ச்சியில் உயிரைத் தியாகம் செய்தாா். பக்ஷி ஜகபந்து வித்யாதா் தலைமையிலான புரட்சியாளா்கள் பிரிட்டீஷாரை விரட்டி அடித்தனா்.
அசாம் காடுகளில் 'அழிவு தடுப்புப் படைகள்' அறிமுகம் 
  • மனித-வனவிலங்கு மோதல்களைத் தவிர்ப்பதற்காக காடுகளில், அழிவு தடுப்புப் படைகளை (Anti-Depedration Squads) அசாம் மாநிலம் தொடங்கியுள்ளது.
  • அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைநகர் குவஹாத்தியில் போது 15 அழிவு தடுப்புப் படை குழுக்களை தொடங்கிவைத்தார்.
இலவச வைஃபை பெற்ற 5500-வது ரயில் நிலையம் - மஹுவாமிலன் 
  • கிழக்கு மத்திய ரயில்வே (ECZ) மண்டலத்தின் கீழ் வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மஹுவாமிலன் ரயில் நிலையம் (Mahuamilan) இலவச வைஃபை (wifi) வசதியைப் பெற்றுள்ள 5500-வது ரயில் நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
அரியானாவில் 'பசு கிசான் கடன் அட்டைகள்'
  • இந்தியாவின் முதல் பசு கிசான் கிரெடிட் கார்டுகள் (Pashu Kisan credit cards) சமீபத்தில் அரியானா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளைப் பயன்படுத்தி, ஒருவர் மாடு-எருமை மற்றும் பிற விலங்குகளை வாங்கலாம், பிற பொருட்களையும் வாங்கலாம் .
இந்தோ-நேபாள எல்லையில் 'ஏழு FM டிரான்ஸ்மிட்டர் திட்டங்கள்'
  • இந்தோ-நேபாள எல்லையில், சாஸ்திர சீமா பால் (SSB) வளாகத்தில் 7 FM டிரான்ஸ்மிட்டர்கள் அமைக்கும் ஏழு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டங்கள் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் அமையவுள்ளது. இந்த டிரான்ஸ்மிட்டர்கள் அமைக்கப்படும் இடங்கள்: நர்கதியகஞ்ச் (மேற்கு சம்பரன்), பாத்னாஹா (அரேரியா), பீகாரில் சீதாமாரி, சம்பாவத், உத்தரகண்ட், நன்பாரா (பஹ்ரைச்), கடானியா (லக்கிம்பூர் கெரி), மற்றும் உத்தரபிரதேசத்தில் மகாராஜ்கஞ்ச்.
இந்தியாவின் பிளாக்கிங் தூதர் 'ரிபு தமன் பெவ்லி'
  • இந்தியாவின் பிளாக்கிங் தூதராக ரிபு தமன் பெவ்லி' (Ripu Daman Bevli) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் (MYAS) கீரன் ரிஜிஜு இந்தியாவின் பிளாக்மேன் என்று அறியப்பட்ட ரிப்பு தமன் பெவ்லியை வாழ்த்தி, இந்தியாவின் பிளாக்கிங் தூதர் என்று அறிவித்துள்ளார்.
  • பிளாக்கிங் (Plogging) என்பது ஒட்டப்பயிற்சியின் பொது குப்பைகளை எடுக்கும் முறை ஆகும்.
TCS நிறுவனத்தின் LGBT ஊழியர்களுக்கான 'சுகாதார காப்பீட்டுக் கொள்கை'
  • LGBT ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் சுகாதார காப்பீட்டுக் கொள்கையை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் அறிவித்துள்ளது. இது LGBT ஊழியர்கள் என்பவர்கள் ஒரே பாலின உறவாளர்களாவர்.
உத்தரகண்டின் 'சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்' 
  • கலப்பின ஆண்டளிப்பு, உத்தரகண்ட் மாநிலத்தில் சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, ஸ்வீடன் நாட்டின் அரசர் கார்ல் XVI குஸ்டாஃப் மற்றும் ராணி சில்வியா ஆகியோர் திறந்து வைத்தனர். 
  • Hybrid Annuity அடிப்படையிலான பொது தனியார் கூட்டாண்மை மாதிரி (PPPM) கீழ் முடிக்கப்பட்ட முதல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இது ஆகும்.
  • இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஸ்வீடன் மன்னரும் ராணியும் இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டனர்.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தியா-ரஷ்யா கூட்டுப்பயிற்சி 'இந்திரா-2019'
  • இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை படைகளுக்கு இடையிலான முத்தரப்பு கூட்டுப்பயிற்சி, இந்த பயிற்சி ஒரே நேரத்தில் புனே மற்றும் கோவாவில் டிசம்பர் 10-19 வரையில் நடைபெற உள்ளது.
நியமனங்கள் 
ஃபின்லாந்து பிரதமராக 'சன்னா மரீன்' தோ்வு
  • ஃபின்லாந்து நாட்டின், புதிய பிரதமராக 'சன்னா மரீன்' (Sanna Marin) என்ற பெண்மணி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். உலகின் உலகின் மிக இளைய பிரதமர்: தற்போதைய பிரதமா்களில், உலகின் மிக இளைய பிரதமர் (34 வயது) என்ற சிறப்பை 'சன்னா மரீன்' பெற்றுள்ளார். என்ற பெண்மணி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். உலகின் உலகின் மிக இளைய பிரதமர்: தற்போதைய பிரதமா்களில், உலகின் மிக இளைய பிரதமர் (34 வயது) என்ற சிறப்பை 'சன்னா மரீன்' பெற்றுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் - கே. விஜய் குமார் 
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக கே விஜய் குமார் (K Vijay Kumar) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் இடது சாரி தீவிரவாதம் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்திற்கு அவர் ஆலோசனை வழங்கவுள்ளார்.
  • 67 வயதான கே விஜய் குமார் இந்திய போலீஸ் சேவையின் 1975 தொகுதி அதிகாரி ஆவார். 
தேசிய பங்குச் சந்தை புதிய தலைவர் - கிரிஷ் சந்திர சதுர்வேதி 
  • தேசிய பங்குச் சந்தையின் (National Stock Exchange) புதிய தலைவராக கிரிஷ் சந்திர சதுர்வேதி (Girish Chandra Chaturvedi) நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
சியு-கா-பா விருது 2019 - டாக்டர் பத்மேஸ்வர் கோகோய்
  • 2019-ஆம் ஆண்டிற்கான சியு-கா-பா விருது (Siu-Ka-Pha Award), டாக்டர் பத்மேஸ்வர் கோகோய் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • சியு-கா-பா விருது: சியு-கா-பா விருது, அசாமின் கோலாகாட் மாவட்டத்தின் பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் அமைப்புகளின் மத்திய குழுவால் நிறுவப்பட்டது. இந்த விருது தாவரவியல் மற்றும் அறிவியல் துறையில் பங்களிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது
  • டாக்டர் பத்மேஸ்வர் கோகோய், பிரபல கல்வியாளர், தாவரவியலாளர் மற்றும் நாட்டுப்புற ஆராய்ச்சியாளர் டாக்டர் பத்மேஸ்வர் கோகோய் ஆவார்.
பொருளாதார நிகழ்வுகள் 
ஒரு நாளைக்கு 500,000 பீப்பாய் எண்ணெய் உற்பத்தி: ஒபெக் இலக்கு 
  • பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு 'ஒபெக்' (OPEC) சமீபத்தில் ஒரு நாளைக்கு 500,000 பீப்பாய்களில் புதிய கச்சா எண்ணெய் உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ளன. டிசம்பர் 6, 2019 அன்று, உற்பத்தி வெட்டுக்களை ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. 
  • பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு 14 நாடுகளின் இணைந்த அமைப்பு ஆகும், இது செப்டம்பர் 14, 1960 அன்று பாக்தாத்தில் நிறுவப்பட்டது, 1965 முதல் ஆஸ்திரியாவின் வியன்னாவில் தலைமையிடமாக கொண்டுள்ளது. 
  • OPEC: Organisation of the Petroleum Exporting Countries.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
கார்த்திகை தீபத் திருவிழா 2019
  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் டிசம்பர் 10-அன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது.
  • பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
தெற்காசிய விளையாட்டு 2019
  • இந்திய பெண்கள் கால்பந்து அணி தங்கம்: பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இளம் வீராங்கனை கலைவாணி 3-2 என்ற கணக்கில் நேபாள வீராங்கனை லலிதாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். கலைவாணி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். 
E-ஸ்போர்ட்ஸ் - அறிமுகம் 
  • 30-வது தென்கிழக்கு ஆசியப் போட்டிகள் பிலிப்பைன்ஸில் நடைபெற்று வருகிறது. இதில், இ-ஸ்போர்ட்ஸ் எனும் விடியோ கேம்ஸ் ஆட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் போட்டியாளர்கள் கம்ப்யூட்டர், மொபைல் மற்றும் கன்சோல் என 3 பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றனர். 
 ஒலிம்பிக்

2020 ஒலிம்பிக் போட்டி: ரஷியாவுக்குத் தடை
  • உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (வாடா), 2020 ஒலிம்பிக் மற்றும் 2022 கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதையடுத்து இவ்விரு போட்டிகளிலும் ரஷியாவின் தேசிய கீதமும் கொடியும் அனுமதிக்கப்படாது. 
  • ஊக்க மருந்து சோதனையில் தேர்ச்சியடையும் ரஷிய விளையாட்டு வீரர்கள், பொதுவான கொடியுடன் போட்டிகளில் பங்கேற்கலாம்.
ஆக்கி

முத்தரப்பு பெண்கள் (U-21)ஆக்கி 2019: இந்திய அணி முதலிடம்
  • ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் பங்கேற்ற முத்தரப்பு பெண்கள் ஜூனியர் ஆக்கித் தொடர் (21 வயதுக்குட்பட்டோர்) போட்டியில், இந்தியா முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
கால்பந்து 

FIFA கிளப் உலகக் கோப்பை 2019 
  • சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) சாா்பில் புதிய கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2019 வரும் டிசம்பர் 11-அன்று கத்தாா் தலைநகா் தோஹாவில் தொடங்குகிறது. இப்போட்டியில் உலகின் தலைசிறந்த 7 கிளப் அணிகள் பங்கேற்கின்றன.
35-வது முறை ‘ஹாட்ரிக்’ கோல் - மெஸ்சி சாதனை
  • லா லிகா கால்பந்து போட்டியில் 35-வது முறையாக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்தார். இதன் மூலம் லா லிகா கால்பந்து வரலாற்றில் அதிக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தவர் என்ற சாதனையை மெஸ்சி படைத்தார். 
முக்கிய தினங்கள்  
மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10 
  • மனித உரிமைகள் தினம் (Human Rights Day) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (1948): ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை, டிசம்பர் 10, 1948 அன்று, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) ஏற்றுக்கொண்டதன் நினைவாக, ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2019 மனித உரிமைகள் தின மையக்கருத்து: 'Youth Standing Up for Human Rights' என்பதாகும். 
சர்வதேச மலைகள் தினம் - டிசம்பர் 11
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலை தினம் (International Mountain Day) கடைபிடிக்கிறது. 
  • மலைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சுழல் பங்களிப்பில் மலைகளின் இன்றியமையாத தன்மைகளை ஊக்குவிப்பதற்காக, சர்வதேச மலை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018 சர்வதேச மலை தின மையக்கருத்து: 'Mountains Matter for Youth' என்பதாகும்.
<!-- Add icon library
Full width:
-->
Previous Post Next Post