TNPSC Current Affairs November 25-26, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 25-26, 2019


TNPSC Current Affairs November 25-26, 2019
TNPSC Current Affairs November 25-26, 2019
தேசிய நிகழ்வுகள்
மிஸ்டர் யுனிவர்ஸ் 2019 - சித்தரேஷ் நடேசன்
  • 2019 மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் (Mr Universe 2019) முதல் இந்தியர் என்ற சிறப்பை, கேரள மாநிலத்தைச் சேர்ந்த சித்தரேஷ் நடேசன் (Chitharesh Natesan) பெற்றுள்ளார்.
  • சித்தரேஷ் நடேசன், தென் கொரியாவின் தீவு நகரமான ஜெஜூவில் நடைபெற்ற 11-வது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலியல் விளையாட்டு சாம்பியன்ஷிப்பில், 90 கிலோ பிரிவில் (World Bodybuilding and Physique Sports Championship) Mr. யுனிவர்ஸ் 2019 மகுடத்தை வென்றார்
சட்டப்பூர்வ கஞ்சா சாகுபடி: மத்தியப் பிரதேச அரசு முடிவு
  • மருத்துவ மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக மாநிலத்தில் கஞ்சா சாகுபடியை (legalize the cultivation of cannabis) சட்டப்பூர்வமாக்க எந்த மத்தியப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக சணல் போன்ற கஞ்சா பயிர் (a type of marijuana) விவசாயத்தை அரசாங்கம் அனுமதிக்கும். 0.3 முதல் 1.5% வரை டெட்ரா-ஹைட்ரோ-கன்னாபினோல் (THC:Tetra-Hydro-Cannabinol) உள்ளடக்கம் கொண்ட சணல், ஃபைபர் உற்பத்தியைப் போன்ற தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்.
போடோ அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடைவிதிப்பு 
  • அசாம் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் போடோ பயங்கரவாத இயக்கத்தை (NDFB:National Democratic Front of Boroland) சட்டவிரோத அமைப்பாக அறிவித்து கடந்த 1990-ம் ஆண்டு அந்த இயக்கத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடைவிதித்தது. அப்போது முதல் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் அந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போடோ பயங்கரவாத இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மன் கி பாத் - நவம்பர் 24, 2019 
  • பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நவம்பர் 24 அன்றைய மன் கி பாத் நிகழ்வில் பிரதமர் தேசிய மாணவா் படை (NCC) மாணவா்களுடன் மோடி உரையாடினாா். உரையின் முக்கிய குறிப்புகள் விவரம்:
  • 2019-ஆம் ஆண்டை சா்வதேச பூா்வகுடி மொழிகள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. வழக்கொழிந்து வரும் பூா்வகுடி மொழிகளை காப்பதே இதன் நோக்கம், அனைவரும் தாய்மொழியை பயில வேண்டும்.
  • டிசம்பர் 7-ந் தேதி கொடி நாள் கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுத்தார்.
  • மகாகவி சுப்ரமணிய பாரதியாரின், “முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்“ என்ற பாடலை குறிப்பிட்டார். 
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ‘ஃபிட் இந்தியா வாரம்’ (உடலை உறுதியாக வைப்பது) இயக்கத்தை வரும் டிசம்பரில் நடத்தவுள்ளது. மாணவா்கள், இதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து தேசிய அளவில் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும்.
புதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்
  • புதுச்சேரி பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக 'வாட்டர் பெல்' திட்டம் இன்று நவம்பர் 25-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மைக்ரோசாப்ட்டின் ‘கே -12 கல்வி உருமாற்றம் கட்டமைப்பு திட்டம் 
  • இந்தியாவில் பள்ளிகளின் விரிவான டிஜிட்டல் மாற்றத்தை எளிதாக்க மைக்ரோசாப்ட் (Microsoft) தொழில்நுட்ப நிறுவனம், தனது ‘கே -12 கல்வி மாற்ற கட்டமைப்பை’ (K-12 Education Transformation Framework) அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி
QUAD நாடுகளின் முதலாவது பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப்பயிற்சி-2019
  • குவாட் (QUAD) நாடுகளுக்கான முதல் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப்பயிற்சியை (CTTE 2019), இந்தியாவின் தேசிய விசாரணை நிறுவனம் (NIA), டெல்லியில் நவம்பர் 21 முதல் 22 வரை நடத்தியது. 
  • குவாட் நாடுகளுக்கான முதல் பயங்கரவாத எதிர்ப்பு அட்டவணை சிறந்த பயிற்சியை (சி.டி.டி.இ) தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) 2019 நவம்பர் 21-22 தேதிகளில் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நடத்தியது.
  • குவாட் நாடுகள் கூட்டமைப்பில், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
  • நாற்கர பாதுகாப்பு உரையாடல் (QSDQuadrilateral Security Dialogue) என்ற பெயரில் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நான்கு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாயம் தொடர்பான கூட்டமைப்பு இதுவாகும்.
  • CTTE: Counter Terrorism Table Top Exercise.
விருதுகள் 
ICMR வாழ்நாள் சாதனையாளர் விருது 2019 - கிரண் மஜும்தார்-ஷா
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வாழ்நாள் சாதனையாளர் விருது 2019 (ICMR Lifetime Achievement Award-2019), பயோகான் (Biocon) நிறுவன தலைவர் கிரண் மஜும்தார்-ஷா (Kiran Mazumdar-Shaw) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • நவம்பர் 17 அன்று புது தில்லியில் நடைபெற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் 108 வது நிறுவன தினத்தை கொண்டாடும் நிகழ்வில் மஜும்தார்-ஷாவுக்கு, மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் இந்த விருதை வழங்கினார்.
  • ICMR: Indian Council of Medical Research.
நியமனங்கள்
இந்திய கடற்படையின் முதல் பெண் பைலட் - சிவாங்கி
  • இந்திய கடற்படையின் முதல் பெண் பைலடாக (First Woman Pilot of Indian Navy), லெப்டினன்ட் சிவாங்கி (Lieutenant Shivangi) டிசம்பர் 2, 2019 அன்று பொறுப்பேற்கிறார். 
  • கொச்சி கடற்படைத்தளத்தில் டோர்னியர் கண்காணிப்பு விமானங்களை இயக்கும் பணியில் ஈடுபட உள்ளார். 
  • லெப்டினன்ட் சிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர். 
மகாராஷ்டிரா முதல்வராக 'தேவேந்திர பட்னாவிஸ்' பதவி ஏற்பு
  • மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாஸ், துணை முதல்வராக அஜித்பவார் ஆகியோர் நவம்பர் 23-அன்று பதவி ஏற்றனர். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
  • மகாராஷ்டிராவில் நவம்பர் 23-அன்று அதிகாலை 5.47 மணிக்கு குடியரசுத்தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது.
மாநாடுகள்
NuGen மொபிலிட்டி உச்சி மாநாடு 2019 (மானேசர்)
  • அரியானாவில் குருகிராம் நகரின் மானேசர் பகுதியில், 2019 NuGen மொபிலிட்டி உச்சி மாநாடு (NuGen Mobility Summit 2019), 'ஸ்மார்ட் & கிரீன் மொபிலிட்டி' (Smart & Green Mobility) என்ற கருப்பொருளின் கீழ், சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையத்தில் (ICAT) நவம்பர் 27 முதல் 29 வரை நடைபெற்றது.
  • ICAT: International Centre for Automotive Technology.
மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் மாநாடு-2019 
  • 50-ஆவது ஆளுநர்கள் துணை நிலை ஆளுநர்கள் மாநாடு (Conference of Governor 2019), புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில்நவம்பர் 23-24 தேதிகளில் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள் உட்பட முதன்முறையாக ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் 17 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
உலக பௌத்தா்கள் மாநாடு 2019 (ஔரங்காபாத்)
  • மகாராஷ்டிர மாநிலத்தின் ஔரங்காபாத் நகரில் 2019 உலக பௌத்தா்கள் மாநாடு (Global Buddhist Congregation 2019) நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெற்றது.
வடக்கு கிழக்கு இலக்கு திருவிழா-2019
  • 2019-ஆம் ஆண்டுக்கான வடக்கு கிழக்கு இலக்கு திருவிழாவை (Destination North East Festival 2019) உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நவம்பர் 23 முதல் 26 வரை நடைபெறுகிறது. இந்த விழாவை வட கிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகம் (DoNER) ஏற்பாடு செய்துள்ளது. 
  • இந்த திருவிழாவில் வடகிழக்கு பிராந்தியத்தின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி ஆகியவை காட்சிப்படுத்தப் படவுள்ளது.
  • DoNER: Ministry of Development of North Eastern Region.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
மலேசியாவில், கடைசி 'சுமத்ரான்' காண்டாமிருகம் 'இமான்' உயிரிழப்பு 
  • இந்தியா மற்றும் மலேசியா வனப்பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்ட சுமத்ரான் வகை காண்டாமிருகங்கள், தற்போது உலக அளவில், 80-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. 
  • மலேசியாவில், கடைசியாக எஞ்சியிருந்த இமான் என்ற பெண் காண்டாமிருகமும் புற்றுநோயால் அண்மையில் இறந்தது. இவற்றை இனப்பெருக்கம் செய்ய இதுவரை எடுக்கப்பட்ட பல முயற்சியும் பலனிலிக்கவில்லை.
புத்தக வெளியீடு
'நேர்மையின் பயணம்' புத்தகம் வெளியீடு 
  • அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாறு ‘நேர்மையின் பயணம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பா.கிருஷ்ணன் ஆவார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
உழவன் செயலி - சில தகவல்கள் 
  • தமிழக விவசாயிகளின் வசதிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் உழவன் செயலி எனும் கைபேசி செயலி 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின்கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டுகிறது. இந்த நிதி உதவி திட்டத்துக்கு உழவன் செயலி இணையதளத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட ஊக்குவிப்பு மையம்
  • தமிழ்நாடு திரைப்பட ஊக்குவிப்பு மையம் விரைவில் அமைக்கப்படும் என்று கோவா சா்வதேச திரைப்பட விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு தெரிவித்துள்ளார்.
ஒரே ஆண்டில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் 
  • தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கப்பட்டுள்ளன. 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 5 கோட்டங்கள், 5 வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3 கோட்டங்கள், 3 வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு - 67 லட்சம் 
  • 2019 அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டது. அதன் விவரம்:
  • வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 ஆகும். இவா்களில், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் 18 லட்சத்து 66 ஆயிரத்து 451 பேராகவும், கல்லூரி மாணவா்கள் 12 லட்சத்து 39 ஆயிரத்து 867 பேராகவும், 35 வயது வரையுள்ளவா்கள் 25 லட்சத்து 47 ஆயிரத்து 802 பேரும், 57 வயது வரையுள்ளவா்கள் 11 லட்சத்து 35 ஆயிரத்து 866 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவா்கள் 7 ஆயிரத்து 648 பேரும் என மொத்தம் 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 போ் உள்ளனா். மாற்றுத் திறனாளிப் பதிவுதாரா்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 179 போ் இருப்பதாக அந்த அறிவிப்பில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய நபர்கள்
இதழியல் ஆளுமை 'நீல்காந்த் காதில்கர்'
  • மராத்தி செய்தித்தாள் நவக்கலின் பிரபல ஆசிரியர் நீல்காந்த் கதில்கர் (வயது 85), 2019 நவம்பர் 22 ஆம் தேதி மகாராஷ்டிராவின் மும்பையில் காலமானார். 
  • தலையங்கங்களுக்கு புகழ் பெற்ற நீல்காந்த் காதில்கர் (Nilkanth Khadilkar), 27 ஆண்டுகளாக நவக்கல் (Navakal) செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார்.
  • 'Practical Socialism: musings from a tour of Russia' என்ற புத்தகங்களின் ஆசிரியர் ஆவார்.
விளையாட்டு நிகழ்வுகள்
குத்துச்சண்டை 

தொழில்முறை குத்துச்சண்டை 2019: விஜேந்தா் சிங் 12-ஆவது வெற்றி 
  • துபாய் நகரில் நவம்பர் 22-அன்று நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் விஜேந்தா் சிங், 12-ஆவது வெற்றியைப் பெற்றாா். விஜேந்தா், கானா வீரரான சாா்லஸ் அடாமை வீழ்த்தினார். 34 வயதான விஜேந்தா் சிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவா். 
கிரிக்கெட்

முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி: இந்தியா வெற்றி 
  • இந்தியாவில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22 மேட்டுகுள் 24 வரை நடைபெற்றது.
  • இதில் பிங்க் நிற பந்து (இளஞ் சிவப்பு) பயன்படுத்தப்பட்டது, இதனால் இந்த போட்டி பிங்க் டெஸ்ட் எனப்பட்டது. BCCI அமைப்பின் புதிய தலைவா் சவுரவ் கங்குலி முயற்சியில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த டெஸ்ட்டை வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, முதல்வா் மம்தா பானா்ஜி தொடங்கி வைத்தனா்.
  • இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • தொடர் நாயகன்: இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார். 
  • 142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த 12-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். பகல்-அனைத்து பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு கிடைத்து இருக்கிறது. 
  • தொடரை கைப்பற்றிய இந்திய அணி: இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
  • சாதனைத் துளிகள் 
    • டெஸ்ட் ஆட்ட வரலாற்றில் தொடா்ந்து ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் 4 ஆட்டங்களில் வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 
    • கேப்டனாக விராட் கோலி தொடா்ந்து வெல்லும் 11-ஆவது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
    • தொடா் மூன்றாவது ஒயிட்வாஷ்:மே.இ.தீவுகளை 2-0 அந்நாட்டு மண்ணிலும், தென்னாப்பிரிக்காவை 3-0 என உள்ளூரிலும் ஒயிட் வாஷ் செய்தது இந்தியா. தற்போது வங்கதேசத்தையும் 2-0 என ஒயிட்வாஷ் (முற்றிலும் தோற்கடிப்பு) செய்துள்ளது.
    • இந்திய அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 
    • உள்நாட்டில் தொடர்ந்து 12-வது டெஸ்ட் போட்டி வெற்றியை இந்தியா அணி பெற்றுள்ளது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி, 360 புள்ளிகளுடன் முன்னிலையுடன் உள்ளது.
கேப்டன்ஷிப்பில் 20 சதங்கள்: கோலி சாதனை 
  • பகல்-இரவு டெஸ்டில் சத்தம் எடுத்த முதல் இந்திய வீரர் - விராட் கோலி:வங்காளதேச அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 136 ரன்கள் எடுத்தார். இது டெஸ்டில் அவரது 27-வது சதமாகும். கேப்டனாக அவரது 20-வது சதமாகும். இதன் மூலம் டெஸ்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.
  • இந்த சாதனை வரிசையில் தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (25 சதம்) முதலிடம் வகிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கை (19 சதம்) மூன்றவது இடத்தில் உள்ளார்.
  • கேப்டனாக கோலி 41 சதங்கள்: ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் போட்டியை சேர்த்து) கேப்டனாக கோலி 41 சதங்கள் எடுத்து, கேப்டன்ஷிப்பில் அதிக சர்வதேச சதங்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை (41 சதம்) சமன் செய்துள்ளார்.
  • ஒரு வீரராக 70 சதங்கள்: மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து விராட் கோலி ஒரு வீரராக இதுவரை 70 சதங்கள் (டெஸ்ட் 27, ஒரு நாள் போட்டி 43) எடுத்துள்ளார். 70 சதங்களை வேகமாக எட்டியவர் (438 இன்னிங்ஸ்) என்ற சிறப்பை பெற்றுள்ளார். 
  • அதிக சர்வதேச சதங்கள் எடுத்தவர்களில், சச்சின் தெண்டுல்கர் (100 சதம்), ரிக்கிபாண்டிங் (71 சதம்) முதல் இரு இடங்களில் உள்ளனர்.
முக்கிய தினங்கள் 
நவம்பர் 25

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வேதேச தினம் - நவம்பர் 25
  • ஐக்கிய நாடுகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக, ஆண்டுதோறும், நவம்பர் 25-ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினமாக (International Day for the Elimination of Violence against Women) கடைபிடிக்கிறது.
  • 2019 மையக்கருத்து: 'Orange the World: Generation Equality Stands Against Rape'.
நவம்பர் 26

இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் - நவம்பர் 26
  • 70-ஆவது அரசியலமைப்பு நாள் (26.11.2019): அரசியலமைப்பு சட்ட தினம் (Constitution Day) நவம்பர் 26 தேதி கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்ட தினம் (சாவித்வான் திவாஸ்), இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதற்காக நவம்பர் 26 அன்று இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
  • 1949 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாளில் (29.11.1946) இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அரசியலமைப்பு சட்டமன்றம் (Constituent Assembly), ஏற்றுக்கொள்வதற்காக அறிவித்தது.
  • 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம், நடைமுறைக்கு வந்தது.
  • 2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி முதல் "அரசியலமைப்பு தினம்" இந்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய பால் தினம் - நவம்பர் 26 
  • ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று தேசிய பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • இந்தியாவின் "வெள்ளைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன்" அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான நவம்பர் 26 அன்று "தேசிய பால் தினம்" கடைபிடிக்கப்படுகிறது.
  • வெண்மை புரட்சியின் தந்தை - வர்கீஸ் குரியன்: இந்தியாவில் பால் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் பிரபலமான பால் நிறுவனமான அமுல் நிறுவவனத்தை நிறுவியவர் ஆவார். உலக அளவில் பால் உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. 
மும்பை தாக்குதல் (26/11) 10ஆவது ஆண்டு நினைவு தினம் - நவம்பர் 26 
  • மும்பை தாக்குதல் 26/11 சம்பவத்தின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் நவம்பர் 26, 2018 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • மும்பை தாக்குதல் (2008): இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். நீண்ட வழக்கு விசாரணைக்கு பிறகு, 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி அவரும் தூக்கிலிடப்பட்டார்.
Post a Comment (0)
Previous Post Next Post