TNPSC Current Affairs November 27, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 27, 2019
சர்வதேச நிகழ்வுகள்
2019 ஆண்டின் சிறந்த வார்த்தை “Cimate Emergency”
  • ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி “Cimate Emergency” என்ற வார்த்தையை, 2019 ஆண்டின் சிறந்த வார்த்தையாக (2019 Word of the Year) தேர்வு செய்துள்ளது. 2018-ஆம் ஆண்டிலிருந்து இந்த வார்த்தையின் பயன்பாட்டின் அதிகரிப்பைக் கொண்டு இந்தச் சொல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேசிய நிகழ்வுகள்
மேகாலயா மாநிலத்தில் ஜிங் கீங் ஜ்ரி லிவிங் ரூட் பாலங்கள் 
  • ஜிங் கீங் ஜ்ரி (jing kieng jri) எனப்படும் லிவிங் ரூட் பாலம் (Living Root Bridges) என்பது இந்திய ரப்பர் மரத்தின் வேர்களை கொண்டு மேகாலயா மாநிலத்தில் கட்டப்படும் வான்வழி பாலங்கள் ஆகும். மேகாலயாவில் பல தலைமுறைகளாக இந்த பாலங்கள் 15 முதல் 250 அடி வரை கட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
சத்தீஸ்கர் அரசின் 'நாட்டுப்புற கலை மன்றம்'
  • சத்தீஸ்கர் மாநில அரசு மாநில நாட்டுப்புற கலை மன்றத்தை (SFAC:State Folk Art Council ) அமைக்க முடிவு செய்துள்ளது. பாரம்பரிய கலை வடிவங்களையும் கலைஞர்களையும் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் இந்த நாட்டுப்புற கலை மன்றம் உதவும்.
மத்தியப் பிரதேசத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைகளில் 5% இடஒதுக்கீடு 
  • மத்தியப் பிரதேசத்தில், அரசு வேலைகளில் தேசிய மற்றும் சர்வதேச பதக்கம் வென்றவர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க (5% reservation for its athletes) மத்தியப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உத்திரபிரதேச அரசின் ஃபிலாரியா நோய்த்தடுப்பு பிரச்சாரம் 
  • உத்திரபிரதேச அரசு நவம்பர் 25 முதல் ஃபிலாரியாவுக்கு (Filaria) எதிராக நோய்த்தடுப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. நாட்டில் ஃபைலேரியாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கான காலக்கெடுவாக மத்திய அரசு 2021 ஆம் ஆண்டை நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் ‘ஐ-போன் எக்ஸ்ஆா்’ தயாரிப்பு - தொடக்கம் 
  • ஆப்பிள் நிறுவனம் தனது ‘ஐ-போன் எஸ்ஆா்’ ரக செல்லிடப் பேசி தயாரிப்பை இந்தியாவில் தொடங்கியுள்ளது. உள்நாட்டுச் சந்தைக்கு மட்டுமன்றி, பிற நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் அந்த செல்லிடப் பேசிகளை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கிறது. மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்த உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா்.
  • சால்காம்ப் தோழிற்சாலை: சென்னையிலுள்ள நோக்கிய தொழிற்சாலையை சால்காம்ப் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களுக்கான சாா்ஜா்களை உலகிலேயே அதிக அளவில் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் சால்காம்ப், அந்தத் தொழிற்சாலையில் தனது உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது.
விருதுகள் 
2019 ஆகா கான் கட்டிடக்கலை விருது - ஆர்கேடியா கல்வி திட்டம், பங்களாதேஷ் 
  • பங்களாதேஷ் நாட்டின் ஆர்கேடியா கல்வி திட்டம் (Arcadia Education Project), 2019-ஆம் ஆண்டிற்கான ஆகா கான் கட்டிடக்கலை விருதை (2019 Aga Khan Architecture Award) வென்றது.
  • ஆர்கேடியா கல்வி திட்ட அமைப்பு மிதக்கும் பள்ளியை பங்களாதேஷில் நிறுவியது. இந்த திட்டத்தின் வடிவமைப்பாளர் சைஃப் உல் ஹக் ஆவார்.
பிஹாரி புராஸ்கர் விருது 2018 - மனிஷா குல்ஷிரேஷ்டா
  • ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மனிஷா குல்ஷ்ரேஷ்டா (Manisha Kulshreshtha) தனது ‘ஸ்வப்னபாஷ்’ நாவலுக்காக 2018 ஆம் ஆண்டிற்கான 28 வது பிஹாரி புராஸ்கர் விருதை (Bihari Puraskar) வென்றுள்ளார். 
  • பிரபல இந்தி கவிஞர் பிஹாரி பெயரில் கே.கே. பிர்லா அறக்கட்டளை வழங்கும் இந்த விருது, ராஜஸ்தானி வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
 மாநாடுகள்   
காமன்வெல்த் இளைஞர் பாராளுமன்றம்-2019
  • டெல்லி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற மக்களவை இணைந்து, நவம்பர் 25 முதல் 27 வரை, 2019-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் இளைஞர் பாராளுமன்றத்தை (Commonwealth Youth Parliament-2019) நடத்துகிறது. இந்த நிகழ்வில் 24 நாடுகளைச் சேர்ந்த சுமார் 47 பேர் பங்கேற்கின்றனர்.
சர்வதேச சுற்றுலா வர்த்தக சந்தை-2019
  • மத்திய சுற்றுலா அமைச்சகம் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைந்து, 8-வது சர்வதேச சுற்றுலா வர்த்தக சந்தையை (International Tourism Mart-2019), மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரத்தில், நவம்பர் 23 முதல் 25 வரை நடத்தியது.
புத்தக வெளியீடு
Finding The Gaps: Transferable Skills to Be the Best You Can Be - Simon Taufel
  • ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் கிரிக்கெட் நடுவர் சைமன் டாப்பெல் (Simon Taufel), ஃபைண்டிங் தி கேப்ஸ்” (Finding The Gaps: Transferable Skills to Be the Best You Can Be) என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் திறப்பு
  • சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தின் உள்ளே அவரது 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 25-அன்று இந்த மணிமண்டபத்தை திறந்துவைத்தார்.
காகிதமில்லா சட்டமன்றம் திட்டம்
  • ‘நேஷனல் இ-விதான் அப்ளிகேஷன்’ (நேவா) என்ற காகிதமில்லா சட்டமன்ற திட்டம் தேசிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை தமிழ்நாடு சட்டசபையில் நடைமுறைப்படுத்துவதற்காக தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வகுப்புகளை, சபாநாயகர் ப.தனபால் நவம்பர் 25-அன்று தொடங்கி வைத்தார்.
முக்கிய நபர்கள்
அரசியல் துறவி’ கைலாஷ் ஜோஷி 
  • மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான கைலாஷ் ஜோஷி (வயது 91), 2019 நவம்பர் 24 ஆம் தேதி போபாலில் காலமானார். 1929 ஜூலை 14 ஆம் தேதி பிறந்த ஜோஷி (Kailash Joshi),‘அரசியல் துறவி’ (saint of politics) என்று அழைக்கப்பட்டார். அவர் 1977 முதல் 1978 வரை மாநில முதல்வராக பணியாற்றினார். 
விளையாட்டு நிகழ்வுகள்
டென்னிஸ்

டேவிஸ் கோப்பை 2019 - ஸ்பெயின் அணி சாம்பியன் 
  • ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி (2019 Davis Cup) இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-கனடா அணிகள் விளையாடின.  
  • ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. ஸ்பெயின் அணி 6-வது முறையாக (2000, 2004, 2008, 2009, 2011, 2019) டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது. 
  • ஒற்றையர் பிரிவில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் கனடா வீரர் பெலிக்ஸ் அஜிரை தோற்கடித்தார். 
  • முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில், கனடாவின் டெனிஸ் ஷபோவாலோவை வீழ்த்தினார்.
பேட்மிண்டன்

ஸ்காட்லாந்து ஓபன் 2019 - 'லக்‌ஷயா சென்' சாம்பியன்
  • கிளாஸ்கோ நகரில் நடந்த ஸ்காட்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்‌ஷயா சென் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். கடந்த 3 மாதங்களில் லக்‌ஷயா சென் கைப்பற்றிய 4-வது பட்டம் இதுவாகும். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அவர் சார்லோர்லக்ஸ் ஓபன், நெதர்லாந்து ஓபன், பெல்ஜியம் ஓபன் பட்டங்களை வென்றுள்ளார். 
கிரிக்கெட் 

பிங்க் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர்-இஷாந்த் சர்மா
  • கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிரான பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
நவம்பர் 27

இந்திய உடல் உறுப்பு தான தினம் - நவம்பர் 27
  • இந்திய உடல் உறுப்பு தான தினம் நவம்பர் 27 (Indian Organ Donation Day) அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • உலக  உடல் உறுப்பு தான தினம்  (World Organ Donation Day) ஆண்டுதோறும் ஆகஸ்டு 13 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.


Post a Comment (0)
Previous Post Next Post