TNPSC Current Affairs November 15-16, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 15-16, 2019
சர்வதேச  நிகழ்வுகள் 
பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நகரம் - கண்டுபிடிப்பு
 • பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நகரமொன்றை அந்த நாட்டு தொல்லியல் துறையினா் கண்டறிந்துள்ளனா். மாவீரா் அலெக்ஸாண்டா் காலத்தியது என்று கருதப்படும் அநத நகருக்கு 
 • ‘பஸீரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கைபா் பாக்துன்கவா மாகாணத்தின் பாரிகோட் தாலுகாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் இந்த நகரம் கண்டறியப்பட்டுள்ளது. 
உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியல் 2019 - 'டூட்டி சந்த்' இடம்பிடிப்பு 
 • TIME 100 Next என்ற TIME இதழின், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை 'டூட்டி சந்த்' இடம்பெற்றுள்ளார்.
இலங்கை அதிபா் தோ்தல் 2019
 • இலங்கை நாட்டின் 8-ஆவது அதிபா் தோ்தல் நவம்பர் 16-அன்று நடைபெறுகிறது. 
 • இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் கோத்தபய ராஜபட்ச (வயது 70), ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், சஜித் பிரேமதாசா (வயது 52) மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா சாா்பில் அனுரா குமார திஸநாயகே (வயது 50) போட்டியிடுகின்றனர். கோத்தபய ராஜபட்ச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் ஆவார்.  சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகன் ஆவார். சஜித் பிரேமதாசாவுக்கு தமிழா் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா. மேம்பாட்டு நிதி 2020: இந்தியா1.35 கோடி டாலா் நிதி உதவி 
 • 2020-ஆம் ஆண்டில் ஐ.நா. மேற்கொள்ளவுள்ள பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு இந்தியாவின் பங்களிப்பாக 1.35 கோடி டாலரை வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் வளா்ச்சி நடவடிக்கைகளுக்கு 
 • தொடா்ந்து ஆதரவு கரம் நீட்டி வருவதன் ஒரு பகுதியாகவே இந்தியா இந்த நிதி உதவியை வழங்குகிறது.
 • பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கு 50 லட்சம் டாலரையும், ஐ.நா. மேம்பாட்டு திட்டங்களுக்கு 45 லட்சம் டாலரையும் இந்தியா தனது பங்களிப்பாக வழங்கவுள்ளது. இந்த 
 • தகவல்களை ஐ.நா.வுக்கான இந்திய தூதா் அஞ்சனி குமாா் தெரிவித்துள்ளார்.
தேசிய நிகழ்வுகள் 
இ-கன்னா செல்பேசி செயலி
 • கரும்பு விவசாயிகளுக்காக உதவும் வகையில், இ-கன்னா செல்பேசி செயலி (e-Ganna App), மற்றும் வலைத்தளத்தை உத்தரபிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
 • வலைத்தளம் மற்றும் செயல் ஆகியவை கரும்பு விநியோக சீட்டு பெறுவதற்கான செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும், முறைகேடுகளை சரிபார்க்கவும் உதவும்.
கேரளாவில் அமையும் 'பாலின பூங்கா'
 • ஐ.நா. பெண்கள் அமைப்பு கேரள மாநிலத்துடன் இணைந்து பாலின பூங்கா Keralas Gender Park) அமைக்கவுள்ளது.
 • தெற்காசியாவில் பாலின சமத்துவத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை முன்னெடுக்க கேரள பாலின பூங்கா உதவும்.
‘ப்ராஜெக்ட் ஜீரோ’ என்ற திட்டம் 
 • அமேசான் இணையதள விற்பனை நிறுவனம், கள்ள தயாரிப்புகளை அகற்ற ‘ப்ராஜெக்ட் ஜீரோ’ (Project Zero) என்ற திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இணைய சந்தையிலிருந்து கள்ள தயாரிப்புகளை அகற்ற பல்வேறு தொழில்நுட்பங்களை இந்த திட்டம் பயன்படுத்துகிறது
மாநாடுகள் 

விதை ஒப்பந்த ஆளும் குழுவின் அமர்வு 2019 (இத்தாலி)
 • இத்தாலியின் ரோம் நகரில் நடந்த விதை ஒப்பந்த ஆளும் குழுவின் (Governing Body of Seed Treaty), 8-வது அமர்வு, நவம்பர் 1- முதல் 16 வரை நடைபெற்றது. இந்த அமர்வில் இந்தியக்குழு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் பங்கேற்றது.
இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி 2019 
 • 39-வது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி நவம்பர் 14 முதல் 27 வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது.
 • இந்த கண்காட்சியின் மையக்கருத்து: 'வியாபாரம் செய்வது எளிது' (Ease of Doing Business) என்பதாகும்.
நல்ல காற்று உச்சி மாநாடு 2019
 • ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு (Integrated Health & Wellbeing) கவுன்சில் ஏற்பாட்டில், புதுடெல்லியின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், நவம்பர் 13 அன்று 2019-ஆண்டிற்கான நல்ல காற்று உச்சி மாநாடு (Good Air Summit-2019), Making india Breathe என்ற மையகருத்தில் நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்வுகள் 
டென்னிஸ்

ATP இறுதிச்சுற்று 2019: உலகின் முதல் நிலை வீரா் 'இரபேல் நடால்' 

 • உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும், 2019 ATP இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
 • ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், கிரீஸ் நாட்டின் இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் அவர்களை 6-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 
 • உலகின் முதல் நிலை வீரா்: இந்த வெற்றியின் மூலம் ரபேல் நடால், உலகின் முதல் நிலை வீரா் என்ற தகுதியை மீண்டும் பெற்றார்.
தடகளம் 

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2019 - பதக்க குறிப்புகள் 
 • துபாய் நகரில் 2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள் விவரம்:
  • சரத்குமாா் - வெள்ளிப்பதக்கம் (ஆண்கள் உயரம் தாண்டுதல், டி42 பிரிவு, 1.83 மீ தூரம்)
  • மாரியப்பன் தங்கவேலு - வெண்கலப்பதக்கம் (ஆண்கள் உயரம் தாண்டுதல், டி63 பிரிவு, 1.8 மீ தூரம்)
  • நிஷாத் குமாா் - வெண்கலப்பதக்கம் (ஆண்கள் உயரம் தாண்டுதல், T47 பிரிவு, 2 மீ. தூரம்).
  • இதன்மூலம் மூவரும் 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
கிரிக்கெட்

இந்தியா-மே.இ.தீவு நாடுகள் பெண்கள் கிரிக்கெட் T20 தொடர் 2019
 • இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது: இந்தியா-மே.இ.தீவு நாடுகள் பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட T20 தொடா் மே.இ.தீவு நாடுகள் நாட்டில் நடைபெற்று வருகிறது. 
 • இந்த தொடரை இந்திய பெண்கள் அணி, 3-0 என என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டைச் சதம்
 • இந்தூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். இது அவருடைய இரண்டாவது இரட்டைச் சதம் ஆகும். 8 டெஸ்டுகளில் 12 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். 
முக்கிய தினங்கள் 
நவம்பர் 9
 • தேசிய சட்ட சேவைகள் தினம் - நவம்பர் 9 
  • ஆண்டுதோறும் தேசிய சட்ட சேவைகள் தினம் (National Legal Services Day) நவம்பர் 9 அன்று கடைபிடிக்கப்படுகிறது.  
  • இலவச  சட்ட சேவையை உறுதி செய்யும்-பிரிவு 39A: இந்தியா அரசியலமைப்பின் பிரிவு 39A (Article 39A), "சமூகத்தின் ஏழை மற்றும் பலவீனமான பிரிவினருக்கு இலவச சட்ட உதவி"யை உறுதி செய்கிறது.
 நவம்பர் 16
 • சர்வதேச சகிப்புத்தன்மை நாள்: நவம்பர் 16
  • International Day for Tolerance November 16, 2019
 • தேசிய பத்திரிகையாளர் தினம் - நவம்பர் 16
  • இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) தொடங்கப்பட்ட தினமான நவம்பர் 16-அன்று, தேசிய பத்திரிகையாளர் தினம் (National Press Day) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும், ஒவ்வொரு நான்கு, ஐந்து நாட்களில், ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார் என, UNESCO தெரிவித்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post