TNPSC Current Affairs November 17, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 17, 2019
 தேசிய நிகழ்வுகள் 
உலக நினைவுச்சின்ன கண்காணிப்பு பட்டியல்-2020 - இந்தியாவின் 'சுரங்க பவாடி' தேர்வு 
 • 2020-ஆம் ஆண்டிற்கான உலக நினைவுச்சின்ன கண்காணிப்பு பட்டியலில் (World Monument Watch List for 2020), கர்நாடகாவின் பிஜாப்பூரில் உள்ள 'சுரங்க பவாடி' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • “டெக்கான் பீடபூமியின் பண்டைய நீர் அமைப்பு” என்ற பிரிவின் கீழ் சுரங்க பவாடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் சுரங்கங்கள் மூலம் நீர் வழங்கும் பண்டைய கரேஸ் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகும். இது விஜயபுரா மன்னர் ஆதில் ஷாஹி -1 முயற்சியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 
 • நியூயார்க்கை தளமாகக் கொண்ட அரசுசாரா அமைப்பால். 2020 ஆம் ஆண்டிற்கான உலக நினைவுச்சின்ன கண்காணிப்பு பட்டியல், உலகெங்கிலும் உள்ள 24 நினைவுச்சின்னங்களை தேர்வு செய்துள்ளது.
2020 குடியரசு தின விழா தலைமை விருந்தினர் 'ஜெய்ர் போல்சனாரோ'
 • இந்தியாவின் 2020 குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராக பிரேசில் நாட்டின் அதிபர் 'ஜெய்ர் போல்சனாரோ' (Jair Bolsonaro) பங்கேற்கவுள்ளார்.
அய்யப்பன் கோவில் பெண்கள் வழிபாடு: 7 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 
 • கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள புகழ் பெற்ற அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
 • சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதித்து, 2018 செப்டம்பர் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 • Article 25 & 26: நவம்பர் 15-அன்று, 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய மேல் முறையீடு வழக்கு தீர்ப்பில், அரசியல் சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26-ன் அடிப்படையில் வழங்கப்படும் உரிமைகள் குறித்து முடிவெடுக்கும் வகையில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் வரை சபரிமலையில் பெண்களின் வழிபாட்டுக்கு தடை எதுவும் கிடையாது.
ஜம்மு-காஷ்மீா், லடாக் இடையே சொத்துகளைப் பகிர்ந்தளிக்கும் 3 போ் குழு 
 • ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சொத்துகளைப் பகிா்ந்தளிப்பதற்காக 3 போ் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
 • சஞ்சய் மித்ரா தலைமையிலான குழு: பாதுகாப்பு அமைச்சக முன்னாள் செயலா் சஞ்சய் மித்ரா தலைமையிலான அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி அருண் கோயல், ஓய்வுபெற்ற ICAS அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 • நிதிப்பங்கீடு: 14-ஆவது நிதிக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, ஜம்மு-காஷ்மீருக்கு 70 சதவீதமாகவும், லடாக்குக்கு 30 சதவீதமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டு நிறைவடையும்வரை இந்த நிதிப் பங்கீடு அமலில் இருக்கும்.
 • ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வந்தன.
பாதுகாப்பு/விண்வெளி  

அக்னி-2 ஏவுகணை இரவு நேர சோதனை
 • ஒடிசா கடற்கரை பகுதியை ஒட்டிய டாக்டர் அப்துல்கலாம் தீவில் நவம்பர் 16-அன்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி-2’ ஏவுகணை முதல்முறையாக, இரவு நேரத்தில் நடத்தப்பட்டது. 
 • 20 மீட்டர் நீளத்துடன் 17 டன் எடையுள்ள இந்த ஏவுகணை ஆயிரம் கிலோ எடையை தாங்கிச்சென்று 2,000 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. ‘அக்னி-2’ ஏவுகணை சோதனை ராணுவத்தால் ஏற்கனவே பகல் நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
சீனாவின் முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வு - பரிசோதனை முயற்சி
 • சீனாவின் செவ்வாய் கிரக ஆய்வுக்கான முதலாவது திட்டம் (China's Mars mission) 2020-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. 
 • இதற்கான சீனாவின் பரிசோதனை முயற்சி, முதன்முறையாக, நவம்பர் 14-ஆம் நாள் ஹேபெய் மாநிலத்திலுள்ள, புவிக்கு அப்பாலுள்ள வானில், தரையிறங்கும் சோதனைக்கான ஆசியாவின் மிகப் பெரிய பரிசோதனைத் தளமான Huailai தளத்தில் செவ்வாய் கிரக லேண்டரை தரையிறங்கி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விருதுகள்
பிரிக்ஸ்-இளம் கண்டுபிடிப்பாளர் பரிசு 2019 - ரவி பிரகாஷ்
 • 2019 பிரிக்ஸ்-இளம் கண்டுபிடிப்பாளர் பரிசை (2019 BRICS-Young Innovator Prize), ரவி பிரகாஷ் (Ravi Prakash) என்ற இந்திய அறிஞர் வென்றுள்ளார்.
 • சிறிய மற்றும் குறு கிராமப்புற பால் விவசாயிகளுக்கு மலிவு விலையில் உள்நாட்டு பால் குளிரூட்டும் அலகு கண்டுபிடித்ததற்காக இந்திய அறிஞர் ரவி பிரகாஷ் 25,000 டாலர் அமெரிக்க மதிப்புள்ள பிரிக்ஸ்-இளம் கண்டுபிடிப்பாளர் பரிசை வென்றுள்ளார்.
கோல்டன் மணல் சிற்பக்கலை விருது 2019
 • இத்தாலியின் ரோம் நகரில் நவம்பர் 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சா்வதேச மணல் சிற்பக் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இத்தாலியின் உயரிய விருதான ‘கோல்டன் மணல் சிற்பக்கலை விருது’ நவம்பர் 15-அன்று, ஒடிசாவைச் சோ்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதா்சன் பட்நாயக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியா் என்ற சிறப்பை சுதா்சன் பட்நாயக் பெற்றார்.
நியமனங்கள் 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் - பணி நிறைவு 
 • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் 17-அன்றுடன் பணி நிறைவு பெற இருக்கிறார். நீதிபதி ரஞ்சன் கோகோய், உயா்நீதிமன்றம், மாவட்ட, தாலுகா நீதிமன்ற நீதிபதிகள் என 15,000-க்கும் மேற்பட்டோருடன் நவம்பர் 15-அன்று காணொலி காட்சி முறையில் உரையாற்றினாா். நவம்பர் 15-அன்று உச்சநீதிமன்றத்தில் தனது கடைசி பணிநாளை நிறைவு செய்தாா்.
 • ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ஒருவா் நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளுடன் ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றியது இதுவே முதல்முறையாகும். 
திரிபுரா உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி 'அகில் அப்துல்ஹமீத் குரேஷி' 
 • திரிபுரா உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி அகில் அப்துல்ஹமீத் குரேஷி நவம்பர் 16-அன்று பதவியேற்றாா்.
 • அகா்தலாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் மாநில ஆளுநா் ரமேஷ் பயஸ், அகில் அப்துல்ஹமீத் குரேஷிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தாா்.
மாநாடுகள் 
பிரிக்ஸ் உச்சி மாநாடு 2019 (பிரேசில்)
 • 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு, 2019 நவம்பர் 13 முதல் 14 வரை பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் நடந்தது. 2019 பிரிக்ஸ் உச்சிமாநாடு "ஒரு புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி" (Economic Growth for an Innovative Future) என்ற மையக்கருத்தில் நடைபெற்றது.
 • இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
 • ‘பிரிக்ஸ்’ வர்த்தக பேரவையில் பிரதமர் மோடி நவம்பர் 14-அன்று பேசினார். அவற்றின் விவரம்: 
  • 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவை நாங்கள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக ஆக்குவதற்கு விரும்புகிறோம். இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டுமே 1½ லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.105 லட்சம் கோடி) தேவைப்படுகிறது” என்றார்.
 • குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர் - ஜெயிர் போல்சொனாரோ
  • 2020 ஜனவரி 26-ந் தேதி தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் ஜெயிர் போல்சொனாரோ பங்கேற்கிறார்.
  • பிரேசில் நாட்டுக்கு இந்தியர்கள் விசா இன்றி செல்வதற்கு அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ அனுமதி அளித்துள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மாநாடு 2019
 • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மாநாடு 2019 (Small Micro Enterprise Conference) , மகாராஷ்டிராவின் நாக்பூா் நகரில் நவம்பர் 16-அன்று நடைபெற்றது.
சர்வதேச யோகா மாநாடு-2019 (மைசூரு)
 • கர்நாடகாவின் மைசூருவில் நவம்பர் 15-16 தேதிகளில், 2019 சர்வதேச யோகா மாநாடு (International Conference on Yoga) நடைபெற்றது. 
 • ‘இதய பராமரிப்புக்கான யோகா’ (Yoga for Heart Care) என்ற மையக்கருத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை, மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் தொடங்கிவைத்தார்
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு இயக்கம் 
 • சென்னை தலைமைச்செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் ‘கிரீன் லைப்’ தொண்டு நிறுவனம் இணைந்து, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற இயக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், குழந்தைகள் தினமான நவம்பர் 14-அன்று உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள், ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
 • பிளாஸ்டிக் தடை (ஜனவரி 1, 2019): பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க தமிழக அரசால் 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
 • இணையத்தளம் & செயலி தொடக்கம்: ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்க மாநில அளவிலான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை (லோகோ) அறிமுகம் செய்து, www. plasticpollutionfreetn.org என்ற வலைதளத்தையும், Plastic Pollution Free Tamil Nadu என்ற செல்போன் செயலியையும் (APP) முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018 ஆகஸ்டு 23-அன்று தொடங்கி வைத்தார்.
குழந்தைகள் தின விழா & டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது விழா 2019
 • பள்ளிக்கல்வி துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சாந்தோமில் நவம்பர் 14-அன்று நடைபெற்றது. இவ்விழாவில், 33 பேருக்கு நூலக பணியில் சிறப்பாக தொண்டு செய்ததற்காக டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுகள் வழங்கப்பட்டன. 
 • தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கீடு: பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பும் முடிந்த பிறகும் அந்த இடைவெளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கப்படும் திட்டம் கொண்டுவரப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ‘வயது 355’
 • ஆசியாவிலேயே பெரிய அரசு மருத்துவமனையாக திகழும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஆங்கிலேயர் காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் 1664-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் ஆங்கிலேயர் மருத்துவமனையாக மெட்ராஸ் மாகாணத்தில் கிழக்கு இந்திய கம்பெனியால் கட்டப்பட்டது. இங்கு ஆங்கிலேய படை வீரர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 • 1664-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, 2019 நவம்பர் 16-ஆம் தேதியுடன், 355 ஆண்டுகளை கடந்து மக்கள் சேவையாற்றி வருகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்   
கிரிக்கெட்

இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் தொடர் 2019
 • முதல் டெஸ்ட்-இந்திய அணி வெற்றி: இந்தூரில் நடந்த இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 • இரட்டை சத எடுத்த இந்தியா வீரர் மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக நவம்பர் 22-ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்குகிறது.
 • உலக சாம்பியன்ஷிப்: 300 புள்ளிகளை எட்டிய இந்திய அணி: இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது ஆகும். உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 300 புள்ளிகளுடன் (இதுவரை ஆடிய 6 டெஸ்டிலும் வெற்றி) முதலிடத்தில் உள்ளது. 
 • அதிக இன்னிங்ஸ் வெற்றி: விராட் கோலியின் தலைமையில் 52-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணி, 10-வது இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதற்கு முன்பு டோனி தலைமையில் 9 இன்னிங்ஸ் வெற்றி கண்டதே அதிகபட்சமாக இருந்தது. அவரது சாதனையை கோலி முறியடித்துள்ளார். 
 • 12 இன்னிங்சில் 2-வது இரட்டை சதம்-மயங்க் அகர்வால் சாதனை: இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் கிரிக்கெட் டெஸ்டில் 243 ரன்கள் குவித்தார். இவருக்கு இது 2-வது இரட்டை சதமாகும். மயங்க் அகர்வால் 8-வது டெஸ்டில், 12-வது இன்னிங்ஸில் இரண்டு இரட்டை சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் இரண்டு இரட்டை சதம் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
 • குறைந்த இன்னிங்ஸ்களில் 2 இரட்டை சதம் எடுத்த வீரர்கள் 
  • வினோத் காம்ப்ளி (5 இன்னிங்ஸ்) 
  • மயங்க் அகர்வால் (12 இன்னிங்ஸ்) 
  • டான் பிராட்மேன் (13 இன்னிங்ஸ்) 
முக்கிய தினங்கள் 

நவம்பர் 17

தேசிய வலிப்பு நோய் தினம் - நவம்பர் 17 
 • ஆண்டுதோறும் நவம்பர் 17-ந் தேதி அன்று வலிப்பு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் (National Epilepsy Day) கடைபிடிக்கப்படுகிறது. 
சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினம் - நவம்பர் 17, 2019 (நவம்பர் மாத மூன்றாவது ஞாயிறு) 
 • 2019-ஆம் ஆண்டுக்கான, சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினம் (World Day of Remembrance for Road Traffic Victims) நவம்பர் 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
 • 2019 சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உலக தின முழக்கம் (Slogan): "Life is not a car part".
Post a Comment (0)
Previous Post Next Post