TNPSC Current Affairs November 20, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 20, 2019


TNPSC Current Affairs November 2019
TNPSC Current Affairs November 20, 2019
சர்வதேச நிகழ்வுகள்
புதிய டைபாய்டு தடுப்பூசி 'பாகிஸ்தானில் அறிமுகம்' 
 • உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட புதிய டைபாய்டு நோய்க்கான தடுப்பூசியை (typhoid vaccine) பாகிஸ்தான் உலகின் முதல் நாடாக அறிமுகப்படுத்தியுள்ளது. WHO ஒப்புதல் அளித்த இந்த தடுப்பூசி தெற்கு சிந்து மாகாணத்தில் இரண்டு வார நோய்த்தடுப்பு பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்படுகிறது.
தேசிய நிகழ்வுகள்
HNLC அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதிப்பு 
 • மேகாலய மாநிலத்தினல் இயங்கி வரும் 'ஹின்னிவ்ட்ரெப் தேசிய விடுதலை கவுன்சில்' (HNLC அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 1967-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் படி 'HNLC' அமைப்பை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டு HNLC அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் அந்த தடை நீக்கப்பட்டது.
 • HNLC: Hynniewtrep National Liberation Council.
'SAANS' பிரச்சார இயக்கம் - தொடக்கம் 
 • நல்ல, பிரதிபலிக்கக்கூடிய நடைமுறைகள் மற்றும் புதுமைகள் குறித்த ஆறாவது தேசிய உச்சி மாநாடு (National Summit on Good, Replicable Practices and Innovations-2019) புதுடில்லியில் நவம்பர் 16 அன்று நடைபெற்றது. இதை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், நிமோனியா காரணமாக குழந்தை இறப்பைக் குறைப்பதற்காக 'SAANS' என்ற சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
 • SAANS: Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully.
ஆந்திராவில் ஊழலைக் கட்டுப்படுத்த 'IIM அகமதாபாத் தேர்வு' 
 • ஆந்திர மாநில நிர்வாகத்தில் ஊழலைக் கட்டுப்படுத்த IIM அகமதாபாத், இந்திய மேலாண்மை நிறுவனத்தை ஆந்திர அரசு தேர்வு செய்துள்ளது.
நியமனங்கள்
தமிழ்நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையர் - ஆர்.ராஜகோபால் 
 • தமிழ்நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவி வகிக்கவுள்ளார். 
இலங்கையின் 8-ஆவது அதிபர் - கோத்தபய ராஜபட்ச
 • இலங்கையின் 8-ஆவது அதிபராக, கோத்தபய ராஜபட்ச (Gotabaya Rajapaksa) அனுராதபுரம் நகரில், ருவன்வெலி சேயா என்ற இடத்தில் பழைமையான பௌத்த கோயில் வளாகத்தில், நவம்பர் 18-அன்று பதவியேற்றார். இலங்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
 • இலங்கையின் அதிபராக பதவி வகித்தவர்கள்: வில்லியம் கோபள்ளவா, ஜே.ஆர். ஜயவர்தனா, ரணசிங்க பிரேமதாசா, டிங்கிரி பண்ட விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்கே குமாரதுங்கா, மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோத்தபய ராஜபட்ச.
மாநாடுகள் 
தேசிய வேளாண் வேதியியல் மாநாடு 2019 (டெல்லி)
 • நாட்டில் பாதுகாப்பான மற்றும் நியாயமான பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்கான, 2019 தேசிய வேளாண் வேதியியல் மாநாடு (National Agrochemicals Congress 2019) டெல்லி நகரில் நவம்பர் 13 முதல் 16 வரை நடைபெற்றது.
பாதுகாப்பு/விண்வெளி
PSLV C-47 இராக்கெட் ஏவவுள்ள 14 செயற்கைகோள்கள் 
 • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தயாரித்த PSLV C-47 ராக்கெட், நவம்பர் 25-ந்தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் (SDSC) இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 
 • கார்டோசாட்-3 & 13 வணிக நானோ செயற்கைகோள்கள்: இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் (Cartosat-3) மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது. 
 • பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும். இது துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ள 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவையாகும். 
 • 21-வது ராக்கெட்: PSLV C-47 ராக்கெட் ‘XL’ வகையில் 21-வது ராக்கெட்டாகும். அதேபோல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற சிறப்பை இந்த ராக்கெட் பெறுகிறது.
பாகிஸ்தான் ‘ஷகீன்-1’ ஏவுகணை - சோதனை
 • பாகிஸ்தான் நாட்டின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஷகீன்-1 ஏவுகணை (Shaheen-I missile) சோதனை நவம்பர் 18-அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணைகள் 650 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் பெற்றதாகும்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
சென்னை சர்வதேச திரைப்பட விழா-2019
 • சென்னையில் 2019 டிசம்பர் 12 முதல் 19 வரை, 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.75 லட்சம் நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர்- 18 அன்று வழங்கினார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம்
 • நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகம், அவரது சினிமா, கலாசாரம் மற்றும் கலை சேவையை பாராட்டிநவம்பர் 19-அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
டென்னிஸ்

ATP இறுதி சுற்று 2019: 'ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ்' - சாம்பியன் 
 • 2019 ATP இறுதி சுற்று (2019 ATP Finals) எனப்படும் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்கும், ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. 
 • ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) சாம்பியன்: ஒற்றையர் பிரிவில் கிரீஸ் நாட்டு வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (Stefanos Tsitsipas) சாம்பியன் பட்டம் வென்றார், இறுதிப்போட்டியில் 6-7 (6-8), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம்மை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
 • இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டின் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்-நிக்கோலா (Pierre-Hugues Herbert / France Nicolas Mahut) மஹூத் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
 • உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசை (நவம்பர் 18, 2019): 1. ரபெல் நடால் (ஸ்பெயின்), 2. ஜோகோவிச் (செர்பியா), 3. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 4. டொமினிக் திம் (ஆஸ்திரியா), 5. டெனில் மெத்வாதேவ் (ரஷ்யா), 6. ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்).
டேவிஸ் கோப்பை-ஆசிய, ஓசேனியா குரூப் 1 (கஸகஸ்தான்)
 • இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய, ஓசேனியா குரூப் 1 பிரிவு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள், நவம்பர் 29, 30 தேதிகளில் கஸகஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா அணியின் ரோஹித் ராஜ்பால் விளையாடாத அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
கால்பந்து

உலக கோப்பை (U-17) 2019: 'பிரேசில் அணி' சாம்பியன்

 • பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் நடந்த 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றது. இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. 
கார் பந்தயம்

பிரேசில் கிராண்ட்பிரி 2019: வெர்ஸ்டாப்பென் (ரெட்புல் அணி) முதலிடம்
 • 2019 ஆண்டுக்கான பார்முலா-1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் 20-வது சுற்றான, 2019 பிரேசில் கிராண்ட்பிரி பார்முலா 1 கார் பந்தய போட்டியில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் (ரெட்புல் அணி) முதலிடம் பிடித்தார். 19-வது சுற்றன அமெரிக்க கிராண்ட்பிரி போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 2019 பார்முலா-1 சாம்பியன் பட்டத்தை உறுதி செய்து விட்டார். 
குத்துச்சண்டை

AIBA குத்துச்சண்டை வீரர்கள் ஆணையத்தின் 'சரிதா தேவி' தேர்வு 
 • முதல் சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு (AIBA) சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் முதலாவது விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் (AIBA athletes' commission) உறுப்பினராக, இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வேதேச வாரங்கள் 
உலக பாரம்பரிய வாரம் - நவம்பர் 19-25, 2019
 • இந்தியாவில் உள்ள புராதன நினைவு சின்னங்களை பராமரித்து பாதுகாத்து வரும் தொல்லியல் துறை ஆண்டு தோறும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக (World Heritage Week 2019) இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது.
முக்கிய தினங்கள்
நவம்பர் 20

உலகளாவிய குழந்தைகள் தினம் - நவம்பர் 20
 • உலகளாவிய குழந்தைகள் இடையே ஆண்டுதோறும் சர்வதேச ஒற்றுமை, சிறுவர் நலன் மேம்பாடு ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நவம்பர் 20 அன்று உலகளாவிய குழந்தைகள் தினம் (World Children’s Day ) கடைபிடிக்கப்படுகிறது. 
 • 2019 உலக குழந்தைகள் தின மையக்கருத்து: 'Children of today, our keepers tomorrow'.
ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம் - 20 நவம்பர்
 • 2019 ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தின மையக்கருத்து: (2019  (Africa Industrialization Day Theme): 'Positioning African Industry to Supply the AfCFTA Market'. 
Post a Comment (0)
Previous Post Next Post