TNPSC Current Affairs November 19, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 19, 2019
தேசிய நிகழ்வுகள்
உலகளாவிய லஞ்ச அபாய அட்டவணை 2019
  • உலகளாவிய லஞ்ச அபாயக் குறியீட்டு (Global Bribery Risk Index 2019) பட்டியலில் மொத்தம் 178 நாடுகளில் இந்தியா 78-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலை Trace Bribery Risk Matrix என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியா மொத்த அபாய (Total Risk Score) குறியீட்டில் 48 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2019
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2019 (Parliament Winter Session), நவம்பர் 18-அன்று தொடங்கி டிசம்பர் 13-வரை நடைபெறுகிறது.
  • நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம்: நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன தினம் ஆகும். இதையொட்டி அன்றைய தினத்தில் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
  • புதிய ஆட்சியில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலங்களை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது. கடந்த கூட்டத்தொடரில் ‘முத்தலாக்’ தடை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. 35 மசோதாக்களும், மாநிலங்களவையில் 32 மசோதாக்களும், இரு சபைகளிலும் 30 மசோதாக்களும் நிறைவேறின.
  • நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்: பிரகலாத் ஜோஷி.
ஆந்திர அரசின் ‘நாடு-நேடு’ திட்டம் - அறிமுகம் 
  • ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி, அரசுப் பள்ளிகளை துடிப்பான மற்றும் போட்டி நிறுவனங்களாக மாற்ற முற்படும் ‘நாடு-நேடு’ திட்டத்தை (Nadu-Nedu programme) தொடங்கிவைத்துள்ளார். அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளையும், திறன்களை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
பாரதீய போஷன் கிருஷி கோஷ் (BPKK) திட்டம் 
  • பாரதீய போஷன் கிருஷி கோஷ் (BPKK) என்ற திட்டத்தை தொடங்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 128 வேளாண் காலநிலை மண்டலங்களில் இந்த BPKK பல்வேறு ஊட்டச்சத்து பயிர்ககளை விளைவிப்பதற்கான களஞ்சியமாக விளங்கும்.
நியமனங்கள்
உச்சநீதிமன்ற 47-ஆவது தலைமை நீதிபதி - எஸ்.ஏ.போப்டே
  • உச்சநீதிமன்ற 47-ஆவது தலைமை நீதிபதி - எஸ்.ஏ.போப்டேஇந்திய உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே (Sharad Arvind Bobde) நவம்பர் 18-அன்று பதவியேற்றார். குடியரசுத்தலைவர்  ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்வில், ஜமைக்கா தலைமை நீதிபதி பிரயான் சைக்ஸ், பூடான் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி குயன்லாய் ஷெரிங் ஆகியோரும் விருந்தினர்களாக பங்கேற்றனர்.
  • எஸ்.ஏ.போப்டே, 2021 ஏப்ரல் 23-ஆம் தேதி வரை, சுமார் 17 மாதங்கள் தலைமை நீதிபதியாக செயல்படவிருக்கிறார். போப்டே (வயது 63), மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரை சேர்ந்தவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த இவர், 2012-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2013, ஏப்ரல் 12-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
  • 46-வது தலைமை நீதிபதி-ரஞ்சன் கோகோய்: உச்சநீதிமன்ற 46-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-அன்று ஓய்வுபெற்றார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தகோகோய், 2018 அக்டோபர் 3-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றார், 13 மாதங்கள் பதவி வகித்துள்ளார். கோகோய் வடகிழக்கு பகுதியிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு வந்த முதல் நபர் என்ற பெருமைக்குரியவர்.
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பட்டியல் (List of Chief Justices of India (Upto 2019):

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பட்டியல் (1951-2019)
வ. எண்.
தலைமை நீதிபதி
பதவிக்காலம் 
1
ஹரிலால் ஜெக்கிசுண்டாஸ் கனியா
26/01/1950 
06/11/1951
2
மண்டகொளத்தூர்  பதஞ்சலி சாஸ்திரி
07/11/1951
03/01/1954
3
மெஹ்ர் சந்த் மகாஜன்
04/01/1954
22/12/1954
4
பிஜன் குமார் முகர்ஜி
23/12/1954
31/01/1956
5
சுதி ரஞ்சன் தாஸ்
01/02/1956
30/09/1959
6
புவனேஷ்வர் பிரசாத் சின்ஹா
01/10/1959
31/01/1964
7
பி. பி. கஜேந்திரகட்கர் 
01/02/1964
15/03/1966
8
ஏ. கே. சர்க்கார்
16/03/1966
29/06/1966
9
கே. சுப்பாராவ் 
30/06/1966
11/04/1967
10
கே. என். வான்ச்சூ 
12/04/1967
24/02/1968
11
எம். ஹிடாயதுல்லா
25/02/1968
16/12/1970
12
J. C. ஷா
17/12/1970
21/01/1971
13
எஸ். எம். சிக்ரி
22/01/1971
25/04/1973
14
எ. என். ராய்            
26/04/1973
28/01/1977
15
எம். ஹமீதுல்லாஹ் பேக்
29/01/1977
21/02/1978
16
ஒய். வி. சந்திரசூட் 
22/02/1978
11/07/1985
17
பீ. என். பகவதி
12/07/1985
20/12/1986
18
ஆர். எஸ் பதக்
21/12/1986
18/06/1989
19
இ. எஸ். வெங்கட்ராமையா 
19/06/1989
17/12/1989
20
சபியாசாச்சி முகெர்ஜீ 
18/12/1989
25/09/1990
21
இரங்கநாத் மிஸ்ரா
25/09/1990
24/11/1991
22
கே.என். சிங்
25/11/1991
12/12/1991
23
எம்.எச். கனியா
13/12/1991
17/11/1992
24
எல். எம். ஷர்மா
18/11/1992
11/02/1993
25
எம். என். வெங்கடாச்சலய்யா 
12/02/1993
24/10/1994
26
ஏ. எம். அஹ்மதி
25/10/1994
24/03/1997
27
ஜே.எஸ் வர்மா
25/03/1997
17/01/1998
28
எம். எம். புண்ச்சி 
18/01/1998
09/10/1998
29
ஏ. எஸ். ஆனந்த்
10/10/1998
31/10/2001
30
எஸ். பி. பருச்சா
01/11/2001
05/05/2002
31
பி.என். கிர்பால் 
06/05/2002
07/11/2002
32
ஜி.பி . பட்நாயக் 
08/11/2002
18/12/2002
33
வி. என். காரே
19/12/2002
01/05/2004
34
எஸ். ராஜேந்திர பாபு
02/05/2004
31/05/2004
35
ஆர்.சி. லாஹோதி 
01/06/2004
31/10/2005
36
ஒய். கே. சபர்வால்
01/11/2005
13/01/2007
37
K.G. பாலகிருஷ்ணன்
14/01/2007
11/05/2010
38
எஸ். எஸ். கபாடியா
12/05/2010
28/09/2012
39
அல்டமாஸ் கபீர்
29/09/2012
18/07/2013
40
பி. சதாசிவம்            
19/07/2013
26/04/2014
41
ஆர். எம். லோதா
27/04/2014
27/09/2014
42
எச். எல். தத்து 
28/09/2014
02/12/2015
43
டி. எஸ். தாகூர்
03/12/2015
03.01.2017
44
ஜக்திஷ் சிங் கெஹார்
04.01.2017
27/08/2017
45
தீபக் மிஸ்ரா
28.08.2017
02/10/2018
46
இரஞ்சன் கோகாய்
03.10.2018
17.11.2019
47
எஸ்.ஏ.போப்டே
18-11.2019
23.04.2021

உச்சநீதிமன்ற கொலீஜியத்திக்கு பெண் 'நீதிபதி ஆர் பானுமதி' நியமனம்
  • இந்திய உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி இடம் பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு கொலீஜியத்தில் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 2020 ஜூலை 19-ந் தேதியுடன் நீதிபதி பானுமதி ஓய்வு பெறுகிறார். இதனால் அவர் கொலீஜியத்தில் 9 மாதங்கள் அங்கம் வகிப்பார்.
  • கொலீஜியம்: உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க 5 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியம் அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற்றதால், நீதிபதி ஆர்.பானுமதி 5-வது மூத்த நீதிபதியானார். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் அவர் தாமாகவே உறுப்பினராக சேர்க்கப்படுகிறார்.
  • கொலீஜிய நீதிபதிகள்: உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் ஆகியோரோடு ஆர். பானுமதி இடம் பெற்று உள்ளார்.
  • ஆர். பானுமதி: 1955-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி பிறந்த அவர் 1988-ம் ஆண்டு மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாக தனது நீதித்துறை பயணத்தை தொடங்கினார். 2003-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார். 2014-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • பெண் நீதிபதி ரூமாபால்: உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் பெண் நீதிபதி ரூமாபால் இடம் பெற்று, 3 ஆண்டுகள் அங்கம் வகித்து, 2006-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ரூமாபால் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றிய (6 ஆண்டுகள்) பெண் நீதிபதி என்ற பெருமை பெற்றவர்.
  • 31 ஆண் நீதிபதிகள், 3 பெண் நீதிபதிகள்
  • உச்சநீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இதில் 3 பேர் பெண்கள். நீதிபதி பானுமதியை தவிர இந்துமல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகிய 2 பெண் நீதிபதிகள் உள்ளனர்.
  • உச்சநீதிமன்ற வரலாற்றில் தற்போது வரை 8 பெண் நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி உள்ளனர். (List of female judges of the Supreme Court of India) அவர்கள் விவரம்:
    • பாத்திமா பீபி, சுஜாதா மனோகர், ரூமா பால், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா தேசாய், ஆர். பானுமதி, இந்துமல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி.
பாதுகாப்பு/விண்வெளி 
அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி 'Foal Eagle-2019' ஒத்திவைப்பு
  • ஃபோல் ஈகிள் (Foal Eagle) என்ற பெயரில் அமெரிக்கா-தென் கொரியா இடையே நடைபெறும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சி (FTX:field training exercise) ஒத்திவைக்கப் பட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தையை இந்த கூட்டு ராணுவப் பயிற்சி பாதிக்கும் என்று வட கொரியா கடுமையாக எதிா்த்துவந்தது.
விருதுகள் 
கோல்டன் இலை விருதுகள் 2019
  • இந்திய புகையிலை வாரியம், குண்டூர்: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடந்த புகையிலை கண்காட்சி 2019 (Tab Expo 2019) நிகழ்வில் குண்டூரில் உள்ள இந்திய புகையிலை வாரியத்திற்கு, 2019 கோல்டன் இலை விருது (Golden Leaf Award 2019) வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் Flue-Cured Virginia என்ற புகையிலை சாகுபடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பசுமை முயற்சிகளுக்காக, இந்த விருது வழங்கப்பட்டது. புகையிலை ரிப்போர்ட்டர் (Tobacco Reporter) என்ற சர்வதேச இதழால் புகையிலை துறையில் தொழில்முறை அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க கோல்டன் இலை விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை விருது வென்ற 'போன்ஸ்லே': பார்சிலோனாவில் நடைபெற்ற 2019 ஆசிய திரைப்பட விழா சிறந்த இயக்குனர் ‘சிறந்த திரைக்கதை’ மற்றும் ‘சிறந்த இயக்குனர்’ பிரிவுகளில் இரண்டு விருதுகளை 'போன்ஸ்லே' (Bhonsle) என்ற இந்தி திரைப்படம் பெற்றுள்ளது.
    1. சிறந்த இயக்குனர் விருது: தேவாஷிஷ் மகிஜா
    2. சிறந்த திரைக்கதை விருது: தேவாஷிஷ் மகிஜா, மிராட் திரிவேதி, சரண்யா ராஜ்கோபால்.
தேனிலவுக்கு சிறந்த இடம்: கேரளா 
  • 'டிராவல்ஸ் அண்டு லெசர்' என்ற பத்திரிகை சார்பில், இந்தியாவில் சிறந்த தேனிலவு தலமாக கேரளா தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் விருது வழங்கப்பட்டது. 
கோல்டன் ராயல் பெங்கால் புலி விருது 2019 
  • 25-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் (Kolkata International Film Festival ) சிறந்த படத்திற்கான கோல்டன் ராயல் பெங்கால் புலி விருதை 'The Weeping Woman' (La llorona) என்ற ஸ்பானிஷ் மொழி திரைப்படம் வென்றது.
மாநாடுகள் 
ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கூட்டம் 2019 (தாய்லாந்து)
  • தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கூட்டம், தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நவம்பர் 17-அன்று நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் இடையே, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பருடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். 
  • இந்தியா, அமெரிக்கா இடையே இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் (2+2) கூட்டம் 2018 செப்டம்பா் மாதம் நடைபெற்றது. அதைப்போலவே, வாஷிங்டனில் 2019 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
சர்வதேச வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு 2019 (அருணாச்சல பிரதேசம்)
  • வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களைப் பற்றிய முதல் சர்வதேச வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு (international buyer seller meet) அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 14 அன்று நடைபெற்றது.
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) இந்த முதலாவது சந்திப்பை நடத்தியது.
  • "பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் கிரீஸ் ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பத்து சர்வதேச வாங்குபவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
  • APEDA: Agricultural and Processed Food Products Export Development Authority.
புத்தக வெளியீடு 
On Fire: My Story of England's Summer to Remember - Ben Stokes
  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சமீபத்தில் On Fire: My Story of England's Summer to Remember தனது புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
தமிழ்நாட்டின்  மின்நுகா்வோா் எண்ணிக்கை 3 கோடி
  • தமிழ்நாட்டின்  மின்நுகா்வோா் எண்ணிக்கை 3 கோடியை எட்டியுள்ளது. 2018 -ஆம் ஆண்டு மாா்ச் 31 -ஆம் தேதி நிலவரப்படி வீடுகள் சாா்ந்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 1 லட்சத்து 82 ஆயிரமாக இருந்தது. தற்போது இந்த இணைப்புகளின் எண்ணிக்கை 3 கோடியாக உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
கால்பந்து

FIFA உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் - ஆர்சென் வெங்கர் 
  • FIFA கால்பந்து அமைப்பின் உலகளாவிய கால்பந்து (FIFA's Chief of global football development) மேம்பாட்டுத் தலைவராக ஆர்சென் வெங்கர் (Arsene Wenger) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
யூரோ கால்பந்து போட்டி 2020 (ஐரோப்பா)
  • ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் யூரோ கோப்பை கால்பந்து (UEFA Euro 2020) போட்டிகள் 2020 ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை, மொத்தம்12 ஐரோப்பிய நாடுகளில் 12 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
  • 2016-ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • இந்த போட்டியில், முதல் முறையாக, வீடியோ உதவி நடுவர் (VAR system) அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
  • பங்கேற்கும் அணிகள்: இந்த போட்டிக்கு ஏற்கெனவே உலக சாம்பியன் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பின்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்று விட்டன. பிற அணிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இதுவரை 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன. நவம்பர் 17-அன்று, நெதா்லாந்து, ஜொ்மனி, குரோஷிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
  • VAR: video assistant referee system.

கிரிக்கெட்

பகல்-இரவு டெஸ்ட் போட்டி
  • இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நவம்பர் 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படுகிறது.
ICC டெஸ்ட் தரவரிசை: முகமது ஷமி, மயங்க் அகா்வால் முன்னேற்றம்
  • சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில், பேட்ஸ்மேன் தரவரிசையில் மயங்க் அகா்வால் 11-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளாா். 28 வயதான மயங்க், முதல் 8 டெஸ்ட் ஆட்டங்களில் 858 ரன்களை குவித்து, 691 புள்ளிகளை பெற்றுள்ளாா். பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் முகமது ஷமி 8 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளாா். 
டென்னிஸ்

தாமஸ் பொ்டிச் - ஓய்வு அறிவிப்பு 
  • உலகின் முன்னாள் 4-ஆம் நிலை வீரா் செக்.குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் பொ்டிச், தனது 17 ஆண்டுக் கால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். 34 வயதான தாமஸ் பொ்டிச் கடந்த 2010 முதல் 2016 வரை உலகின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் முன்னணி வீரா்களில் ஒருவராக திகழ்ந்தாா்.  
முக்கிய நபர்கள் 
கணிதவியலாளர் வசிஷ்ட நாராயண் சிங்
  • கணிதத் துறையின் குறிப்பிடத்தக்க இந்திய ஆளுமை வசிஷ்ட நாராயண் சிங் (Vashishtha Narayan Singh), நவம்பர் 14-அன்று பாட்னா நகரில் காலமானர். வசிஷ்ட நாராயண் சிங் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிற்கு அறைகூவல் விடுத்து உலகளவில் அங்கீகாரம் பெற்றவர்.
MQM நிறுவனர் அல்தாஃப் ஹுசைன்
  • இந்தியாவில் அடைக்கல கோரிக்கை: இந்தியாவில் அடைக்கலம் தந்து உதவுமாறு பாகிஸ்தானைச் சேர்ந்த முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் (MQM) நிறுவனர் அல்தாஃப் ஹுசைன் (Altaf Hussain), பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட்டு லண்டனில் வசித்து வரும் அவர் பல்வேறு வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளார். 
  • MQM: Muttahida Qaumi Movement. 
முக்கிய தினங்கள்
நவம்பர் 19

உலக கழிவறை தினம் - நவம்பர் 19
  • உலக கழிவறை தினம் (World Toilet Day) நவம்பர் 19 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 ஆம் ஆண்டின் உலக கழிவறை தின மையக்கருத்து (Theme): 'Leaving No One Behind'.

இந்திரா காந்தியின் 102-வது பிறந்த தினம் - நவம்பர் 19
  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102 ஆவது பிறந்த தினம் நவம்பர் 19-அன்று கடைபிடிக்கப்பட்டது.  இந்திராகாந்தி 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவர் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்கு பின்னர் 1966-ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார். இரும்பு பெண்மணி என போற்றப்பட்ட இவர், 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31- ஆம் தேதி அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 
  • டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் 'சக்தி ஸ்தலம்' என்று அழைக்கப்படுகிறது. 
நவம்பர் 19

சர்வதேச ஆண்கள் தினம் - நவம்பர் 19
  • 2019 சர்வதேச ஆண்கள் தின (International Men's Day) மையக்கருத்து (2019 Theme): “Making a Difference for Men and Boys”.

சர்வேதேச வாரங்கள் 
அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரம் - நவம்பர் 9-14
  • அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரம் - நவம்பர் 9-14 , 2018 (International Week of Science and Peace 9-14 November).
உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் (நவம்பர் 18-24, 2019) 
  • World Antibiotic Awareness Week 18-24 November, 2019
  • Theme: The future of antibiotics depends on us all
Post a Comment (0)
Previous Post Next Post