TNPSC Current Affairs October 21-22, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 21-22, 2019
TNPSC Current Affairs October 21-22, 2019
TNPSC Current Affairs October 21-22, 2019
சர்வதேச நிகழ்வுகள் 
FATF அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் 2019 (பாரீஸ்)
  • FATF அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் பாரீஸில் அக்டோபர் 13 முதல் 18 வரை நடைபெற்றது. 
  • கிரே’ பட்டியலில் மீண்டும் பாகிஸ்தான்
    • fatf 2020
    • இந்த கூட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பது தொடா்பான விவகாரத்தில் பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து நடத்திய ஆய்வில், பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே’ பட்டியலில் வைப்பதாக அந்த அமைப்பு அக்டோபர் 18-அன்று தெரிவித்தது.
    • பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது தொடா்பாக விதிக்கப்பட்ட 27 இலக்குகளில் வெறும் 5 இலக்குகளை மட்டுமே பாகிஸ்தான் எட்டியுள்ளது.
    • பாகிஸ்தானின் நடவடிக்கைகளைத் தொடா்ந்து கண்காணித்து அந்நாட்டை ‘கருப்பு’ பட்டியலில் வைப்பதா அல்லது வேண்டாமா என்பதை, 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் FATF அமைப்பு முடிவெடுக்கவுள்ளது. 
  • ‘கருப்பு’ பட்டியலில் - ஈரான், வட கொரியா
    • ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் ‘கருப்பு’ பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
  • FATF கருப்புப் பட்டியலில் இருந்து "இலங்கை" விடுவிப்பு
    • சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை, பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றைத் தடுக்க தவறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை சா்வதேச பணப் பரிவா்த்தனைக் கண்காணிப்பு அமைப்பான FATF நீக்கியுள்ளது.
    • சா்வதேச ஒத்துழைப்பு, கண்காணிப்பு, சா்வதேசப் பொருளாதாரத் தடைகளை பின்பற்றுவது போன்ற அம்சங்களில் இலங்கையின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதால் அந்தப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படுவதாக FATF தெரிவித்துள்ளது.
  • நிதி நடவடிக்கை பணிக்குழு (1989) - சில தகவல்கள் 
    • FATF அமைப்பு, 1989 ஆம் ஆண்டில் G7 நாடுகளின் முன்முயற்சியின் பேரில் பணமோசடிகளை எதிர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்க நிறுவப்பட்டது.
    • 2001-ஆம் ஆண்டில் பயங்கரவாத நிதியுதவியை உள்ளடக்கியதாக அதன் ஆணையம் விரிவடைந்தது.
    • FATF தலைமையகம்: பாரிஸ், பிரான்ஸ்
    • FATF தற்போதய தலைவர்: சியாங்மின் லியு (Xiangmin Liu)
    • FATF அமைப்பு நிறுவப்பட்டது: ஜூலை, 1989.
  • FATF: The Financial Action Task Force. 
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகம் (MBZUAI)
    MBZUAI
  • உலகில் முதல் இளங்கலை-நிலை, ஆராய்ச்சி அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பல்கலைக்கழகம் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் அபுதாபி நகரில் தொங்கப்பட்டுள்ளது.
  • மொஹமத் பின் சயீத் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் (MBZUAI) என்ற பெயரில் நிறுவப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
  • MBZUAI: Mohamed bin Zayed Univerity of Artificial Intelligence.
வடக்கு சிரியா - பாதுகாப்பு மண்டலம் - குா்துகள் - சில தகவல்கள் 
  • வடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (IS) பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது.
  • தங்கள் நாட்டு குா்து பயங்கரவாதிகளுக்கு அந்தப் படையினா் ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சாட்டி வரும் அண்டை நாடான துருக்கி, குா்துப் படையினரையும் பயங்கரவாதிகளாகக் கருதி வருகிறது.
  • குா்துகள் மீது தாக்குதல் 
    • அங்குள்ள குா்துப் படையினா் மீது துருக்கி கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் தாக்குதல் நடத்தி வந்தது.
    • குா்துகள் மீதான தாக்குதல் பெரும் சா்ச்சையை எழுப்பியதையடுத்து, துருக்கியுடன் அமெரிக்கா கடந்த அக்டோபர் 17-அன்று பேச்சுவாா்த்தை நடத்தியது. 
  • வடக்கு சிரியாவில் 5 நாள் போா் நிறுத்தம் 
    • பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து குா்துகள் வெளியேறுவதற்கு வசதியாக, வடக்கு சிரியாவில் 5 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • அமெரிக்க ராணுவம் வெளியேற்றம் 
    • பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ள சரின் நகரிலிருந்து அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேறியுள்ளது.
நிதி நெருக்கடி - வார இறுதி நாட்களில் மூடப்படும் "ஐ.நா. தலைமையகம்" 
  • நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் எதிர்வரும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஐ.நாவில் மொத்தம் 193 உறுப்பினர்கள் உள்ளனர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் இயக்க வரவு செலவுத் திட்டம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பணத்தை தவிர்த்து 5.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அருகில் உள்ளது. 
  • இந்த ஆண்டு இந்தியா 23,253,808 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. 
பிரெக்ஸிட் ஒப்பந்தம் - ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்
  • ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் நாடு விலகுவதற்கான, பிரிட்டனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். எனவே, அந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
  • பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் தொடர வேண்டிய சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தம் இதுவாகும்.
உலகின் நீண்ட தூர விமான சேவை - சோதனை வெற்றி
    QUANDAS AIRLINES
  • ஆஸ்திரேலியாவை சேர்ந்த குவான்டாஸ் விமான நிறுவனம் உலகிலேயே நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து அக்டோபர் 18-அன்று இரவு புறப்பட்ட விமானம் தொடர்ச்சியாக 19 மணிநேரம் 16 நிமிடங்கள் வானில் பறந்து, 16 ஆயிரத்து 200 கிலோமீட்டரை கடந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 49 பேர் பயணம் செய்தனர்.
  • சிங்கப்பூர்-நியூயார்க்
    • தற்போது உலக அளவில் நீண்ட தொலைவு பறக்கும் விமானமாக, சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 18 மணி நேரம் 5 நிமிடம் பயணிக்கும் இடைநில்லா விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நிகழ்வுகள்
இந்தியா கண்டுபிடிப்பு அட்டவணை 2019
  • India Innovation Index-III 2019
    • இந்திய மாநிலங்களிடையே போட்டித்தன்மையை ஊக்குவிக்கும் பொருட்டு, நிதி ஆயோக் அமைப்பின் முதலாவது இந்தியா கண்டுபிடிப்புக் குறியீட்டு அட்டவணை அண்மையில் புதுடெல்லியில் வெளியிடப்பட்டது..
India Innovation Index 2019
India Innovation Index 2019
  • கர்நாடகா-முதலிடம், தமிழ்நாடு-இரண்டாம் இடம் 
    • இந்த அட்டவணையில் கர்நாடக மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
    • மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
    • 17 முக்கிய மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் கடைசி இடத்தில் உள்ளது. 
    • வடகிழக்கு மாநிலங்களில், சிக்கிம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெல்லியும் முதலிடத்தைப் பிடித்தன.
மகாராஷ்டிரா, அரியானா - சட்டமன்றத் தேர்தல் 2019
  • மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21-அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 
  • மகாராஷ்டிரா சட்டமன்றம் 288 உறுப்பினர்களை கொண்டது. 
    • இந்த தேர்தலில் 235 பெண்கள் உள்பட மொத்தம் 3,237 வேட்பாளர் கள் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக 96 ஆயிரத்து 661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
  • அரியானா சட்டமன்றம் 90 உறுப்பினர்களை கொண்டது.
    • இந்த தேர்தலில் 150 பெண்கள் உள்பட மொத்தம் 1,169 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 1 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக 19 ஆயிரத்து 578 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • இடைத்தேர்தல்கள் 2019 
    • இந்த இரு சட்டமன்ற தேர்தலுடன் நாடு முழுவதும் தமிழ்நாடு (2), உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா (5), பீகார் (5), அசாம் (4), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் (2), இமாசலபிரதேசம் (2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார் (தலா ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா நாடாளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21-அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
  • வாக்கு எண்ணிக்கை
    • இரு மாநில சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ந் தேதி நடைபெறுகிறது. 
YSR ரைத்து பரோசா-பிரதமர் கிசான் யோஜனா திட்டம் 
  • ஒய்.எஸ்.ஆர் ரைத்து பரோசா-பிரதமர் கிசான் யோஜனா (YSR Rythu Bharosa-PM Kisan Yojana) என்ற திட்டத்தை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • இந்த பயிர் முதலீட்டு ஆதரவு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ .13,500 நிதி உதவி கிடைக்கும்.
  • ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி இந்த திட்டத்தை நெல்லூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
மாநாடு/விழா
இந்தியா-அமெரிக்கா பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் & வா்த்தகக் குழு கூட்டம் 2019 (இந்தியா)
    STA-1 Status 2020
  • இந்தியா-அமெரிக்கா பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் வா்த்தகக் குழுவின் 9-ஆவது கூட்டம் டெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் எலன் எம்.லாா்டு (Ellen M Lord) பங்கேற்கவுள்ளாா். 
  • ரூ.1.26 லட்சம் கோடி வர்த்தகம் 
    • நடப்பு ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் ரூ.1.26 லட்சம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 
  • STA-1 அங்கீகாரம்
    • பாதுகாப்புத் தளவாடங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பெறுவதற்கான அங்கீகாரம் (STA-1 Status) இந்தியாவுக்கு 2018 ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. ‘நேட்டோ’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கும் இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
    • STA-1 Status பெற்ற மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
புத்தக வெளியீடு
‘பிரிட்ஜிட்டல் நேசன்’ புத்தகம் வெளியீடு 
    Bridgital Nation
  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், அதன் தலைமை பொருளாதார நிபுணர் ரூபா புருஷோத்தமன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பிரிட்ஜிட்டல் நேசன்’ (Bridgital Nation) என்ற புத்தகத்தை பிரதமர் மோடி அக்டோபர் 20-அன்று தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். முதல் பிரதியை ரத்தன் டாடா பெற்றுக்கொண்டார்.
  • 'Bridgital Nation' authored by Chairman, Tata Sons, N Chandrasekaran and Roopa Purushothaman.
Dark Fear, Eerie Cities: New Hindi Cinema in Neo-liberal India - Sarunas Paunksnis
  • Dark Fear, Eerie Cities: New Hindi Cinema in Neo-liberal India என்ற தலைப்பிலான புத்தகத்தை சாருனாஸ் பாங்க்ஸ்னிஸ் (Sarunas Paunksnis) எழுதியுள்ளார். 
அறிவியல் தொழில்நுட்பம்
அதிக மின்சாரம் சேமிக்கும் "புதிய எலெக்ட்ரிக் கெபாசிடர்" கண்டுபிடிப்பு 
  • ராணி மேரி பல்கலைக்கழகம், லண்டன் 
    • லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎெலக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் பாலிமர் பிலிம்கள், டை எெலக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. 
  • பாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை எலெக்ட்ரிக் கெபாசிடர்
    • தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை (Biaxially Oriented Polypropylene) எலெக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரம் சேமிக்கிறது. 
    • இது குறித்த ஆய்வுக் கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை, குறைந்த செலவில் சேமிக்க இந்த புதிய கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 'கவுரவ டாக்டர் பட்டம்'
  • சென்னையில் அக்டோபர் 20-அன்று எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றனர்.
முக்கிய நபர்கள்    
இந்திய மல்யுத்த ஜாம்பவான் - தாடு சோகுலே

  • இந்திய மல்யுத்த ஜாம்பவான்களில் ஒருவரான தாடு சோகுலே (வயது 73) மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் அக்டோபர் 20-அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 
  • நியூசிலாந்தில் 1974-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான சோகுலே விளையாட்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதை பெற்றவர் ஆவார்.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்

ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி - இந்திய அணி 

  • இந்தியாவில் நடைபெறும் இந்தியா-தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி இதுவரை 47 சிக்சர்கள் (விசாகப்பட்டினம்-27 சிக்சர், புனே-7, ராஞ்சி-13) நொறுக்கியுள்ளது. இதன் மூலம் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
  • இதில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு மட்டும் 19 சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2013-14-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 40 சிக்சர் கிளப்பியதே அதிகபட்சமாக இருந்தது.
உள்நாட்டு போட்டி சராசரி - பிராட்மேன் சாதனை முறியடிப்பு 

  • உள்நாட்டில் இந்தியா கிரிக்கெட் வீர்ர் ரோகித் சர்மா, இதுவரை 6 சதம், 5 அரைசதம் உள்பட 18 இன்னிங்சில் ஆடி 1,298 ரன்கள் (சராசரி 99.84) எடுத்துள்ளார். உள்ளூரில் குறைந்தது 10 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் சிறந்த சராசரியை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை (சராசரி 98.22) பின்னுக்கு தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
  • டெஸ்ட், ஒரு நாள் போட்டி இரண்டிலும் இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியல் 
    1. சச்சின் தெண்டுல்கர் (இந்தியா)
    2. ஷேவாக் (இந்தியா)
    3. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 
    4. ரோகித் சர்மா (இந்தியா)
டென்னிஸ்
கிரம்ளின் கோப்பை டென்னிஸ் 2019 - 'பெலின்டா பென்சிச்' சாம்பியன்

    WTA Kremlin Cup 2019
  • ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த கிரம்ளின் கோப்பை (WTA Kremlin Cup 2019) டென்னிஸ் போட்டியில், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் (,Belinda Bencic) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
2019 European Openஐரோப்பிய ஓபன் 2019: "ஆன்டி முர்ரே" சாம்பியன்

  • 2019 ஐரோப்பிய ஓபன் ATP (2019 European Open) டென்னிஸ் போட்டியில், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.
பேட்மிண்டன்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் 2019 - சாம்பியன்கள் 

    2019 Denmark Open
  • ஒடென்சி நகரில் (Odense) நடந்த டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் (2019 Denmark Open) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்/வீராங்கனைகள் விவரம்:
    1. பெண்கள் ஒற்றையர் பிரிவு - தாய் ஜூ யிங் (Tai Tzu-ying, நாடு: சீனதைபே)
    2. ஆண்கள் ஒற்றையர் பிரிவு - கேண்டோ மோமோடா (Kento Momota, நாடு: ஜப்பான்). 
மாரத்தான்
டெல்லி மாரத்தான் 2019

எத்தியோப்பியா வீரர்/வீராங்கனை முதலிடம்

  • 15-வது டெல்லி அரை மாரத்தான் பந்தயம் டெல்லியில் அக்டோபர் 20-அன்று நடந்தது. போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார். 
    1. ஆண்கள் பிரிவு சாம்பியன் - அன்டம்லக் பெலிஹூ (எத்தியோப்பியா) 
    2. பெண்கள் பிரிவு சாம்பியன் - செஹாய் ஜெமிச்சு (எத்தியோப்பியா) 
சைக்கிளிங்
ஆசிய டிராக் சைக்கிளிங் பந்தயம் 2019 

  • கொரியாவின் இன்சியான் (Incheon) நகரில் நடைபெற்று வரும் ஆசிய டிராக் சைக்கிளிங் (2019 Asian Track Cycling Championships) பந்தய போட்டியில் இந்திய வீரர்/வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள்/பிரிவுகள் விவரம்:
    • ரொனால்டோ (Ronaldo Singh) - தங்கப்பதக்கம் (தனிநபா் கியா்ன் பிரிவு, 10.384 விநாடிகள்)
    • ஜேம்ஸ் சிங் (James Singh) - வெண்கலப்பதக்கம் (தனிநபா் கியா்ன் பிரிவு, 1விநாடிகள்)
    • ரொனால்டோ, ரோஜித் சிங், பால் காலிங்வுட் - வெண்கலப்பதக்கம் (ஜூனியா் ஆண்கள் அணிகள் ஸ்பிரிண்ட் பிரிவு, 1விநாடிகள்)
    • திரியஷா பால் - வெண்கலப்பதக்கம் (பெண்கள் ஜூனியா் 500 மீ பிரிவு).
2019 Asian Track Cycling Championships Incheon
2019 Asian Track Cycling Championships, Incheon
Post a Comment (0)
Previous Post Next Post