TNPSC Current Affairs October 19-20, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 19-20, 2019
சர்வதேச நிகழ்வுகள்
உலக கொடுத்தல் தரவரிசை 2019 - இந்தியா 82-வது இடம் 
 • WGI-World Giving Index 2019
  • 2019 உலக கொடுத்தல் குறியீட்டு தரவரிசை பட்டியலில், இந்தியா 82-வது இடத்தை பெற்றுள்ளது.
WGI 2020
WGI 2019-World Giving Index 2019
 • CAF (Charities Aid Foundation) என்ற அறக்கட்டளை மொத்தம் 128 நாடுகளில் இந்த ஆய்வை மேற்கொண்டது. 
 • அமெரிக்கா முதலிடத்திலும், மியான்மர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள்  அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஹுருன் குளோபல் யூனிகார்ன் பட்டியல் 2019 - இந்தியா 'மூன்றாம் இடம்' 
 • Hurun Global Unicorn List 2019 
  • ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் முதலாவது, 2019ஆம் ஆண்டிற்கான ஹுருன் குளோபல் யூனிகார்ன் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 • பில்லியன் டாலர் ‘ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின்’ தரவரிசை
  • இது உலகின் பில்லியன் டாலர் தொழில்நுட்ப ‘ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின்’ தரவரிசை ஆகும்.
Hurun Global Unicorn List 2020
Hurun Global Unicorn List 2019
 • இந்தியா 3-வது இடம்
  • இந்த பட்டியலில் 206 யூனிகார்ன் நிறுவனங்களுடன் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 203 நிறுவனங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்த பட்டியலில் 21 யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியா-பிலிப்பின்ஸ் - 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
 • இந்திய குடியரசுத் தலைவா் இராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறைப் பயணமாக பிலிப்பின்ஸ் நாட்டுக்குச் சென்றார். 
 • India and Philippines agreements 2019
  India and Philippines agreements 2019
 • பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவை (Rodrigo Duterte) அக்டோபர் 18-அன்று சந்தித்துப் பேசினார். 
 • இந்தச் சந்திப்பின்போது, பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக இரு நாடுகளுக்குமிடையே 4 ஒப்பந்தங்கள் (India and Philippines agreements 2019) கையெழுத்தாகின.
 • மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் அவரது சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தாா்.
 • இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணிக்கும் வா்த்தகக் கப்பல்கள் தொடா்பான விவரங்களை இந்தியக் கடற்படையும், பிலிப்பின்ஸ் கடலோரக் காவல் படையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாலமன் நாட்டின் துலகி தீவு - சில தகவல்கள் 
 • Tulagi Island, Solomon Islands
  • அண்மையில் செய்திகளில் அடிபட்ட துலகி தீவு சாலமன் நாட்டின் பிரதேசம் ஆகும்.
 • China Sam Enterprise Group Co., Ltd
  • ஒரு சீன நிறுவனமான “சாம் எண்டர்பிரைஸ் குரூப்”, முழுமையாக துலகி தீவை, 75 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விட சாலமன் தீவுகளின் அரசாங்கத்துடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Tulagi Island
Tulagi Island
 • மூலோபாய நுழைவாயில்
  • சாலமன் தீவுகள் தைவான் நாட்டை கைவிட்டு, சீன உதவி மற்றும் முதலீட்டை பெறுவதற்காக இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கத் தொடங்கிய சில நாட்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மூலோபாய நுழைவாயிலில் பசிபிக் இராணுவ தளத்தை (Pacific Military base on a Strategic Gateway to Australia) நிறுவுவதாகும்.
 • இரண்டாம் உலகப் போரில் துலாகி தீவு 
  • துலாகி தீவு பிரிட்டன் நாட்டுக்கும் பின்னர் ஜப்பான் நாட்டுக்கும் தென் பசிபிக் தலைமையகமாக செயல்பட்டது.
  • இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய கடற்படை தளமாக இருந்த  துலாகி தீவு, கடுமையான சண்டை நடைபெற்ற இடம் ஆகும். 
இராயல் அட்லாண்டிஸ்-2 ஹோட்டல் - சில தகவல்கள் 
 • The Royal Atlantis Residences, Dubai
  • ஐக்கிய அமீரகத்தின், துபாய் நகரில் செயற்கை தீவான பாம் ஜுமைரா பகுதியில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாக "ராயல் அட்லாண்டிஸ் 2" ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது. 
The Royal Atlantis Residences, Dubai
The Royal Atlantis Residences, Dubai
 • Royal Atlantis ஹோட்டல் தனித்துவமான வடிவமைப்புக்காக பல விருதுகளை பெற்றுள்ளது, ஒரு பாதியில் 43 தளங்களில் 795 அறைகளும், உணவகங்களும், மற்றொரு பாதியில் 2 முதல் 5 படுக்கையறைகளுடன் கூடிய 231 குடியிருப்புகள் உள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் தனித்தனி மொட்டை மாடிகள், நீச்சல் குளங்கள், மாடித் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 
தேசிய நிகழ்வுகள்
கால்நடை கணக்கெடுப்பு-2019 - உத்தரபிரதேசம் முதலிடம் 
 • சமீபத்திய 20-வது கால்நடை கணக்கெடுப்பு-2019 இன் படி உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் உள்ளன.
20th Livestock Census-2019
20th Livestock Census-2019
 • 20th Livestock Census-2019
  • நாடு முழுவதும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்பில், சுமார் 6.6 லட்சம் கிராமங்கள் மற்றும் 89 ஆயிரம் நகர வார்டுகளில் 20-வது கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த கால்நடை கணக்கெடுப்பு-2019 முடிவுகள் அண்மையில் வெளியிட்டுள்ளது.
 • 535.78 மில்லியன் கால்நடைகள் 
  • இந்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த கால்நடைகளின் தொகை 535.78 மில்லியனாக உள்ளது, இது 2012-ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பைவிட 4.6% அதிகரித்துள்ளது.
 • உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் 
  • மாநிலங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் (67.8 மில்லியன்) அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளை கொண்டுள்ளது, அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 
செனானி-நாஷ்ரி சாலை சுரங்கப்பாதைக்கு 'டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி' பெயர் சூட்டல் 
 • Chenani-Nashri Road Tunnel
  • இந்தியாவின் மிக நீளமான செனானி-நாஷ்ரி சாலை சுரங்கப்பாதைக்கு, பாரதிய ஜனசங் நிறுவனர் 'டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி' (Dr Shyama Prasad Mukherjee) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Chenani-Nashri Road Tunnel-SP Mukherjee
Chenani-Nashri Road Tunnel renamed as Shyama Prasad Mukherjee
 • National Highway 44
  • தேசிய நெடுஞ்சாலை எண். 44 இல் உள்ள இந்த, 9.2 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான தூரத்தை 31 கி.மீ ஆக குறைக்கிறது.
  • இது ஒற்றை குழாய் வடிவ இரு திசை சுரங்கப்பாதை ஆகும், 9.35 மீ. அகலம் கொண்டது.
செல்லிடப்பேசி வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை-117 கோடி 
 • நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. 
 • ஒட்டுமொத்த தொலைபேசி பயனாளா்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும்.
 • ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 84.45 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை கொண்டுள்ளது. 
 • பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 1.87% அதிகரித்து 61.55 கோடியாக இருந்தது. இதில், Jio Infocom 34.82 கோடி வாடிக்கையாளா்களை தக்க வைத்துக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. Bharti Airtel (12.67 கோடி), Vodafone Idea (11.11 கோடி), BSNL (2.15 கோடி) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று டிராய் (TRAI) தெரிவித்துள்ளது.
 • TRAI: Telecom Regulatory Authority of India.
உத்தரகண்டில் குட்கா, பான் மசாலாவுக்கு - தடை விதிப்பு 
 • உத்தரகண்ட் மாநிலத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு தடை (19.10.2019) விதிக்கப்பட்டுள்ளது..
 • மனித நலனுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியதாகும். புகையிலை, நிகோட்டின் ஆகியவற்றை எந்த பொருளிலும் கலப்பதற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் தடை விதித்துள்ளது
FSSAI பதப்படுத்தப்பட்ட பால் ஆய்வு வெளியீடு - 37.7% தரமற்றவை 
 • பாக்கெட் பாலின் தர ஆய்வு 
  • National Milk Safety and Quality Survey 2018
  • நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலின் தரத்தை 2018 ஆண்டு மே முதல் அக்டோபா் வரை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (FSSAI) ஆய்வு செய்தது. 
  • இந்த ஆய்வு முடிவை, டெல்லியில் FSSAI அமைப்பின் தலைமை செயல் அதிகாரி (CEO) பவன் அகா்வால் அக்டோபர் 18-அன்று வெளியிட்டாா். 
  • பெரிய நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் 37.7% பால் மாதிரிகள், உரிய தரம் மற்றும் பாதுகாப்பானதாக இல்லாமல் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 • Aflatoxin-M1 வேதிப்பொருள்
  • பதப்படுத்தப்பட்ட பாலில், பூச்சிக்கொல்லி மருந்துகள், பாக்டீரியா வளா்ச்சியை தடுக்கும் மருந்து, ஆஃப்லாடாக்ஸின்-எம்1 என்ற வேதிப்பொருள் உள்ளிட்டவை அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது.
  • ஆஃப்லாடாக்ஸின்-எம்1 என்ற வேதிப்பொருள், மாட்டுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் வழியாக பாலில் வருகிறது.
  • பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள், FSSAI விதிகளை பின்பற்றுவதற்கு 2020 ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது.
  • FSSAI: Food Safety and Standards Authority of India
கேரளாவில் தனியார் கல்வித்துறையில் மகப்பேறு சலுகைகள் 
 • தனியார் கல்வித்துறையில் மகப்பேறு சலுகைகள் வழங்கும் முதல் இந்திய மாநிலம் கேரளா 
  • தனியார் கல்வித்துறையில் மகப்பேறு சலுகைகளை வழங்கும், முதல் இந்திய மாநிலம் என்ற சிறப்பை கேரளா (Kerala) மாநிலம் பெற்றுள்ளது. 
  • தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களை மகப்பேறு நன்மைச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான (Maternity Benefits in the Private Educational Sector) கேரள அரசின் முடிவுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தச் சட்டத்தில் திருத்தம் நடைமுறைக்கு வரும்போது, தனியார் கல்வித்துறையில் மகப்பேறு சலுகைகளை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா மாறும்.
  • இந்த சட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள் சம்பளத்துடன் 26 வார மகப்பேறு விடுப்பைப் பெறலாம். மேலும், ஒரு முதலாளி மருத்துவ உதவித்தொகையாக ரூ.1,000 ரூபாய் வழங்க வேண்டும்.
பாதுகாப்பு/விண்வெளி 
இந்தியா-ஓமன் கூட்டுப்பயிற்சி 'ஈஸ்டர்ன் பிரிட்ஜ்-V'
 • Ex-Eastern Bridge-V 2019
  • இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் இடையே, 'ஈஸ்டர்ன் பிரிட்ஜ்-V' என்ற பெயரில் ஐந்தாவது இருதரப்பு கூட்டுப்பயிற்சி தொடங்கியுள்ளது.
  • ஓமன் நாட்டின் மசிரா விமானப்படை தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது.
  • இந்திய விமானப்படை (Indian Air Force-IAF) மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஓமன் (Royal Air Force Oman-RAFO) துருப்புகள் ஆகியவை இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.
  Ex-Eastern Bridge-V 2019

 • மிக்-29 போர் விமானம் பங்கேற்பு 
  • இந்தியாவின் மிக் -29 போர் விமானம் இந்த பயிற்சியில் பங்கேற்கிறது. இந்தியாவுக்கு வெளியே ஒரு சர்வதேச பயிற்சியில். மிக் -29 போர் விமானம் முதல் முறையாக பங்கேற்கிறது.
செவ்வாய் கிரகத்தில் "உப்பு ஏரி" கண்டுபிடிப்பு 
 • அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே உப்பு ஏரி (Mars, salt lakes) உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
 • NASA கியூரியாசிட்டி ரோவர் 
  • 3 பில்லியன் ஆண்டுகளுக்கு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள பாறை படுகை ஒன்று இருந்ததாக ஆராய்ச்சியில் தெரியவந்தது. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானதாக கூறப்படுகிறது. 
  • செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மெல்லியதாக மாறியதால் செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த 2012 முதல் NASA கியூரியாசிட்டி ரோவர் மூலம் அதனை ஆராய்ந்து வருகின்றனர்.
40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் - ஒப்படைப்பு
 • காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் (Bulletproof Jackets) வழங்கப்பட்டுள்ளது. 
 • தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் முகப் பாதுகாப்பு என இதன் அனைத்து பாகங்களும் ஏ.கே.-47 துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட ஹார்ட்கோர் எஃகு வெடிமருந்துகளைத் தாங்கும் சக்தி படைத்தது.
 • எஸ்.எம்.பி.பி பிரைவேட் லிமிடெட் (SMPP Pvt. Ltd) நிறுவனம் இவற்றை உருவாக்கியுள்ளது.
நியமனங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் - வி. அனந்த நாகேஸ்வரன் 
 • பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தற்காலிக உறுப்பினராக வி.அனந்த நாகேஸ்வரன் (Dr V. Anantha Nageswaran) நியமிக்கப்பட்டுள்ளார். 
 • அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவர் பதவி (A Non-Permanent Member of the Economic Advisory Council to the Prime Minister) வகிப்பார்.
 • ஆந்திரத்தின் ஸ்ரீசிட்டியில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தின் நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் தலைவராக வி.அனந்த நாகேஸ்வரன் உள்ளார். 
தேசிய பாதுகாப்பு படை (NSG) தலைமை இயக்குநராக - 'அனுப் குமார்' நியமனம்
 • கருப்புப் பூனை படை என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் (NSG) தலைமை இயக்குநராக மூத்த IPS அதிகாரி அனுப் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
 • பயங்கரவாதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபடவும், விமான கடத்தல் சம்பவங்களைத் தடுக்கவும் கடந்த 1984-இல் என்எஸ்ஜி உருவாக்கப்பட்டது. மிக முக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் இப்படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 'எஸ்.ஏ.போப்டே' - பரிந்துரை 
 • இந்திய உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டேவை (Sharad Arvind Bobde) நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளார்.
 • உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் 2018 ஆண்டு அக்டோபா் மாதம் 3-ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பா் மாதம் 17-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. 
 • குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கினால், உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நவம்பா் 18-ஆம் தேதி பொறுப்பேற்பாா். அடுத்த 18 மாதங்களுக்கு அந்தப் பதவியில் அவா் நீடிப்பார்.
மாநாடுகள்/விழா 
இந்தோ-பிரெஞ்சு அறிவு உச்சி மாநாடு 2019 (பிரான்ஸ்)
 • இரண்டாவது இந்தோ-பிரெஞ்சு அறிவு உச்சி மாநாடு, 2019 அக்டோபர் 17-18 முதல் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
indo french knowledge summit 2019
Indo-French Knowledge Summit 2019
 • இந்த உச்சிமாநாடு உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்காக நடத்தப்படுகிறது.
 • முதலாவது இந்தோ-பிரெஞ்சு அறிவு உச்சி மாநாடு, 2018 ஆம் ஆண்டு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் இந்திய பயணத்தின் போது இந்தியாவில் நடைபெற்றது.
இன்டா்போல்’வருடாந்திர கூட்டம் 2022 (இந்தியா) 
 • ‘இன்டா்போல்’ என்ற சா்வதேச காவல்துறை அமைப்பின் 91-ஆவது பொது அவை கூட்டம், 2022-இல் இந்தியாவில் நடைபெறுகிறது.
 • சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில், இன்டா்போலின் 88-ஆவது பொது அவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 91-ஆவது கூட்டத்தை இந்தியாவில் நடத்துவதற்கான முன்மொழிவை, CBI இயக்குநா் ரிஷி குமார் சுக்லா சமா்ப்பித்தார். இதில், இந்தியாவின் முன்மொழிவுக்கு உறுப்பு நாடுகள் பெருவாரியாக ஆதரவளித்தன. 
ஷிரூய் லில்லி விழா 2019 (மணிப்பூர்)


Shirui Lily Festival 2020
Shirui Lily Festival 2019
 • 2019-ஆம் ஆண்டுக்கான ஷிருய் லில்லி (Shirui Lily Festival 2019) விழாவை, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹ்லத் சிங் படேல் அக்டோபர் 16-அன்று மணிப்பூரில் உள்ள உக்ருலின் ஷிருய் வானங்கன் மைதானத்தில்,தொடங்கி வைத்தார். மொத்தம் நான்கு நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
பொருளாதார நிகழ்வுகள் 
சா்வதேச நிதியத்தின் வாக்குரிமை - சில தகவல்கள் 
  IMF 2019
 • சா்வதேச நிதியத்தில் (IMF) வாக்குரிமைக்கான ஒதுக்கீட்டு கட்டமைப்பை அதிகரிப்பதற்கு ஆதரவு கிடைக்காததற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
 • சா்வதேச நிதியத்தில் அக்டோபர் 19-அன்று நடைபெற்ற 15-ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
 • இந்த பொது விவாதத்தின் கீழ் வாக்குரிமை கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. 
 • உலக வங்கி, சா்வதேச நிதி அமைப்புகளில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அதிக வாக்குரிமை உள்ளன. இந்த நாடுகள் உலக வங்கி, சா்வதேச நிதியத்தின் எந்த திட்டத்தையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளன.
 • சா்வதேச நிதியத்தில் இந்தியாவுக்கு 2.76 சதவீத வாக்குரிமையும், சீனாவுக்கு 6.41 சதவீத வாக்குரிமையும் உள்ளது. அதேசமயம், அமெரிக்காவின் வாக்குரிமை 17.46 சதவீத அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 • வாக்குரிமைக்கான ஒதுக்கீட்டு கட்டமைப்பை தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அதிக வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆபரணங்கள் ஏற்றுமதி 5-10% குறையும்: GJEPC அறிவிப்பு 
 • நடப்பு ஆண்டில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 5-10 % குறையும் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC INDIA) தெரிவித்துள்ளது.
 • GJEPC INDIA: Gem and Jewellery Export Promotion Council.
அறிவியல் தொழில்நுட்பம் 
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 'PM 2.5' சாதனம் கண்டுபிடிப்பு 
 • கரக்பூர் ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்ற, தேபயன் சஹா என்பவர் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பி.எம் 2.5 (PM 2.5) சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.
 • இது வாகனங்களில் சைலன்சர் குழாயின் அருகே பொருத்தப்படும்போது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துகிறது.
தொடர்பு இல்லாத மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதி
 • SBI வங்கி சமீபத்தில் 'SBI Card Pay' என்ற தொடர்பு இல்லாத மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் (SBI Card Pay-Contactless Payment Using Mobile Phones) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
ஆக்கி
சுல்தான் கோப்பை ஆக்கி 2019 - 'இங்கிலாந்து அணி' சாம்பியன் 
 • ஒன்பதாவது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்தது. இறுதி போட்டியில் 'இங்கிலாந்து அணி' 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து, சுல்தான் கோப்பையை கைப்பற்றியது. 
கபடி
புரோ கபடி லீக் போட்டி 2019 - 'பெங்கால் வாரியர்ஸ் அணி' சாம்பியன் 
 • 12 அணிகள் பங்கேற்ற 7-வது புரோ கபடி லீக் போட்டி 2019 ஜூலை 20-ந்தேதி தொடங்கியது. 
 • புரோ கபடி இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
 • புரோ கபடியில் ஏற்கனவே ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யூ மும்பா, பாட்னா பைரட்ஸ் (3 முறை), பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் பட்டம் வென்றுள்ளன. அந்த வரிசையில் பெங்கால் வாரியர்சும் இணைந்துள்ளது. 
 • தொடரின் மிகவும் மதிப்பு மிக்க வீரராக டெல்லி வீரர் நவீன்குமார் (23 ஆட்டத்தில் 301 ரைடு புள்ளி) தேர்வு செய்யப்பட்டார். 
கிரிக்கெட்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட கிரிக்கெட் தொடர் 2019 
 • இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அக்டோபர் 19-அன்று தொடங்கியது. 
 • ஷபாஸ் நதீம்-அறிமுகம் 
 • ஜார்கண்டை சேர்ந்த 30 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம், சர்வதேச அரங்கில் புதுமுக வீரராக இடம் பிடித்தார்.
டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சிக்சர்களை எடுத்த வீரர்-ரோகித் சர்மா
 • இந்த டெஸ்டில் இந்திய வீரர் ரோகித் சர்மா 4 சிக்சர்கள் அடித்தார். இதையும் சேர்த்து இந்த தொடரில் அவரது சிக்சர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. 
 • இதன் மூலம் டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சிக்சர்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 
 • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் 15 சிக்சர் எடுத்ததே சாதனையாக இருந்தது.
டெஸ்டில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியல்-ரோகித் சர்மா முதலிடம் 
 • டெஸ்டில் இந்த (2019) ஆண்டில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலிலும் ரோகித் சர்மாவே (4 இன்னிங்சில் 17 சிக்சர்) ‘முதலிடத்தில் உள்ளார். 
 • 2-வது இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (16 இன்னிங்சில் 15 சிக்சர்) உள்ளார்.
முக்கிய நபர்கள் 
பங்களாதேஷ் கவிஞர் - ஃபகிர் லாலோன் ஷா
 • பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த கவிஞர் ஃபகிர் லலோன் ஷா (Fakir Lalon Shah) என்பவரின் 129-வது இறப்பு ஆண்டு 2019 அக்டோபர் 17-அன்று அனுசரிக்கப்பட்டது.
முக்கிய தினங்கள் 
அக்டோபர் 20 - உலக புள்ளிவிவர தினம்
 • World Statistics Day 20 October (Every Five Years, Beginning in 2010
  • ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அக்டோபர் 20 அன்று உலக புள்ளிவிவர தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவர ஆணையம் சார்பாக, 2010 அக்டோபர் 20 அன்று உலக புள்ளிவிவர தினம் கொண்டாட முன்மொழியப்பட்டது.
World Statistics Day OCTOBER 20
World Statistics Day October 20, 2019
 • உலக புள்ளிவிவர தினம் 2015
  • 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று முதலாவது உலக புள்ளிவிவர தினம் கடைபிடிக்கப்பட்டது.
 • உலக புள்ளிவிவர தினம் 2019
  • 2019 அக்டோபர் 20 அன்று இரண்டாவது உலக புள்ளிவிவர தினம் கடைபிடிக்கப்படுகிறது.
 • 2019 உலக புள்ளிவிவர தின மையக்கருத்து: 
  • சிறந்த தரவு, சிறந்த வாழ்க்கை (Better Data, Better Lives) என்பதாகும்.
Post a Comment (0)
Previous Post Next Post