TNPSC Group 1 (CCS-1) Exam Results Published - List for Main Written Exam 2019




TNPSC குரூப்-1 முதல்நிலை தேர்வு 2019
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சப்-கலெக்டர்- 27, துணை போலீஸ் சூப்பிரண்டு- 90, வணிகவரி உதவி கமிஷனர்- 18, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்- 13, மாவட்ட பதிவாளர் - 7, கிராம மேம்பாடு உதவி இயக்குனர்- 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 8, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர்- 3 ஆகிய 181 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வை 2019 மார்ச் 3-ந்தேதி நடத்தியது.
  • இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 549 விண்ணப்பதாரர் கலந்துகொண்டனர்.
முதன்மை தேர்வுக்கு - 9 ஆயிரத்து 850 பேர் தேர்வு 
  • இவர்களின் மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக 9 ஆயிரத்து 850 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதன்மை தேர்வு - ஜூலை மாதம் 12, 13, 14
  • முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக 9 ஆயிரத்து 850 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், பதிவு எண்கள் கொண்ட பட்டியல், www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
  • முதன்மை தேர்வு வருகிற ஜூலை மாதம் 12, 13, 14-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. 
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் 
  • முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏப்ரல் 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் இ-சேவை மையம் மூலமாக பதிவேற்ற செய்ய வேண்டும்.
  • இதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

Post a Comment (0)
Previous Post Next Post