TNPSC Current Affairs 5th February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 5, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக  நிகழ்வுகள்/ International Affairs
சீனப் புத்தாண்டு 2019 - தொடக்கம் 

  • வசந்த விழா என்று சொல்லப்படும் சீனப் புத்தாண்டு (Chinese New Year 2019) அதிகாரப்பூர்வமாக 2019 பிப்ரவரி 5 இல் தொடங்கி பிப்ரவரி 19 ஆம் தேதி முடிவடைகிறது. 
  • 2019 சீனப் புத்தாண்டு பன்றியின் ஆண்டு (2019 Year of Pig) எனப்படுகிறது. அனைத்து இராசி விலங்குகளின் பன்னிரண்டாவதாக வருவது பன்றி ஆகும்.
இந்திய நிகழ்வுகள்/ National Affairs
பஞ்சாப் மாநில "நீர்வாழ் விலங்கு" - சிந்து நதி டால்பின் 
  • அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான "சிந்து நதி டால்பின்", பஞ்சாப் மாநிலத்தின் "நீர்வாழ் விலங்கு" என அறிவிக்கப்பட்டுள்ளது. (Punjab state's aquatic animal, Indus river dolphin). 
இந்தியாவுக்கு நாடு கடத்தபடும் விஜய் மல்லையா
  • விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது.
  • இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு, அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பினார்.
மாணவர்களுக்கான, "NTA Students App" புதிய செயலி - அறிமுகம் 
  • தேசிய சோதனை நிறுவனம் (NTA, National Testing Agency), மாணவர்களுக்கான, "NTA Students App" என்ற புதிய "செல்பேசி செயலியை" (Mobile App) அறிமுகம் செய்துள்ளது. 
  • இந்த செயலி மூலம், மாணவர்கள் தங்கள் கணினிகள் அல்லது (smart phone) செல்பேசிகளில் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும், மாதிரி தேர்வுகளையும் மேற்கொள்ளலாம். 
மேற்கு வங்கதில் அமையும் உலக பாரம்பரிய மையம் (WHC)  
  • கொல்கத்தா அருகே மாயாபூரில் உலக பாரம்பரிய மையம் (WHC, World Heritage Centre, Mayapur) அமையவுள்ளது. 
  • மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே, நதியா மாவட்டத்தில் உள்ள மாயாபூரில் 45 நாடுகளின் 'ஆன்மீக முகாம்கள்'(spiritual camps), உலக பாரம்பரிய மையத்தில் அமைக்கப்படவுள்ளன.
ஆந்திரப் பிரதேச அரசின் "Pasupu-Kumkuma scheme 2019"
  • ஆந்திரப் பிரதேச அரசு இரண்டாம் கட்ட "பசுப்பூ கும்குமா திட்டத்தை" (Pasupu-Kumkuma scheme), பிப்ரவரி 2  துவக்கியுள்ளது. இந்த திட்டம் பெண் குழந்தைகள் தொடர்பான திட்டம் ஆகும். 
நியமனங்கள்/ Appointments
சென்னை ICF பொது மேலாளராக "ஆர். ஜெயின்" நியமனம்
  • ரெயில்வேயில் 5 பொது மேலாளர்களை நியமனம் செய்து மத்திய அரசு நேற்று அறிவித்து உள்ளது. மத்திய அரசின் நியமன கமிட்டி அறிவித்து உள்ள இந்த அறிவிப்பில் 
  • சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை (ICF, Integral Coach Factory) பொது மேலாளராக ஆர். ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
CBI புதிய இயக்குனராக "ரிஷி குமார் சுக்லா" பதவி ஏற்பு 
  • மத்திய புலன் விசாரணை பணியகத்தின் (CBI, Central Bureau of Investigation), புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா பதவி ஏற்றுள்ளார். (New CBI director Rishi Kumar Shukla) 
மாநாடுகள்/ Conference
மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு 2019, புது டில்லி
  • 2019 மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு (State AYUSH/Health Ministers Conference 2019), புது டில்லியில், பிப்ரவரி 6 அன்று (06.02.2019) தொடங்குகிறது. 
  • இந்த மாநாட்டினை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs
தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2019
  • சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை-2019” புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 4 அன்று வெளியிட்டார். 
  • 2023-ம் ஆண்டிற்குள் சூரியசக்தி மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சூரிய மின் திட்டங்கள் நிறுவுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து 40 சதவீதம் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் வளர்ச்சி: 3 புதிய திட்டங்கள் 
  • தமிழ்நாட்டில் அறிவியல் வளர்ச்சிக்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த படவுள்ளன. 
  • ஊரகப் பகுதிகளில் அறிவியல், தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்லவும், அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 
  • தொழிலகங்களுக்குத் தேவையான வகையில் அறிவியல் திறன் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 3 புதிய திட்டங்களை வகுக்கப்பட்டுள்ளது. 
  • 2019 பிப்ரவரி 4 முதல் 15-ஆம் தேதி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படஉள்ளது. 
  • தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார். 
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 
  • தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய 2015-ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன.
  • பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
  • 2016-ல் இரண்டாம் கட்டமாகவும் 2017-ல் 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் பளிங்கு கற்கள் உட்பட 1600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. 
  • கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கியது. 
  • தற்போது கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
டென்னிஸ்

2019 WTA டென்னிஸ்: கிக்கி பெர்ட்டன்ஸ் சாம்பியன்
  • இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற, 2019 WTA டென்னிஸ் போட்டியில் (2019 St. Petersburg Ladies' Trophy) நெதர்லாந்து வீராங்கனை கிக்கி பெர்ட்டன்ஸ் (Kiki Bertens) சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இறுதிச் சுற்றில் கிக்கி பெர்ட்டன்ஸ், குரோஷியாவின் (Donna Vekić) டோனா வேகிக்-கை 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வென்றார். 
கிரிக்கெட் 
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணிக்கு 2-ஆவது இடம் 
  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  • மட்டை வீச்சாளர் இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பந்து வீச்சாளர் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் முதலிடத்தை தக்க வைத்துள்ளனர். 
  • ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதல் 3 இடங்கள் 
    1. இங்கிலாந்து
    2. இந்தியா
    3. தென்னாப்பிரிக்கா.
முக்கிய தினங்கள்/ Important Days February 2019
பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் - பிப்ரவரி 6
  • பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation, February 6th), பிப்ரவரி 6 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தின மையக்கருத்து: "பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலை முடிவு கட்டுவோம்" (End FGM) என்பதாகும்.  
  • பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தல் (FGM) நடைமுறை, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 29 நாடுகளில் நடைபெறுகிறது.
TNPSC Current Affairs 5th February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post