TNPSC Current Affairs 2-3, February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 2-3, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
 இந்திய நிகழ்வுகள்/ National Affairs
Ariane-5 ராக்கெட் மூலம் ஏவப்படும் "GSAT-31" செயற்கைகோள் 
  • தகவல் தொடர்பு வசதிக்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோள் (GSAT-31), பிப்ரவரி 6-ந் தேதி பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ (Ariane-5, VA247)மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
  • 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக (GSAT-31 is the country’s 40th communication satellite),‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation)‘ISRO’ உருவாக்கி உள்ளது.
  • ‘ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டது, ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ (I-2K Bus) வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள் ஆகும்.
இராணுவத்துக்கு நவீனரக ‘Sig Sauer’ துப்பாக்கிகள்
  • இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் நவீனரக ‘சிக் சவர்’ துப்பாக்கிகள் (Sig Sauer rifles) வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ‘சிக் சவர்’ துப்பாக்கிகள், சீனாவுடனான 3600 கி.மீ. தூர எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு இன்சாஸ் (Insas rifles) துப்பாக்கிகளுக்கு பதிலாக வழங்கப்படஉள்ளது.
"தமிழ்நாடு கிராம வங்கி" துவக்கம் 
  • தமிழ்நாட்டில் செயல்படும் பல்லவன்-பாண்டியன் கிராம வங்கிகள் இணைந்து "தமிழ்நாடு கிராம வங்கி" என்ற பெயரில் (Tamil Nadu Grama Bank) புதிய வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. 
  • "தமிழ்நாடு கிராம வங்கி" இந்தியன் வங்கி கட்டுப்பாட்டில், இந்தியன் வங்கியின் சார்பு வங்கியாக இயங்க உள்ளது. 
  • சேலம் தலைமையகம் 
    • ‘தமிழ்நாடு கிராம வங்கி’ ஏப்ரல் 1-ந்தேதி முதல் சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது.
  • தமிழகத்தில் இந்தியன் வங்கியின் சார்புடைய வங்கியாக செயல்படும் பல்லவன் கிராம வங்கியும் ( Pallavan Grama Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்புடைய வங்கியாக செயல்படும் பாண்டியன் கிராம வங்கியும் (Pandyan Grama Bank) செயல்பட்டு வந்தன. 
  • சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தற்போது 625 கிளைகளுடன், ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிறப்பான வங்கி திட்டங்களை, வங்கி சேவைகளை வழங்க உள்ளது. 
  • Pallavan Grama Bank and Pandyan Grama Bank two regional rural banks merged as the new entity as Tamil Nadu Grama Bank.
2019 இடைக்கால பட்ஜெட் தாக்கல் (Budget 2019) - குறிப்புகள் 
  • நிதி அமைச்சக பொறுப்பை கவனிக்கும் ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பிப்ரவரி 1, 2019 பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  • 2019-2020-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், இடைக் கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
  • 2019-2020 இடைக் கால நிதிநிலை அறிக்கை - முக்கிய அம்சங்கள்
    • வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுகிறது. வரி விலக்கு உச்சவரம்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 2 ஆண்டுகளில் வரி கணக்குகள் தாக்கல் பணிகள் முற்றிலும் மின்னணு மயமாக்கப்படும். 
    • வரி வருவாய் தற்போது கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 
    • வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 6 கோடியே 85 லட்சமாக உயர்ந்து உள்ளது. 
    • 2 வீடுகளுக்கு வீட்டுக் கடன் வட்டி சலுகை வழங்கப்படும்.
    • தொழிலாளர் குடும்பத்துக்கான நலநிதி ரூ.2.6 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுகிறது.
    • பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 22 வகை வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி விலையை விட 1½ மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.
    • 2 ஹெக்டேருக்கும் குறைவான (சுமார் 5 ஏக்கர் வரை) சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். 
    • இராணுவத்துக்கு பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
    • இராணுவத்தில் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
    • மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • 2019-2020-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுகிறது.
    • மீன்வளத்துறை என்ற பெயரில் தனி அமைச்சகம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • இலவச சமையல் கியாஸ் இணைப்பு இதுவரை 6 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
    • ‘ஆயுஷ்மான் பாரத்’ சுகாதார திட்டத்தின் கீழ் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    • அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் 100 ரூபாய் செலுத்தினால், 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
    • தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • தேசிய அளவில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ.38 ஆயிரத்து 572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.27 ஆயிரத்து 584 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக ரூ.58 ஆயிரத்து 166 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் மின்னணு மயமாக்கப்படும்.
    • 22-வது எய்ம்ஸ் மருதுவமனை அரியானா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
    • சினிமா படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும். 
    • பசுக்கள் மேம்பாட்டுக்காக "ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
    • இடஒதுக் கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. 
    • இதற்காக கல்வி நிறுவனங்களில் 25 சதவீத கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
    • 2019-2020-ம் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதமாகவும், 
    • 2020-2021-ம் நிதி ஆண்டில் 3 சதவீதமாகவும் இருக்கும்.
    • இந்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருக்கும். 
    • மேலும் இந்த ஆண்டில் மொத்த செலவு ரூ.27 லட்சத்து 84 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
நியமனங்கள்/ Appointments
CBI புதிய இயக்குனராக "ரிஷி குமார் சுக்லா" நியமனம்
  • மத்திய புலன் விசாரணை பணியகத்தின் (CBI, Central Bureau of Investigation), புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். (New CBI director Rishi Kumar Shukla) 
  • IPS அதிகாரி ரிஷி குமார் சுக்லாவை CBI இயக்குனராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
பொருளாதார நிகழ்வுகள்/ Economic Affairs 
GST வருவாய் - ஜனவரி 2019 
  • 2019 ஜனவரி GST
  • மொத்த GST வருவாய் ரூ.1,02,503 கோடி 
    • மத்திய ஜிஎஸ்டி (CGST) ரூ.17,763 கோடி
    • மாநில ஜிஎஸ்டி (SGST) ரூ.24,826 கோடி
    • ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி (IGST) ரூ.51,225 கோடி
    • செஸ் ரூ.8,690 கோடி
  • 2018 டிசம்பர் GST வருவாய்
    • ரூ.94,725 கோடி
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து 2019: கத்தார் அணி ‘சாம்பியன்’
  • 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் (2019 AFC Asian Cup), ஜனவரி 5 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெற்றது.
  • அபுதாபியில் நடந்த இறுதிப்போட்டியில் கத்தார் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • அல்மோஸ் அலி (9 கோல்கள்)
  • 2019 ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் மதிப்புமிக்க வீரராக "கத்தார் வீரர் அல்மோஸ் அலி" தேர்வு செய்யப்பட்டார்.
  • அல்மோஸ் அலி, ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தொடரில் அதிக கோல் அடித்த வீரர் (9 கோல்கள்) என்ற சாதனை படைத்தார். 
  • 2021-ம் ஆண்டில் நடக்கும் ‘பிபா’ கான்பெடரேஷன் கோப்பை போட்டிக்கு கத்தார் தகுதி பெற்றது.
கைப்பந்து

புரோ கைப்பந்து லீக் போட்டி 2019
  • முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி 2019, பிப்ரவரி 2 அன்று கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 
  • கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
கிரிக்கெட்

200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை - மிதாலி ராஜ் சாதனை
  • 200 ஒருநாள் போட்டியில் ஆடிய முதல் வீராங்கனை என்ற சிறப்பை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் "மிதாலி ராஜ்" (Mithali Raj, first female cricketer played 200 ODIs) பெற்றுள்ளார்.
  • நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு 200-வது ஒருநாள் போட்டியாகும். 
  • 36 வயதான மிதாலி ராஜ் 1999-ம் ஆண்டு, முதல் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய பெண்கள் அணி இதுவரை 263 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறது. 
  • இதில் 200 ஆட்டத்தில் மிதாலி ராஜ் இடம் பிடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டி தரவரிசை: "ஸ்மிரிதி மந்தனா" முதலிடம்
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒரு நாள் போட்டி வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை (2.2.2019) வெளியிட்டுள்ளது. 
  • இப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana), பேட்டிங் தரவரிசையில்முதலிடத்தை பிடித்துள்ளார். 
  • பந்து வீச்சாளர் தரவரிசையில் பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் முதலிடத்தில் உள்ளார்
    1. ஸ்மிரிதி மந்தனா (இந்தியா) 
    2. எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) 
    3. மெக் லானிங் (ஆஸ்திரேலியா) 
    4. சட்டர்த்வெய்ட் (நியூசிலாந்து) 
    5. மிதாலிராஜ் (இந்தியா).
விளையாட்டுத்துறைக்கு ரூ.2,216.92 கோடி ஒதுக்கீடு
  • மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு 2019-2020-ம் ஆண்டுக்கு ரூ.2,216.92 கோடியாக உயர்த்தப்பட்டுருக்கிறது. இவற்றில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு (சாய்) ஒதுக்கப்படும் தொகை ரூ.395 கோடியில் இருந்து ரூ.450 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டேவிஸ் கோப்பை தகுதி சுற்று: இந்தியா தோல்வி 
  1. கொல்கத்தாவில் நடந்த, 2019 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தகுதி சுற்று, இத்தாலி அணி 3-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.
  2. இதன் மூலம் இத்தாலி அணி மாட்ரிட்டில் 2019 நவம்பர் மாதம் நடைபெறும் பிரதான சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி அடுத்து ஆசிய மண்டல போட்டியில் விளையாடஉள்ளது. 
முக்கிய தினங்கள்/ Important Days February 2019
உலக ஈர நிலங்கள் தினம் - பிப்ரவரி 2
  • யுனெஸ்கோ அமைப்பு, பிப்ரவரி 2-ஆம் நாளை ஈர நில நாள் (2 February
  • World Wetlands Day) என அறிவித்துள்ளது. 
  • ஈர நிலங்கள் பல்லுயிர் பெருக்க உதவுகிறது. 
  • கடல்கோள் என்னும் சுனாமி அலைகளை தடுக்கிறது. 
  • கடல் நீர் உட்புகாமல் தடுக்கிறது. வெள்ள நீரை உள்வாங்கி வெள்ள சேதத்தை தடுக்கிறது.
  • 2019 உலக ஈர நிலங்கள் தின (World Wetlands Day 2019 Theme) மையக்கருத்து:
    •  "ஈரநிலங்கள் மற்றும் காலநிலை மாற்றம்" (Wetlands and Climate Change).
  • World Wetlands Day 2019, 2 February 2019
  • 2 February is World Wetlands Day. 
  • This day marks the date of the adoption of the Convention on Wetlands on 2 February 1971, in Ramsar, Iran. 
  • It commemorates the need to maintain the ecological character of wetlands and to plan 'wise' for its sustainable use. 
  • World Wetlands Day 2019 theme is "Wetlands and Climate Change".
அண்ணாவின் 50வது நினைவு நாள் - பிப்ரவரி 3
  • தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாள், பிப்ரவரி 3, 2019 அன்று கடைபிடிக்கப்படுகிறது. அண்ணா 1969 பிப்ரவரி 3 அன்று காலமானார். 
  • 1967-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முதலமைச்சர் ஆனார். சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்.
  • இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கினார்.
  • மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தின் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்ற புதிய பெயரினை சூட்டினார். 
இஸ்லாமியப் புரட்சி 40-ஆவது ஆண்டு தினம் - பிப்ரவரி 11
  • ஈரானில் மதகுரு அயதுல்லா கோமேனி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டம், தலைநகர் டெஹ்ரானில் பிப்ரவரி 1 அன்று தொடங்கி பிப்ரவரி 11 கடைபிடிக்கப்படுகிறது.
  • ஈரானில் அயதுல்லா கோமேனி தலைமையில் 1979-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, பெஹலவி வம்ச மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்பட்டது.
TNPSC Current Affairs 2-3 February 2019 PDF
TNPSC Link File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post