TNPSC Current Affairs 4-5, January 2019, Download PDF



TNPSC Current Affairs January 2019 TNPSC Current Affairs dated January 4th and 5th, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.

உலக நிகழ்வுகள்
இணைய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான "GAFA Tax"
  • உலகளாவிய இணைய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது "GAFA Tax" வரியை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் (France) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • GAFA என்பதன் விரிவாக்கம்: Google, Apple, Facebook and Amazon
இந்திய நிகழ்வுகள்

ISRO-வின் மாணவர்களுக்கான புதுமுயற்சி "SAMWAD"

  • இந்திய விண்வெளி ஆய்வு (ISRO) மையம் "மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் (Space Science Activities) கண்டிபிடிப்பு"களுக்காக "SAMWAD" என்ற புதுமுயற்சியை (Initiative) தொடங்கியுள்ளது.
மேகாலயத்தில் சட்ட விரோத சுரங்கங்கள்: ரூ.100 கோடி அபராதம்
  • மேகாலயத்தில் சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கங்களை தடுக்கத் தவறியதாக, மேகாலய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது.
  • மேகாலயத்தில் இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.ககோடி தலைமையிலான குழு 2018 ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. 
  • தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தலைவர் ஏ.கே.குமார் தலைமையிலான அமர்வு ஜனவரி 2-ஆம் தேதி தாக்கல் செய்தது. 
  • மேகாலயத்தில் சட்டவிரோத சுரங்கம் ஒன்றில், 20 நாள்களுக்கும் மேலாக 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்..
எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மசோதா: நிறைவேற்றம் 
  • நாடு முழுதும் பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் (Right of Children to Free and Compulsory Education Act, 2009)’, எட்டாம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘FAIL’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. இச்சட்டப்படி, எட்டாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ALL PASS ) செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொதுத்துறைவங்கி - Baroda (BoB) வங்கி
  • சமீபத்தில், Baroda (BoB) வங்கியுடன் Vijaya Bank and Dena Bank வங்கிகள் இணைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த Baroda (BoB) வங்கி வங்கி, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறைவங்கிகளில் மூன்றாவதாக இடம்பிடித்துள்ளது. 
மாநாடுகள் 

இந்திய அறிவியல் மாநாடு (ISC) 2019, பஞ்சாப்
  • 106-வது இந்திய அறிவியல் மாநாடு (Indian Science Congress 2019), பஞ்சாப் மாநிலத்தில், ஜலந்தர் நகரில் உள்ள லவ்லி ப்ரோபிஸனல் பல்கலைக்கழகத்தில் (Lovely Professional University), ஜனவரி 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. 
  • 2019 ஜனவரி 3 முதல் 7 வரை, 'எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்' என்ற பெயரில் (Future India: Science and Technology) நடைபெறுகிறது.
சுற்றுச்சுழல் 
அந்தமான் தீவுப் பகுதிகளில் "பாபுக்" புயல்
  • அந்தமான் தீவுப் பகுதிகளில் "பாபுக்" எனும் புயல் தாக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஜனவரி ஜனவரி 3 அன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள் 


தமிழ்நாடு அரசு தொடங்கும் "கல்வி தொலைக்காட்சி"
  • தமிழ்நாடு அரசு சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் "கல்வி தொலைக்காட்சி" என்ற அலைவரிசையை தொங்கப்படவுள்ளது. TACTV-Tamil Nadu Arasu Cable TV, TN Govt Education TV Channel, Number 200.
  • இந்த கல்வி தொலைக்காட்சி சேனல் தமிழக அரசு கேபிளில் 200-வது எண்ணில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
  • மாணவர்களுக்கு கல்வியை எளிதாக கொண்டு செல்லும் வகையில் பாடல்கள், அனிமேஷன் காட்சி வடிவிலான நிகழ்ச்சிகள், ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி, கல்வி உதவித்தொகை, கல்வி சார் அறிவிப்புகள் போன்ற தகவல்கள் இதன் மூலம் வெளியிடப்படவுள்ளது.
  • தலைமையகம், கோட்டூர்புரம், சென்னை
  • கல்வி தொலைக்காட்சிக்கு என, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது மாடியில் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஸ்டூடியோ அமையவுள்ளது. 
  • கல்வி தொலைக்காட்சியின் தலைமையகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்படஉள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் 

ஆசிய கால்பந்து போட்டி 2019, அபுதாபியில் தொடக்கம் 
  • ஆசிய கால்பந்து போட்டிகள் (AFC Asian Cup), ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அபுதாபி நகரில் ஜனவரி 5 அன்று தொடங்கி பிப்ரவரி 1 வரை நடைபெறுகிறது. 
  • Sunil Chhetri தலைமையில் இந்தியா பங்கேற்கிறது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. (AFC:Asian Football Confederation).
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் 1000-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்த "புஜாரா"
  • ஆஸ்திரேலியாவில் நடைபெறும், இந்தியா-ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இந்திய மட்டை வீச்சாளர் புஜாரா, 3 சதம், ஒரு அரைசதம் உள்பட 458 ரன்கள் எடுத்துள்ளார், இதற்காக 1,135 பந்துகளை சந்தித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் ஆயிரம் பந்துகளுக்கு (Face 1000 balls in a Test series) மேல் சந்தித்த 5-வது இந்தியர் என்ற சிறப்பை புஜாரா (Cheteshwar Pujara) பெற்றுள்ளார். 
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (Rishabh Pant Records)- சாதனைகள்
  • ஒரு டெஸ்டில் 11 கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட்கீப்பர் - ரிஷப் பந்த்
  • ஒரு டெஸ்ட் தொடரில் 20 கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட்கீப்பர் - ரிஷப் பந்த்
  • ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட்கீப்பர் - ரிஷப் பந்த்
  • வெளிநாடுகளில் இரு சதமடித்துள்ள இந்திய விக்கெட்கீப்பர் - ரிஷப் பந்த்
2018-இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் "ஜஸ்ப்ரிட் பும்ரா"
  • 2018-ஆம் ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா (Jasprit Bumrah), சர்வேதேச விக்கெட்டுகளை (Highest International Wicket-Taker in 2018) வீழ்த்தியுள்ளார். ஜஸ்ப்ரிட் பும்ரா வீழ்த்தியுள்ள விக்கட்டுகள் விவரம்:
  • 9 டெஸ்ட் போட்டிகள் - 48 விக்கெட்டுகள் 
  • 13 ஒருநாள் போட்டிகள் - 22 விக்கெட்டுகள்
  • 8 T20 போட்டிகள் - 8 விக்கெட்டுகள்
ஆக்கி

தேசிய ஆக்கி (B பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி 2019, சென்னை
  • தேசிய ஆக்கி (B பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி 2019, சென்னையில் ஜனவரி 7 முதல் 20 வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ICF மைதானத்தில் நடைபெறுகிறது
டேபிள் டென்னிஸ்

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை 2019 
  • சர்வதேச டேபிள் டென்னிஸ் (ITTF Rankings 2019) தரவரிசையை வெளியிட்டுள்ளது.
  • இதில் இந்திய வீரர்கள் சரத் கமல் (Sharath Kamal Achanta) மற்றும் ஜி.சத்யன் Sathiyan Gnanasekaran) ஆகியோர் ஆகியோர் முறையே 30, 31-ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.
  • பெண்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 51-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய தினங்கள் 

உலக பிரெயில் தினம் (World Braille Day)-ஜனவரி 4
  • கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு படிக்கவும் எழுதவும் உதவும் வகையில் "பிரெயில் முறையை கண்டுபிடித்தற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேரந்த லூயிஸ் பிரெயில் அவர்களின் நினைவாக அவரது பிறந்த நாளான ஜனவரி 4 ஆம் தேதி அன்று உலக பிரெயில் தினம் (World Braille Day) கடைபிடிக்கப்படுகிறது. Download this file below the link as PDF

Post a Comment (0)
Previous Post Next Post