How To Prepare TNPSC Exams 2018 - Download Tips PDF


Tips for Clear and Success in TNPSC Exams 2018 and 2019

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? ஐந்து வெற்றிக் குறிப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு காலிப்பாணியிடங்களுக்காக, ஆண்டு முழுதும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பெரும்பாலான தேர்வுகள் ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்த எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் நாம் அரசுப் பணியாளராகி விடலாம்.
  • முதலில் நாம் என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். 
  • இந்த ஐந்து குறிப்புகள் மூலம் TNPSC தேர்வுகளில் எளிதாக வெற்றிபெறுவது எப்படி என்பதை பற்றி என்பதை பார்க்கலாம். How To Prepare and Clear TNPSC Exam 2018-2019 - Read and Download PDF
குறிப்பு 1: பாடத்திட்டத்தை கையில் எடு 
  • முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதாவது syllabus. முழுமையாக பாடத்திட்டத்தை கவனியுங்கள், மனதினுள் வாங்குங்கள். 
  • உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள மிஸ் வர்ட் பைலில், பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை, தனித்தனி பாட தலைப்புவாரியாக, இணையதளத்தில் தேடியோ அல்லது புத்தகங்களில் இருந்தோ எடுத்து தொகுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்பு படியுங்கள். 
குறிப்பு 2: சமச்சீர் கல்வி புத்தகங்கள்
  • TNPSC தேர்வுகளில், தமிழ்நாடு அரசு சமச்சீர் புத்தகங்களில் இருந்து பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாடத்திட்டத்தில் அனைத்து தலைப்புகளும் இந்த சமச்சீர் புத்தகங்களில் உள்ளடங்கியுள்ளன. 
  • தற்போது புதிதாக மாறியுள்ள 6, 9, 11 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களையும் சேர்த்து படிப்பது கூடுதல் சிறப்பு.
  • தமிழ்நாடு அரசு சமச்சீர் புத்தகங்கள் - இணைப்பு
குறிப்பு 3: தேர்வு தொடர்பான புத்தகங்கள்
  • தமிழ்நாட்டின் அனைத்து பயிற்சி மையங்களும் பரிந்துரைக்கப்படும் புத்தகம் ARIHANT GK BOOK, இந்த புத்தகத்தின் பொது அறிவு பகுதி மிகவும் முக்கியமானதாகும்.
குறிப்பு 4: முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்
  • எழுதும் TNPSC தேர்வின் முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் முழுமையாக பாடவாரியாக தொகுத்து, படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும்போது கேள்விகள் எந்தெந்த பாடப்பகுதிகளில் இருந்து, எத்தனே கேள்விகள் கேட்கப்படுகின்றன, என்பதை அறிந்து கொள்ள முடியும். தேவையற்ற பகுதிகளை படிப்பது, நேர விரயத்தை தவிர்க்கலாம்.
  • TNPSC WEBSITE முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் - இணைப்பு
குறிப்பு 5: குழு கலந்துரையாடல்
  • பொதுவாக எல்லாவற்றையும் தேர்வுக்குறிப்புகளை மனப்பாடம் செய்வது என்பது படித்ததை பல சமயங்களில் மறக்கடிப்பதாகும், படித்ததை மறக்காமல் இருக்க, நண்பர்களுடன் குழுவாக அமர்ந்து பாடவாரியாக கலந்துரையாடல்/விவாதம் செய்து நமது ஐயங்களை தீர்த்துக் கொள்ளலாம். 
  •  நமது தவறுகள் இக்குழு விவாதங்களில் கலையப்படும், மேலும் மற்றவர்களின் பட்டறிவையும் நாம் பெறமுடியும்.
  • கேள்வி பதில் பாணியில் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களைத் தொடங்குங்கள்... 
வெற்றி நமதே.... வெற்றியென்றைத் தவிர வேறில்லை.... நித்தம் உங்கள் நினைவு தேர்வு தொடர்பாகவே இருக்கட்டும்... 
  • மற்றவை எதுவும் தற்போது முக்கியம் இல்லை... அனைத்தையும் ஒதுக்குங்கள்... வேற்றிவாகை சூடியவுடன் ஒதுக்கியவற்றை நாம் சேர்த்துக்கொள்வோம்....
  • நாளைய அரசு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.....
Download This Article, How To Prepare and Clear TNPSC Exam 2018-2019: Download as PDF

Download Subject Wise TNPSC Study Materials for upcoming TNPSC Exams 2018 and 2018: Click Here Download in Tamil PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post