TNPSC Current Affairs January 2, 2019 (Tamil) - PDF Format



TNPSC Current Affairs dated January 2nd, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams and Tamil Nadu State Government/Central Government Competitive Examinations 2019.

இந்திய நிகழ்வுகள்
  • 2019 புத்தாண்டில் இந்தியாவில் 69 ஆயிரம் குழந்தைகள் 
    • இந்தியாவில் 2019 புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 69 ஆயிரத்து 944. இது உலக அளவில் 18 சதவீதம் ஆகும். உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 
    • தற்போதைய நிலையில், இந்தியர்களின் சராசரி வயது 27-ஆக கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவின் சராசரி வயது 38 ஆகும். 
    • உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-ஆவது இடத்திலும் உள்ளன. 
    • 2024-ஆம் ஆண்டில் சீனாவை பின்னக்குத்தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • அலகாபாத் நகரின் பெயர் (பிரயாக்ராஜ்) மாற்றம்: மத்திய அரசு ஒப்புதல் 
    • உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரை "பிரயாக்ராஜ்" என பெயர் மாற்றம் செய்ததற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. (Allahabad as Prayagraj) 
    • உலகப் புகழ் பெற்ற கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஜனவரி 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. 
  • கேரளாவில் 620 கி.மீ.க்கு பெண்கள் பங்கேற்ற "வனிதா மதில்"
    • கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை, மொத்தம் 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து, "வனிதா மதில்" என்று பெயரிடப்பட்ட 'பெண்கள் சுவர்' பெண்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சி ஜனவரி 1 அன்று நடந்தது. 
    • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. 
  • இந்தி நடிகர் காதர் கான் மறைவு 
    • பிரபல இந்தி நடிகரும், வசனகர்த்தாவுமான காதர் கான் (வயது 81), உடல்நலக் குறைவால் கனடாவில் ஜனவரி 1 அன்று காலமானார். 
மாநாடுகள் 
  • இந்திய சமூக அறிவியல் மாநாடு 2018, ஒடிசா
    • ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில், 42-வது இந்திய சமூக அறிவியல் மாநாடு 2018 (ISSC-Indian Social Science Congress) டிசம்பர் 27 அன்று தொடங்கியது. 
நியமனங்கள்
  • இந்தியாவின் தலைமை தகவல் ஆணையர் "சுதிர் பார்கவா" 
    • நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக (Chief Information Commissioner) "சுதிர் பார்கவா" (Sudhir Bhargava) டெல்லியில் ஜனவரி 1 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
    • மேலும் 4 தகவல் ஆணையர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 
      • யஷ்வர்தன் குமார் சின்ஹா 
      • வனஜா என்.சர்னா 
      • நீரஜ் குமார் குப்தா 
      • சுரேஷ் சந்திரா 
  • ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி "பிரவீன் குமார் 
    • புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக "பிரவீன் குமார்" ஜனவரி 01, 2019 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். 
    • ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமான அமராவதி நகரில் 2019 ஜனவரி 1 முதல் தேதியில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது. 
    • ஆந்திரா மாநில உயர் நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர்நீதிமன்றமாகும். 
  • இராணுவ தளவாடக்குழு தலைவர் "செளரப் குமார்" 
    • மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ராணுவத் தளவாடக் குழுவின் தலைவராகவும், ராணுவத் தளவாட தொழிற்சாலைகளின் இயக்குநராகவும் செளரப் குமார் பொறுப்பேற்றார். 
  • சென்னை ICF பொது மேலாளராக "அஜய்குமார் சிங்" 
    • சென்னையில் உள்ள பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையின் புதிய பொது மேலாளராக அஜய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 
விளையாட்டு நிகழ்வுகள்

கிரிக்கெட்
  • 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 2020, ஆஸ்திரேலியா 
    • 2020-ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியாவில், 2020 அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. 
    • தற்போது தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 
  • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2019
    • உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் வரும் 2019 மே 30 முதல் ஜுலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 
  • டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2019
    • ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் 2019 ஜூலையில் நடக்கின்றன. தலைசிறந்த 9 அணிகள் இடம்பெறும் இப்போட்டி, 2 ஆண்டுகளாக 27 தொடர்களாக நடக்கிறது. 
  • டெஸ்ட் தொடரில் "20 கேட்ச்களைக் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்" - ரிஷாப் பன்ட்
    • ஒரு டெஸ்ட் போட்டி தொடரில் "20 கேட்ச்களைக் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை ரிஷாப் பன்ட்' பெற்றுள்ளார். 
    • மெல்போர்ன் நகரில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான "பாக்ஸிங் டே டெஸ்ட்" போட்டி கடைசி நாளில், இந்த சாதனையை செய்தார். 
கால்பந்து
  • ஆசிய கோப்பை கால்பந்து 2019, ஐக்கிய அரபு அமீரகம் 
    • ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வரும் 2019 ஜனவரி 5-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை 17ஆவது ஆசிய கோப்பை கால்பந்து 2019 கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. 
    • FIFA தரவரிசையில் இந்திய அணி 97-ஆவது இடத்தில் உள்ளது. 
வாலிபால்
  • தேசிய சீனியர் வாலிபால் போட்டி 2019: சென்னையில் தொடக்கம்
    • 67-ஆவது தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னையில் 2019 ஜனவரி 2 முதல் 10-ஆம் தேதி வரை நடக்கிறது. ஆடவர் பிரிவில் 29 அணிகளும், மகளிர் பிரிவில் 25 மாநில அணிகளும் கலந்து கொள்கின்றன. 
முக்கிய தினங்கள் 
  • பீமா-கோரேகான் போர் நினைவு தினம் - ஜனவரி 1 
  • மகாராஷ்டிரத்தில் பீமா-கோரேகான் போர் நினைவு தின நிகழ்ச்சி, ஜனவரி 1 அன்று நடைபெற்றது. 
  • மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பீமா-கோரேகான் பகுதியில் 1818-இல் உயர் ஜாதியினரான பேஷ்வாக்களுக்கும், தலித் பிரிவைச் சேர்ந்த மஹர் இன வீரர்களை உள்ளடக்கிய ஆங்கிலேயப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. பேஷ்வாக்களை ஆங்கிலேயப் படை தோற்கடித்தது. 
  • பீமா-கோரேகானில் நினைவுச்சின்னம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. Download This file as PDF Format Click the Lint below.
Post a Comment (0)
Previous Post Next Post