TNPSC Current Affairs January 1, 2019 (Tamil) - PDF Format



TNPSC Current Affairs dated January 1, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams and Tamil Nadu State Government/Central Government Competitive Examinations 2019.

இந்திய நிகழ்வுகள்
  • “INS VIRAT” போர்க்கப்பல்: அருங்காட்சியகமாக - ஒப்புதல்
    • இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்ட "ஐஎன்எஸ் விராட்' போர்க்கப்பலை அருங்காட்சியகமாகவோ அல்லது உணவகமாகவோ மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
    • இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் “INS விராட்” 
    • இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற பெருமையை பெற்ற ஐஎன்எஸ் விராட், 27, 800 டன் எடைக் கொண்டது. 
    • இங்கிலாந்து கடற்படையில் 1959-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய  கப்பல், 1987-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் விராட் கப்பல் இணைக்கப்பட்டது. 
    • 30 ஆண்டுகளாக பணியாற்றிய அந்த கப்பல், 2017-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது.
    • INS விராட் கப்பலை அருங்காட்சியகம் அல்லது உணவகமாக மாற்றுமாறு மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
  • அந்தமான் தீவுகளுக்கு வெளிநாட்டினர் நேரடியாக செல்ல அனுமதி
    • அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
    • அந்தமான் நிகோபார் தீவுகளில் தனியாக குடியேற்ற சோதனை சாவடி இல்லாமல் இருந்த நிலையில், "கடவுச்சீட்டு விதிகள்-1950ன் 3ஆவது பிரிவின்கீழ், போர்ட் பிளேர் விமான நிலையம், இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வந்து செல்ல அங்கீகரிக்கப்பட்ட குடியேற்ற சோதனை சாவடியாக செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • மக்களவையில் "இந்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்தம்" நிறைவேற்றம் 
    • நாடாளுமன்ற மக்களவையில் "இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த சட்டம்" கொண்டுவரப்பட்டு டிசம்பர் 31 அன்று நிறைவேற்றப்பட்டது. 
    • இந்திய மருத்துவ கவுன்சில் முடிவுக்கு வந்ததால் அதன் அதிகாரங்கள் எய்ம்ஸ் இயக்குனர்கள் உள்பட சிறந்த நிபுணர்கள் அடங்கிய ஆட்சிமன்ற குழுவுக்கு வழங்கப்படுகிறது. 
நியமனங்கள்
  • வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல் “ஷேக் ஹசினா” வெற்றி
    • வங்காளதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 
    • அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசினா (வயது 71) பிரதமர் ஆனார். 
    • ஷேக் ஹசினா பிரதமர் ஆவது இது 4-வது முறையாகும்.
    • கிரிக்கெட் கேப்டன் மோர்தசா: வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்தசா (35), அவாமி லீக் கட்சி சார்பில் நரைல்-2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
    • சர்வதேச போட்டியில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.  
  • இரயில்வே வாரிய தலைவராக "வி.கே. யாதவ்" நியமனம் 
    • இரயில்வே வாரியத்துக்கு புதிய தலைவராக "வி.கே. யாதவ்" அவர்கள் நியமிக்கபடுள்ளார். 
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் "எம்.கிருஷ்ணன்" 
    • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எம். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
  • தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை: ஜனவரி 1, 2019 முதல் அமல்
    • சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பை, கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜனவரி 1, 2019 தடை விதிக்கப்படும் என உலக சுற்றுச்சூழல் தினமான 2018 ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அறிவித்தது.
  • கஜா புயல் நிவாரணம்: மத்திய அரசு ரூ.1,146 கோடி ஒதுக்கீடு
    • ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.1,146 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.தமிழகத்தில் 2018 நவம்பர் 15-ந் தேதி நள்ளிரவு வீசிய ‘கஜா’ புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல், மழைக்கு 63 பேர் பலி ஆனார்கள்.
    • தமிழ்நாடு அரசு தற்காலிக நிவாரண பணிக்கு ரூ.1,431 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்கு ரூ.14 ஆயிரத்து 910 கோடியும் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. 
  • திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28-ந்தேதி இடைத்தேர்தல்
    • தமிழ்நாட்டின் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் 2018 ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி காலமானார்.
ஆளுமைகள்
  • பதிப்பு துறையின் முன்னோடி சி. வை.தாமோதரம்பிள்ளை
    • பதிப்புத்துறையின் முன்னோடியும் தமிழறிஞருமான சி. வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் நினைவுநாள் ஜனவரி 1 ஆகும். 
    • சி.வை.தாமோதரம்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுபட்டி என்ற ஊரில் வைரவநாத பிள்ளை, பெருந்தேவிஅம்மாள் ஆகியோருக்கு மகனாக 1832-ல் பிறந்தார். 
    • 1853-ல் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணியாற்றிய போது, தனது இருபதாம் வயதிலேயே “நீதிநெறிவிளக்கம்” என்ற நூலை உரையுடன் பதிப்பித்தார். 
    • 1868-ம் ஆண்டு தொல்காப்பியச் சொல்அதிகாரத்திற்கு சேனாவரையர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார். 
    • பாண்டிய மன்னன் கைகளுக்கு கிடைக்காமல் இழந்ததாய் கருதப்பட்ட தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் கண்டுபிடித்து, ஆராய்ந்து, பதிப்பித்து வெளியிட்டார். 
    • வீரசோழியம் (1881), திருத்தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள், நச்சினார்க்கினியாரின் தொல்காப்பிய எழுத்து, பொருள் அதிகாரங்களுக்கான உரைகள், கலித்தொகை, இலக்கணவிளக்கம் ஆகிய பழமையான நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.
    • 1887-ல் உ.வே.சாமிநாதையருக்கு சீவகசிந்தாமணி ஏடுகளைக்கொடுத்து பதிப்பிட உதவினார். 
    • கட்டளைக்கலித்துறை, சைவமகத்துவம், சூளாமணிவசனம், நட்சத்திரமாலை ஆகிய நூல்களையும். 
    • காந்தமலர் அல்லது கற்பின்மாட்சி என்ற நாவலையும் இயற்றி வெளியிட்டார்.
    • பதிப்புத்துறைச்செம்மல் எனப்புகழ் பெற்ற தாமோதரம்பிள்ளை 1-1-1901 அன்று சென்னையில் காலமானார். 
விளையாட்டு நிகழ்வுகள்

கிரிக்கெட்

  • 2018 சிறந்த வீராங்கனை விருது: "ஸ்மிரிதி மந்தனா" தேர்வு
    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில், 2018-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார். 
    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த வீராங்கனை விருது பெறும் 2-வது இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஆவார். 
    • 2007-ம் ஆண்டு இந்திய மூத்த பவுலர் ஜூலன் கோஸ்வாமி இந்த விருதை பெற்றுள்ளார்.
    • இரட்டை விருது: 2018-ம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருதையும் 22 வயதான மந்தனா பெற்றார். 
    • 2018-ம் ஆண்டு ஜனவரி 1 ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரையான விருதுக்குரிய காலக்கட்டத்தில், மந்தனா 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 669 ரன்களும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 25 ஆட்டங்களில் ஆடி 622 ரன்களும் எடுத்துள்ளார். 
    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருதுகள்
    • 2018-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனை - ஸ்மிரிதி மந்தனா (இந்தியா)
    • 2018 ஒரு நாள் கிரிக்கெட் சிறந்த வீராங்கனை - ஸ்மிரிதி மந்தனா (இந்தியா)
    • 2018 T20 கிரிக்கெட் சிறந்த வீராங்கனை - அலிசா ஹீலே (ஆஸ்திரேலியா)
    • வளர்ந்து வரும் வீராங்கனை விருது - சோபி எக்லெஸ்டன் (இங்கிலாந்து)
  • டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை (31.12.2018)
    • டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 
    • டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா முதலிடத்தில் உள்ளார். 
    • பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • டெஸ்ட் மட்டை வீச்சாளர் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.  
குத்துச்சண்டை
  • தேசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள், கர்நாடகா
  • கர்நாடகா மாநில விஜயநகரவில் மூன்றாவது தேசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள், டிசம்பர் 31, 2018 முதல் 2019 ஜனவரி 6 வரை நடைபெறுகிறது. Click the Links below and Download in PDF Format

Post a Comment (0)
Previous Post Next Post