Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

Aadhaar Number Compulsory for Future TNPSC Exams 2019

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC, தேர்வுகளுக்கு, ஆதார் எண்ணை (AADHAAR) கட்டாயமாகிறது. 
Aadhaar Number Compulsory for Future TNPSC Exams 2019

TNPSC SMART REGISTRATION
  • தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, 'SMART' தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், TNPSC செயல்படுகிறது. 
  • TNPSC நிறுவனம், பல்வேறு அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்துகிறது.விண்ணப்ப படிவங்களை பெற்று, தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, 'ONLINE' விண்ணப்ப முறை, சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. 
  • இன்னும் நவீன SMART தொழில்நுட்ப முறையில், விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இந்த பணிகள், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, 'டெண்டர்' முறையில் வழங்கப்பட உள்ளன. 
  • புதிய முறைப்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும், கணினி, டேப்லெட், மொபைல் போன் வாயிலாக, ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம். 
TNPSC MOBILE APP
  • TNPSC பெயரில், 'மொபைல் ஆப்'பும் (TNPSC MOBILE APP), தயார் செய்யப்பட உள்ளது; அதிலும், பதிவு செய்யலாம்.விண்ணப்பம் பதிவு செய்வது, கட்டணம் செலுத்துவது, கட்டண சலுகை பெறுவது, சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவு செய்வது, ஒரு முறை பதிவை மேற்கொள்வது என, அனைத்து பணிகளையும், ஆன்லைனில் தேர்வர்கள் மேற்கொள்ள முடியும். 
  • இந்தப் பதிவின் போது, அனைத்து தேர்வர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இ - மெயில், அலர்ட்' செய்திகள் அனுப்பப்படும்.மேலும், அனைத்து தேர்வர்களும், ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம். மத்திய அரசு விதிகளின் படி, ஆதார் எண்ணை வேறு பயன்பாட்டுக்கு வழங்காமல், தேர்வர்களின் விபரங்களை சரிபார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. 
AADHAAR REGISTER FOR TNPSC EXAMS
  • அதேபோல, தேர்வர்களின் போலி விண்ணப்ப பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை கண்டுபிடிக்கவும், ஆதார் எண் பயன்படுத்தப்படும் என, TNPSC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
  • Information Notification from Dinamalar Daily Dated 7.1.2018
  

0 comments: