வீரதீர நாள் (Shaurya Diwas) - அக்டோபா் 27

76-ஆவது வீரதீர நாள் விழா 2023

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளை இந்திய ராணுவத்தின் காலாட்படை முறியடித்ததை நினைவுகூறும் 76-ஆவது வீரதீர நாள் (ஷௌரிய திவஸ்) 27.10.2023 அன்று கொண்டாடப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நினைவுகூரும் விதமாகவே ஆண்டுதோறும் இந்த வரலாற்று நாள் கொண்டாடப்படுகிறது. 

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங், இந்திய குடியரசு இடையே 1947 அக்டோபா் 26-இல் கையொப்பமிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளான அக்டோபா் 27-இல் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படைகளை வெளியேற்ற புத்காம் விமான நிலையத்தில் இந்திய விமானப் படை மூலம் இந்திய ராணுவம் தரையிறக்கப்பட்டது. இதுவே சுதந்திர இந்தியாவில் ராணுவம் பெற்ற முதல் வெற்றியாகும்.


Post a Comment (0)
Previous Post Next Post