புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் |
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில், கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு ஏப்ரல் 29, 1891 அன்று பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
பாரதிதாசன் புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். 1946 சூலை 29-இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இயற்கை மரணம் எய்தினார்.
கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற வரிகள்
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.
- பாரதிதாசன் நூல்கள்
வ.எண் நூலின் பெயர் முதற்பதிப்பு ஆண்டு வகை பதிப்பகம் குறிப்பு 01 அகத்தியன்விட்ட புதுக்கரடி 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 02 சத்திமுத்தப்புலவர் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை 03 இன்பக்கடல் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை 04 அமிழ்து எது? 1951 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 05 அமைதி 1946 நாடகம் செந்தமிழ் நிலையம், இராமச்சந்திராபுரம் 06 அழகின் சிரிப்பு 1944 கவிதை முல்லை பதிப்பகம், சென்னை 07 இசையமுது (முதலாம் தொகுதி) 1942 இசைப்பாடல் பாரத சக்தி நிலையம், புதுவை 08 இசையமுது (இரண்டாம் தொகுதி) 1952 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 09 இந்தி எதிர்ப்புப் பாடல்கள் 1948 இசைப்பாடல் 10 இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939 நாடகம் குடியரசுப் பதிப்பகம் 1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. 11 இருண்டவீடு 1944 காவியம் முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, புதுக்கோட்டை 12 இலக்கியக் கோலங்கள் 1994 குறிப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு 13 இளைஞர் இலக்கியம் 1958 கவிதை 14 உலகம் உன் உயிர் 1994 கவிதை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை வெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு 15 உலகுக்கோர் ஐந்தொழுக்கம் 1994 கட்டுரைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள் 16 எதிர்பாராத முத்தம் 1938 கவிதை - 17 எது இசை? 1945 சொற்பொழிவும் பாடல்களும் கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னை பாரதிதாசனும் பாடல்களும் அண்ணாதுரையின் கட்டுரையும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[5] 18 ஏழைகள் சிரிக்கிறார்கள் 1980 சிறுகதைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு. 19 ஏற்றப் பாட்டு 1949 இசைப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 20 ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது 1978 இசைப்பாடல் பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு 21 கடற்மேற் குமிழிகள் 1948 காவியம் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 22 கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962 காவியம் அன்பு நிலையம், சென்னை 23 கதர் இராட்டினப்பாட்டு, 1930 இசைப்பாடல் காசி ஈ லஷ்மண் பிரசாத், ஶ்ரீவேல் நிலையம், புதுச்சேரி 24 கவிஞர் பேசுகிறார் 1947 சொற்பொழிவு திருச்சி அன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது 25 கழைக்கூத்தியின் காதல் 1951 நாடகம் 26 கற்கண்டு 1945 நாடகம் பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது 27 காதலா? கடமையா? 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 28 காதல் நினைவுகள் 1944 கவிதை செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம் 29 காதல் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு 30 குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி 1942 காவியம் பாரத சக்தி நிலையம், புதுவை 31 குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல் 1944 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை 32 குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் 1948 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை 33 குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை 34 குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல் 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது. 35 குமரகுருபரர் 1992 நாடகம் காவ்யா, பெங்களூர் 1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது 36 குயில் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு 37 குறிஞ்சித்திட்டு 1959 காவியம் பாரி நிலையம், சென்னை 38 கேட்டலும் கிளத்தலும் 1981 கேள்வி-பதில் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு 39 கோயில் இருகோணங்கள் 1980 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு 40 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930 காவியம் ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 41 சிரிக்கும் சிந்தனைகள் 1981 துணுக்குகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு 42 சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930 கவிதை 43 சுயமரியாதைச் சுடர் 1931 பாட்டு கிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல் 44 செளமியன் 1947 நாடகம் 45 சேரதாண்டவம் 1949 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 46 தமிழச்சியின் கத்தி 1949 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 47 தமிழியக்கம் 1945 கவிதை செந்தமிழ் நிலையம், ராயவரம் ஒரே இரவில் எழுதியது 48 தமிழுக்கு அமிழ்தென்று பேர் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு 49 தலைமலை கண்ட தேவர் 1978 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு 50 தாயின் மேல் ஆணை 1958 கவிதை 51 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு 1930 பாட்டு ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 52 திராவிடர் திருப்பாடல் 1948 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 53 திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் 1949 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 54 தேனருவி 1956 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. 55 தொண்டர் வழிநடைப் பாட்டு 1930 பாட்டு 56 நல்லதீர்ப்பு 1944 நாடகம் முல்லைப் பதிப்பகம், சென்னை 57 நாள் மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு 58 படித்த பெண்கள் 1948 நாடகம் 59 பன்மணித்திரள் 1964 கவிதை 60 பாட்டுக்கு இலக்கணம் 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு 61 பாண்டியன் பரிசு 1943 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை 62 பாரதிதாசன் ஆத்திசூடி 1948 கவிதை 63 பாரதிதாசன் கதைகள் 1955 சிறுகதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி சிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு 64 பாரதிதாசனின் கடிதங்கள் 2008 கடிதங்கள் ச.சு.இளங்கோ பதிப்பு 65 பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) 1938 கவிதை குஞ்சிதம் குருசாமி, கடலூர் 66 பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) 1949 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி இ.பதிப்பு 1952 67 பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) 1955 கவிதை 68 பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) 1977 கவிதை பாரி நிலையம், சென்னை. 69 பாரதிதாசன் நாடகங்கள் 1959 கவிதை பாரி நிலையம், சென்னை 70 பாரதிதாசனின் புதிய நாடகங்கள் 1994 நாடகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு 71 பாரதிதாசனின் புதினங்கள் 1992 புதினம் ச.சு.இளங்கோ பதிப்பு 72 பாரதிதாசன் பேசுகிறார் 1981 சொற்பொழிவு ச.சு.இளங்கோ பதிப்பு. 73 பாரதிதாசன் திருக்குறள் உரை 1992 உரை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு 74 பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் 2012 திரைக்கதை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும் 75 பிசிராந்தையார் 1967 நாடகம் 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. 76 புகழ்மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு 77 புரட்சிக் கவி 1937 கவிதை ஶ்ரீசாரதா பிரஸ், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. 78 பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 79 மணிமேகலை வெண்பா 1962 கவிதை 80 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926 இசைப் பாடல் காசி-லஷ்மண் பிரசாத், வேல் நிலையம், புதுச்சேரி 81 மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் 1925 கவிதை ஜெகநாதம் பிரஸ், புதுவை 82 மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 1920 இசைப்பாடல் ஜெகநாதம் பிரஸ், புதுவை 83 மானுடம் போற்று 1984 கட்டுரைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு 84 முல்லைக்காடு 1948 கவிதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி 85 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு 86 வேங்கையே எழுக 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு