TNPSC Group 4 2022: ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது; மார்ச் 30 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு #TNPSCGroup4


7,352 பணியிடங்களுக்கு TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு

ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி தலைவர்.

குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும்.

குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.

ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்.

தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவர்
Post a Comment (0)
Previous Post Next Post