புதிய கொரோனா வைரஸ்களின் பெயர்கள்: ‘காப்பா’, ‘டெல்டா’

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களின் பெயர்கள் அறிவிப்பு: ‘காப்பா’, ‘டெல்டா’ 

  1. கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெயர்களை சூட்டி உள்ளது. அவற்றின் விவரம்:
  1. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  2. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரசுக்கு பெயர் ஆல்பா.
  3. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரசுக்கு பீட்டா என்று பெயர்.
  4. பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரசுக்கு கமா என்றும், ‘பி.2 ’வைரசுக்கு ஜீட்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  5. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரசஸ்களுக்கு பெயர் எப்சிலான் மற்றும் அயோட்டா ஆகும்.
  6. இவ்வாறு உலக சுகாதார நிறுவனம், பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களுக்கு புதிய பெயர்களை சூட்டி உள்ளது. 

Post a Comment (0)
Previous Post Next Post