கொரோனா பற்றி ஆராய WHO-வின் ஒரு நிபுணர் குழு

  • கொரோனா பற்றி ஆராய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் ஆகியோர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது.

  • இந்த குழு, ஜனவரி 17-அன்று தனது அறிக்கையை வெளியிட்டது.

  • அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

  • கொரோனா பரவல் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே அதை கட்டுப்படுத்த சீனாவும், இதர நாடுகளும் தவறி விட்டன. அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்தாமல் விட்டு விட்டன.

  • 2020 ஜனவரி மாதம், சீனாவில் பெரிய அளவில் கொரோனா பரவ தொடங்கியபோதே சீனா தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும். மிகக்குறைவான நாடுகளே தங்களுக்கு கிடைத்த தகவலை பயன்படுத்தி, நடவடிக்கை எடுத்தன.

Post a Comment (0)
Previous Post Next Post