எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் - 8,848.86 மீ (29,032 அடி)

  • உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன.
  • தற்போது நேபாளமும், சீனாவும் எவரெஸ்டின் உயரத்தை 8,848.86 மீ (29,032 அடி) என ஒரு மனதாக தீர்மானித்துள்ளன. 
  • 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் எவரெஸ்டின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என மலையேற்ற வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
  • சீனாவின் முந்தைய அதிகாரபூர்வ அளவீடு 8,844.43 மீ, நேபாளத்தை விட கிட்டத்தட்ட நான்கு மீட்டர் குறைவாக  வைத்திருந்தது.
  • எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ள போதும், அதன் உயரத்தை கணக்கிடாத நேபாள அரசு, 1954 ஆம் ஆண்டு இந்திய ஆய்வு மையம் அளித்த தகவலின் அடிப்படையில் எவரெஸ்டின் உயரத்தை 29,028 அடி என குறிப்பிட்டு வந்தது. அதே சமயம் சீன அரசோ, இந்தியா குறிப்பிட்டதை விட 11 அடிகள் குறைவாக உள்ளதாக தெரிவித்தது.
  • Nepal and China jointly certified the elevation of Mount Everest at 8,848.86 metres above sea level — 86 cm higher than what was recognized since 1954.  
  • Source: Dailythanthi, The New Indian Express.

Mount Everest 2021

Post a Comment (0)
Previous Post Next Post