TNPSC Current Affairs September 3, 2020 - Download as PDF

TNPSC Current Affairs September 3,  2020 - Download as PDF

இந்திய நிகழ்வுகள்

ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020 - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 5 அலுவல் மொழிகள்: ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020-க்கு (Jammu and Kashmir Official Languages Bill, 2020) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செப்டம்பர் 2-அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இதன்மூலம் உருது, காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாகியுள்ளன.
  • தற்போது அங்கு, உருது மற்றும் காஷ்மீரி மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளன.
11 மாநிலங்களில் 27 குளிர்பதன திட்டங்கள்
  • வேளாண் பொருள்களை சேமிக்கவும், பதப்படுத்தவும் தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 27 குளிர்பதன திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு செப்டம்பர் 2-அன்று ஒப்புதல் அளித்தது. 
  • நவீன மற்றும் புதுமையான உள்கட்டமைப்புடன் சிறந்த குளிர்பதன வசதிகளை உருவாக்கும் இந்தத் திட்டத்துக்கு ரூ.743 கோடி முதலீடு தேவைப்படும் நிலையில், அதற்கு மத்திய அரசு ரூ.208 கோடி நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
  • இந்தப் புதிய திட்டங்களில் 4 திட்டங்கள் தமிழகத்தில் அமையவுள்ளன. 7 திட்டங்கள் ஆந்திரத்திலும், ஹரியாணாவில் 4 திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன. கா்நாடகத்தில் 3 திட்டங்களும், ராஜஸ்தான், குஜராத்தில் தலா 2 திட்டங்களும், பஞ்சாப், பிகார், கேரளம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் தலா 1 திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளன. 
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டில் தற்கொலை செய்தவர்கள் விவரம் 
  • 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்தவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள்:
  • 2019-ஆம் ஆண்டில் தினமும் சராசரியாக 381 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது, 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும், 3.4 சதவீதம் அதிகம் ஆகும்.
  1. மகாராஷ்டிரா - 18,916 பேர் (13.6%)
  2. தமிழ்நாடு - 13,493 பேர் (9.7%)
  3. மேற்கு வங்கம் - 12,665 பேர் (9.1%)
  4. மத்தியப்பிரதேசம் - 12,457 பேர் (9.0%)
  5. கர்நாடகா - 11,288 பேர் (8.1%)
  • இந்த 5 மாநிலங்களில் மட்டும் தற்கொலை விகிதம் 49.5 சதவீதம் ஆகும். எஞ்சிய 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்பிரதேசங்களில் தற்கொலை விகிதம் 50.5 சதவீதமாக உள்ளது. 
  • உத்திரப்பிரதேச மாநிலத்தில் தற்கொலை விகிதம் குறைவாக உள்ளது. அங்கு 3.9 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு நிகழ்வுகள்

இந்திய-இரஷ்ய கடற்படை கூட்டு இராணுவ பயிற்சி
  • வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் கடற்பகுதியில், இந்திய மற்றும் இரஷ்ய கடற்படை வீரர்கள் இணைந்து இரண்டு நாட்கள் பிரமாண்ட கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
  • கிழக்கு லடாக்கில் சீனாவின் அத்துமீறலால் பதற்றம் ஏற்பட்டுள்ள நேரத்தில், செப்டம்பர் 4 மற்றும் 5 தேதியில் இந்த இராணுவ பயிற்சி நடைபெறுகிறது.
நியமனங்கள்

இந்தியா உடனான "ஆஸ்திரேலியாவின் வர்த்தக தூதர்கள் நியமனம்"
  • ஆஸ்திரேலிய அரசு, முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் முன்னாள் செனட் உறுப்பினர் லிசா சிங் மற்றும் அசோக் ஜேகப் ஆகியோரை, இந்தியா உடனான வர்த்தக துாதர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. இக்கவுன்சில், இந்தியா-ஆஸ்திரேலியா பரஸ்பர வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய நேரடி வரி வாரியத்தலைவராக "பிரமோத் சந்திர மோடி" மறு நியமனம்
  • மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) தலைவர், "பிரமோத் சந்திர மோடி" மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2020 செப்டம்பர் 1 முதல் பிப்ரவரி 28, 2021 வரை இவர் இந்தப்பதவியில் நீடிப்பார்.
  • CBDT: Central Board of Direct Taxes.
மாநாடுகள்
ஐ.நா. பொதுச்சபை ஆண்டுப் பொதுக் கூட்டம் 2020
  • ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற உள்ளது. 
  • செப்டம்பர் 22-ம் தேதி முதல் 29 வரை பொது விவாதம் நடைபெறுகிறது. செப்டம்பர் 26-ம் தேதி காலை பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற உள்ளது.
புத்தகங்கள், ஆசிரியர்

The Big Thoughts of Little Luv - Karan Johar
  • பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் "பிக் தாட்ஸ் ஆப் லிட்டில் லவ்" என்ற குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை "ஜாகர்நாட் புக்ஸ்" பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
உலக வங்கி நிதியுதவியுடன் "ஐந்து அணைகள் புனரமைப்பு"
  • உலக வங்கியின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டில் மேட்டூர், மேல் நீராறு, சோலையாறு, சாத்தனுார், கெலவரப்பள்ளி ஆகிய, ஐந்து அணைகளை 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பில், மாநிலம் முழுதும் 89 அணைகள் உள்ளன.
முழு அளவிலான பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி
  • செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கி தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி செப்டம்பர் 2-அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2020 - ஸ்மித் நெகல் சாதனை
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும், 2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதன்முறையாக இந்திய வீரர் ஸ்மித் நெகல் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். 
  • இதன் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு பின் கிராண்டஸ்லாம் போட்டிகளில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன் 2013-ல் இந்தியாவின் சேம்தேவ்தேவ் வர்மன் ஆஸ்திரேலிய ஒபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஒபன் ஆகிய போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளர் "கேரி ஸ்டட்" - பதவி நீட்டிப்பு
  • நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டட், 2023 ஒருநாள் உலகக் கோப்பை வரை நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்டது நியூசிலாந்து அணி. அப்போட்டியில் பயிற்சியாளராக இருந்த கேரி ஸ்டட் மீது நம்பிக்கை வைத்து தற்போது பதவி நீட்டிப்பை வழங்கியுள்ளது.
முக்கிய தினங்கள்
உலக தென்னை தினம் - செப்டம்பர் 2
  • உலக தென்னை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 உலக தென்னை தின மையக்கருத்து: “Invest in Coconut to save the world”
  • ஆசியா முழுவதும் தென்னை மரங்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டாலும், இலங்கை மற்றும் இந்தியாவில் அதிகமுள்ளது. அதிலும், தமிழகத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை பகுதிகளில் சாகுபடி பரப்பில் அதிகமாக இருப்பதால், 'தென்னை நகரம்' என அழைக்கப்படுகிறது.
  • தென்னை நகரத்தை உருவாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், 1963ம் ஆண்டு ஆழியாறில் தென்னை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது. 
  • 1965-ஆம் ஆண்டு ஆழியாறு அணை கட்டியபோது, விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்த விஞ்ஞானிகள், புதிய தென்னை ரகங்களை உருவாக்கி வழங்கி வருகின்றனர்.
தேசிய ஊட்டச்சத்து வாரம் 2020 - செப்டம்பர் 1 முதல் 7 வரை
  • ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week 2020) கடைபிடிக்கப்படுகிறது. 
Post a Comment (0)
Previous Post Next Post