TNPSC Current Affairs September 2, 2020 - Download as PDF

TNPSC Current Affairs September 2, 2020 - Download as PDF

 
இந்திய நிகழ்வுகள்

CMERI உருவாக்கியுள்ள "உலகின் மிகப்பெரிய சூரியமின் மரம்" 

 • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் CSIR-CMERI நிறுவனம், உலகின் மிகப்பெரிய சூரியமின் மரத்தை (World’s Largest Solar Tree) மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள CMERI குடியிருப்பில் உருவாக்கியுள்ளது. இந்த மரம் ஆண்டுக்கு 12,000 முதல் 14,000 யூனிட் தூய்மையான மற்றும் பசுமை மின்சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது.
 • ஒரு சூரியமின்சார மரத்தின் விலை ரூ .7.5 லட்சம் ஆகும். பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா (PM KUSUM) திட்டத்தின் கீழ் இணைந்து உருவாக்கலாம்.
 • CMERI: Central Mechanical Engineering Research Institute. 
 • KUSUM: Pradhan Mantri Kisan Urja Suraksha.

குஐராத்தில் "இந்தியாவின் முதல் கடல் விமான சேவைகள்" 

 • இந்தியாவின் முதல் கடல் விமான சேவைகள் (Sea Plane services) குஐராத்தில் மாநிலத்தில் தொடங்கவுள்ளன, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 31 முதல் இச்சேவைகள் தொடங்க உள்ளதாக குஜராத் அரசு சமீபத்தில் அறிவித்தது.  
 • முதல் கடல் விமானம், சபர்மதி ஆற்றின் முன்புறத்திலிருந்து நர்மதா மாவட்டத்தில் கெவடியாவில் உள்ள வல்லபாய் படேல் சிலைக்கு இயக்கப்படுகிறது.
 • 2020 ஜூலை 2020 மாதம், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும், சபர்மதி நதி முன்புறம் மற்றும் கெவடியாவின் ஒற்றுமை சிலை ஆகியவற்றுக்கு இடையே மலிவு விலை விமான இணைப்பு சேவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  

பிரணாப் முகர்ஜியின் உடல் - தகனம்

 • முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் டெல்லி லோதி ரோட்டில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 
 • முன்னதாக எண்.10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், தளபதிகள் எம்.எம்.நரவனே (ராணுவம்), ஆர்.கே.எஸ்.பதாரியா (விமானப்படை), கரம்பீர்சிங் (கடற்படை) ஆகியோ அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
பாதுகாப்பு நிகழ்வுகள்

கைலாஷ்-மன்சரோவரில் சீனா  உருவாக்குகியுள்ள ஏவுகணை தளம்

 • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், கைலாஷ்-மன்சரோவரில் சீனா ஏவுகணை ஏவுதளத்தை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 • திபெத்தின் அதிக இராணுவமயமாக்கலுக்காக சீனா இப்பகுதியில் ஏவுகணை தளத்தை உருவாக்கி வருகிறது. சீனா இப்பகுதியில் DF-21 என்ற ஏவுகணையை நிறுத்தியுள்ளது. 
 • இந்த ஏவுகணை தளம் இந்தியாவால் அண்மையில் கட்டப்பட்ட லிபுலேக் பகுதியில் அமைத்த சாலைக்கு பதில் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

 நியமனங்கள்

தேர்தல் ஆணையராக "இராஜீவ் குமார்" பதவியேற்பு

 • தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதித்துறை செயலா் இராஜீவ் குமார், செப்டம்பர் 1-அன்று புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 • 1984-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமார், அசோக் லவாசாவின் ராஜிநாமாவை தொடா்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 • ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாசா பணிபுரிய உள்ளார். இதனால் தனது தேர்தல் ஆணையா் பதவியை விட்டு 31-ஆம் தேதி பதவி விலகினார்.

மாநாடுகள்

ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா அமைச்சர்கள் மாநாடு-2020

 • ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை இணைந்து, "விநியோக சங்கிலி மீண்டுவரும்தன்மை" திட்டம் தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான மெய்நிகர் மாநாட்டை நடத்தின. 
 • விநியோக சங்கிலி மீண்டுவரும்தன்மை (Supply Chain Resilience) திட்டம், நாடுகளின் தேவைகளுக்காக ஒரு தேசத்தை (தற்போது சீனா) சார்ந்து இருப்பதை குறைப்பதை நோக்கமாகக் கொண்டது ஆகும். 

பொருளாதார நிகழ்வுகள்

2020 ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி - ரூ. 86,449 கோடி

 • 2020 ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி முறை (GST) மூலம் ரூ. 86,449 கோடி வசூலாகியிருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 • கடந்த ஜூலை மாதத்தைக் (ரூ. 87,422 கோடி) காட்டிலும் இது ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 98,202 கோடி வசூலாகியுள்ளது.
 • ஆகஸ்ட் மாத GST வசூலில் மத்திய அரசின் CGST ரூ. 15,906 கோடி, மாநில அரசின் SGST ரூ. 21,064 கோடி, ஒருங்கிணைந்த IGST 42,264 கோடி, செஸ் வரி ரூ. 7,215 கோடி ஆகியவை அடங்கும்.
 • IGST-யிடமிருந்து CGST-க்கு ரூ. 18,216 கோடியும், SGST-க்கு ரூ. 14,650 கோடியும் செலுத்தப்பட்டுவிட்டது. இதன்மூலம், ஆகஸ்ட் மாதத்தில் CGST-க்கு மொத்தம் ரூ. 34,122 கோடியும், SGST-க்கு மொத்தம் ரூ. 35,714 கோடியும் வசூலாகியுள்ளது.

தமிழ்நாடு நிகழ்வுகள்

கலைவாணர் அரங்கத்தில் "சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்"

 • கொரானா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2020 மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
 • செப்டம்பர் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
 • புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மைய மண்டலத்தில் கூட்டப்பட்டு வந்த சட்டசபை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, அங்கு அமைக்கப்பட்ட புதிய சட்டசபை மண்டபத்தில் 2010-ம் ஆண்டு கூட்டப்பட்டது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை வெளியிடத்தில் சுகாதார காரணங்களுக்காக கூட்டப்படுகிறது.
 • தமிழ்நாடு சட்டசபையில் நியமன உறுப்பினரையும் சேர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் இடங்கள் உள்ளன. (அ.தி.மு.க. 124, தி.மு.க. 97, காங்கிரஸ் 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, சுயேட்சை 1, சபாநாயகர் 1, நியமன உறுப்பினர் 1) 3 இடங்கள் காலியாக உள்ளன.

118 புதிய மருத்துவ ஊர்திகள் சேவை - தொடக்கம்

 • தமிழகமெங்கும் 90 ஆம்புலன்சுகள் உள்பட 118 புதிய மருத்துவ ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து செப்டம்பர் 1-அன்று தொடங்கிவைத்தார். 108 அவசரகால ஊர்தி சேவை திட்டத்தில் தற்போது 1,005 அவசரகால ஊர்திகள் இயங்கி வருகின்றன.

நூலகங்கள் திறப்பு

 • 160 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 785 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை சந்திக்க அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்று மாணவர்கள், தேர்வர்கள் படிக்கலாம்.

ஆளுமைகள்

ஹாலிவுட் நட்சத்திரம் சாட்விக் போஸ்மேன் - மறைவு

 • 2018-இல் வெளியான பிளாக் பாந்தர் திரைப்படத்தில் டி'சல்லா என்ற பாத்திரத்தில் நடித்து நன்கு அறியப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரம் சாட்விக் போஸ்மேன் (Chadwick Boseman), ஆகஸ்ட் 28-ன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் தனது 43 வயதில் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக. காலமானார்.  

Download this article as PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post