TNPSC Current Affairs August 9-12, 2020 - Download as PDF

 

TNPSC Current Affairs August 9-12,  2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
WHO அமைப்பின் COVAX வசதி தடுப்பூசி அமைப்பு
  • உலக சுகாதார அமைப்பின் COVAX வசதி என்பது (COVAX Facility) உலகளாவிய அணுகல் தடுப்பூசி வசதி அமைப்பு ஆகும். இது கொரானா தொற்று தடுப்பூசிகளுக்கு நியாயமான, விரைவான மற்றும் சமமான அணுகலை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு பொறிமுறை அமைப்பாகும்.
  • உலக சுகாதார அமைப்பு அண்மையில், கோவாக்ஸ் வசதி தடுப்பூசி அமைப்பில் சேர அனைத்து நாடுகளுக்கும் தனது புதுப்பிக்கப்பட்ட அழைப்பை விடுத்தது. இந்த வசதியை பில் கேட் அறக்கட்டளை ஆதரிக்கிறது. 
கொரானா வைரஸ் முதல் தடுப்பு மருந்து ரஷியாவில் கண்டுபிடிப்பு
  • கொரானா வைரஸ் நோய்த் தொற்றுக்கான முதல் தடுப்பு மருந்தை ரஷியா கண்டுபிடித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார். காமலேயா ஆராய்ச்சி நிறுவனம் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மகள்களில் ஒருவருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
பங்களாதேஷில் அமையும் "இந்திய வீரர்களுக்காக நினைவுச்சின்னம்" 
  • 1971-இல் பாகிஸ்தானால் கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்காக ஒரு நினைவுச்சின்னத்தை கட்ட பங்களாதேஷ் முடிவு செய்துள்ளது. இந்த நினைவுச்சின்னத்தின் கட்டுமானம் பங்களாதேஷ் சுதந்திரத்தின் 50-வது ஆண்டு நிறைவை ஒட்டி கட்டப்படுகிறது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி, பங்களாதேஷ் போர் விடுதலைக்கான அமைச்சர் மொஸம்மல் ஹக் இதனை தெரிவித்தார்.
இந்திய நிகழ்வுகள்
ஹப்பல்லியில் ரயில்வே அருங்காட்சியகம் - திறப்பு
  • கர்நாடக மாநிலம் ஹப்பல்லி நகரில் ரயில்வே அருங்காட்சியகம் 2020 ஆகஸ்ட் 9-அன்று காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இணைந்து ஹப்பல்லி ரயில்வே அருங்காட்சியகத்தை (Railway Museum at Hubballi) தேசத்திற்கு அர்ப்பணித்தனர்.
  • இது வட கர்நாடகாவில் முதல் ரயில்வே அருங்காட்சியகமாகவும், தென்-மேற்கு ரயில்வேயில் இரண்டாவதாகவும் தொடங்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்திற்கான "ராஷ்டிரிய ஸ்வச்சதா கேந்திரா" - திறப்பு
  • பிரதமர் நரேந்திர மோடி, 2020 ஆகஸ்ட் 8-அன்று, ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா பணித்திட்டத்திற்கான, ஊடாடும் அனுபவ மையமான ராஷ்டிரிய ஸ்வச்சதா கேந்திராவை (Rashtriya Swachhata Kendra), புது தில்லியின் ராஜ்காட்டில் உள்ள காந்தி ஸ்மிருதி மற்றும் தரிசன் சமிதியில் திறந்து வைத்தார்.
  • 2020 ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 15 வரை 'கந்தகி முகத் பாரத் (Gandagi Mukt Bharat), என்ற சிறப்பு ஒரு வாரகால பிரச்சார இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். 
சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கும் சம உரிமை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • குடும்பச் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 11-அன்று தீர்ப்பளித்துள்ளது.
  • சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும்போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
  • 2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 15-முதல் சோதனை அடிப்படையில் 4ஜி இணைய சேவை
  • 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் இரு மாவட்டங்களில் சோதனை முயற்சியாக 4G இணையச் சேவை அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆகஸ்ட் 11-அன்று தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் மூன்று தலைநகர்: ஆகஸ்டு 16 - அடிக்கல் நாட்டு விழா
  • ஆந்திர மாநிலத்தில் கர்ணுால் நீதிமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் ஆட்சி தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.இதற்கான திட்டத்திற்கு, ஆகஸ்டு 16-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்த ஆந்திர அரசு மு
ஆத்மா நிர்பர் பாரத் சப்தா திட்டம் 
  • 2020 ஆகஸ்ட் 10-அன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆத்மா நிர்பர் பாரத் சப்தா திட்டத்தை (Atma Nirbhar Bharat Saptah) தொடங்கி வைத்தார். நாட்டில் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
சத்தீஸ்கர் அரசின் “இந்திரா வான் மிதன் யோஜனா" திட்டம்
  • உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநில அரசு, “இந்திரா வன் மிதன் யோஜனா” (Indira Van Mitan Yojana) என்ற வனவாசிகளுக்கான திட்டத்தை தொடங்கியது. சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆகஸ்டு 9-அன்று அறிவித்தார்.
சத்தீஸ்கர் வனவாசிகளை ஆதரிப்பதற்கும், தன்னம்பிக்கை அடைவதற்கும் இது ஒரு முயற்சி.
  • சத்தீஸ்கரின் திட்டமிடப்பட்ட வனபகுதிகளைச் சேர்ந்த 19 லட்சம் குடும்பங்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நன்மை பயக்கும் இத்திட்டம் கொண்டுள்ளது.
பஞ்சாப் அரசின் "பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக செல்லிடப்பேசி வழங்கும் திட்டம்" 
  • பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக செல்லிடப்பேசியை வழங்கும் திட்டத்தை பஞ்சாப் அரசு ஆகஸ்டு 12-அன்று தொடங்கி வைக்கிறது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தொடக்கி வைக்கிறார்.
  • பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக செல்லிடப்பேசி வழங்கப்படுகிறது.
நியமனங்கள்
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்பு
  • இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக ஆகஸ்ட் 9-அன்று பதவியேற்றார். கொழும்பு நகரின் புறநகரான கெலானியாவில் உள்ள ராஜமஹா விஹாரயா எனும் புத்த ஆலயத்தில் இன்று நடந்த பதவி ஏற்பு விழாவில் ராஜ பக்சவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • ராஜபக்ஷ 2020 தனது ஜூலையில் 50 ஆண்டு அரசியலை முடித்துள்ளார். 24 வயதில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் இலங்கை அதிபராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இலங்கையின் பிரதமராக இதற்கு முன் 3 முறை இருந்துள்ள ராஜபக்ச இப்போது 4-வது முறையாக பிரதமராக இன்று பதவி ஏற்றுள்ளார்.
  • 74-வயதாகும் மகிந்த ராஜபக்ச இலங்கை மக்கள் கட்சி (எஸ்எல்பிபி) தலைவராகவும் உள்ளார். 
மாநாடுகள்
வெள்ளச் சூழல், தென்மேற்கு பருவமழை தொடர்பான கூட்டம்
  • நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழல் தொடர்பாகவும், தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆகஸ்ட் 10-அன்று இணைய வழியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
  • இந்தக் கூட்டத்தில் அஸ்ஸம், பிகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், கர்நாடகத்தின் உள்துறை அமைச்சரும் பங்கேற்றனர்.
  • வெள்ளச் சூழல் முன்கணிப்புக்கு நிரந்தர தொழில்நுட்ப அமைப்பு: மழை வெள்ளச் சூழலை முன்கணிப்பு செய்வதற்கு நிரந்தரமான தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்த மத்திய, மாநில அரசு முகமைகளிடையே சிறப்பான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும் "இமயமலை புவிவெப்ப நீரூற்றுகள்" 
  • இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் இமாலய புவியியல் அமைப்பு (Wadia Institute of Himalayan Geology), இமயமலையின் நீரூற்றுகளில் வாயு வெளியேற்றம் குறித்த தனது ஆய்வு முடிவை அண்மையில் வெளியிட்டது, அதன்படி, இமயமலைப் பகுதியில் உள்ள புவிவெப்ப நீரூற்றுகள் (Geothermal Springs) கார்பன் டை ஆக்சைடு (Carbon Dioxide) வாயுவை மிகப்பெரிய அளவில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
யமுனை நதியில் காணப்படும் "நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு முன்னுரிமை நோய்க்கிருமிகள்"
  • உலக சுகாதார அமைப்பின் பட்டியலிடப்பட்ட தீவிர நோய்க்கிருமிகள் (Pathogens) யமுனை நதியில் காணப்படுவதாக, ஐ.ஐ.டி டெல்லியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு அண்மையில் கண்டறிந்துள்ளது. மேலும் இக்குழு பல மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்கள் யமுனை நதியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
  • உலக சுகாதார அமைப்பு, 2017-ஆம் ஆண்டு, மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு முன்னுரிமை நோய்க்கிருமிகள் (antibiotic resistant priority pathogens) குறித்த முதல் பட்டியலை வெளியிட்டது.
இந்தோனேசியாவில் "சினாபுங் எரிமலை" வெடிப்பு
  • இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் அமைந்துள்ள சினாபுங் மலை (Sinabung Volcano) தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. 400 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த சினாபுங் எரிமலை, சமீபத்தில் 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வெடித்தது.
  • இந்தோனேசியாவில் மிகவும் தீவிர வெடிப்பில் உள்ள சினாபுங் எரிமலை, நாட்டன் 120-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள எரிமலைகளைக் கொண்ட பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில் (Pacific Ring of Fire) அமைந்துள்ளது.
புத்தகங்கள், ஆசிரியர்கள்
Our Only Home: A Climate Appeal to the World - Dalai Lama
  • "எங்கள் ஒரே வீடு: உலகிற்கு ஒரு காலநிலை முறையீடு" என்ற பொருள்படும் தலாய் லாமா அவர்களின் புத்தகம் 2020 நவம்பரில் வெளியிடப்பட உள்ளது
  • திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா, ஜெர்மன் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் ஃபிரான்ஸ் ஆல்ட் இணைந்து காலநிலை மாற்றம் குறித்த தனது புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். 
Connecting, Communicating, Changing - Venkaiah Naidu
  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் மூன்றாம் ஆண்டு பதவியின் காலக்கிரம நிகழ்ச்சித் தொகுப்பு மின் புத்தகம் "Connecting, Communicating, Changing" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
முக்கிய தினங்கள்
வெள்ளையனே வெளியேறு இயக்க 78-வது ஆண்டுவிழா - ஆகஸ்ட் 08, 2020
  • இந்திய அரசால் “இந்தியாவை விட்டு வெளியேறு” (Quit India Movement) எனப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 78-வது ஆண்டு விழாவை 2020 ஆகஸ்ட் 08-அன்று நினைவுகூரப்பட்டது. 
  • 1942-ஆம் ஆண்டில் இந்த நாளில், தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, பிரிட்டிஷாரை நாட்டிலிருந்து விரட்டியடிக்க அனைத்து இந்தியர்களுக்கும் ‘செய் அல்லது செத்துமடி’ (Do or Die) என்று அழைப்பு விடுத்தார். 
சர்வதேச பழங்குடி மக்கள் தினம் - ஆகஸ்டு 09 
  • ஐக்கிய நாடுகள் அவை சார்பில், ஆண்டுதோறும் ஆகஸ்டு 09 அன்று சர்வதேச பழங்குடி மக்கள் தினம் (International Day of the World's Indigenous Peoples) கடைபிடிக்கப்படுகிறது.
  • 2020 ஆண்டுக்கான, சர்வதேச ழங்குடி மக்கள் தின மையக்கருத்து: “COVID-19 and indigenous peoples’ resilience”.
உலக உயிரி எரிபொருள் தினம் - ஆகஸ்டு 10
  • புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக புதைபடிவமற்ற எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும், உலக உயிரி எரிபொருள் தினம் (World Biofuel Day), ஆகஸ்டு 10-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. 
உலக சிங்க தினம் - ஆகஸ்ட் 10 
  • உலக சிங்க தினம் (World Lion Day) ஆகஸ்ட் 10-அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம் சிங்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து மக்களுக்குக் கற்பிப்பதும் ஆகும்.
தேசிய நூலகர் தினம் - ஆகஸ்டு 12 
  • இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் ஆகஸ்டு 12 அன்று தேசிய நூலகர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன், நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் கோலன் பகுப்பு முறையை உருவாக்கியவர்.
உலக யானைகள் தினம் - ஆகஸ்டு 12 
  • உலக யானைகள் தினம் (World Elephant Day2) ஆண்டுதோறும் ஆகஸ்டு 12 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தின் நோக்கம் அழிந்து வரும் யானை இனத்தை காப்பாற்றுவதும், இதற்காக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே ஆகும்.
  • இயற்கையின் பாதுகாவலன் என அறியப்படும் யானையின் காட்டு வாழ்க்கையை மையப் பொருளாகக் கொண்டு ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கில திரைப்படம் 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • மனித-யானை மோதல்கள் குறித்த வலைத்தளம்: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மனித மற்றும் யானைகள் மோதல் குறித்த தேசிய வலைத்தளத்தை “சூரக்ஷ்யா” (SURAKHSYA Portal) என்ற பெயரில் ஆகஸ்டு 10-அன்று தொடங்கி வைத்தார்.
  • இந்த வலைத்தளம் மனித-யானை மோதல்கள் குறித்த நிகழ்நேர தகவல்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.
  • யானைகள். பொருட்கள் அல்ல: சர்வதேச விலங்கு நல அமைப்பின் அறிக்கை: உலக யானை தினத்தை முன்னிட்டு, சர்வதேச விலங்கு நல அமைப்பு (International Animal Welfare Organization), உலக விலங்கு பாதுகாப்பு குறித்த தனது அறிக்கையை “யானைகள். பொருட்கள் அல்ல” (Elephants. Not Commodities) என்ற பெயரில் வெளியிட்டது, . அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கடுமையான போதாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • அந்த அறிக்கையின்படி, ஆசியாவில் சுற்றுலாவில் பயன்படுத்தப்படும் யானைகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 21 இடங்கள் 509 யானைகள் சுற்றுலாவில் பயன்படுத்துகின்றன. இந்த 509 யானைகளில் 45% (225) கடுமையான போதாத நிலையில் இல்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.
சர்வதேச இளைஞர்தினம் - ஆகஸ்டு 12 
  • சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day) ஆகஸ்டு 12 அன்று, ஐக்கிய நாடுகள் அவையினால் கடைபிடிக்கப் படுகிறது.
  • 1999-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச இளைஞர் தினத்தை ஆகஸ்டு 12-ம் நாளாக கொண்டாடுகிறது. 
  • 2020-ஆம் ஆண்டின் மையக்கருத்து: “Youth Engagement for Global Action".
இந்திய ரயில்வேயின் "தூய்மை வாரம்" - ஆகஸ்ட் 10-15, 2020
  • தூய்மையின் முக்கியத்துவத்தை தெரிவிக்க, இந்திய ரயில்வே, 2020 ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 15 வரை தூய்மை வாரத்தை (Cleanliness Week) கடைப்பிடிக்கிறது.
Post a Comment (0)
Previous Post Next Post