TNPSC Current Affairs August 3-4, 2020 - Download as PDF

 
இந்திய நிகழ்வுகள்
ஜம்மு-காஷ்மீரில் அமையும் "உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம்"
  • ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே, உலகின் மிக உயர்ந்த, ரயில் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம், தரை மட்டத்தில் இருந்து, 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாலம், 2022ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், காஷ்மீர், நாட்டின் பிற பகுதிகளுடன், ரயில் மூலம் இணைக்கப்படும்.
மும்பையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க பெண் உருவ 'டிராபிக் சிக்னல்கள்'
  • மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தாதர் பகுதியில், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக, டிராபிக் சிக்னல்களில், பெண் உருவம், நடப்பது மற்றும் நிற்பது போன்ற சிவப்பு மற்றும் பச்சை நிற 'டிராபிக் சிக்னல்' விளக்குகளை, மும்பை மாநகராட்சி பொருத்தியுள்ளது.
  • இந்தியாவில், பெண் உருவம் கொண்ட டிராபிக் சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள முதல் நகரமாக, மும்பை விளங்குகிறது.
ஆக்ஸ்போர்டு கோவிட்-19 தடுப்பூசி பரிசோதனை - இந்தியாவில் தொடக்கம்
  • ஆக்ஸ்போர்டு கோவிட்-19 தடுப்பூசி பரிசோதனையை இந்தியா தொடங்க உள்ளது
  • கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய அஸ்ட்ரா ஜெனெகா (Astra Zeneca), தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) 
  • LHMMHஅமைப்பு, இறுதியாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு (SII) பரிசோதனைக்கு அனுமதி அளித்தது.
இராஜஸ்தான் நீதித்துறை சேவையில் "MBC-க்கு 5% இடஒதுக்கீடு"
  • இராஜஸ்தான் அரசு மாநில நீதித்துறை சேவையில், மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு (MBC), 5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு இராஜஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக, 2010 இராஜஸ்தான் நீதித்துறை சேவை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • MBC: Most backward class. 
மாணவர்களிடையே தூய அறிவியலை வளர்க்கும் "வித்யார்த்தி விக்யான் மந்தன் திட்டம்"
  • 6-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே தூய அறிவியலை (Pure Science) பிரபலப்படுத்துவதற்காக, "வித்யார்த்தி விக்யான் மந்தன்" என்ற (Vidyarthi Vigyan Manthan) தேசிய அளவிலான திட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன். 2020 ஆகஸ்ட் 01, அன்று தொடங்கி வைத்தார்.
  • வித்யார்த்தி விக்யான் மந்தன், என்பது அறிவியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு வளர்ப்பதற்கும் ஊக்குவிப்பதற்காந ஒரு முயற்சி இதுவாகும்.
ஆந்திர மாநிலத்தில் இ-ரக்ஷாபந்தன் திட்டம்
  • ஆந்திர மாநிலத்தில் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இ-ரக்ஷாபந்தன் (E-Raksha Bandhan) திட்டத்தை மாநில முதல்வர் ஜெகன்மோகன் ஆகஸ்டு 3-அன்று துவக்கி வைத்தார்.
  • ஆந்திர மாநில சிஐடி மற்றும் காவல்துறையின் சார்பில் சைபர் இணையக் குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இணையவெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரக் காவல்துறை ஆகஸ்ட் மாதத்தை சுதந்திரம் மற்றும் மின் பாதுகாப்பு மாதமாக மாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளது.
இரயில்வே சரக்கு வழித்தடம் விரைவாக அமைக்கும் புதிய தட கட்டுமான இயந்திரம் 'NTC' 
  • இந்தியாவில் முதன்முறையாக, இரயில்வே சரக்கு வழித்தடம் முழு தடத்தையும் அமைப்பதற்காக ரயில்வே 'NTC' என்ற புதிய தட கட்டுமான இயந்திரத்தை (New Track Construction) பயன்படுத்தியுள்ளது. என்.டி.சி இயந்திரம் ஒரு நாளைக்கு 1.5 கி.மீ பாதையில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இந்த திட்டங்களை DFCCIL அமைப்பு செயல்படுத்துகிறது.
  • DFCCIL: Dedicated Freight Corridor Corporation of India Limited.
பாதுகாப்பு/விண்வெளி
பூமிக்கு திரும்பிய 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி வீரர்கள் 
  • 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'க்ரூ டிராகன்' விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இரு நாசா விண்வெளி வீரர்கள் ஆகஸ்டு 3-அன்று பூமிக்கு திரும்பி சாதனை படைத்து உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில், வர்த்தக ரீதியாக வடிவமைக்கப்பட்ட விண்கலம் மூலம், நாசா விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளது இதுவே முதன்முறையாகும்.
  • அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் என்க தனியார் நிறுவனம், 2020 மே 31-ஆம் தேதி, க்ரூ டிராகன் என்ற விண்கலத்துடன் கூடிய, 'பால்கன்-9' ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. அதில் இந்த இரு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இவர்கள் இரண்டு மாதங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
நியமனங்கள்
சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக, இந்திய வம்சாவளி "தேதர் சிங் கில்" பதவியேற்பு
  • சிங்கப்பூர் நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை நிபுணரான "தேதர் சிங் கில்" ஆகஸ்டு 3-அன்று பதவியேற்றுள்ளார். 
கயனா அதிபராக மொஹமட் இர்பான் அலி - தேர்வு
  • கயனா நாட்டின் அதிபராக, மொஹமட் இர்பான் அலி (40 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வீட்டுவசதி அமைச்சரான இவர், 2020 மார்ச் 2 பொதுத்தேர்தலில் மக்கள் முற்போக்குக் கட்சி சார்பில் இவரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
எச்.டி.எஃப்.சி. வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி - சஷிதர் ஜெகதீஷன் 
  • எச்.டி.எஃப்.சி. வங்கியின் (HDFC Bank) அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சஷிதர் ஜெகதீஷன் (Sashidhar Jagdishan) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. 
  • இந்த நியமனம் 1949 வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 35B-இன் கீழ், 2020 அக்டோபர் 27 முதல் அமலுக்கு வருகிறது. 
  • இவர் எச்.டி.எஃப்.சி. வங்கியின் மிக நீண்ட கால தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆதித்யா பூரி அவர்களுக்குப் பின் பதவி ஏற்கவுள்ளார்.
புத்தகங்கள் ஆசிரியர்கள்
Best Practices in Digital India Land Records Modernization Programme
  • மத்திய கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்ச நரேந்திர சிங் தோமர், "டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தில் சிறந்த நடைமுறைகள்" குறித்த சிறு புத்தகத்தை வெளியிட்டார்
  • இந்த புத்தகம் பல்வேறு சிறந்த நடைமுறைகள், பல்வேறு சிக்கல்கள், சவால்கள் மற்றும் டிஜிட்டல் இந்தியா நிலப்பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தை DILRMP) செயல்படுத்துவதற்கான எதிர்கொண்ட அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
பார்முலா1-பிரிட்டிஷ் கிராண்ட்பிரி 2020 - லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்
  • பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் ஆகஸ்டு 2-அன்று நடந்தது. 306.198 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 01.283 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் 2020
  • 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று முதல் 9-ந்தேதி வரை இத்தாலியில் நடக்கிறது. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி தடைப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் முதல் சர்வதேச டென்னிஸ் தொடர் இதுவாகும்.
உலகின் மதிப்பு மிக்க 'புகாட்டி லா' காரை வாங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் மிக மதிப்பு கொண்ட காரை வாங்கியுள்ளார் ரொனால்டோ. புகாட்டி லா என்கிற காரை ரூ. 75 கோடி கொடுத்து அவர் வாங்கியுள்ளார். மணிக்கு 380 கி.மீ. செல்லும் வேகம் கொண்டது. இந்த கார் 2021-ல் ரொனால்டோவுக்கு வழங்கப்படவுள்ளது.
  • போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திரக் கால்பந்து வீரா் கிறிஸ்டியானா ரொனால்டோ, 1 பில்லியன் டாலர் (ரூ.7,554 கோடி) வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து வீரர் என்கிற பெருமையை சமீபத்தில் அடைந்தார். இத்தகவலை போர்பஸ் பத்திரிகை வெளியிட்டது. 
  • டைகர் வுட்ஸ், பிளாய்ட் மேவெதர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்குப் பிறகு 1 பில்லியன் டாலர் வருமானத்தைத் தொட்ட மூன்றாவது விளையாட்டு வீரர், ரொனால்டோ ஆவார்.
  • இந்நிலையில் இதையடுத்து ரொனால்டோவிடம் ரூ. 264 கோடி மதிப்புகள் கொண்ட கார்கள் உள்ளன. புகாட்டி லா கார், 
ஆளுமைகள் - இரங்கல்
ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு முன்னோடி என்.வெங்கட்ரமணி - மறைவு
  • ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு துறையின் முன்னோடி என்று அழைக்கப்படும் என்.வெங்கட்ரமணி (வயது 80) ஆகஸ்டு 1-அன்று காலமானார். என்.வெங்கட்ரமணி, இந்தியா பிஸ்டன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்தார்.
அமர் சிங் - காலமானார்
  • முன்னாள் சமாஜ்வாடி கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர் சிங் (64 வயது) சிங்கப்பூரில் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் 1956 ஜனவரி 27-அன்று உத்தரபிரதேசத்தின் அலிகரில் பிறந்தவர் ஆவார்.
முக்கிய தினங்கள்
ரக்‌க்ஷாபந்தன் பண்டிகை திருநாள் - ஆகஸ்டு 3
  • சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌க்ஷாபந்தன் பண்டிகை திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலக சமஸ்கிருத தினம் - ஆகஸ்ட் 3
  • சமஸ்கிருத திவாஸ் அல்லது விஸ்வாசம்ஸ்கிருதாதினம் (Vishvasamskritadinam) என்று அழைக்கப்படும் உலக சமஸ்கிருத தினம் (World Sanskrit Day) இந்து மாதமான ஷ்ரவண பூர்ணிமா தினத்தில் கடைபிடிக்கப்படுகிறது, இந்த நாள் சமஸ்கிருத மொழியைப் பற்றிய அறிதல் மற்றும் கற்றலை ஊக்குவிக்கிறது.
உலக நண்பர்கள் தினம் - ஆகஸ்டு 4
Post a Comment (0)
Previous Post Next Post