TNPSC Current Affairs July 6-7, 2020 - Download as PDF

TNPSC Current Affairs July 2020 - Download as PDF
 
சர்வதேச நிகழ்வுகள்
உலகளாவிய ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு - இந்தியா 34-வது இடம்
 • ஜே.எல்.எல் மற்றும் லாசல்லே அமைப்பின் "கிரெட்டி" (GRETI) என்ற, 2020 உலகளாவிய ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீட்டில் (GRETI 2020) இந்தியா 34-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 2.69 ஆக உள்ளது.
 • நிலைத்தன்மை முயற்சிகள் மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவு வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளன. 
 • கிரெட்டி ரியல் எஸ்டேட் தரவரிசையை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட சொத்து மற்றும் முதலீட்டு மேலாண்மை சேவை நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசாலே இன்கார்பரேட்டட் (JLL) இருபது ஆண்டுகளாக வெளியிடு வருகிறது.
 • கிரெட்டி ரியல் எஸ்டேட் தரவரிசை 2020 (முதல் 3-இடங்கள் மற்றும் இந்தியா (மதிப்பெண்கள்):
  • 1. இங்கிலாந்து (1.31) 
  • 2. அமெரிக்கா (1.35)
  • 3. ஆஸ்திரேலியா (1.39)
  • 34. இந்தியா (2.69) 
 • GRETI: Global Real Estate Transparency Index.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
 • கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான "உயர் தாக்க சமூக அபிவிருத்தி (HICDP) திட்டத்தின்" கீழ், இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில், 2020 ஜூலை 5-அன்று கையெழுத்திடப்பட்டுள்ளன
 • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆப்கானிஸ்தானின் கல்வி அமைச்சின் இந்திய அரசுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தங்களை உள்ளடக்கியது.
 • HICDP: High Impact Community Development Projects programme.
நேபாளத்தில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட "சமஸ்கிருத வித்யாலயா"
 • நேபாளத்தில் இந்தியா கட்டிய சமஸ்கிருத வித்யாலயா (Sanksrit Vidhyalaya) 2020 ஜூலை 6 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
 • கிழக்கு நேபாள மாகாணம், இளாம் மாவட்டத்தில் இந்திய அரசின் சார்பில் கட்டப்பட்ட "சமஸ்கிருத வித்யாலயா", வீடியோ கான்பரன்சிங் மூலம் திறக்கப்பட்டது.
 • வித்யாலயாவின் பெயர் ‘ஸ்ரீ சப்தமாய் குருகுல் சமஸ்கிருத வித்யாலயா’(Shree Saptmai Gurukul Sanskrit Vidhyalaya).
குவைத் குடி​யேற்ற மசோ​தா - 8 லட்சம் இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​ப​டும் நிலை
 • குவைத் நாட்டி​ல் வெளி​நாட்​டுத் தொழி​லா​ளர்​க​ளின் எண்​ணிக்​கையை படிப்​ப​டி​யா​கக் குறைக்க வகை செய்​யும் குடி​யேற்ற மசோ​தா​வுக்கு நாடா​ளு​மன்​றக் குழு ஒப்​பு​தல் அளித்​துள்​ளது. 
 • புதிய மசோ​தா​வின்​படி, குவைத்​தின் மக்​கள்​தொ​கை​யில் 15 சத​வீ​தத்​துக்கு மேல் இந்​தி​யர்​கள் இருக்​கக் கூடாது. அதன் அடிப்​ப​டை​யில், 8 லட்சம் இந்​தி​யர்​கள் அந்​நாட்​டி​லி​ருந்து வெளி​யேற்​றப்​ப​டும் நிலை ஏற்​பட்​டுள்​ள​து.
இந்திய நிகழ்வுகள் 
உலகின் மிகப்பெரிய கொரானா சிகிச்சை வசதி மையம் - திறந்து வைப்பு
 • சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை (SPCCCH) என்ற பெயரில் "உலகின் மிகப்பெரிய கொரானா சிகிச்சை வசதி மையம்" புதுதில்லியில் 2020 ஜூலை 5-ஆம் தேதி திறக்கப்பட்டது. இம்மையத்தை டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் திறந்து வைத்தார்.
 • 10,000 படுக்கைகள் கொண்ட இந்த கோவிட் பராமரிப்பு மையம், தென் டெல்லியின் சதர்பூர் பகுதியில் உள்ள ஆன்மீக அமைப்பான ‘ராதா சோமி சத்சங் பியாஸ்’ வளாகத்தில் (Radha Soami Satsang Beas) கட்டப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசின் ‘மிஷன் விரிக்சரோபன்-2020’
 • உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘மிஷன் விரிக்சரோபன்-2020’(Mission Vriksharopan-2020), என்ற மரம் வளர்ப்புத் திட்டத்தை 2020 ஜூலை 5-ஆம் தேதி துவக்கி வைத்தார், 
 • இதன் கீழ் உத்தரபிரதேச மாநில அரசு 25 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த பெரும் பல்லுயிர் பாதுகாப்பு திட்டம், கங்கை நதி மற்றும் அதன் துணை நதியோரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
CBSE பாடத்திட்டத்தில் மிகை யதார்த்தம் - பேஸ்புக் அறிமுகம்
 • மிகை யதார்த்தத்தை அறிமுகப்படுத்துவதற்கும் (Augmented Reality), டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இணைய நல்வாழ்வைப் பற்றிய பாடத்திட்டத்தைத் தொடங்குவதற்கும் (Curriculum on Digital Safety and Online Well Being), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அமெரிக்காவை தளமாகக் கொண்ட சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்துடன் (Facebook, Inc) கூட்டு சேர்ந்துள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் இரமேஷ் போக்ரியால் 2020 ஜூலை-5 ஆம் தேதி அறிவித்துள்ளார்.
 • CBSE மற்றும் பேஸ்புக் இடையேயான கூட்டு இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இந்த வகை இந்தியாவில் CBSE பாடத்திட்டத்தில் மிகை யதார்த்தம் (Augmented Reality) அறிமுகப்படுத்தப்படும். இரண்டாவது பிரிவின் கீழ், புதிய பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தவுள்ளது.
மகாராஷ்டிராவின் வேலைவாய்ப்பு வலைத்தளம் ‘மகா ஜாப்ஸ் போர்ட்டல்’
 • மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே 2020 ஜூலை 6-ஆம் தேதி தொழில்துறை அலகுகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு வலைத்தளத்தை தொடங்கினார்.
 • இந்த வலைத்தளத்தின் பெயர் ‘மகா ஜாப்ஸ்’ (Maha Jobs portal) ஆகும், இதில் பதிவு செய்ய, மகாராஷ்டிரா மாநிலத்தின் குடியேற்ற சான்றிதழ் தொழிலாளர்களுக்கு கட்டாயமாகும்.
கர்நாடக அரசின் "நேக்கர் சம்மன் யோஜனே" திட்டம்
 • கர்நாடக மாநில் முதல்வர் பி.எஸ். யெடியூரப்பா கர்நாடக மாநிலத்தில் நெசவாளர் சமூகத்திற்காக நேக்கர் சம்மான் யோஜனே’என்ற (Nekar Samman Yojane) திட்டத்தை 2020 ஜூலை 6-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
ஒடிசா அரசின் நிலமற்ற விவசாயிகளுக்கான "பலரம் யோஜனா" திட்டம்
 • ஒடிசா மாநில அரசு மாநிலத்தில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்காக ‘பலரம் யோஜனா’ (Balaram Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் மாநிலத்தில் சுமார் 7 லட்சம் நிலமற்ற விவசாயிகள் அல்லது பங்குதாரர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும்.
 • COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக நாடு தழுவிய பொது முடக்கத்தின் தாக்கங்களால் கஷ்டங்களை எதிர்கொள்ளும் மாநிலத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
தேஹிங் பட்கை வனவிலங்கு சரணாலயம் - தேசிய பூங்காவாக அறிவிப்பு
 • அசாம் மாநிலத்தின், டெஹிங் பட்கை வனவிலங்கு சரணாலயத்தின் (Dehing Patkai Wildlife Sanctuary) நிலையை தேசிய பூங்காவாக (National Park) மேம்படுத்த அசாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் 2020 ஜூலை 6 ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
 • டெஹிங் பட்கை வனவிலங்கு சரணாலயம்: டெஹிங் பட்கை வனவிலங்கு சரணாலயம் அசாம் மாநிலத்தின் திப்ருகார் மற்றும் டின்சுகியா மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயம், 111.19 கிமீ² மழைக்காடுகளின் பரப்பளவைக் கொண்டுள்ளது.
 • டெஹிங் பட்கை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் யானை திட்டத்தின் கீழ், 1992-இல் யானை காப்பகமாக (Elephant Reserve) அறிவிக்கப்பட்டது. பின்னர் 2004 ஜூன்-13 அன்று, டெஹிங் பட்கை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
யமுனை நதியை தூய்மை கண்காணிப்பு கமிட்டி - அறிக்கை
 • யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடா்பாக, தேசிய பசுமை தீா்பாயத்தின் முன்னாள் நிபுணா் உறுப்பினா் பி.எஸ்.சாஜ்வான், முன்னாள் தில்லி தலைமைச் செயலாளா் ஷைலஜா சந்திரா ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு கமிட்டி தேசிய பசுமை தீா்ப்பாயத்தால் (NGT) ஏற்படுத்தப்பட்டது.
 • யமுனை நதியில் வெள்ளம் ஏற்படும் சமவெளி பகுதியில் 954 ஹெக்டோ நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய பசுமை தீா்ப்பாய கண்காணிப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. அந்த நிலப்பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அந்த கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
அம்மா கோவிட் ஹோம் கோ சிறப்புத் திட்டம்
 • கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களுக்காக 'அம்மா கோவிட் ஹோம் கோ' என்ற பெயரிலான சிறப்புத் பெட்டக திட்டம் ஒன்றை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
 • கொரானா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும், செவிலியா் சேவைகளும் அளிக்கப்படும்.
 • பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தெர்மல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும். அதனுடன் 14 நாள்களுக்குத் தேவையான விட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
முக்கிய நபர்கள்
மன்னர் மன்னன் - காலமானார்
 • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி (வயது 92), ஜூலை 6-அன்று புதுச்சேரியில் காலமானார்.
 • புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
 • தமிழக அரசின் திரு.வி.க விருது கலைமாமணி விருது புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.
 • மிகச் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். 
முக்கிய தினங்கள்
குரு பூா்ணிமா தினம் - ஜூலை 5
 • ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வரும் பவுா்ணமி 'குரு பூா்ணிமா'வாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குரு பூா்ணிமா ஜூலை 5-அன்று கடைப்பிடிக்கப்பட்டது. 
பரவும் நோய்களைப்பற்றிய உலக விழிப்புணர்வு தினம் - ஜூலை 6 
 • பிரெஞ்சு வேதியியல் அறிஞர் லூயி பாஸ்டர், 1885-ஆம் ஆண்டு ஜூலை-6 ஆம் நாள் அன்று வெறி நாயால் கடிக்கப்பட்ட ஜோசப் மீஸ்ட்ர் எனும் சிறுவனுக்கு முதன்முறையாக தடுப்பூசி அளித்து அச்சிறுவனை காப்பாற்றினார். 
 • கொடுரமான ரேபீஸ் நோய்க்கு முதன் முதலில் தடுப்பூசி அளித்ததன் காரணமாக, ஜூலை 6-ம் நாள் உலக விலங்கு மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப் படுகின்றது.
Post a Comment (0)
Previous Post Next Post