TNPSC Current Affairs July 14, 2020 - Download as PDF

TNPSC Current Affairs July 14,  2020 - Download as PDF
 
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியாவின் இரண்டாவது தன்னார்வ தேசிய மதிப்பாய்வு அறிக்கை 2020 - சமர்பிப்பு
  • இந்தியாவின் இரண்டாவது தன்னார்வ தேசிய மதிப்பாய்வு அறிக்கை (VNR Report 2020), ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்ட அரசியல் மன்றத்தில் (HLPF) அண்மையில் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை நிதி ஆயோக் அமைப்பினால் தயார் செய்யப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிலையான அபிவிருத்தி இலக்குகளின் நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் இந்தியா எடுத்த திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றிய விரிவான விவரங்களை VNR அறிக்கை வழங்குகிறது.
  • இந்தியாவின் முதலாவது VNR அறிக்கை 2017-இல் நிதி ஆயோக் வழங்கியது. இந்தியாவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கண்காணிப்பு மற்றும் தழுவல்களா நிதி ஆயோக் மேற்பார்வையிடுகிறது.
  • VNR: Voluntary National Review, HLPF: High-Level Political Forum.
கொரோ‌னாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு தடுப்பு மருந்து - இரஷ்யா அறிவிப்பு
  • கொரோ‌னா தொற்றுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை (COVID-19 vaccine) மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்று உள்ளதாக இரஷ்ய நாட்டின் செசோனோவ் பல்கலைக்கழகம் ஜூலை 16-அன்று அறிவித்துள்ளது.
  • இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் (Gamalei Institute of Epidemiology and Microbiology) தயாரித்துள்ளது.இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற 'முதல் நாடு' என்ற பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது. எனினும், இந்த தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற 'முதல் நாடு' என்ற பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது. 
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிகழ்வுகள்
நாட்டின் 14,000 காவல் நிலையங்களை இணைக்கும் "தேசிய புலனாய்வு கட்டம்"
  • தேசிய புலனாய்வு கட்டம் (NATGRID) நாடு முழுவதும் உள்ள 14,000 காவல் நிலையங்களின் தரவுகளுக்கு இடையில் ஒரு இணைப்பை வழங்கவுள்ளது.
  • தேசிய புலனாய்வு கட்டம், நாட்டின் 14000 காவல் நிலையங்களில் இருந்து FIRs, சந்தேக நபர்களின் வங்கி மற்றும் தொலைபேசி விவரங்கள், திருடப்பட்ட வாகனங்கள் போன்ற பிரச்சினைகள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கான மையப்படுத்தப்பட்ட இணையதள தரவுத்தளமாக செயல்படவுள்ளது. 
  • தேசிய புலனாய்வு கட்டம் 2020-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நேரலை செயலமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • CCTNS எனப்படும் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் அமைப்புகளின் தரவுத்தளத்தை தேசிய புலனாய்வு கட்டம் மூலம் அணுகமுடியும்.
  • NATGRID: National Intelligence Grid, CCTNS: Crime and Criminal Tracking Networks and Systems.
பத்மநாபசாமி கோவில் நிர்வாகம் - திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை - தீர்ப்பு
  • கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிர்வாகம் மற்றும் சொத்துகளை நிர்வகிக்க மாநில அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும் 2011-ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.
  • பத்மநாபசாமி கோயிலில் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு வந்த மன்னர் குடும்பத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
  • கோவிலை நிர்வகிக்க உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள புதிய வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும். இதுவரை திறக்கப்படாத ரகசிய அறையைத் திறப்பது குறித்து நிர்வாகக் குழுவே முடிவு எடுக்கலாம் என்றும், குழுவில் இந்து மதத்தினர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்றும், மல்கோத்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2020
  • தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2019 மற்றும் தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2020 ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளது. ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2019‘ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2020‘ ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலுக்கு மட்டும்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆந்திராவில் பயிர்களுக்கான ஆன்லைன் பதிவு திட்டம் ‘E-Cropping’ 
  • ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ரைத்து பரோசா கேந்திரத்தின் (Rythu Bharosa Kendra), கீழ் பயிர்களை மேப்பிங் செய்வதற்கான ஒரு விரிவான ‘மின் பயிர்’ (E-Cropping) எனும் பயிற்சித்திட்டம், 2020 ஜூலை 13 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் இணையதள வலைத்தளத்தின் கீழ், விவசாயிகளின் பெயர், அவரது / அவள் கிராமத்தின் விவரங்கள், வங்கி விவரங்கள், தொடர்பு எண், விவசாயத்திற்கான நிலத்தின் பரப்பளவு, மற்றும் விவசாயி பயிரிட வேண்டிய பயிர் போன்ற விவரங்கள் அரசால் சேகரிக்கப்படவுள்ளது. 
  • விளை பயிர்கள் குறித்த திட்டமிடல் முதல் மின் சந்தைப்படுத்தல் வரை மாநில அரசு திட்டமிட இந்த தகவல்கள் உதவும். 
மத்தியப் பிரதேச அரசின் ‘ரோகோ-டோகோ’ பிரச்சார இயக்கம்
  • கொரானா தொற்றுநோயை எதிர்ப்பதற்கு போராட்டங்களில், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்‘ரோகோ-டோகோ’(Roko-Toko) என்ற பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு/ விண்வெளி
ரேவன்" மற்றும் ஸ்பைக் ஃபயர்ஃபிளை இராணுவ வாகனங்கள் கொள்முதல்
  • இந்திய இராணுவத்தின் காலாட்படையை கூர்மைப்படுத்துவதற்காக, "ரேவன்" (RQ-11 Raven) மற்றும் "ஸ்பைக் ஃபயர்ஃபிளை" (Spike Firefly) ஆகிய இராணுவ உபரகணங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) ஈடுபட்டுள்ளது.
  • AeroVironment RQ-11 Raven: ரேவன் என்பது கையால் ஏவப்படும் தொலைதூர கட்டுப்பாட்டு ஆளில்லா வான்வழி வாகனம் ஆகும், இது ஏரோவிரான் என்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பசுகிறது.
  • Spike Firefly: ஸ்பைக் ஃபயர்ஃபிளை என்பது சுற்றிச்சுழன்று பறக்கும் வெடிமருந்து வாகனம் ஆகும், இது இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் பாதுகாப்பு அமைப்பால் (Rafael Advanced Defense Systems) உருவாக்கப்பட்டுள்ளது.
  • DAC: Defence Acquisition Council 
விருதுகள்
சிறந்த ஆவணப்படத்திற்கான தாதா சாஹேப் பால்கே விருது 2020 - "சி லூபோ" 
  • சிறந்த ஆவணப்படத்திற்கான 2020-ஆம் ஆண்டின் தாதா சாஹேப் பால்கே விருதை "சி லூபோ" (Chi Lupo) என்ற தேன் வேட்டை குறித்த ஆவணப்படத்திற்காக அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, கெசாங் டி தொங்டாக் (Kezang D Thongdok) என்பவர் வென்றுள்ளார்.
  • ஒரு சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளரான கெசாங் டி தொங்டாக் அவர்களின் தனது “சி லூபோ” என்ற ஆவணப்படம், பாறைகளிலிருந்து தேன் சேகரிக்கும் நடைமுறையைக் காட்டுகிறது. 
  • செர்டுக்பென் சமுகம்: சி லுபோ ஆவணப்படம் செர்டுக்பென் சமூகத்தின் (Shertukpen) பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் சித்தரிக்கிறது. தேன் வேட்டை என்பது செரர்டுக்பென் சமூகத்தின் பாரம்பரிய நடைமுறை. மேற்கு அருணாச்சல பிரதேசத்தின் காமெங் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களில் இந்த சமூகம் வாழ்கிறது.
நியமனங்கள்
அமெரிக்க கடற்படை விமானத்தை இயக்கும் முதல் கருப்பின பெண் "மேட்லைன் ஸ்வெகிள்"
  • அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் என்ற பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மேட்லைன் ஸ்வெகிள், இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்“ என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவுள்ளார்.
போலந்து அதிபர் தேர்தல் - அதிபர் ஆண்ட்ரெஜ் துடா வெற்றி
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடந்து முடந்த போலந்து நாட்டு அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஆண்ட்ரெஜ் துடா (Andrzej Duda) வெற்றி பெற்றுள்ளார். 
பொருளாதார நிகழ்வுகள்
ஜியோ இயங்குதளங்களில் "குவால்காம்" ரூ.730 கோடி முதலீடு
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஜியோ இயங்குதளங்களில் (Jio Platforms), அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் "குவால்காம்" (Qualcomm), 2020 ஜூலை 12-அன்று ரூ.730 கோடியை (0.15% பங்கு) முதலீடு செய்துள்ளது.
  • கடந்த மூன்று மாதங்களில் ஜியோ இயங்குதளங்களில் முதலீடு செய்துள்ள 12-வது வெளிநாட்டு நிறுவனமாக குவால்காம் விளங்குகிறது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
முதலீடு செய்ய "பெட்ரோ கெமிக்கல்" மற்றும் "லாஜிஸ்டிக்ஸ்" நிறுவனகளுக்கு அழைப்பு
  • தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து உலக முன்னணி "பெட்ரோ கெமிக்கல்" நிறுவனங்கள் மற்றும் 2 "லாஜிஸ்டிக்ஸ்" நிறுவனகளுக்கு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
  • லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் (முதன்மைச் செயல் அலுவலர்)
  • பெடக்ஸ் நிறுவனம் (பெரட்ரிக் டபிள்யு. ஸ்மித்)
  • யுபிஎஸ் நிறுவனம் (டேவிட் பி. அப்னே) 
  • பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் (முதன்மைச் செயல் அலுவலர்)
  • சவுதி அரெம்கோ நிறுவனம் (அமின் எச்.நாசர்) 
  • எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன் நிறுவனம் டாரன் வுட்ஸ்
  • சிபிசி கார்ப்பரேஷன் நிறுவனம் (டாக்டர் ஜியா ருயே.
தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை ஜூலை 31-வரை இயக்கப்படாது 
  • கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-ஆம் கட்டமாக கடந்த 1-ஆம் தேதி முதல் வருகிற 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 
  • தற்போது ஜூலை 31 வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு ஜூலை 16-அன்று அறிவித்துள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் - வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
  • இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் சவுதம்டனில் நடந்து. வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
  • மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
  • இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்தது.
  • கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக 117 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அரங்கேறிய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
பார்முலா1 இரண்டாம் சுற்று - லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்
  • பார்முலா1 கார்பந்தயத்தின் 2-வது சுற்றான ஸ்டிரியா கிராண்ட்பிரி (Styrian Grand Prix(GP), ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் ஜூலை 12-அன்று நடந்தது. 306.452 கிலோமீட்டர் இலக்கில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 22 நிமிடம் 50.683 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.
Post a Comment (0)
Previous Post Next Post