TNPSC Current Affairs July 13, 2020 - Download as PDF

 
TNPSC Current Affairs July 13,  2020 - Download as PDF
இந்திய நிகழ்வுகள்
வெளிநாட்டிற்கு முதல் முறையாக பார்சல் ரயில் 
  • ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலமில் இருந்து காய்ந்த மிளகாயை பங்களாதேஷின் பெனபோலுக்கு சிறப்பு பார்சல் ரயில் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. 
  • குண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளும் வணிகர்களும் பங்களாதேஷுக்கு சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டிய காய்ந்த மிளாகையை, ரயில்வே ஆனது சிறப்பு பார்சல் ரயில் மூலம் முதல் முறையாக எல்லை தாண்டி கொண்டு சேர்த்துள்ளது. 
  • 16 பார்சல் வேன்களில் 384 டன் உலர்ந்த மிளகாயை அனுப்பியுள்ளனர். சிறப்பு ரயிலில் செல்வதற்கு ஒரு டன்னுக்கு ரூ.4,608 செலவாகும், இதையே சாலை மார்க்கமாக கொண்டு சேர்க்க டன்னுக்கு ரூ.7 ஆயிரம் ஆகும்.
உலகின் விலையுயர்ந்த காளான் "ஹிமாலயன் வயகரா" - IUCN சிவப்பு பட்டியலில் சேர்ப்பு
  • உலகின் விலையுயர்ந்த காளான் வகையை சேர்ந்த "ஓபியோகார்டிசெப்ஸ் சினென்சிஸ்", ‛ஹிமாலயன் வயகரா' என்றும் அழைக்கப்படுகிறது, அழியும் நிலையில் இருப்பதால் ‛ஹிமாலயன் வயகரா' என அழைக்கப்படும் இந்தக் காளானை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமான IUCN ‛சிவப்பு பட்டியலில்' சேர்த்துள்ளது.
  • 2020 ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில், 'அழியக்கப்படக்கூடிய' பிரிவில் இந்த ‛ஹிமாலயன் வயகரா' சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் அதிக அளவு அறுவடை செய்ததன் விளைவாக அதன் உற்பத்தில் 30 சதவீதம் குறைந்துள்ளதாக ஐயூசிஎன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கோண் வடிவத்தில் கம்பளிப்பூச்சி போன்ற தோற்றத்தில் காணப்படும் இந்த ‛ஹிமாலயன் வயகரா' காளான், இந்தியா, சீனா, பூடான், நேபாளம் நாடுகளில் காணப்படுகிறது. குறிப்பாக இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியில் காணப்படுகிறது.
  • உத்தரகண்டில் கீடா ஜாடி என அழைக்கப்படும் இந்த காளான், இந்தியாவில் ஒரு கிலோ சுமார் 10 லட்சம் ரூபாய்க்கும், சீனா மற்றும் சர்வதேச சந்தைகளில் ரூ.20 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.
4.60 கோடி புத்தகங்களுடன் கூடிய தேசிய அளவிலான, 'டிஜிட்டல்' நுாலகம் 
  • இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் (NDLI) என்பது இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு திட்டமாகும்.
  • இந்த நூலகம் மே 2016-இல் பைலட் திட்டமாக தொடங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் மேற்கு வங்காளத்தில் கரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT Kharagpur) அமைந்துள்ளது.
  • இந்த நூலகத்தில் தற்போது வரை, 4.60 கோடி புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. இதில், ஆரம்ப பாடம் முதல் சட்டம், மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து பாட புத்தகங்கள், ஒரே இணையத்தில் கிடைக்கின்றன. பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் உள்ளன. 
  • இந்த நூலகம், http://ndl.iitkgp.ac.in என்ற இணைப்பில் காணலாம்.
  • இப்போதைய சூழலில், ஆன்லைனில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பத்திரிகைகளை கண்டுபிடித்து படிக்க முடிகிறது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு, இங்கு நல்ல ஆய்வு கட்டுரைகள் கிடைக்கின்றன. 
  • NDLI: National Digital library of India.
பாதுகாப்பு/ விண்வெளி
மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்படவுள்ள‘ARAD’ மற்றும் ‘CARMEL’ ரைஃபிள்ஸ் 
  • இஸ்ரேல் ஆயுத தொழில்கள் நிறுவனத்தின் (Israel Weapon Industries) தாக்குதல் துப்பாக்கிகளான, ஆராட் (ARAD) மற்றும் கார்மல் (CARMEL) ஆகியவை மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள பி.எல்.ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (PLR Systems) நிறுவனத்தில் தயாரிக்கப்படவுள்ளன. 
  • இது உள்நாட்டு சிறு ஆயுதத் தொழிலுக்கும், மேக் இன் இந்தியா முயற்சிக்கும் ஒரு பெரிய ஊக்கம் அளிப்பதாக இருக்கும். 
விருதுகள்
வான் கர்மன் விருது 2020 - இஸ்ரோ தலைவர் கே.சிவன் 
  • 2020-ஆம் ஆண்டின் வான் கர்மன் விருது (Von Karman Award), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் டாக்டர். கைலாசவடிவு சிவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 2021 மார்ச் மாதத்தில் பாரிஸ் நகரில் டாக்டர் கே.சிவனுக்கு வழங்கப்படுகிறது. 
  • பிரான்ஸ் பாரிஸ் நகரை தலைமையகமாக கொண்ட சர்வதேச விண்வெளி அகாடமியின் (IAA), மிக உயர்ந்த, முதன்மை விருது வான் கர்மன் விருது ஆகும். இது புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி மற்றும் சர்வதேச விண்வெளி அகாடமியின் நிறுவனர் டாக்டர் தியோடர் வான் கர்மன் அவர்களின் நினைவாக 1982-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த விருது 2005-இல் பேராசிரியர். யு.ஆர். ராவ் அவர்களுக்கும். 2007-இல் Dr.கிருஷ்ணசாமி கஸ்துரிரங்கன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
பொருளாதார நிகழ்வுகள்
இந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ.75,000 கோடி முதலீடு 
  • கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 13-அன்று காணொளி மூலமாக கலந்துரையாடினார்.
  • இந்தியாவில் டிஜிட்டல் மய தொழில்நுட்பத்திற்காக கூகுள் நிறுவனம் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ. 75,000 கோடி (சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யவுள்ளது. பங்கு முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலமாக இதனை நிறைவேற்றுவோம் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 
  • தரவு பாதுகாப்பு, தனிநபர் சுதந்திரம் குறித்த கவலை, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், ஆன்லைன் கல்வி பெங்களூருவில் தொடங்கப்படும் செயற்கை நுண்ணறிவு சோதனைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளி "அமெரிக்கா" 
  • மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் தரவுகளின்படி, அமெரிக்கா 2019-20-ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நிதியாண்டில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் (Bilateral Trade), 88.75 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது.
புத்தக வெளியீடு
A Song of India’ - Ruskin Bond 
  • இரஸ்கின் பாண்ட் எழுதிய ‘இந்தியாவின் பாடல்’ (A Song of India) என்ற ஆங்கிலப் புத்தகம் 2020 ஜூலை 20-அன்று வெளியிடப்பட உள்ளது, இது இரஸ்கின் பாண்ட் அவர்களின் இலக்கிய வாழ்க்கையின் 70-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் வெளியிடப்படுகிறது.
  • அவர் ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக மாறுவதற்கு முன்பு அவரது அறியப்படாத வாழ்க்கையை இந்த புத்தகம் சித்தரிக்கிறது. இது பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியாவின் முத்திரையான பஃபின் புக்ஸ் வெளியிட்டுகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - தள்ளி வைப்பு
  • 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை 2020 செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 
  • கொரோனாவின் தாக்கத்தால் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி, 2021 ஜூன் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செயற்குழு தெரிவித்துள்ளது. 
  • இந்த போட்டியை நடத்தும் உரிமையை பெற்று இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு விட்டுக்கொடுத்தது.
முக்கிய தினங்கள்
சர்வதேச மலாலா தினம் - ஜூலை 12 
  • பாகிஸ்தான் நாட்டில், பெண்கள் கல்விக்காகப் போராடி, தலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, பிறகு உயிர் பிழைத்தவர் மலாலா யூசுப் சாய்.
  • அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இளம் ஆர்வலர் மலாலாவை கெளரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான ஜூலை 12-ஆம் தேதியை சர்வதேச மலாலா தினமாக (International Malala Day) அறிவித்து 2013-ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
  • 25 துணிச்சலான சிறுமிகளின் பயணத்தின் ஆவணப் புத்தகம்: இந்த தினத்தில் ஹார்பர்காலின்ஸ் இந்தியாவின் வெளியீட்டு நிறுவனம், 25 தைரியமான சிறுமிகளின் கல்வி உரிமைக்காக சமூக விதிமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்தும் விதமாக ஒரு புத்தக வெளியீட்டை அறிவித்துள்ளனர். இந்த புத்தகம் 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்படுகிறது. இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
பானு ஜெயந்தி - ஜூலை 13 
  • 2020 ஜூலை 13-அன்று சிக்கிம்மாநிலம் மற்றும், நேபாள நாட்டில் பானு ஜெயந்தி (Bhanu Jayanti) கடைபிடிக்கப்பட்டது. 
  • பண்டைய இந்தியாவின் காவியமான ராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து நேபாள மொழிக்கு மொழிபெயர்த்த முதல் எழுத்தாளர் பானுபகா ஆச்சார்யா ஆவார்.
  • 2020 ஜூலை 13 பானுபகா ஆச்சார்யாவின் 206-வது பிறந்த நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13 ஆம் தேதி நேபாளம் முழுவதும் பானு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு வாரம் - ஜூலை 6-10, 2020
  • ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் (UNOCT), 2020 ஜூலை 6 முதல் 10 வரை தனது இரண்டாவது பயங்கரவாத எதிர்ப்பு வாரத்தை கடைபிடித்தது. 
  • 2020 ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு வார மையக்கருத்து: “Strategic and Practical Challenges of Countering Terrorism in a Global Pandemic Environment”.
Post a Comment (0)
Previous Post Next Post