நடப்பு நிகழ்வுகள் ஜூன் 7-10, 2020
சர்வதேச நிகழ்வுகள்சீனா மீதான நாடாளுமன்ற கூட்டணி - உருவாக்கம்
- சீனா மீதான நாடாளுமன்ற கூட்டணி (IPAC), என்பது சீன மக்கள் குடியரசுடனான உறவுகளை மையமாகக் கொண்ட எட்டு ஜனநாயக நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச கூட்டணியாகும்.
- இது சீனா நாடு குறி்த்த, ஜனநாயக நாடுகளின் சீர்திருத்தங்கள் மற்றும் மறுவரையறை நோக்கி செயல்படுகிறது.
- இந்தக்கூட்டணி, 1989-ஆம் ஆண்டு நடந்த தியனன்மென் சதுக்க போராட்டத்தன் ஆண்டு நினைவு நாளான, 2020 ஜூன் 4 ஆம் தேதி நிறுவப்பட்டது.
- இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவரான இயன் டங்கன் ஸ்மித் இக்கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார்.
- இந்த கூட்டணியில் ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லிதுவேனியா, நோர்வே, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
- கூட்டணி இரண்டு கொள்கைகளைப் பின்பற்றுகிறது; மனித உரிமையை ஆதரிக்கவும் இலவச, திறந்த மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒத்துழைப்பையும், ஜனநாயக நாடுகள் தங்கள் அரசியல் அமைப்புகளில் ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிப்பது.
- IPAC: Inter-Parliamentary Alliance on China.
தென் கொரியாவுடன் வடகொரியா-வின் தொடர்புகள் துண்டிப்பு
- தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் ஜூன் 10-முதல் துண்டித்துக்கொள்வதாக வடகொரியா நாடு அறிவித்து உள்ளது.
- கொரியப்போர் 1950 முதல் 1953-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்தப் போர் முடிந்து 67 ஆண்டுகள் முடிந்தும் கூட, வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே இன்னும் அமைதி ஒப்பந்தம் போடப்படவில்லை.
- 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27-ந் தேதி வட கொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள பான்முன்ஜோமில் ஒரு உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிடையே வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
- 1953-ம் ஆண்டு கொரிய போர் முடிந்தபிறகு, வட கொரிய தலைவர் ஒருவர் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாக அமைந்தது.
இந்திய நிகழ்வுகள்உணவு பாதுகாப்பு குறியீடு 2020
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சமீபத்தில் 2019-20-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு குறியீட்டை, 2020 ஜூன் 7-அன்று உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்டது.
- பெரிய மாநிலங்கள் தரவரிசையில் குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
- சிறிய மாநிலங்களில், கோவா, மணிப்பூர் மற்றும் ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், டெல்லி மற்றும் அந்தமான் தீவுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
- FSSAI அமைப்பு "COVID-19-வின் நல்லதைச் சாப்பிடுங்கள்" (Eat Right during COVID-19) என்ற மின் புத்தகத்தையும் வெளியிட்டது.
- பாதுகாப்பான உணவு நடைமுறைகள் குறித்து மின் புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது.
- FSSAI: Food Safety and Standards Authority of India.
- பாலைவனத் துரத்தல் (Operation Desert Chase) நடவடிக்கையின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு உள்ளீடுகளின்படி, ஜெய்ப்பூரில் இராஜஸ்தான் காவல்துறை சமீபத்தில் இரண்டு சிவில் பாதுகாப்பு ஊழியர்களை கைது செய்தது.
- அவர்கள் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ISI-க்கு (Inter Service Intelligence) தகவல் முக்கியமான தகவல்களை அனுப்புகிறார்கள் எனப்பட்டது.
- ஆபரேஷன் டெசர்ட் சேஸ் என்பது, உளவு தடுப்பு நடவடிக்கையாகும், இது இராணுவ புலனாய்வுத் துறையால் 2019-இல் தொடங்கப்பட்டது.
- 1923-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் (Official Secrets Act 1923) இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று பாகிஸ்தான் ISI உளவு அமைப்பு, ஆபரேஷன் டூபக் (Operation Tupac) தொடங்கி நடத்துகிறது.
- இலங்கையில் இருந்து 713 பேரை ‘ஆபரேசன் சமுத்திர சேது‘ திட்டத்தின் கீழ், இந்திய கடற்படை கப்பல் “ஐ.என்.எஸ். ஜலஸ்வா” ஏற்கனவே தூத்துக்குடிக்கு அழைத்து வந்தது. தற்போது அதே கப்பலில் மாலத்தீவில் இருந்து 700 பேர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
- ஜம்மு-காஷ்மீர், இலடாக்கில் 'மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் 18-வது பெஞ்ச்' லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கான மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் (CAT) 18-வது பெஞ்சை (18th Bench) இந்திய அரசு சமீபத்தில் ஜூன் 8-அன்று தொடங்கி வைத்தது.
- ஜம்மு-காஷ்மீருக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமைப்பது பல நீதிமன்றங்களின் சுமையை குறைக்கும். இந்தத் தீர்ப்பாயம் அரசு ஊழியர்களின் சேவை விஷயங்களை பிரத்தியேகமாக கையாள்கிறது.
- CAT: Central Administrative Tribunal
விருதுகள்ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருது 2020 - ஜாவேத் அக்தர்
- ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஜாவேத் அக்தர் பெற்றுள்ளார்.
- ஜாவேத் அக்தர் இந்திய திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர். 1999-ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி விருது மற்றும் பத்ம பூஷண் ஆகியோரையும் வென்றுள்ளார்.
- ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதை (Richard Dawkins Award) அமெரிக்காவின் நாத்திக கூட்டணி (Atheist Alliance) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது.
- கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஆசியாவின் நோபல் பரிசு: 1958-ம் ஆண்டு முதல் மணிலாவை தலைமையிடமாக கொண்டுள்ள ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிற இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
- ரமோன் மக்சேசே விருது: விமான விபத்தில் மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக ஆண்டுதோறும் அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என்ற 6 பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ரமோன் மக்சேசே விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வந்தது. 2009-ம் ஆண்டு முதல் ஒரே பிரிவில் வழங்கப்படுகிறது.
திட்டங்கள்PMKSY ஒரு துளி அதிக பயிர் திட்டம்: ரூ .4,000 கோடி ஒதுக்கீடு
- 2020-21-ஆம் ஆண்டுக்கான பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சய் யோஜனா (PMKSY) திட்டத்தின் உட்கூறு திட்டமான 'ஒரு துளி அதிக பயிர்' (Per Drop More Crop) என்ற சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு, இந்திய அரசு ரூ .4,000 கோடியை ஒதுக்கியுள்ளது.
- பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனாவின் 'ஒரு துளி அதிக பயிர்' திட்டம் தெளிப்பு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பயன்பாட்டு செயல்திறனில் கவனம் செலுத்துகிறது. உர பயன்பாடு, தொழிலாளர் செலவுகள் மற்றும் உள்ளீட்டு செலவுகளைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டது.
- PMKSY: Pradhan Mantri Krishi Sinchayee Yojana.
குழுக்கள்ஜெயா ஜேட்லி பணிக்குழு - அமைப்பு
- இந்திய அரசு ஜெயா ஜெட்லி பணிக்குழுவை (Jaya Jaitly Task Force) மத்திய குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது, இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு பிரச்சினைகள் குறித்து ஆராயவும் அது தொடர்பாகவும் செயல்படவுள்ளது.
- இந்தக் குழு பின்வரும் தாய்வழி இறப்பு விகிதம், ஊட்டச்சத்து நிலைகளை மேம்பாடு, தாய்மை வயது தொடர்பான சிக்கல்கள் பற்றி ஆராயவுள்ளது.
- தற்போதைய மாதிரி பதிவு முறைப்படி (Sample Registration System), 2015-17ஆம் ஆண்டில் இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் (Maternal Mortality Rate), 1 லட்சத்திற்கு 122-ஆக உள்ளது.
அரசியலமைப்புஇந்தியா பெயர் - பாரத் - மாற்றக் கோரிய மனு
- இந்தியாவின் பெயரை பாரத் என பிரதிநிதித்துவமாக மாற்றக் கோரிய ஒரு மனு இந்திய உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் அளிக்கப்பட்டது.
- இதை மத்திய அரசுக்கு, குறிப்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் அரசியலமைப்பின் பிரிவு 1-ஐ (Article 1) திருத்த முயல்கிறது. மனுவில் இருந்து ‘இந்தியா’ என்ற பெயரை 'பாரத்' என மாற்ற வேண்டும் என்று கோரியது.
- இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1-இன்படி, “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” (Union of States). அரசியலமைப்பின் படி இந்தியா ஏற்கனவே 'பாரத்' என்று அழைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்உத்தரகண்ட் 'பல்லுயிர் பூங்கா' திறப்பு
- உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரில், ஜூன் 5-அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒரு "பல்லுயிர் பூங்கா"வை (Biodiversity Park) திறந்துள்ளது.
- இந்தப் பூங்கா 40 கருப்பொருள் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் பழங்கள், தாவர உண்ணக்கூடிய இனங்கள் மற்றும் மருத்துவ மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களும் அடங்கும்.
- பருவநிலை மாற்றம், துண்டாகும் வாழ்விடங்கள், இயற்கை சீரழிவு ஆகியவற்றால், பல்லுயிர் நிறைந்த மலையக மாநிலமான உத்தரகாண்ட் பின்வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை இழந்து வருகிறது.
- மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 2019-20 ஆண்டு அறிக்கையை (Annual Report of Environment Ministry) வெளியிட்டுள்ளது.
- 2019-ஆம் ஆண்டில் 22 மாநிலங்களில் சுமார் 11,467 ஹெக்டேர் வன நிலங்கள் 1980-ஆம் ஆண்டு வன (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், 932 வனவியல் அல்லாத திட்டங்களுக்காக திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
- திருப்பி விடப்பட்டுள்ளதாக வன நிலங்களில், மூன்றில் ஒரு பங்கு ஒடிசா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, 14 திட்டங்களில் 4,514 ஹெக்டேர் நிலம் திருப்பி விடப்பட்டது.
- ஒடிசாவைத் தொடர்ந்து தெலுங்கானா 11 திட்டங்களுக்கு 2,055 ஹெக்டேர் நிலத்தையும், ஹரியானாவில் அதிகபட்ச திட்டங்கள் முலம் 519 ஹெக்டேர் வன நிலங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
- வன கிராமங்கள்: மரம் போன்ற வளங்களை பெருக்குவதற்காக பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்டவை வன கிராமங்கள். இன்றும் நாட்டில் 2,500 வன கிராமங்கள் உள்ளன.
- 2019-ஆம் ஆண்டில் வன கிராமங்களைப் உருவாக்கப்படவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.
அறிவியல் தொழில்நுட்பம்இணைய கட்டுப்பாட்டு ரோபோ 'கோரோ-போட்' உருவாக்கம்
- தானே நகரைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் கோரோ-போட் (Coro-bot) என்ற இணைய கட்டுப்பாட்டு ரோபோவை (Internet-Controlled Robot) உருவாக்கியுள்ளார்.
- COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளின் தேவைகளை இந்த ரோபோ நிவர்த்தி செய்கிறது.
- இது உணவு, பானங்கள், நீர், மருந்துகள் ஆகியவற்றை சுயாதீனமாக விநியோகிக்க முடியும். ரோபோ நோயாளிகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குகிறது.
புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் 'காந்தக் கலோரி பொருள்' உருவாக்கம்
- ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்ட தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் (ARCI) சமீபத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் அரியவகை மண்ணை அடிப்படையாகக் கொண்ட காந்த கலோரி பொருளை (Magnetocaloric Material) உருவாக்கியுள்ளனர்.
- ARCI: Advanced Research Centre for Powder Metallurgy and New Materials.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் 'CeNS' எனப்படும் நானோ மற்றும் மென் பொருள்களுக்கான மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாலிப்டினம் டை ஆக்சைடை (Molybdenum dioxide) பயன்படுத்தி நீரிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்க (Catalyst) செலவு குறைந்த வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
- CeNS ஆய்வகம்: பெங்களூரு நகரில் ஜலஹள்ளி பகுதியில் அமைந்துள்ள, நானோ மற்றும் மென் பொருள் அறிவியல் மையம் (CeNS) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) கீழ் இயங்கும் நானோ மற்றும் மென் பொருளகளுக்கான ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்
- CeNS: Centre for Nano and Soft Matter Sciences.
தமிழ்நாடு நிகழ்வுகள்
1,018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம்
- தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி அரசாணை ஜூன் 10-அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 1,018 ஊர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் சில இடங்களில் ஊரின் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அதே பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுவதுடன், எழுதவும் படுகின்றன.
- இனி அதை விடுத்தது ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அறிவுறுத்தி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- உதாரணமாக சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையமானது ஆங்கிலத்தில் 'எக்மோர்' என்று அழைக்கப்படுவதுடன், EGMORE என்று எழுதப்படுகிறது.
- அவ்வாறு இல்லாமல் இனி எழும்பூர் (EZHUMBUR) என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றும், உச்சரிக்க வேண்டும் என்றும் இந்த அரசாணையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
- தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான அரசு உத்தரவு நடைமுறைக்கு வந்தது.
- பிளாஸ்டிக் ஷீட், பிளேட், டீ மற்றும் தண்ணீர் கப், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கேரி பேக், பிளாஸ்டிக் கொடி போன்றவை (எந்த அளவில் இருந்தாலும்) அவை தடை செய்யப்பட்டு இருந்தன.
- இதன் மூலம் சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவு ஜூன் 5-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
- கொரானா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு இலவச முகக்கவசங்களை வழங்கவுள்ளது. இதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13.48 கோடி முகக் கவசங்களை விலை நிர்ணயம் செய்து வாங்குவதற்கு தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு '4 ஆண்டுகள் தடை விதிப்பு'
- 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் ‘நான்ட்ரோலன்’ என்னும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.
- 2019 மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த (‘பி’ மாதிரி) சோதனையும் ஊக்க மருந்து உபயோகப்படுத்தியதை உறுதி செய்தது. இதனால் சர்வதேச தடகள நேர்மை குழு கோமதி போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆடும் லெவன் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைமை நிர்வாக கமிட்டி ஜூன் 10-அன்று அனுமதி அளித்தது.
- எத்தகைய வீரர் (பவுலர் அல்லது பேட்ஸ்மேன்) பாதிக்கப்படுகிறாரோ அதற்கு ஏற்ற மாற்று வீரரையே பயன்படுத்த வேண்டும். 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
- எச்சில் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பந்து மீது எச்சிலை தேய்க்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கும் ICC ஒப்புதல் அளித்துள்ளது. இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் இது அமல்படுத்தப்படும்.
முக்கிய தினங்கள்உலக உணவு பாதுகாப்பு தினம் - ஜூன் 7
- இரண்டாவது உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day), 2020 ஜூன் 7-அன்று, உணவு மூலம் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கவும், கண்டறியவும், நிர்வகிக்கவும், உணவுப் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம், பொருளாதார செழிப்பு, விவசாயம், சந்தை அணுகல், சுற்றுலா மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றைப்பற்றிய விழிப்புணர்வுக்காக கடைபிடிக்கப்படுகிறது,
- 2020 உலக உணவு பாதுகாப்பு தின மையக்கருத்து: 'Food Safety, Everyone’s Business'.
- உலகப் பெருங்கடல் தினம் (World Oceans Day), ஆண்டுதோறும் ஜூன் 8-ஆம் தேதி ஐ.நா. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. நம் வாழ்வில் கடல் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் அதைப் பாதுகாக்க மக்கள் உதவக்கூடிய முக்கிய வழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இந்நாளின் நோக்கம் ஆகும்.
- 2020 உலக கடல் தின மையக்கருத்து: 'Innovation for a Sustainable Ocean'.
- 1990-இல் உலக விரிவு வலை (World Wide Web) என்னும் பொது பயன்பாட்டு இணையதளமாக உலகிற்கு அறிமுகம் செய்தார் டிம் பெர்னர்ஸ் லீ, இவர் இணைய தந்தை என்றழைக்கப்படுகிறார்.
- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த "டிம் பெர்னர்ஸ் லீ" ஜூன் 8 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.
- பவள முக்கோண தினம் (Coral Triangle Day) ஆண்டுதோறும் ஜூன் 9-ந் தேதி பவள முக்கோண திட்ட அமைப்பால் (Coral Triangle Initiative) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் பவளப்பாறைப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
- இந்த பவள முக்கோண முனைப்புத் திட்டம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், பப்புவா நியூ கினியா, திமோர்-லெஸ்டே ஆகிய ஆறு நாடுகளின் பன்முக கூட்டமைப்பு ஆகும்.
- ஒவ்வொரு ஆண்டும், உலக அங்கீகார தினம் (World Accreditation Day) ஜூன் 9-அன்று கொண்டாடப்படுகிறது.
- சர்வதேச அங்கீகார மன்றம் (International Accreditation Forum) மற்றும் சர்வதேச ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு (ILAC) அமைப்பு ஆகியவற்றால் அங்கீகாரத்தின் (Accreditation) முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் தொடங்கப்பட்டது.
- இந்தியாவில் இந்த தினம் இந்திய தர கவுன்சிலால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- 2020 உலக அங்கீகார தின மையக்கருத்து: 'Accreditation, Improving Food Safety'.
Download this article as PDF Format