TNPSC Current Affairs 5-6, June 2020 - Download as PDF

 நடப்பு நிகழ்வுகள் ஜூன் 5-6, 2020 

Current Affairs June 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
போர்பஸ் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியல்-2020
 • அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிபரல பத்திரிகையான போர்பஸ், 2019-ம் ஆண்டு ஜூன் முதல் 2020-ம் ஆண்டு மே வரையில் உலகில் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலை (Forbes Annual List of 100 Highest-Paid Celebs) வெளியிட்டுள்ளது.
 • இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இடம் பெற்றுள்ளார். இவர் 65 மில்லியன் டாலருடன் (ரூ. 466 கோடி) 52-வது இடத்தில் உள்ளார். 
 • முதல் 5 இடங்கள் பட்டியல்:
  1. கெய்லி ஜென்னர் (வயது 22, டி.வி. நடிகை) - $590 மில்லியன் டாலர் 
  2. கெய்னி வெஸ்ட் (வயது 42, இசைக்கலைஞர், பாப் பாடகர்) - $170 மில்லியன் டாலர் 
  3. ரோஜர் பெடரர் (வயது 38, டென்னிஸ் வீர்ர்) - $106.3 மில்லியன் டாலர் 
  4. கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 35, கால்பந்து வீர்ர்) - $105 மில்லியன் டாலர் 
  5. இலயோனல் மெஸ்ஸி (வயது 32, கால்பந்து வீர்ர்) - $104 மில்லியன் டாலர் 
 • 1 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து வீரர்-கிறிஸ்டியானா ரொனால்டோ: போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து வீர்ர கிறிஸ்டியானா ரொனால்டோ, 1 பில்லியன் டாலர் (ரூ.7,554 கோடி) வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து வீரர் (World's only Billionaire Footballer) என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். டைகர் வுட்ஸ், பிளாய்ட் மேவெதர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்குப் பிறகு 1 பில்லியன் டாலர் வருமானத்தைத் தொட்ட மூன்றாவது விளையாட்டு வீரர் ரொனால்டோ ஆவார்.
இரஷ்ய ஆர்க்டிக் பிராந்தியத்தில் எண்ணெய் கசிவு: அவசரகால நிலை அறிவிப்பு
 • ஆர்க்டிக் பெருங்கடல் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் அம்பர்நயா ஆற்றில் டீசல் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை அடுத்து இரஷ்யா அவசரகால நிலையை (State of Emergency) அறிவித்துள்ளது.
 • நோரில்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள தெர்மோஎலக்ட்ரிக் மின் உற்பத்தி நிலையம் ஒரு நிரந்தர பனிப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பெர்மாஃப்ரோஸ்ட் பலவீனமடைந்து எரிபொருள் தொட்டி மூழ்கியது, 20,000 டன் டீசல் எண்ணெயை அம்பர்நயா நதிக்குள் கொட்டியது.
இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாடு-2020 பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
 • இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாடு 2020 ஜூன் 4, அன்று காணொலி மூலம் மெய்நிகர் மாநாடாக நடைபெற்றது. 
 • வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உச்சி மாநாடு (India’s first virtual bilateral summit) நடத்தி ஆலோசிப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
 • இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பின்வரும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன, 
 • ஒப்பந்தங்கள் விவரம்:
 • இணையத்தால் இயக்கப்படும் ஆபத்துகால தொழில்நுட்ப கட்டமைப்பு ஏற்பாடு
 • சிக்கலான மற்றும் மூலோபாய தாதுக்களை செயலாக்கும் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஏற்பாட்டை செயல்படுத்துதல்
 • பயிற்சி மற்றும் தொழிற்கல்வியின் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • நீர்வள முகாமைத்துவத்தைப் புரிந்துகொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • ஆளுமை சீர்திருத்தங்கள் மற்றும் பொது நிர்வாகத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • சுரங்க மற்றும் மூலோபாய கனிமங்களை செயலாக்குவதில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.
 • கையெழுத்திடப்பட்ட பரஸ்பர தளவாடங்கள் ஆதரவு ஒப்பந்தம், இரு நாடுகளின் இராணுவ தளங்களை ஒருவருக்கொருவர் அணுக அனுமதிக்கிறது.
 • நாடுகளும் தங்களது 2 + 2 வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு உரையாடல்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளன.
இந்திய நிகழ்வுகள்
பசுமைப்புல அதிவேக நெடுஞ்சாலை திட்டம் - ஒப்புதல்
 • டெல்லி-அம்ரிஸ்டார்-கத்ரா அதிவேக நெடுஞ்சாலையை பசுமைப்புல அதிவேக நெடுஞ்சாலை திட்டமாக மாற்ற (Green Field Expressway Project) இந்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. 
 • இந்த நெடுஞ்சாலை மாநிலங்களில் இடையே உள்ள ஐந்து வரலாற்று நகரங்களை இணைக்கிறது. அவை: கோயிண்ட்வால் சாஹிப், சுல்தான்பூர் லோதி, கதூர் சாஹிப் மற்றும் தர்ன் தரன் ஆகியவை ஆகும். 
 • தற்போதுள்ள சாலைகள் பழுப்புநிற புலத்திட்டத்தின் (Brown field projects) கீழ் அகலப்படுத்தப்பட்டன, இவை தற்போது பசுமைப்புல அதிவேக நெடுஞ்சாலை திட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன. 
ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த ஹோமியோபதி மருந்து "ஆர்சனிகம் அல்பம்" 
 • COVID-19 வைரஸ் தடுப்பு பயன்பாட்டிற்கு ஆயுஷ் அமைச்சகம், ஆர்செனிகம் அல்பம் (Arsenicum Album-30) என்ற ஹோமியோபதி மருந்தை பரிந்துரைத்துள்ளது. வடிகட்டிய நீரில் ஆர்சனிக்கை சூடாக்குவதன் மூலம் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. 
 • தடுப்பு மருந்தாக ஆர்செனிகம் அல்பம்-30 இன் பயன்பாட்டை சரிபார்க்க பெரிய அளவிலான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
நெடுஞ்சாலைகளில் 'மனித மற்றும் விலங்குகளின் இறப்பு தடுப்பு பிரச்சாரம் தொடக்கம்'
 • 2020 ஜூன் 5-அன்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்ட பிரச்சாரத்தை “நெடுஞ்சாலைகளில் மனித மற்றும் விலங்குகளின் இறப்பு தடுப்பு” (Prevention of Human and Animal Mortality on highways) என்ற பெயரில் ஜூன் 5-அன்று தொடங்கிவைத்தார்.
 • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துக்களை சந்தித்து வருகிறது. இவர்களில் 1.5 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர்.
 • விபத்து விகிதங்களைக் குறைக்க இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
“துலிப்” இன்டர்ன்ஷிப் திட்டம்
 • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து “துலிப்” (TULIP) என்ற இன்டர்ன்ஷிப் கற்றல் திட்டத்தை 2020 ஜூன் 4-அன்று தொடங்கின.
 • துலிப் திட்டம் என்பது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களின் கீழ் புதிய பட்டதாரிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்குவதற்காக நகர்ப்புற கற்றல் வேலைவாய்ப்பு திட்டம் இதுவாகும். இதற்கான துலிப் இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
 • TULIP: The Urban Learning Internship Programme.
ஆந்திர அரசின் ஒய்.எஸ்.ஆர். வாகன மித்ரா' திட்டம் - தொடக்கம்
 • ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு, ஒய்.எஸ்.ஆர்., வாகன மித்ரா' என்ற திட்டத்தை ஜூன் 5-அன்று தொடங்கி வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2.62 லட்சம், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக, 236 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் வருவாய் இழந்துள்ளோருக்காக, இந்த ஊக்கத் தொகை, நான்கு மாதங்களுக்கு முன்னதாக வழங்கப்படுகிறது. இதை, வாகன உரிமம் புதுப்பிப்பு, காப்பீடு உள்ளிட்டவற்றின் செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு/விண்வெளி
சூரிய கொரோனாவின் காந்தப்புல ஆய்வு - வெளியீடு
 • ஹவாய் பல்கலைக்கழக வானியல் ஆராய்ச்சியாளர்கள் சூரிய கொரோனா (Solar Corona) எனப்படும் சூரியனின் கிரக விண்வெளியை ஆய்வு செய்துள்ளனர்.
 • பென்ஜமின் போ என்பவரால், ஜூன் 3-அன்று, வானியற்பியல் இதழில் (Astrophysical Journal) சூரிய கொரோனாவின் காந்தப்புலம் பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டது, மொத்த சூரிய கிரகண அவதானிப்புகளைப் பயன்படுத்தி, கொரோனல் காந்தப்புலத்தின் வடிவத்தை (Coronal Magnetic Field) அதிக இடஞ்சார்ந்த தீர்மானம், முன்பை விட பெரிய பரப்பளவில் அளவிடப்பட்டுள்ளது.
 • சூரிய கிரகணத்தின் போது சூரிய கொரோனாவை எளிதாகக் காணலாம். சூரிய கொரோனாவின் காந்தப்புல கோடுகள் 2 தசாப்தங்களில் நிகழ்ந்த 14 க்கும் மேற்பட்ட கிரகணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
விருதுகள்
EY உலக தொழில்முனைவோர் விருது 2020 - கிரண் மஜும்தார் ஷா
 • கிரண் மஜும்தார் ஷா 2020-ஆம் ஆண்டின் எர்னஸ்ட் & யங் உலக தொழில்முனைவோர் விருதுக்கு (EY World Entrepreneur of the year 2020) 2020 ஜூன் 5-அன்று, தேர்வு செய்யப்பட்டார்.
 • சிங்கப்பூரின் ஹைஃப்ளக்ஸின் ஒலிவியா லம்-க்கு பிறகு இந்த விருதை வென்ற இரண்டாவது பெண் கிரண் மஜும்தார் ஆவார்.
 • மூன்றாவது இந்தியர்: 2014-இல் கோடக் மஹிந்திராவின் உதய் கோடக் மற்றும் 2005-இல் இன்போசிஸின் நாராயண மூர்த்தி ஆகியோருக்குப் பிறகு இந்த விருதை வென்ற மூன்றாவது இந்தியர் கிரண் ஆவார். கிரண் 1978-இல் பயோகான் நிறுவனத்தை ஏற்படுத்தினார். இது ஒரு உயிர்-நொதிகள் (bio-enzymes) நிறுவனம் ஆகும்.
 • EY தொழில்முனைவோர் விருது (1986): இந்த விருது, தொழில்முனைவோர் அங்கீகரிக்கும் விதமாக 1986-ஆம் ஆண்டில், அமெரிக்காவிந் மில்வாக்கி பகுகியில் EY எனப்படும் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தால் ஏற்படு்த்தப்பட்டது. 
நியமனங்கள்
மதுரை நேத்ரா 'ஐ.நா நல்லெண்ணத் தூதராக' தேர்வு
 • பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். 
 • நேத்ராவை ஐ.நா வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் வறுமை ஒழிப்பு குறித்து பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.
 • மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவா் மோகன். இவா், தனது பகுதியில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளா் குடும்பங்களுக்கு, தனது மகள் நேத்ராவின் கல்விச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை செலவழித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
மாநாடுகள்
உலக பொருளாதார மன்றத்தின் 'தனித்துவ இரட்டை உச்சி மாநாடு-2021' 
 • உலக பொருளாதார மன்றம் (World Economic Forum), தனது அடுத்த உச்சிமாநாட்டை 2021 ஜனவரி மாதத்தில், “பெரும் மீட்டமைப்பு” (The Great Reset) என்ற கருப்பொருளின் கீழ் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடத்தப்போவதாக 2020 ஜூன் 3-அன்று அறிவித்தது.
 • பொருளாதார மன்றம் இந்த உச்சிமாநாட்டிற்கு "ஒரு தனித்துவ இரட்டை உச்சி மாநாடு" (A Unique Twin Summit) என்றும் பெயரிட்டுள்ளது.
 • தற்போதைய கொவிட்-19 நெருக்கடியால் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சமூக சீர்குலைவுகள், சுகாதாரம், நிதி மற்றும் எரிசக்தி அமைப்புகளின் 
 • போதாமைகளை அம்பலப்படுத்தியுள்ளன, மெலும் இவை தலைவர்களை நாற்சந்தியில் நிறுத்தியுள்ளது, இந்த பிரச்சினைகளுக்கு இந்த மெய்நிகர் மாநாடு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
அமேரி பனிப்பாறை தளம்: 2021-க்குள் 24% அதிகரிக்கும் - NCPOR கணி்ப்பு
 • அண்டார்டிகா கண்டத்தின் கிழக்கு கடற்கரையில், அமேரி பனிப்பாறை தளம் (Amery Ice Shelf) அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாகும்.
 • 2021-ஆம் ஆண்டில் அமேரி பனிப்பாறை மேலும் 24% விரிவடையும் என்று தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR) தனது கணிப்பை வெளியீட்டுள்ளது.
 • தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR) என்பது துருவ மற்றும் தென் பெருங்கடல்களில் நாட்டின் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனம் ஆகும். இது கோவா நகரில் அமைந்துள்ளது. 
 • NCPOR: National Centre for Polar and Ocean Research.
நகர்ப்புற வனத்திட்டம் - தொடக்கம்
 • 2020 ஜூன் 5-அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “நகர்ப்புற வனத்திட்டம்” (Nagar Van scheme) என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.
 • இத்திட்டம் நகர்ப்புற வன மேம்பாட்டிற்க்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்பட உள்ளன.
 • இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம்: உலக நிலப்பரப்பில் 2.5% மட்டுமே கொண்டுள்ள இந்தியாவில் உலக பல்லுயிர் பெருக்கம் (world biodiversity), 8% உள்ளது, இந்தியா உலக அளவில் 16% மனிதர்களையும் கால்நடைகளையும் கொண்டு உள்ளது.
 • மேலும், உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் நன்னீர் வெறும் 4% மட்டுமே கிடைக்கிறது. 
 • நகரமயமாக்கலுக்குப் பிறகு புனே நகரின் வார்ஜே பகுதி (Warje in Pune), பொது-தனியார் பங்களிப்புடன் வனநகரமாக உருவாக்கப்பட்டது. இதை எடுத்துக்காட்டாக கொண்டு நாட்டின் பிற பகுதிகளிலும் இத்திட்டம் தொடங்கப்படுகிறது.
பொருளாதார நிகழ்வுகள்
இந்திய ரிசர்வ் வங்கி "கட்டண உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி" உருவாக்கம் 
 • இந்திய ரிசர்வ் வங்கி 2020 ஜூன் 5-அன்று ரூ.500 கோடி கட்டண உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (Payment Infrastructure Development Fund) உருவாக்கியது. இந்த நிதிக்கு ரிசர்வ் வங்கி 250 கோடி ரூபாயை ஆரம்ப பங்களிப்பாக வழங்கியுள்ளது. மீதமுள்ள பங்கு நிதி அட்டை வழங்கும் வங்கிகள் வழியாக பெறப்படவுள்ளது. 
 • நாட்டில் விற்பனை உள்கட்டமைப்பு மற்றும் பிற டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
 • ந்தியாவில் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் குறித்து, 2019-21 ஆம் ஆண்டில் தொலைநோக்கு ஆவணத்தில் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
அறிவியல் தொழில்நுட்பம்
DRDO விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள 'SUMERU PACS'
 • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) விஞ்ஞானிகள் 'SUMERU PACS' என்ற பை அமைப்பை உருவாக்கியுள்ளனர், இந்த அமைப்பு PPE உடை உள்ளே 500 கிராம் ஒரு சிறிய பையுடனும் பயன்படுத்தப்பட உள்ளது. இது பாதுகாப்பு கவச உடை (PPER wearers) அணிபவர்களின் வியர்வையை குறைக்க உதவுகிறது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
11 மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு 
 • தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து ஜூன் 4-அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். 11 நிறுவனங்கள் விவரம்:
 • வோக்ஸ் வேகன், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி கார், ஹோண்டா, டொயோடோ, பி.எம்.டபிள்யூ லக்ஸ்ஜென் டயோயுவான், ஜாக்குவார் லேண்ட்ரோவர், ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் செவர்லெட், டெஸ்லா.
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு: விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு
 • சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வில் விலங்கின் பெரிய அளவிலான எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது. முதுகெலும்பு மற்றும் விலா எலும்பு கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் தோண்டப்பட்ட குழியில் ஏற்கனவே பானைகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. இதுவரை கிடைத்த எலும்புகள் அனைத்தும் சிறு சிறு துண்டுகளாகவே கிடைத்துள்ளன. தற்போது தான் பெரிய அளவிலான எலும்பு கூடு கிடைத்துள்ளது.
 • கீழடியை தொடர்ந்து கொர்த்தகை, மணவூர், சிவகலை, கொடுமணல் ஆகிய 4 கிராமங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
 • கீழடிக்கு அருகே மணலுாரில் நடந்த அகழாய்வில் 1 மீட்டர் நீளம், 50 செ.மீ., அகலத்துடன் அரை வட்ட வடிவ, உலைக் கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 • கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில், ஈமக்காடு இருந்ததற்கான தடயங்களாக 10 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
 • கீழடி அகரத்தில் நன்னீர் நத்தை ஓடுகள் அதிகமாக கிடைத்துள்ளன.
 • கீழடியில் வேளாண்மை, பாசனம், கால்நடை வளர்ப்பிற்கான ஆதாரங்களும், கொந்தகையை இடுகாடாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள்
பெண்கள் ஆசியக்கோப்பை கால்பந்து 2020, இந்தியா
 • 2022 AFC பெண்கள் ஆசியக்கோப்பை கால்பந்துப் போட்டியை 2022 (Women’s Asian Cup), இந்தியாவில் நடத்த ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு அனுமதியளித்துள்ளது.
 • 2021-ம் ஆண்டு FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2021 பிப்ரவரி 17 முதல் மார்ச் 7 வரை இப்போட்டி நடைபெறுகிறது. 
ஐதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டி 2020 - ரத்து
 • கொரானா அச்சுறுத்தல் காரணமாக இந்த 2020-ஆம் வருட ஐதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டியை ரத்து செய்வதாக உலக பாட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வருட ஹைதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டியை ரத்து செய்வதாக உலக பாட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
முக்கிய தினங்கள்
ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம் 
 • ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day 5 June 2019) ஜூன் மாதம் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 
 • 2020 சுற்றுச்சூழல் தின மையக்கருத்து (Theme): 'Biodiversity'.
 • 2020 சுற்றுச்சூழல் தின முழக்கம் (Slogan): 'Time for Nature'.
 • 2019 மையக்கருத்து: Beat Air Pollution 
 • 2018 மையக்கருத்து: Beat Plastic Pollution 
ஜூன் 5 - சட்டவிரோத மீன்பிடிப்புக்கு எதிரான சர்வதேச தினம் 
 • சட்டவிரோத மீன்பிடிப்புக்கு எதிரான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing) ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜூன் 6 - இரஷ்ய மொழி தினம் 
 • ஆண்டுதோறும் ஐ.நா. சபையால், இரஷ்ய மொழி தினம் (UN Russian Language Day) ஜூன் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது. 
 • நவீன இரஷ்ய இலக்கிய தந்தை-அலெக்சாண்டர் புஷ்கின் ஐ.நா. ரஷ்ய மொழி தினம், 'நவீன இரஷ்ய இலக்கியத்தின் தந்தை'யாகக் கருதப்படும், ரஷ்ய கவிஞரான அலெக்சாண்டர் புஷ்கின் (Aleksandr Pushkin) அவர்களின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது. 
ஜூன் 6 - தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் 
 • தமிழ் மொழி செம்மொழியென இந்திய அரசு ஏற்றுக் கொண்டு அறிவித்த நாள் ஜூன் 6 ஆகும். 
 • செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ் ஆகும். 
 • 2004 ஜூன் 6 அன்று, இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் தமிழ்மொழி செம்மொழி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
 • இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழ் இருக்கிறது. 
 • இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. 
 • தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post