ஐ. நா. அவையின் 'சரிபார்க்கப்பட்ட தகவல் திட்டம்' - தொடக்கம்
- கொரானா வைரஸ் தொடர்பாக தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், மக்களுக்கு கொரானா குறித்த துல்லியமான தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையிலும் ஐ. நா. அவைக்கான சா்வதேச தகவல் தொடா்புத்துறை "சரிபார்க்கப்பட்ட தகவல் திட்டம்" (Verified)என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- இந்தத் திட்டம், அறிவியல், ஒற்றுமை, தீா்வு என்ற மூன்று தத்துவங்களின் கீழ் செயல்பட்டு சரியான தகவலை மக்களிடம் கொண்டு சோக்க உதவும். அதோடு, பருவநிலை மாற்ற பாதிப்புகளைச் சமாளிப்பது மற்றும் ஏழ்மை, பசி போன்ற சவால்களுக்கு தீா்வு காணவும் இது உதவும், உலக மக்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து தன்னார்வ தகவலா்களாக வரவேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
- இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், ஜார்ஜியா, இந்தோனேசியா, லாத்வியா, லெபனான், மொரீஷிஸ், மெக்ஸிகோ, நார்வே, செனகல், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட இந்த 13 நாடுகளின் முயற்சி மூலம் ஐ. நா. எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு அதன் 132 உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
- Verified: An initiative to combat the growing scourge of misinformation.
இஸ்ரேல் கோலன் ஹைட்ஸ் பகுதியில் 'டிரம்ப் ஹைட்ஸ்' - குடியிருப்பு
- இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் 'டிரம்ப் ஹைட்ஸ்' என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பெயரில் புதிதாக குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது சிரியாவிடம் இருந்து கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னா், 1981-ஆம் ஆண்டில் இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலின் நிலப்பரப்பாக அங்கீகரிக்கும் உத்தரவில் அண்மையில் அமெரிக்கா கையெழுத்திட்டது.
நேபாள புதிய வரைபட சட்டத் திருத்த மசோதா-2020: மேலவையில் தாக்கல்
- இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய மூன்று பகுதிகளும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளன. இந்த மூன்று பகுதிகளையும் இணைத்து புதிய அரசியல், நிர்வாக வரைபடத்தை நேபாள அரசு தயாரித்து, அதன் நாடாளுமன்ற மக்களவையில் 'புதிய வரைபட சட்டத் திருத்த மசோதா' என்ற பெயரில் ஜூன்13-அன்று நிறைவேற்றியது.
- ஜூன் 14-அன்று நாடாளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மசோதா, மேலவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா் ஒப்புதல் அளித்த பிறகு, புதிய வரைபடம், அதிகாரப்பூா்வ ஆவணமாக பயன்பாட்டுக்கு வரும்.
குழுக்கள்
எம்.பி. லால் கமிட்டி - சில தகவல்கள்
- அஸ்ஸாம், பஜ்ஜன் எண்ணெய் வயலில் அண்மையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன, மேலும் இப்பகுதியில் 1000 பேர் குடியேற வழிவகுத்தது. 1,610-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்போது 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
- இதுபோன்ற எண்ணெய் வயல் தீ விபத்துகளுக்கு தீர்வு காண இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2009-இல். ஜெய்ப்பூரில் உள்ள ஐ.ஓ.சி.எல் முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து எம்.பி. லால் குழுவை (M B Lal Committee) இந்திய அரசு அமைத்தது.
- எம்.பி. லால் கமிட்டி எண்ணெய் கிணறுகளை நிறுவும் போது எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்து 118 பரிந்துரைகளை குழு அளித்திருந்தது. கமிட்டி அளித்த பரிந்துரைகளில் 94% செயல்படுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்
வங்கிகள் இணைப்பு - 7 பெரிய வங்கிகள், 5 சிறிய வங்கிகள்
- பாரத ஸ்டேட் வங்கியில் ஐந்து துணை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் 2017 ஏப்ரல் மாதம் இணைக்கப்பட்டன.
- விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடாவுடன் 2019 ஏப்ரல் 1-இல் இணைக்கப்பட்டது.
- நடப்பாண்டு ஏப்ரலில், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமா்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடனும் இணைக்கும் மிகப்பெரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடங்கி நிறைவடைந்தது.
- 2017-இல் 27 பொதுத் துறை வங்கிகள் இருந்த நிலையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு பொதுத்துறையில் ஏழு பெரிய வங்கிகளும், ஐந்து சிறிய வங்கிகளும் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
முதலாவது நீலகிரி காட்டெருமை கணக்கெடுப்பு 2020
- உலகளாவிய நிதியத்தின் உதவியுடன் இந்தியா சமீபத்தில் தமிழ்நாட்டின் நீலகிரி வனப்பிரிவு இந்தியன் கவுர் எனப்படும் நீலகிரி காட்டெருமை கணக்கெடுப்புப் பயிற்சியை (Indian Gaurs Estimation Exercise) முதன்முதலாக நடத்தியது.
- இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் முதல் மதிப்பீட்டு பயிற்சி இதுவாகும். கணக்கெடுப்பு பயிற்சியின் படி, இந்தப்பிரிவு முழுவதும் சுமார் 2,000 நீலகிரி காட்டெருமைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சில மதிப்பீட்டு விவரங்கள்;
- மாற்றங்களை எதிர்கொள்ளும் நீலகிரி காட்டெருமைகள்: மனித வாழ்விடங்களுக்கு அருகாமையால் ஏற்படும் விபத்துக்களால். நீலகிரி வனப் பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 60 காட்டெருமைகள் இறக்கின்றன,
- நீலகிரி காட்டெருமைகள் மனிதர்களுடனான அருகாமை, அவற்றின் வாழ்விடம் குறைந்து வருவது முக்கிய காரணி ஆகும், மேலும் இவற்றின் இருப்பு பெரும் பிறழ்வை எதிர்கொள்வதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- IUCN சிவப்பு பட்டியயலில் பாதிக்கப்படக்கூடிய பிரிவின் கீழ் நீலகிரி காட்டெருமை அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
- 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், இந்திய கவுர்களை அட்டவணை I-இன் கீழ் உள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
ஆரோக்கிய பாத்: சுகாதார வழங்கல் தொடர்பான நிகழ்நேர வலைத்தளம்
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுகாதார வழங்கல் சங்கிலி வளைத்தளத்தை (National Health Supply Chain portal) “ஆரோக்கிய பாத்” (Arogya Path) என்ற பெயரில் தொடங்கியுள்ளது, இது சுகாதாரப் பொருட்கள் குறித்த நிகழ்நேர இருப்பு, புதுப்பிப்பு தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
பதினோராம் வகுப்பு பாடத்திட்டம் - மாற்றம்
- பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த +1 பாடத்திட்டம், 2020-21 நிகழ் கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
- அதாவது, பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டுமே மாணவா்கள் தோவு செய்து படிக்கலாம்.
அரபிக்கடல் பகுதிகளில் 'மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்'
- கன்னியாகுமரியில் அரபிக்கடல் பகுதிகளில் ஜுன் 1-ம் தேதி முதல் ஜுலை 31-ம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடித் தடைக் காலமாக இருந்தது.
- இந்த ஆண்டு கொரானா ஊரடங்கால் மீன்பிடித் தடைக்காலம் 60 நாட்களுக்கு 45 நாட்களாக குறைக்கப்பட்டது, ஜுன் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மேற்குக் கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க அரசு அனுமதி அளித்தது.
- தற்போது, இந்த பகுதிக்குட்பட்ட குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்களில் ஜூன் 15 இரவு முதல் ஜுலை 31-ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் தொடங்குகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
கோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு, 4 ஆண்டுகளுக்கு தடைவிதிப்பு
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 வயதான தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து (Gomathi Marimuthu), ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது, மேலும் 4 ஆண்டுகளுக்கு அவரின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கோமதி, 2019 ஆசிய சாம்பியன்ஷிப்பில் அனபோலிக் ஸ்டீராய்டு நாட்ரோலோன் (Nandrolene) என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக சோதனை தெரியவந்துள்ளது.
- நாட்ரோலோன் ஒரு ஸ்டீராய்டு மருந்தாகும். இது இரத்த சோகை, ஆஸ்டியோபோரோசிஸ், கேசெக்ஸியா, மார்பக புற்றுநோய் போன்றவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
முக்கிய நபர்கள்
அமெரிக்க இராணுவ அகாதெமி பயிற்சி முடித்த முதல் சீக்கிய பெண் 'அன்மோல் நரங்'
- அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அன்மோல் நரங் (வயது 23) அந்நாட்டின் புகழ் வாய்ந்த அமெரிக்க இராணுவ அகாதெமியில் 4 ஆண்டு பயிற்சி முடித்தார். இதன் மூலம் இந்த பயிற்சியை முடித்த முதல் சீக்கிய பெண் என்ற பெருமையை அவா் பெற்றார்.
- இரண்டாவது லெப்டினன்ட் அந்தஸ்துக்கான பயிற்சியை முடித்துள்ளார். 2021 ஜனவரியில் ஜப்பானில் ஒகிநாவாவில் ராணுவ பணியை ஏற்கவுள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் - காலமானார்
- மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34) ஜூன் 14-அன்று காலமானார். இராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 1986-ம் ஆண்டு பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர்.
- ‘ஹை போ சே’ என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு (எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி) படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் அறியப்படும் நடிகர் ஆனார். இந்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. கடைசியாக இவர் நடித்து வெளியான ‘சிச்சோர்’ என்ற படம் மெகாஹிட் ஆகி இருந்தது.
இந்தியாவின் மூத்த கிரிக்கெட்வீரா் - வசந்த் ராய்ஜி - காலமானார்
- இந்தியாவின் மூத்த முதல் தர கிரிக்கெட் வீரா் வசந்த் ராய்ஜி (வயது 100) ஜூன் 13-அன்ற தெற்கு மும்பையில் முதுமை காரணமாக காலமானார். 1939-இல் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அணி சார்பில் நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானார்.
- 2020 ஜனவரி மாதம் 100-ஆவது வயதை கொண்டாடிய வசந்த் ராய்ஜி, கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
முக்கிய தினங்கள்
உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் - ஜூன் 15
- முதியோர் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 15 அன்று, உலக முதியோர் வன்கொடுமை தினம் (World Elder Abuse Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தின மையக்கருத்து: 'Lifting up Voices'.
Download this article as PDF Format