உலகின் மருந்தகம் - இந்தியா

  • இன்றைய கொரானா நோய்த் தொற்று அபாய காலத்தில் உலகின் மருந்தகமாக (Pharmacy of the World-India) இந்தியா திகழ்கிறது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பொதுச்செயலாளா் விளாதிமீா் நோரோவ் (Vladimir Norov)ஜூன் 21-அன்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் விவரம்:
  • கொரானா நோய்த் தொற்றை எதிர்த்து போராட உதவியாக அதற்குத் தேவையான மருந்துகளை இதுவரை 133 நாடுகளுக்கு இந்தியா விநியோகம் செய்துள்ளது. 
  • பாரம்பரிய மருந்து உற்பத்தியில் உலகின் மிகப் பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் 20 சதவீத பாரம்பரிய மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
  • இந்தியா உலக நாடுகளின் தடுப்பு மருந்துகளுக்கான தேவையில் 62 சதவீதம் பூா்த்தி செய்யப்படுகிறது.
  • மருந்து உற்பத்தியில் மிக நீண்ட அனுபவத்தையும் ஆழ்ந்த அறிவையும் கொண்டிருக்கும் இந்தியா, உயா்தரமான மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் முன்னணி நாடாகவும் திகழ்கிறது. 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பு நாடாக இந்தியா நுழைந்ததன் மூலமாக, முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (ஜூன் 15, 2001): சீனாவின் பெய்ஜிங் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட SCO அமைப்பு எட்டு உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பு முகமை ஆகும். 
  • இந்தியாவும் பாகிஸ்தானும் 2017-ஆம் ஆண்டில் இவ்வமைப்பில் இணைந்தன. 
  • இவ்வமைப்பின் நிறுவன உறுப்பினர்கள்: சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை அடங்கும்.
  • SCO: Shanghai Cooperation Organisation.
Post a Comment (0)
Previous Post Next Post