Current Affairs and GK Today May 16, 2020 - Download as PDF
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - ChAdOx1 nCoV-19" குரங்குகளிடம் சொதனை
சர்வதேச நிகழ்வுகள்WHO உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2020
- ஊட்டச்சத்து இலக்குகளை இழக்கும் இந்தியா: 2020 மே 12-அன்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட (WHO Global Nutrition Report 2020) உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி, 2025-ஆம் ஆண்டளவில் உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை தவறவிட்ட 88 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், மேலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் உள்நாட்டு ஏற்றத்தாழ்வுகளின் மிக உயர்ந்த விகிதங்களைக் கொண்டுள்ளது.
- நைஜீரியா இந்தோனேசியா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சமூகங்ளிடையே உள்ஷ ஏற்றத்தாழ்வுகள் மோசமானவையாக உள்ளன.
- இந்தியா ஊட்டச்சத்து இலக்குகளை இழக்கும் 4 குறிகாட்டிகள் (Indicators) விவரம்: ஸ்டண்டிங், இரத்த சோகை, குழந்தை பருவத்தில் அதிக எடை மற்றும் தாய்ப்பால்).
- இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் (Jenner Institute) ஜென்னர் நிறுவனம், ChAdOx1 nCoV-19" என்ற பெயரிலான கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை 06 குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் கொரோனா வைரசை தடுப்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளன.
- தற்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிற தடுப்பூசிக்கான ஊக்கம் அளிக்கிற அறிகுறிகளாக இது பார்க்கப்படுகிறது.
- கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி தடுக்கக்கூடியதாக அமையும் எனவும், கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி தடுக்கக்கூடியதாக அமையும்.
கொரானா ஒழிக்கப்பட்டதாக அறிவித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு 'ஸ்லோவேனியா'
- மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கொரானா நோய்த்தொற்று பரவலுக்கு முடிவு கட்டப்பட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரானா ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் இந்தியாவுக்கான கொரோனா நிதி - ரூ.7,500 கோடி
- கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சமூக உதவியை வழங்குவதற்காக உலக வங்கி (World Bank), ‘கோவிட்-19 சமூக பாதுகாப்பு பதிலளிப்பு’ (Accelerating India's COVID-19 Social Protection Response Program) என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) நிதி உதவி அளிக்கிறது மே 15-அன்று இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இதன்மூலம் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஆதரவு நிதி 2 பில்லியன் டாலர் ஆக (ரூ.15 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் - ஒத்திவைப்பு
- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அந்தப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினா்களாகக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.
- உலக அரங்கில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த அமைப்பில், பிராந்திய ரீதியிலும் மக்கள்தொகை ரீதியிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்று விமா்சிக்கப்படுகிறது.
- இந்தியா, ஜொமனி போன்ற நாடுகளுக்கு அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. கெரானா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பான சா்வதேச நாடுகளின் ஆலோசனைக் கூட்டங்கள் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்திய நிகழ்வுகள்
விவசாயம் சார்ந்த துறைகள் மேம்பாடு - ரூ.1,63,000 கோடிக்கான 11 அறிவிப்புகள் - வெளியீடு
- கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் மீட்டெடுக்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பலான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் சுயச்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான துறைக்கான சலுகை திட்டங்களை மே 13-அன்றும், வெளிமாநில தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கான சலுகை திட்டங்களை 3-வது கட்டமாக மே 14-அன்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
- 3-வது கட்டம்: பால் உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழிலில் இந்தியா முன்னோடியாக விளங்குவதாகவும், ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் கோடி மதிப்பிலான, விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்பாக 8 அறிவிப்புகள் நிர்வாக கட்டமைப்பு தொடர்பான 3 அறிவிப்புகள் என 11 அறிவிப்புகளை வெளியிட்டார். அறிவிப்புகள் விவரம்:
- ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் ரூ.74,300 கோடிக்கு விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
- பிரதமர் விவசாய நிதியில் இருந்து ரூ.18,700 கோடி வினியோகம் செய்யப்பட்டது.
- பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.6,400 கோடி விவசாயிகளால் பெறப்பட்டு உள்ளது.
- வேளாண் அடிப்படையிலான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி விடுவிக்கப்படும்.
- நுண் உணவு உற்பத்தி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 2 லட்சம் குறு உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பயனடையும்.
- உத்தரப் பிரதேசத்தில் மாம்பழம், ஜம்மு-காஷ்மீரில் குங்குமப்பூ, வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் சார்ந்த பொருள்கள், ஆந்திரத்தில் மிளகாய், தமிழகத்தில் மரவள்'ளிக்கிழங்கு ஆகியவை அதிகம் விளைவிக்கப்பட்டு அவை சாா்ந்த பொருள்கள் குறு உணவு நிறுவனங்கள் மூலம் விற்பனைக்கு வருகிறது. இவற்றின் ஏற்றுமதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- கடல் மற்றும் உள்நாட்டு மீன்பிடி தொழில், மீன்வளர்ப்பு தொழிலை மேம்படுத்த ரூ.11 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
- மீன்பிடி துறைமுகங்கள், சந்தைகள் போன்றவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.9 ஆயிரம் கோடி செலவிடப்படும்.
- கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க ரூ.13,343 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதுவரை 1½ கோடி பசுக்கள், எருமைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.
- கங்கை நதிக்கரையில் தேசிய மூலிகை தாவர வாரியத்தின் ஆதரவுடன் 2.25 லட்சம் ஹெக்டேரில் மூலிகை செடிகள் வளர்க்கப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை செடிகள் பயிரிடப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.
- கிராமப்புறங்களில் தேனீ வளர்ப்புக்கு ஆதரவு அளிக்கப்படும். இதற்காக ரூ.500 கோடியில் திட்டம் நிறைவேற்றப்படும்.
- ஆபரேஷன் பசுமை திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவரை தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகிய பயிா்களுக்காக மட்டும் மேற்கொள்ளப்பட்ட பசுமைத் திட்டம் (ஆபரேஷன் கிரீன்) அனைத்து பழங்கள், காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம்: தேசிய அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் - 1955-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தானிய வகைகள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்ற நிலை உருவாக்கப்படும்.
நீதிபதிகள், வழக்குரைஞா்கள் ஆடை நெறிமுறை கட்டுப்பாடுகள்
- கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில், மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வழக்குரைஞா்களின் ஆடை நெறிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அனுமதியளித்துள்ளது.
- இதன்படி, கரோனா தொற்று பரவலைத் தடுக்க உயா்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் ஆண், பெண் வழக்குரைஞா்கள், வெள்ளை சட்டை அல்லது வெள்ளை சல்வார் கமீஸ் உடன் வெண்ணிற கழுத்துப்பட்டை அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்கள் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நீதிமன்றத்துக்கு மேல்அங்கி மற்றும் நீண்ட அங்கி அணிந்து வரக்கூடாது.
உத்தரகண்ட் மாநிலத்தில் 'ரொட்டி வங்கி' திறப்பு
- பொது முடக்கம் காரணமாக பணியிழந்த மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளா்களுக்காக உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் பொது சமையலறை திட்டத்தின்கீழ் 'ரொட்டி வங்கி' தொடங்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம், பல்வேறு வணிகா் சங்கத்தைச் சோந்தவா்கள், மருந்து பொருள்கள் விநியோகிப்பாளா்கள் மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
பாதுகாப்பு விண்வெளி
2020 ஜூலை இறுதியில் இந்தியா வரும் '04 இரஃபேல் போர் விமானங்கள்'
- இந்திய விமானப் படைக்காக, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க மத்திய அரசு 2016-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல்கட்டமாக 4 ரஃபேல் போர் விமானங்கள், மே முதல் வாரத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருந்தன, கரோனா நோய்த்தொற்று சூழலால் 2020 ஜூலை இறுதி வாரத்தில் இவை இந்தியாவுக்கு வரவுள்ளன.
- இரஃபேல் விமானங்களுக்கான இந்திய தளங்கள் (2): இரஃபேல் போர் விமானங்களில் முதல் பிரிவு விமானங்கள், ஹரியாணா மாநிலம், அம்பாலா விமானப் படை தளத்தில் நிறுத்திவைக்கப்பட உள்ளன. இந்த விமானப் படை தளம், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ளது.
- இரண்டாவது பிரிவு விமானங்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா தளத்தில் நிறத்தப்பட உள்ளன. இதையொட்டி, இவ்விரு தளங்களிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த விமானப் படை தரப்பில் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ICGS சச்சேத் ரோந்து கப்பல், C-450, C-451 இடைமறிப்பு படகுகள்
- கோவா தலைநகா் பனாஜியில் மே 15-அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சச்சேத்' (ICGS Sachet) என்ற ரோந்து கப்பல் மற்றும் C-450, C-451 இடைமறிப்பு படகுகள் (Interceptor Boats) ஆகியவற்றை, டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
- நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்ட புதிய கப்பல்களுடன் சோத்து இந்தியக் கடலோரக் காவல்படையில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை 150-ஆக உயா்ந்துள்ளது.
- 'சச்சேத்' ரோந்து கப்பல்: ரோந்து கப்பலானது காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 'சச்சேத்' ரோந்து கப்பலானது கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடவல்ல இந்தக் கப்பல் ஒரு ஹெலிகாப்டரையும் 4 அதிவிரைவுக் கப்பல்களையும் தாங்கும் வகையில் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகளும், தொலைத்தொடா்புக் கருவிகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
- இடைமறிப்பு படகுகள்: C-450, C-451 அதிவிரைவு கப்பல்கள் குஜராத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள L&T கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன. உள்நாட்டுக் கருவிகளைக் கொண்டு கட்டப்பட்ட அந்தக் கப்பல்கள் குறைவான நேரத்தில் அதிகபட்ச வேகத்தை அடைந்து பயணிக்கும் ஆற்றல் கொண்டவை, நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்துப் பணிகளில் ஈடுபட உள்ளன.
- பாதுகாப்புத் துறை இணையமைச்சா் - ஸ்ரீபாத் யெசோ நாயக், பாதுகாப்புத்துறை செயலா் - அஜய் குமார், இந்தியக் கடலோரக் காவல்படை இயக்குநா் - டி.ஜி.கிருஷ்ணசுவாமி நடராஜன்
- ICGS: Indian Coast Guard Ship.
பால் துறைக்கு மூலதன கடன்களில் 2% வட்டி விலக்கு என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்துகிறது
- பால் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பால் கூட்டுறவு மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (SDC&FPO) ஆதரவளிப்பதற்காக மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணை அமைச்சகம் “பால் துறைக்கான மூலதன கடன்களுக்கான வட்டி குறைப்பு” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 100 கோடியின் பட்ஜெட் ஒதுக்கீடு 2020-21 காலப்பகுதியில் செயல்படுத்தப்படும்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
வங்கக் கடலில் - 'ஆம்பன்' புயல்
- தென்கிழக்கு வங்கக் கடலில் 2020 மே 16-முதல் 'ஆம்பன்' புயல் (Cyclone Amphan) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த பெயர் தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயலுக்கு தெற்காசிய நாடுகள் பெயர் சூட்டும் நடைமுறையின் ஒரு அம்சமாக தாய்லாந்து இந்த முறை புயலுக்கு பெயர் சூட்டியுள்ளது.
ஜூன் 5-ஆம் தேதி தொடங்கும் 'தென்மேற்கு பருவமழை'
- தென்மேற்கு பருவமழை 4 நாள்கள் தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மே 15-அன்று கணித்துள்ளது. அவற்றின் விவரம்
- தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும். இந்த ஆண்டு 4 நாள்கள் தாமதமாக ஜூன் 5-ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்மேற்கு பருவமழை, அந்தமான்-நிகோபார் தீவுகளை மே 16-ஆம் தேதிக்குள் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான 4 மாதங்கள், தென்மேற்கு பருவ மழை காலமாகும். இந்த மழையால், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பயன்பெறுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீதம், தென்மேற்கு பருவமழையால் கிடைக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பயன்பெறுவதால், விவசாயத்துக்கும் அணைகள் நிரம்பவும் இந்த மழை மிக அவசியமானதாகும்.
டெல்லியில் ஒரு மாத இடைவெளியில் 4-வது முறை நிலநடுக்கம்
- தலைநகர் தில்லியில் ஒரு மாதத்தில் 4ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
- தில்லியில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்படும் 4ஆவது நிலநடுக்கம் இதுவாகும். ஏற்கெனவே தலைநகர் தில்லியில் ஏப்ரல் 12, 13 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
ஜெர்மனியில் 'அணு உலை குளிரூட்டு கோபுரங்கள் அழிப்பு'
- மின்சாரத்துக்காக அணு மின் நிலையங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த நாட்டு அணு மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. 2022-ஆம் ஆண்டுக்குள் அணு மின் நிலையங்கள் அனைத்தையும் மூட ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.
- இந்தச் சூழலில், பிலிப்ஸ்பா்க் நகர அணு மின் நிலைய மின் உலையில் 2011-ஆம் ஆண்டு மற்றும் 2019-ஆம் இயக்கம் நிறுத்தப்பட்ட இரு குளிரூட்டு கோபுரங்கள் மே 15-அன்று அழிக்கப்பட்டன.
விளையாட்டு நிகழ்வுகள்
2020 பன்டெஸ்லிகா கால்பந்து - தொடக்கம்
- ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான கிளப் கால்பந்து போட்டியான பன்டெஸ்லிகா, ஜெர்மனியில் மே 16-முதல் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் தொடங்கியது. 57-வது பன்டெஸ் லிகா கால்பந்து தொடர் கொரோனா வைரஸ் அச்சத்தால் 2020 மார்ச் 13-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றுள்ளன.
முக்கிய நபர்கள்
ஸ்ரீ சாரதா மட சா்வதேச துணைத் தலைவர் - பிரவாஜிக அஜயப்ராண மாதா
கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ சாரதா மடம், ராமகிருஷ்ண-சாரதா மிஷன் ஆகியவற்றின் சா்வதேச துணைத் தலைவராக இருந்த பிரவாஜிக அஜயப்ராண மாதா (வயது 93) திருவனந்தபுரத்தில் மே 14-அன்று காலமானார். திருச்சூா் மாவட்டம் குறூரைச் சோந்த அவா் தனது 25-ஆம் வயதில் ஸ்ரீராமகிருஷ்ண-சாரத மடம் நடத்தி வந்த பள்ளியில் ஆசிரியையாகப் பணிக்குச் சோந்தார்.
முக்கிய தினங்கள்
- இந்தியாவில் அருகிவரும் உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை, தேசிய அருகிவரும் உயிரினங்கள் தினம் (National Endangered Species Day) கொண்டாடப்படுகிறது.
- இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN), உலகில் குறைந்தது 40% இனங்கள் விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகள் உலகம் முழுவதும் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.
மே 16 - சிக்கிம் மாநில தினம்
- 2020 மே 16-அன்று, சிக்கிம் மாநிலம் தனது 45-வது மாநில தினத்தை (Sikkim Statehood Day) கொண்டாடியது.
- 1975-ஆம் ஆண்டு மே 16-அன்று சிக்கிம், இந்திய ஒன்றியத்தின் 22-வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
- சீக்கிம் மாநிலம் சீனா, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளை பகிர்ந்துகொண்டுள்ளது.
மே 16 - சர்வதேச ஒளி தினம்
- ஐ.நா. சபை சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச ஒளி தினம் (International Day of Light), மே 16 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- லேசர்-ஐ கண்டுபிடித்த, அமெரிக்காவை சேர்ந்த இயற்பியலாளர் மற்றும் பொறியாளர் தியோடர் மைம்மன் அவர்களின் நினைவாக சர்வதேச ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- சமாதானத்துடன் இணைந்து வாழும் சர்வதேச தினம் (International Day of Living Together in Peace), மே 16 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- உலக அளவில் சமூகங்கள் மற்றும் தனிநபர்களிடையே, வளர்ச்சி மற்றும் சமாதானத்தை ஊக்குவிப்பதற்கான நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- Download this article as PDF Format