Current Affairs and GK Today May 23 and 24, 2020 - Download as PDF
Current Affairs and GK Today May 24, 2020 |
சர்வதேச நிகழ்வுகள்சீன இராணுவ பட்ஜெட் 2020 - ரூ.13,50,000 கோடி
- சீனா நாடு, தன் இராணுவ பட்ஜெட்டுக்கு, 13 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இது, இந்திய ராணுவ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
- அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ராணுவத்துக்கு அதிக நிதி செலவு செய்யும் நாடாக, சீனா உள்ளது. கடந்த 2019-இல், 13 லட்சத்து, 35 ஆயிரம் கோடி ரூபாயைஒதுக்கியது.
- 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, ராணுவத்துக்கான பட்ஜெட் அதிகம் உயர்த்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
- இந்தியா, 2020-இல் ராணுவ பட்ஜெட்டுக்கு, 4 லட்சத்து, 71 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் ஒதுக்கியது.
- அமெரிக்கா, கடந்த ஆண்டு, இராணுவ பட்ஜெட்டுக்கு, 55 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது'
- சீனா வின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைபடுத்தும் மசோதா, சீன பாராளுமன்றத்தில் மே 22-அன்று தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த தேசிய பாதுகாப்பு மசோதா, ஹாங்காங்கின், 'ஒரு நாடு, இரு கொள்கை' என்ற நடைமுறைக்கு எதிரானதாக கருதப்படுகிறது.
கொரானா
தோற்று உயிரிழப்பு -
அமெரிக்காவில்
3
நாட்களுக்கு
அரைக்கம்பத்தில் பறக்கும்
தேசியக் கொடி
- அமெரிக்காவில் அடுத்த மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிடும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே 22-அன்று தெரிவித்துள்ளார்.
- உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் நிகழந்துள்ளது. அங்கு இதுவரை, 16,20,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 96,354 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் நினைவாக தேசியக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப் பட்டுள்ளது.
COVID-19:
உலகளாவிய
சிறந்த10
திட்டங்களில்
இந்தியாவின் 'KHUDOL'
தேர்வு
- COVID-19 தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கான உலகளாவிய முதல் 10 முன்முயற்சி திட்டங்களில் ஒன்றாக இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் 'KHUDOL' என்ற முன்முயற்சி திட்டத்தை, ஐக்கிய நாடுகள் சபை 2020 மே 22-அன்று, பட்டியலிட்டுள்ளது.
- KHUDOL என்பது மணிப்பூரை சேர்ந்த 'Ya_All' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முன்முயற்சி திட்டம் ஆகும். இந்த முயற்சியின் கீழ், LGBTQ சமூகம், தினசரி கூலி தொழிலாளர்கள், எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவத்தை வழங்கப்படுகிறது.
இந்திய நிகழ்வுகள்இந்தியாவில் 2.06 லட்சம் PPE Kits உற்பத்தி - உலகில் இரண்டாவது இடம்
- உலகில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE kits) உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக 2020 மே 21-அன்று, இந்தியா மாறியுள்ளது.
- உலகில் தனிநபர் பாதுகாப்பு உபகரண உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது.
- உற்பத்தியை PPE தரத்தை பராமரிக்க ஜவுளி அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு, 2.06 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. இது நாட்டின் அதிகபட்ச திறன் ஆகும். சராசரியாக, இந்தியா 1 லட்சம் PPE கிட்களை உற்பத்தி செய்கிறது. இந்த தரவுகளை சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது.
- ஒரு தனிநபர் பாதுகாப்பு உபகரணம், ஷூ கவர், கையுறைகள், கண் கவசம், முகமூடி மற்றும் கவுன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- PPE: Personal Protective Equipment
பிரதான்
மந்திரி கிராம சதக் யோஜனா -
தேங்காய்
நார் துணிகளை பயன்படுத்த
ஒப்புதல்
- பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (Pradhan Mantri Gram Sadak Yojana) எனப்படும் பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், கிராமப்புற சாலை கட்டுமானத்திற்கு தேங்காய் நார் துணிகளை (Coir Geo Textiles) பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது
- ஜியோடெக்ஸ்டைல்ஸ் எனப்படுபவை தேங்காய் நாரினால் ஆனவை ஆகும், இவை 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும். இது மண்ணை வளமாக்குகிறது.
- இதை தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (National Rural Infrastructure Development Agency) செய்ய உள்ளது.
- பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் மூன்றாம் கட்டம் 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது.
- இது 1,25,000 கி.மீ பாதைகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
வெளிநாடுகளில்
வசிக்கும் இந்தியர்களுக்கான
அட்டை -
சில
தகவல்கள்
- வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகம் திரும்ப உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை மே 22-அன்று அளித்துள்ளது.
- இதன்மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை (OCI) வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த இந்தியர்கள், அவர்தம் குழந்தைகள் (மைனர்) அவசர தேவைக்காக இந்தியா வர அனுமதிக்கப்படுகிறது.
- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 'வந்தே பாரத்' திட்டம் மூலம் சிறப்பு விமானம் மற்றும் கப்பல்களில் பயணிக்க முடியும். வர்த்தக ரீதியில் விமானங்கள் இயக்கப்படும் போது, அவர்கள் தாயகம் திரும்ப முடியும்.
- OCI: Overseas Citizenship of India.
MNREGA
திட்டம்
-
பயனாளிகளுக்கு
ரூ.
170 கோடி
வழங்கல்
- மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட (MNREGA) தொழிலாளர்களுக்கு இந்திய அரசு 2020 மே 21-அன்று, ரூ. 170 கோடியை வழங்கியது.
- கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மூலம் பயனாளிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டது.
- 2020 ஏப்ரல் 20 முதல் MNREGA திட்டத்தின் கீழ் 14,000-க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களை திணைக்களம் எடுத்துள்ளது. இதில் 8,300 பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா வீட்டுத் திட்டங்கள் மற்றும் 1,670 நீர் பாதுகாப்பு திட்டங்கள் அடங்கும்.
- ஜம்மு-காஷ்மீரில் மட்டும் சுமார் 5.28 லட்சம் நபர் நாட்கள் இந்த திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன
- MNREGA: Mahatma Gandhi Rural Employment Guarantee Act.
நியமனங்கள்
07
வெளிநாட்டு
தூதர்களுக்கு 'டிஜிட்டல்
முறையில் நியமன அங்கீகாரம்'
- ஏழு நாடுகளைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர்களுக்கு, குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், 'காணொலி காட்சி முறை' வாயிலாக அங்கீகாரம் வழங்கினார்.
- வெளிநாட்டு தூதர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு வழக்கமாக இராஷ்டிரபதி பவனில் நடைபெறும், கொரோனா பரவல் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக, 'காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
- தூதர்கள் - நாடுகள்
- சோ ஹூய் சோல் - வட கொரியா
- அப்துல் வகாப் ஹைதரா - செனகல் குடியரசு
- ரோகர் கோபால் - டிரினிடாட் மற்றும் டோபாகோ குடியரசு
- சாந்தி பாய் ஹனுமன்ஜி - மொரீஷியஸ்
- பேரி ராபர்ட் ஓபேரல் - ஆஸ்திரேலியா
- மென்ட்ரி எரிக் கமிலி - கோடே டெல்வோர்
- ஜாக்குலின் முகன்கிரா - ருவாண்டா.
உலக
சுகாதார அமைப்பின் செயற்குழு
தலைவர்ராக 'ஹர்ஷவர்தன்'
பொறுப்பேற்பு
- உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் 2020 மே 22-அன்று பொறுப்பேற்றார்.
- உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவில், 34 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். இக்குழுவின் தலைவராக, ஜப்பானைச் சேர்ந்த, ஹிரோகி நகாடனியின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து, புதிய தலைவராக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தேர்வு செய்யப்பட்டார்.
- சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின் செயற்குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகநடந்தது. இதில், செயற்குழு தலைவராக ஹர்ஷ் வர்த்தன் பொறுப்பேற்றார்.
- 2020-ஆம் ஆண்டு இந்த பதவிக்கு இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை நியமிப்பது என்று ஏப்ரல் 19-ந் தேதி 194 நாடுகள் அடங்கிய உலக சுகாதார சபை ஒப்புதல் அளித்தது.
- இந்தக் குழு, ஆண்டுக்கு இரண்டு முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு, இந்தக் குழு பரிந்துரை வழங்கும்.
ஐ.நா.
சபைக்கான
'இந்தியாவின்
புதிய நிரந்தர துாதராக
'டி.எஸ்.திருமூர்த்தி
பொறுப்பேற்பு'
- ஐக்கிய நாடுகள் சபைக்கான, இந்தியாவின் புதிய நிரந்தர துாதராக, டி.எஸ்.திருமூர்த்தி, 2020 மே 9-அன்று பொறுப்பேற்றார்.
- 2016-ம் ஆண்டிலிருந்து ஐ.நாவுக்கான நிரந்தர தூதராக செயல்பட்ட அக்பரூதீன் ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து திருமூர்த்தி அண்மையில் நியமிக்கப்பட்டார்.
மாநாடுகள்
அணிசேரா
இயக்க நாடுகளின் சுகாதார
அமைச்சர்கள் கூட்டம்-2020
- 2020 மே 20-அன்று, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அணிசேரா இயக்கம் (NAM) நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு அஜர்பைஜான் குடியரசு சுகாதார அமைச்சர் திரு. ஓக்டே ஷிராலியேவ் தலைமை தாங்கினார்.
- NAM: Non-Aligned Movement.
பொருளாதாரம்/ வணிக நிகழ்வுகள்
2018-19
அரசாங்க
கடன் குறித்த நிலை அறிக்கை
-
வெளியீடு
- ஒன்றிய நிதி அமைச்சகம், 2018-19-ஆண்டின் அரசாங்க கடன் குறித்த நிலை அறிக்கையை (Status Paper on Government Debt) 2020 மே 22-அன்று, வெளியிட்டது.
- இந்த அறிக்கையின்படி, மையங்கள் மற்றும் மாநிலங்களின் ஒட்டுமொத்த கடன், 2018 மார்ச் மாதத்தில் 68.7% குறைந்து 2019-இல் 68.6% ஆக குறைந்துள்ளது.
- இந்தியாவின் தற்போதைய கடன் ரூ .1.3 கோடி கோடியாக உள்ளது. அரசாங்க கடனுக்கான நிலை அறிக்கை 2010 முதல் நிதி அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
ரெப்போ
வட்டி விகிதம் 4
சதவீதமாக
குறைப்பு
- ரெப்போ ரேட் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல்,
- வங்கிகள் தங்கள் பணத்தை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் போது அளிக்கப்படும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- இந்த வட்டி குறைப்பால் வீடு மற்றும் வாகன கடன் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
- இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மே 22-அன்று தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கூடுதல் தகவல்கள்:
- உலக பொருளாதாரம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை சுருங்கக்கூடும். உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- மானாவாரி சாகுபடி 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
- இந்தியாவில் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது
- கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத அவகாசம் அளிக்கப்படுகிறது. கடன் தவணைகளை செலுத்துவதற்கான அவகாசம் ஜூன் 1 முதல் ஆகஸ்டு 31 வரை அளிக்கப்படுகிறது.
மத்திய
வரிகளில் மாநிலங்களின்
பங்குத்தொகை -ரூ.
92 ஆயிரம்
கோடி விடுவிப்பு
- மத்திய வரிகளில் ஏப்ரல், மே மாதங்களுக்கான பங்குத்தொகையாக ரூ. 92,077 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் ஏப்ரல் மாத பங்குத் தொகை ரூ. 46,038 கோடியே 10 லட்சமாகும். மே மாத பங்குத் தொகை ரூ. 46,038 கோடியே 70 லட்சமாகும். இந்த இக்கட்டான கால கட்டத்தில், மாநிலத்தின் தடையற்ற செலவினங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான பங்காக 41 சதவீதத்தை ஒதுக்க 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்திருந்தது. முன்னதாக 14-ஆவது நிதிக்குழு, மாநிலங்களுக்கு 42 சதவீத பங்குத்தொகையை வழங்க பரிந்துரைத்திருந்தது.
உணவு
விநியோக துறையில் இறங்கி
உள்ள 'அமேசான்'
நிறுவனம்
- இணையதள உணவு விநியோக நிறுவனங்களான ஜொமாடோ,ஸ்விக்கிக்கு போட்டியாக உணவு விநியோக துறையில் இணைய வணிக நிறுவனம் அமேசான் இறங்கி உள்ளது.
- வணிக ஆலோசனை நிறுவனமான மார்க்கெட் ரிசர்ச் பியூச்சர் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆன்லைன் உணவு வர்த்தகம் 16 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்து 2023-ம் ஆண்டில் 17.02 பில்லியன் டாலர்களை எட்டும் என கூறி உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உணவுதொழில் 4 பில்லியன் டாலரில் இருந்து 15 பில்லியன் டாலராக அதிகரிக்கவாய்ப்பு உள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என அறிவிக்கப்படவுள்ள 'மேற்கு தொடர்ச்சி மலைகள்'
- மேற்கு தொடர்ச்சி மலைகள் விரைவில் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் நிறைந்த பகுதியாக (Ecologically Sensitive Areas) அறிவிக்கப்பட உள்ளது.
- மேற்குத் தொடர்ச்சி மலையை (Western Ghats) சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் நிறைந்த பகுதி என்று அறிவிப்பது தொடர்பாக, 2020 மே 21-அன்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காணொலி காட்சி முறை மூலம் மாநில அரசுகளின் முதலமைச்சர்களுடன் உரையாடினார்.
- இந்த உரையாடலில் பங்கேற்ற மாநிலங்களில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை அடங்கும்.
- டாக்டர் கஸ்துரிரங்கன் குழு: இந்திய அரசு, டாக்டர் கஸ்துரிரங்கன் தலைமையீல் ஒரு உயர் மட்ட செயற்குழுவை அமைத்தது. டாக்டர் கஸ்துரிரங்கன் குழு (Dr Kasturirangan committee), சுற்றுச்சூழல் உணர்திறன் நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய மாநிலங்களில் புவியியல் பகுதிகளை இந்த குழு அடையாளம் கண்டது.
- இந்தக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அந்த பகுதிகளை சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகள் என அறிவிக்க வரைவு அறிவிப்பை வெளியிட்டது.
பல்லுயிர்
பாதுகாப்பு குறித்த ஐந்து
துவக்க முயற்சி திட்டங்கள்
-
அறிமுகம்
- 2020-ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி, உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஒன்றிய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பல்லுயிர் பாதுகாப்பு குறித்த ஐந்து துவக்க முயற்சி திட்டங்களை தொடங்கியது.
- ஐந்து துவக்க முயற்சி திட்டங்கள் விவரம்:
- பல்லுயிர் சமரக்ஷன் இன்டர்ன்ஷிப் திட்டம் (Biodiversity Samrakshan Internship Programme), இந்த திட்டம் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை பற்றி அறிய விரும்பும் 20 மாணவர்களை 1 ஆண்டு காலத்திற்கு முதுகலை பட்டப்படிப்பில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
- ஆபத்தான உயிரினங்களின் சட்டவிரோத கடத்தலை தடுக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அமைப்பில் இந்த பிரச்சார திட்டம்
- வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் "அனைத்து விலங்குகளும் இடம்பெயரவை தேர்வுசெய்வதில்லை" (Not All Animals Migrate by Choice) பிரச்சார இயக்கம்.
- 2002 பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் தொடர்பானஇணையக்கருத்தரங்கம் (Webinar series on Biodiversity Conservation and Biological Diversity Act, 2002).
- உலக வனவிலங்கு நிதி மாதிரி கட்டமைப்புப் பேரவை (World Wildlife Fund Model Conference of Parties) தொடங்கப்பட்டது. இது இளைய தலைமுறையினரை பல்லுயிரியலை நோக்கி ஈற்கும்.
உம்பன்
அதி தீவிர புயல் -
பாதிப்பு
-
தகவல்கள்
- வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மே 17-ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. அதி தீவிர புயலாக மாறிய உம்பன் வடக்கு மற்றும் -வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து, மேற்கு வங்கத்தின் திஹா மற்றும் வங்கதேசத்தின், ஹத்தியா தீவுகள் இடையே, சுந்தரவனப்பகுதியில் மே 20-அன்று மாலை கரையை கடந்தது.
- இந்த புயலால் 72-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் கோடி சேதம் அடைந்தததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அறிவித்தார்.
- மே 22-அன்று பிரதமர் மோடி முதல்வர் மம்தா பானர்ஜீயுடன் இணைந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டனர்.
- புயல் பாதித்த மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி மற்றும் ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 500 கோடியும் நிவாரண நிதியாக அறிவித்தார்.
அரசியலமைப்பு நிகழ்வுகள்
பொது
நிதி விதிகள் (GFR
2017) சட்டத்திருத்தம்
-
சில
தகவல்கள்
- ரூ. 200 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, 2020 மே 21-அன்று இந்திய அரசு பொது நிதி விதிகளை (General Financial Rules 2017) திருத்தியது.
- ஆத்மா நிர்பர் பாரத் அபியான் திட்ட த்திற்காக, 2017-ஆம் ஆண்டின் பொது நிதி விதிகள் (GFR 2017) மத்திய அரசால் திருத்தப்பட்டது.
- புதிய திருத்தத்தின் கீழ், ரூ .200 கோடி மதிப்புள்ள அரசு கொள்முதல் செய்வதில் இனிமேல் உலகளாவிய டெண்டர்கள் அனுமதிக்கப்படாது.
- GFR விதிகள் என்பது பொது நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையாளும் விதிகளின் தொகுப்பாகும். இவை முதலில் 1947 இல் வெளியிடப்பட்டன. 1963 மற்றும் 2005 இல் திருத்தப்பட்டன.
சுகாதார நிகழ்வுகள்
சுகாதாரப்
பணியாளர்களுக்கு 'ஹைட்ராக்ஸி
குளோரோகுயின்'
மருந்து
-
ICMR அனுமதி
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி, கொரானா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள்தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் கொரானா அல்லாத மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
- HCQ: Hydroxychloroquine/Hydroxychloroquine sulfate/Formula: C18H26ClN3O
- ICMR: Indian Council of Medical Research.
இந்தியாவில்
கொரோனா இறப்பு விகிதம் 3.06%
- கொரோனாவால் உலகில் இறப்பு விகிதம் 6.65 ஆக உள்ள நிலையில் இந்தியாவில் இறப்பு விகிதம் 3.06% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மே 21-அன்று தெரிவித்துள்ளது.
- கொரோனாவால் உலகில் இறப்பு விகிதம் 6.65 ஆக உள்ள நிலையில் இந்தியாவில் இறப்பு விகிதம் 3.06% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மே 21-அன்று தெரிவித்துள்ளது.
மந்தை
எதிர்ப்பு சக்தி -
சில
தகவல்கள்
- இந்தியா தனது மக்கள் தொகையில் 60 சதவீதம் பேரிடம் ஹெர்ட் இம்யூனிட்டி (Herd immunity) எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்கி 7 மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
- மந்தை எதிர்ப்பு சக்தி என்பது மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு வைரஸை செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, பிறருக்கு நோய் பரவாமல் தடுப்பதாகும். மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் இந்தியா உள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கல்வி நிகழ்வுகள்ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்க UGC - ஒப்புதல் அளிப்பு
- மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) ஒப்புதல் அளித்துள்ளது.
- தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்கனவே இருந்த ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்பை படிக்கும் நடைமுறைக்கு UGC ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 3 ஆண்டுகளில் ஒரு மாணவருக்கு இரு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும்.
- மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகள் படிக்கும் நடைமுறை கடந்த 2016ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
தேசிய
தேர்வு அபியாஸ் செயலி -
2 லட்சம்
பேர் பதிவிறக்கம்
- பொறியியல் நுழைவுத்தேர்வு (JEE-MAIN) மற்றும் நீட் (NEET) தேர்வுக்கு தயாராகும் மாணவா்களுக்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், தேசிய சோதனை நிறுவனத்தால் (NTA) அறிமுகப்படுத்தப்பட்ட 'தேசிய தேர்வு அபியாஸ் செயலி'யின் (National Test Abhyas) பயன்பாடு அதிகரித்துள்ளது.
- 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனா். இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த செயலி மூலமாக மாதிரித் தோவில் கலந்து கொண்டுள்ளனா்.
புத்தக வெளியீடு
Hop
On: My Adventures on Boats, Trains and Planes - Ruskin Bond
- பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், ‘ஹாப் ஆன்: மை அட்வென்ச்சர்ஸ் ஆன் போட்ஸ், டிரைன்ஸ் மற்றும் பிலேன்ஸ்’ என்ற தலைப்பிலான ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார். 2020 மே 19-அன்று, இவரது 86-வது பிறந்தநாளை முன்னிட்டு மின் புத்தக வடிவம் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
முன்னாள்
முதல்வர் ஜெயலலிதாவின் வேதா
இல்லம் -
நினைவு
இல்லமாக மாற்றம்
- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு மே 22-அன்று ஆளுநர் ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
- அவசர சட்டத்தின் மூலம், 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' என்ற பெயரில் அமைத்து பணிகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேதா இல்லத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது.
- அறக்கட்டளை தலைவராக முதல்வர், உறுப்பினர்களாக துணை முதல்வர், செய்தித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இருப்பர். இந்த அறக்கட்டளை, வேதா நிலையம் இல்லத்தை பராமரிக்கவும், அங்குள்ள அனைத்து அசையும் சொத்துக்களை பாதுகாக்கவும், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே
நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்
-
2020 செப்டம்பர்
முதல் அமல்
- தமிழ்நாட்டில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், 2020 செப்டம்பர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
- மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சர்களிடமும், டில்லியில் இருந்தது, காணொலிகாட்சி வாயிலாக மே 22-அன்று ஆலோசனை நடத்தினார்.
- இந்த ஆலோசனையில், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மேற்கொண்ட தகவலை தெரிவித்தார்.
விளையாட்டு நிகழ்வுகள்
ஓர்
ஆண்டில் ரூ.
284 கோடி
வருமானம் -
நவோமி
ஒசாகா -
சாதனை
- போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா (22 வயது) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
- நவோமி ஒசாகா, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார்.
- நான்கு முறையாக முதலிடத்தைப் பிடித்த மெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (37 வயது) இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
- 1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டியுள்ளார்.
- 2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டுள்ளது.
சர்வதேச
பேட்மிண்டன் போட்டித்தொடர்கள்
2020
- புதிய
அட்டவணை வெளியீடு
- சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பேட்மிண்டன் தொடர்கள் - தேதிகள்
- ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் தொடர், ஐதராபாத் - 2020 ஆகஸ்டு 11 முதல் 16 வரை
- சயத் மோடி நினைவு சர்வதேச போட்டி, லக்னோ - 2020 நவம்பர் 17 முதல் 22 வரை
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர், டெல்லி - 2020 டிசம்பர் 8 முதல் 13 வரை
- உலக டூர் இறுதி சுற்று, குவாங்ஜோ, சீனா - டிசம்பர் 16 முதல் 20 வரை
- மலேசிய ஓபன், கொரியா ஓபன், சீனா ஓபன், ஜப்பான் ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்ச் ஓபன் - செப்டம்பர், அக்டோபர் 2020.
முக்கிய தினங்கள்
மே
23
- மகப்பேறியல்
ஃபிஸ்துலா முடிவுக்கான சர்வதேச
தினம்
- ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மகப்பேறியல் ஃபிஸ்துலாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் (International Day to End Obstetric Fistula), மே 23 அன்று கடைபிடிக்கப்படுகிறது. மகப்பேறியல் ஃபிஸ்துலா மிகவும் கடுமையான மற்றும் சோகமான பிரசவ காயங்களில் ஒன்றாகும். இந்த தினம், மகப்பேறியல் ஃபிஸ்துலாவிற்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதை ஊக்குவிக்கிறது.
- 2020 மையக்கருத்து: "End gender inequality! End health inequities! End Fistula now!".
மே
23
- மன்னர்
பெரும்பிடுகு முத்தரையர்
பிறந்தநாள்
- மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,345-ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் 2020 மே 23-அன்று தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
Download this article as PDF Format