TNPSC Current Affairs May 21-22, 2020 - Download as PDF

Current Affairs and GK Today May 21-22, 2020 - Download as PDF 
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியா-பங்களாதேஷ் இடையே 'உள்நாட்டு நீர் போக்குவரத்து , வர்த்தக நெறிமுறை ஒப்பந்தம்' - தகவல் தொகுப்பு 
  • இந்தியாவும் பங்களாதேஷும் 'உள்நாட்டு நீர் போக்குவரத்து மற்றும் வர்த்தக நெறிமுறை' ஒப்பந்தத்தின் (Inland Water Transit and Trade Protocol) இரண்டாவது சேர்க்கையில் பங்களாதேஷ் நாட்டில் 2020 மே 20-அன்று, கையெழுத்திட்டன. புதிய நெறிமுறைகள் விவரம்:
  • புதிய நெறிமுறையின் கீழ், நாடுகள் நியமிக்கப்பட்ட நெறிமுறை பாதையில் செயல்படும்.
  • கையொப்பமிடப்பட்ட புதிய சேர்க்கையின் கீழ், இந்தோ பங்களாதேஷ் நெறிமுறை பாதைகளின் (Protocol routes) எண்ணிக்கை 8 முதல் 10 ஆக உயர்த்தப்படுகிறது.
  • துப்ரி (இந்தியா) மற்றும் சில்மாரி (பங்களாதேஷ்) இடையே ஆழமற்ற வரைவு இயந்திரக்கப்பல்களின் இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது நெறிமுறையின் கீழ் இயக்கப்படும் 6 துறைமுகங்கள் உள்ளன. இப்போது புதிய ஒப்பந்தத்துடன், மேலும் ஐந்து துறைமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 
  • அஸ்ஸாமின் ஜோகிகோபா துறைமுகத்தை சேர்ப்பதன் மூலம் மேகாலயா, பூட்டான் மாநிலங்களை அசாமுடன் இணைக்க உதவும்
  • உணவு தானியங்கள், விவசாய பொருட்கள், உரங்கள், கொள்கலன் சரக்கு மற்றும் சிமென்ட் ஆகியவற்றை கொண்டு செல்ல இந்தியாவுக்கு இந்த உள்நாட்டு நீர் போக்குவரத்து முக்கியமானது.
  • இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு செல்லும் முக்கிய ஏற்றுமதி சரக்கு சாம்பல் (Fly Ash) ஆகும். 
  • இந்தியா ஒரு வருடத்தில் சுமார் 30 லட்சம் மெட்ரிக் சாம்பலை பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்தியா-நேபாளம் எல்லை பிரச்னை - சில தகவல்கள் 
  • இந்தியா, நேபாளம் இடையே, கடந்த ஓராண்டாகவே எல்லை பிரச்னை நிலவி வருகிறது.
  • இந்தியா, நேபாளம், திபெத் எல்லைகளில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக், காலாபானி ஆகிய முக்கோண எல்லைகள், நேபாளத் துக்கு சொந்தமானது என, அந்நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, மே 20-அன்று தெரிவித்தார். 
  • இந்தப் பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து, புதிய வரைபடத்தையும் அவர் வெளியிட்டார்.
  • உத்தரகண்டில் இருந்து, கைலாஷ் மானசரோவர் செல்லும் பயணியருக்காக, லிபுலேக் பாஸ் வழியாக, 80 கி.மீ., தெலைவுக்கான புதிய சாலையை, இந்திய அரசு, அமைத்தது. இந்த சாலை, சமீபத்தில் 
  • பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து, நேபாளம், மீண்டும் எல்லை பிரச்னையை கையில் எடுத்துள்ளது.
  • நேபாளம் முன்வரும் என நம்புகிறோம். லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை உரிமை கொண்டாடுவதன் மூலம், நேபாளம் தங்கள் எல்லைகளை, செயற்கையாக விஸ்தரிக்க முயல்கிறது. இது ஏற்புடையது அல்ல என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கும் 'S.400 ஏவுகணை' - அமெரிக்கா தலையீடு - சில தகவல்கள் 
  • இந்தியாவுக்கும், இரஷியாவுக்கும் இடையே நல்லுறவு கால காலமாக நீடித்து வருகிறது. அந்த நாட்டிடம் இருந்து S.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை (5 எண்ணிக்கை) வாங்குவது என இந்தியா 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.
  • (India-Russia missile deal) இந்த ஒப்பந்தம் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலானது.
  • இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷியாவுக்கு இந்தியா முதல் கட்டமாக 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,000 கோடி) தொகையை கடந்த ஆண்டு வழங்கியது. 
  • இரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்குவது தொடர்பாக இந்தியா சில கருது வேறுபாடு நிலவுகிறது. 
  • இரஷியாவிடம் இருந்து நீங்கள் ஏவுகணை வாங்கினால், பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்தது. 
  • அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டப்படி (CAATSA) இரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இரஷியாவிடம் இருந்து போர் தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது.
  • இரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்.400 அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
  • இந்தியா அமெரிக்கா இடையே இரு தரப்பு வர்த்தகம் மே 2020 தற்போது வரை, 20 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1½ லட்சம் கோடி) தாண்டி இருக்கிறது.
  • இந்தியாவுக்கு மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. இந்தியா அமெரிக்காவிடம் பாதுகாப்பு தளவாடங்களை வாங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
  • CAATSA: Countering America's Adversaries Through Sanctions Act.
கொரோனா பாதித்த 100 நாடுகளுக்கு 'உலக வங்கி ரூ.12 லட்சம் கோடி நிதி' 
  • கொரோனா வைரசால் பெரும்பாதிப்புக்கு ஆளாகியுள்ள 100 நாடுகளில் அவசர கால நடவடிக்கைகளை எடுப்பதற்கு வகை செய்து உலக வங்கி 160 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12 லட்சம் கோடி) நிதி உதவி வழங்க உள்ளது. 
  • இந்த 100 நாடுகள்தான் உலக மக்கள் தொகையில் 70 சதவீதத்தை கொண்டுள்ளன. 39 நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன.
  • உலக வங்கி (World Bank) என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இது ஜூலை 1944-இல் தொடங்கப்பட்டது.
  • உலக வங்கியின் தலைவர் - டேவிட் மால்பாஸ்
  • உலக வங்கி தலைமையிடம் - வாசிங்டன் டிசி, அமெரிக்கா. 
இந்திய நிகழ்வுகள்
கோனார்க் சூரிய கோயில், கோனார்க் நகரில் '100% சூரியசக்தி திட்டம்' - அறிமுகம் 
  • இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரிய கோயில் மற்றும் கோனார்க் நகரத்தை 100% சூரியசக்தியில் இயங்கும் திட்டத்தை (Solarisation of Konark Sun Temple Konark town) 2020 மே 20 அன்று, அறிமுகப்படுத்தியது.
  • 'சூர்யா நக்ரி’ (Surya Nagri) என்ற பெயரில் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, கோனார்க் நகரத்தின் அனைத்து எரிசக்தி தேவைகளையும் சூரிய சக்தியை கொண்டு பூர்த்தி செய்வது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகள் எண்ணிக்கை - 1 கோடி 
  • ஆயுஷ்மான் பாரத் என்ற சுகாதார காப்பீடு திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2020 மே 20-அன்று, 1 கோடியைத் தொட்டுள்ளது. இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் COVID-19 தொற்று நோயின் பரிசோதனை மற்றும் சிகிச்சையை இலவசமாக்கியது.
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா-ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகிலேயே அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களில் மிகப்பெரிய திட்டம் இது ஆகும்.
  • ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டம் (PM-JAY): ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டம், 2018 செப்டம்பர் 23 அன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.
  • உலகின் மிகப்பெரிய மருத்துவத் திட்டமாக கருதப்படும் இந்த தேசிய சுகாதாரத் திட்டம் மூலம் ஒட்டு மொத்தமாக 50 கோடி மக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் திட்டம் செய்லபடுத்தப்படுகிறது. 
  • AB PM-JAY: Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana.
மத்திய அமைச்சரவை கூட்டம் - மே 20, 2020
  • மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மே 20-அன்று நடைபெற்றது. இதில் அளிக்கப்பட்ட திட்டங்கள் விவரம்:
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ந்த ஆண்டிலும், அடுத்த 3 நிதி ஆண்டுகளிலும் இதற்காக ரூ.41,600 கோடியை மத்திய அரசு ஒதுக்கும்.
  • தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 8 கோடி பேருக்கு தலா ஒருவருக்கு 5 கிலோ வீதம் ஜூன் மாதம் வரை இலவசமாக உணவு தானியம் வழங்க ரூ.3,109 கோடியே 25 லட்சத்தை மானியமாக ஒதுக்க ஒப்புதல்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று வழங்கும் - ஸ்விக்கி நிறுவனம் 
  • பிரபல இணையதள உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வீட்டுக்கே விநியோகம் செய்ய, அம்மாநில அரசுடன் இணைந்துள்ளது.
  • இதன்படி, மே 21-அன்று தலைநகர் ராஞ்சியில் மதுபானங்களை விநியோகம் செய்யும் வேலையைத் ஸ்விக்கி நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அரசின் 'சுகூன்' திட்டம்
  • ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பிரதேச அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, பொது முடக்கம் மற்றும் கொரானா தோற்று அவற்றைக் கடக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சுகூன் என்ற திட்டத்தை (SUKOON- COVID-19 Beat the Stress) தூர்தர்ஷன் (DD) தொலைக்காட்சியுடன் இணைந்து தொடங்கியுள்ளது.
  • சுகூன் திட்டப்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு தூர்தர்ஷன் காஷ்மீர் சேனலில் ஒளிபரப்பப்படும் நிகழ்வில், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உளவியல் ஆரோக்கியம் நடவடிக்கைகள் குறித்து தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வார்கள். 
ஜார்க்கான்ட் அரசின் “டாட்பார்” திட்டம் 
  • ஜார்க்கான்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக “டாட்பார்” (Tatpar) என்ற திட்டத்தை 202 மே 18-அன்று, அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் சோர்வுற்று நடந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து பயணம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் “1950” என்ற ஹெல்ப்லைனையும் அறிமுகப்படுத்தியது.
உஜ்வலா திட்டத்தில் இலவச சிலிண்டா்கள் விநியோகம் - 6.8 கோடி 
  • உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் மே 20-ஆம் தேதி வரை 6.79 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் மே 21-அன்று தெரிவித்தது.
  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் சிலிண்டர்களை விநியோகிக்க அரசு தனி நிதி ஒதுக்கியுள்ளது. பொது ஊரடங்கின் பொது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இது தொடங்கப்பட்டது.
  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (2016): பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Yojana), நிதி அமைச்சகத்தின் கீழ் 2016 டிசம்பர் 16-அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2017 மார்ச் 31, 2017 வரை செயல்படுத்தப்பட்டது.
  • கணக்கிடப்படாத கறுப்புப் பணம் மற்றும் வளத்தை தெரிவிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. COVID-19 காரணமாக ஏழைகள் சந்திக்கும் இழப்புகளைத் தணிக்க இந்த திட்டம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
உலக அளவில் அங்கீகாரம் பெரும் 'காதி முககவசங்கள்'
  • உலக அளவில் காதி முககவசங்கள் (Khadi Masks) தற்போது உலகளாவிய அங்கீகாரத்தையும் தேவையையும் பெறுகின்றன
  • காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையம் (KVIC) பட்டு மற்றும் பருத்தி முககவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறது.
  • ஆத்மா நிர்பர் பாரத் அபியான் (Atma Nirbhar Bharat Abhiyan) திட்டத்தின் கீழ், தொடங்கப்பட்ட “உள்ளூர் குரல்” (Vocal for Local) என்ற ஊக்குவிப்பு பிரச்சாரத்திற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 
நியமனங்கள்
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக 'அமைச்சர் ஹர்ஷவர்தன்' தேர்வு
  • உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவர் பதவிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் (Dr Harsh Vardhan) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மே 22-அன்று இப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.
  • இவ்வாரியத்தின் தலைவராக இருந்த ஜப்பான் நாட்டின் ஹிரோகி நகாடானிக்கு பதிலாக, அமைச்சர் ஹர்ஷவர்தன் (WHO Executive Board chairman) இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • உலக சுகாதார அமைப்பின் முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான உலக சுகாதார சபையின் கொள்கைகளை அமல்படுத்த 34 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட நிர்வாக வாரியம் செயல்படுகிறது.
NABARD வங்கியின் புதிய தலைவர் 'கோவிந்த ராஜுலு சிந்தலா'
  • மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு 2020 மே 20-அன்று, கோவிந்த ராஜுலு சிந்தலா (Govinda Rajulu Chintala) அவர்களை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) தலைவராக நியமித்துள்ளது.
  • NABARD: National Bank for Agriculture and Rural Development.
இந்தியன் ஸ்டீல் அசோசியேஷன் புதிய தலைவர் - திலீப் உம்மன்
  • இந்தியன் ஸ்டீல் அசோசியேஷன் (Indian Steel Association) புதிய தலைவராக திலீப் உம்மன் (Dilip Oommen) 2020 மே 19-அன்று நியமிக்கப்பட்டுள்ளார். 
  • திலீப் உம்மன், ஆர்சலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். 
மாநாடுகள்
பாதுகாப்பு சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் மின்-மாநாடு-2020

  • மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், 2020 மே 21-அன்று, காணொலி காட்சி மூலம் நடைபெற்ற பாதுகாப்பு சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான மின்-கூடுகை மாநாட்டிற்கு (E-Conclave of Defence MSME) தலைமை தாங்கினார்.
  • இந்த மின்-மாநாட்டை, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry), இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Defence Manufacturers) மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறை ஆகியவை ஏற்பாடு செய்தன.
  • இரண்டாம் உலகப் போரின்போது இரண்டு வருட காலத்திற்குள் அமெரிக்க பாதுகாப்புத் தொழில் வளர்ந்தது என்ற உண்மையை இந்த மாநாடு அடையாளம் கண்டது.
  • 2025 ஆம் ஆண்டில் இந்தியா 25 பில்லியன் என்ற பாதுகாப்பு உற்பத்தி இலக்கை அடைய இந்த மாநாடு உதவும் எனகூறப்பட்டது.
  • MSME: Micro Small and Medium Enterprises.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
கேரளாவில் மீண்டும் நடப்பட்ட அரிய வகை பனை 'பினாங்கா ஆண்டமனென்சிஸ்' 
  • தெற்கு அந்தமான் தீவைச் சேர்ந்த, 'பினாங்கா ஆண்டமனென்சிஸ்' (Pinanga andamanensis) என்று அழைக்கப்படும் அரிய வகை பனை மரம், இதன் இனம் அழிந்து போவதைத் தடுக்க, கேரளாவில் உள்ள ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JNTBGRI) ஜெர்ம்ப்ளாசம் முறையை பயன்படுத்தி நடப்பட்டுள்ளது.
  • தாவர இனப்பெருக்கத்திற்காக திசு மற்றும் விதைகள் போன்ற வளங்கள் பாதுகாக்கப்படும் முறைக்கு ஜெர்ம்ப்ளாசம் என்று பெயர்.
  • இந்த அரியவகை பனை (Penang) என்று அழைக்கப்படுகிறது, அழிந்து வரும் தாவர இனப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 
‘உம்பன்’ புயல் - கரையை கடந்தது
  • வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ஆம்பன்’ என பெயர் சூட்டப்பட்டது.
  • ‘உம்பன்’ புயல் மேற்கு வங்காளத்தில் உள்ள டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹாடியா தீவுக்கும் இடையே இடையே சுந்தரவன காடுகள் பகுதியில் மே 20-அன்று கரையை கடந்தது.
அறிவியல் தொழில்நுட்பம்
தேசியத் தேர்வு அபியாஸ் - செல்போன் செயலி அறிமுகம் 
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சமீபத்தில் “தேசியத் தேர்வு அபியாஸ்” (National Test Abhyas) என்ற புதிய செல்போன் செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது.
  • இந்த செயலி பயன்பாட்டின் மூலம், ஜே.இ.இ மெயின்ஸ், நீட் போன்ற தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
  • இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) பயன்படுத்தப் படுவதால் மாதிரி தேர்வுகளை உடனுக்குடன் அறியலாம்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கீழடி 6-வது கட்ட அகழாய்வு பணிகள் - தொடக்கம் 
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் கீழடியில் ஏற்கனவே 2015-ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த 5 கட்ட அகழாய்வின்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டன.
  • தொடர்ந்து 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 2020 பிப்ரவரி மாதம் 10-ந் தேதி தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மே-20-ஆம் தேதி முதல் தொடங்கின.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் வரி பகிா்வு/வளா்ச்சி மானிய நிதி 'ரூ. 2,223.81 கோடி' 
  • மாநிலங்களுக்கான மத்திய வரி பகிா்வில் நடப்பு மே மாத தவணையாக ரூ.1,928.56 கோடி, சிறிய நகா்ப்புறங்கள் வளா்ச்சி மானியமாக ரூ.295.25 கோடி என மொத்தம் ரூ.2,223.81 கோடியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு மே 20-அன்று ஒதுக்கீடு செய்துள்ளது.
கொரானா நோய்த்தொற்று - 'ஆா்சனிகம் ஆல்பம் 30' ஹோமியோபதி மருந்து 
  • கொரானா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆா்சனிகம் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்ப்படுவதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு செலவினங்கள் 50% வரை குறைப்பு
  • கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக அரசு அதிரடியாக சிக்கன நடவடிக்கைகளை அறிவித்து உள்ளது. செலவினங்களை 50 சதவீதம் வரை குறைக்க மே 21-அன்று உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில், 2020-21-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கைகளில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைப்பதற்கு அரசு உத்தரவிடுகிறது.
முக்கிய தினங்கள்
உலக கலாசார பன்முகத்தன்மைக்கான உரையாடல் & மேம்பாட்டு தினம் - மே 21
  • உலக கலாசார பன்முகத்தன்மைக்கான உரையாடல் & மேம்பாட்டு தினம் (World Day for Cultural Diversity for Dialogue and Development), மே 21 அன்று 
  • கடைபிடிக்கப்படுகிறது. 
மே 21 - தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
  • தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் National Anti Terrorism Day மே 21-அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் மறைவை நினைவுகூரும் நாள் இதுவாகும். இராஜீவ் காந்தி நினைவிடம் "வீர் பூமி" டெல்லியில் அமைந்துள்ளது. 
மே 22 - சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் 
  • சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் (International Day for Biological Diversity) ஆண்டுதோறும் தொறும் மே 22 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தின கருப்பொருள்: 'Our Solutions are in Nature'.
மே 21 - சர்வதேச தேநீர் தினம் (International Tea Day - 21 May)

மே 22 - இராஜா ராம் மோகன் ராய் பிறந்த தினம் -
  • இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் இராஜா ராம் மோகன் ராய் மே 22, 1772 ஆம் ஆண்டு வங்காளத்தில் பிறந்தவர் ஆவார்.
  • பிரம்ம சமாஜம், ராஜா ராம் மோகன் ராய் அவர்களால் 1828 இல் நிறுவப்பட்டது. உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.
  • Download this article as PDF Format
Previous Post Next Post