TNPSC Current Affairs May 15, 2020 - Download as PDF

Current Affairs and GK Today May 15, 2020 - Download as PDF 
சர்வதேச நிகழ்வுகள்
WEF உலகளாவிய எரிசக்தி மாற்ற குறியீட்டு 2020 - இந்தியா 74-வது இடம்
  • உலக பொருளாதார மன்றத்தின் (WEF) அண்மையில் வெளியிட்டுள்ள 2020 உலகளாவிய எரிசக்தி மாற்றக் குறியீட்டு (ETI) பட்டியலின் படி, இந்தியா 51.5% மதிப்பெண்களுடன் 74-வது இடத்தில் உள்ளது, சுவீடன் (74.2%) முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து (73.4%), பின்லாந்து (72.4%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
  • WEF: World Economic Forum, ETI: Energy Transition Index.
TNPSC Current Affairs May 15, 2020 - Download as PDF

கொரானா விடுமுறை அளித்துள்ள 'கூகுள் நிறுவனம்'
  • கொரானா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் கூகுள் நிறுவனம் மே 22-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனை கொரானா விடுமுறை என்றும் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான அல்ஃபாபெட்-டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இதனை அறிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பில் தைவான் - நியூஸிலாந்து ஆதரவு
  • உலக சுகாதார அமைப்பில் (WHO) தைவான் நாடு இடம் பெறுவதற்கு நியூஸிலாந்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. 
  • தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும், அந்த நாட்டை தங்களது அங்கமாக சீனா கருதி வருகிறது. இதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பின் ஒரு பிரிவான உலக சுகாதார சபையில் தைவானுக்கு இடமளிக்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தி வருகிறது.
PoK கில்கிட்-பால்டிஸ்தான் & முசாபராபாத் பகுதிகள் - IMD முன்னறிவிப்பு பட்டியலில் சேர்ப்பு 
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMDஜம்மு-காஷ்மீர் பிராந்திய வானிலை ஆய்வு மையம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் பகுதிகளை முதன்முறையாக தனது வானிலை முன்னறிவிப்பு பட்டியலில் ‘வடமேற்கு இந்தியா’ (North-West India) என்ற பெயரில் சேர்த்துள்ளது.
  • இந்த பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), இந்தியாவுக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டை பேணுகின்ற வகையில் இந்த முடிவை எடுத்ததுள்ளது.
  • PoK: Pakistan-occupied-Kashmir. 
இந்திய நிகழ்வுகள்
'பிஎம்கேர்ஸ்' நிதியிலிருந்து புலம்பெயா் தொழிலாளா்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி
  • கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 'பிஎம்கேர்ஸ்' நிதியிலிருந்து (PM CARES Fund), செயற்கை சுவாசக் கருவிகள் வாங்க ரூ.2,000 கோடியும், புலம்பெயா் தொழிலாளா்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும் கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.100 கோடியும் என மொத்தம் ரூ.3,100 கோடி ஒதுக்க முடிவு மே 13-அன்று செய்யப்பட்டது.
  • 2020 மார்ச் 28-ஆம் தேதி உருவாக்கப்பட்ட பிஎம்கேர்ஸ் நிதியின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி உள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த நிதிக்கு, தொழில்துறையினா், திரைப்பட துறையினா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினா் பங்களிப்பு செய்து வருகின்றனா்.
  • PM CARES: Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund.
சுயசார்பு இந்தியா திட்டம் - நிதி அமைச்சரின் விரிவான தகவல்கள்
  • இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு, சுயசார்பு இந்தியா என்ற ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’(Atmanirbhar Bharat Abhiyan) என்ற பெயரிலான திட்டத்தை பிரதமர் மோடி மே 12--அன்று அறிவித்தார்.
  • ‘இந்த 'சுயச்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு ஒதுக்கப்படுகிறது. 
  • இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். இந்த திட்டம் பற்றிய விரிவான தகவல்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 13-அன்று முதல் வெளியிட்டார், அவற்றின் முக்கிய விவரம்:
  • ‘சுயசார்பு இந்தியா’ என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது.
  • உள்ளூர் நிறுவனங்களை உலக நிறுவனங்கள் ஆக்குவதே மத்திய அரசின் நோக்கம் ஆகும்.
  • கொரானா பாதிப்பு காரணமாக பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். 
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான முதலீடு உச்சவரம்பு மாற்றி அமைக்கப்படுகிறது. 
    • குறு நிறுவனத்துக்கான முதலீடு உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி ஆகவும், சிறு நிறுவனத்துக்கான முதலீடு உச்சவரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி ஆகவும், நடுத்தர நிறுவனத்துக்கான முதலீடு உச்சவரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் அதிகரிக்கப்படுகிறது.
  • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மேலும் 3 மாதங்களுக்கான சந்தா தொகையையும் அரசே செலுத்தும்.
  • முதலாளி மற்றும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு அடுத்த 3 மாதங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. 2020 நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • TDS வரி பிடித்தம் 2021 மார்ச் மாதம் வரை 25% குறைக்கப்படுகிறது.
  • மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும்.
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு போக்குவரத்து வசதி-தனிக்குழு
  • நடந்து செல்லும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்த தனிக்குழு ஏற்படுத்த நாகபூரிலுள்ள மும்பை உயா்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் நெடுஞ்சாலைகளை கண்காணிக்கவும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆணையா்களுக்கு மும்பை உயா்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவுக்கு உதவிபுரிவதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் தேவன் சௌஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச அரசு மீண்டும் தொடங்கிய 'சம்பல் யோஜனா'
  • மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஏழை மற்றும் பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) சமூகங்களின் வாழ்க்கையை வலுப்படுத்த சம்பல் யோஜனா (Sambal Yojana) என்ற திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூ .41.33 கோடி 1903 பயனாளிகளின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. 
விருதுகள்
ஸ்கைட்ராக்ஸ் விருது 2020 - பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையம் தேர்வு
  • கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான ஸ்கைட்ராக்ஸ் விருது 2020 விருதை (SKYTRAX Award 2020) வென்றுள்ளது. இது 2020-ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 68-வது இடத்தில் உள்ளது,
  • சிங்கப்பூர் நாட்டின் சாங்கி விமான நிலையம், உலகின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
பொருளாதார நிகழ்வுகள்
பிரிக்ஸ்' புதிய வளா்ச்சி வங்கி - இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி
  • பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் புதிய வளா்ச்சி வங்கி (NDB), கரோனா நோய்த்தொற்று சூழலை எதிர்கொள்வதற்காக (Emergency Assistance Program Loan) இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. அவசரகால உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
  • NDB: New Development Bank. 
அறிவியல் தொழில்நுட்பம்
TVS+IIT-M உருவாக்கியுள்ள தானியங்கி சுவாச உதவி சாதனம் “சுந்தரம் வென்டாகோ”
  • மே 12, 2020 அன்று, TVS குழுமம், சுந்தரம் மருத்துவ அறக்கட்டளை, மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் IIT-M கூட்டாக இணைந்து குறைந்த விலையில், தானியங்கி சுவாச உதவி சாதனத்தை “சுந்தரம் வென்டாகோ” (Sundaram Ventago) என்ற பெயரில் உருவாக்கியுள்ளன. தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் வென்டிலேட்டர் வசதிகள் கிடைக்காத பகுதிகளில் இந்தக் கருவி பயனுள்ளதாக இருக்கும்.
உத்தரகண்ட் அரசின் இளைஞர்களுக்கான ‘ஹோப்’ இணையதளம்
  • உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மாநிலத்தில் வேலையற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘ஹோப்’ (HOPE) இணையதளத்தை மே 13-அன்று தொடங்கிவைத்தார். இளைஞர்களுக்கு அவர்களின் நிபுணத்துவத்தை பொருட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த இணையதளம் உதவும்.
  • HOPE: Helping Out People Everywhere.
தமிழ்நாடு நிகழ்வுகள்
இராமநாதபுரம் குதிரைமொழியில் அமையும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம
  • மன்னார் வளைகுடா பகுதியில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை (60 MLD) செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் கடலாடி தாலுகாவில் உள்ள குதிரைமொழி கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. 
  • கடல்நீரை குடிநீராக்கும் இந்தத் திட்டம் அமையவிருக்கும் இடத்திலிருந்து 25 மீட்டா் தூரத்தில் மன்னார் வளைகுடாவின் தேசிய கடல் வளப் பூங்கா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • MLD: Millions of Liters Per Day.
அரசுக்கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகளை ரத்து 
  • தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகளை மாற்றிவிட்டு காலை மட்டுமே வகுப்பு நேரம் என்கின்ற முறையினை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
  • தமிழகம் முழுவதும் உள்ள 114 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 61 கல்லூரிகளில் காலை, மாலை என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. 61 கல்லூரிகளிலும் காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில், மாலை நேர வகுப்புகளில் குறைந்த அளவிலான மாணவா்களே பயின்று வருவதால், இரு சுழற்சி முறை வகுப்புகளையும் இணைத்து காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்த தமிழக உயா்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 
திக்‌ஷா செயலி பயன்பாடு - தமிழ்நாடு முதலிடம்
  • மத்திய அரசு கல்வி கற்றலுக்கு மாணவர்களுக்கு உதவிடும் வகையில் திக்‌ஷா (DIKSHA) செயலியை உருவாக்கியது. இந்த செயலியில் அனைத்து மாநில மொழிகளில் பாடபுத்தகங்கள், பல்வேறு பயனுள்ள விளக்க காணொளிகள், பயிற்சி வினாக்கள் உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
  • 2019-20-ம் நடப்பாண்டில் திக்‌ஷா செயலியை 4 கோடி பேர் பயன்படுத்தி உள்ளனர், செயலியை பயன்படுத்துவதில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
NADA ஒழுக்காற்று உறுப்பினராக குத்துச்சண்டை வீரர் அகில் குமார் சேர்ப்பு
  • 2020 மே 12-அன்று, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் அகில் குமார் (வயது 39), மீண்டும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (NADA) ஒழுக்காற்றுக் குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவர் 2017 முதல் 2019 வரை ஒழுக்காற்று குழுவில் இருந்தார்.
முக்கிய தினங்கள்
மே 15 - சர்வதேச குடும்பங்கள் தினம் 
  • ஒவ்வொரு ஆண்டும் மே 15 ஆம் தேதி சர்வதேச குடும்பங்கள் தினம் (International Day of Families) அனுசரிக்கப்படுகிறது.
  • Download this article as PDF Format
Previous Post Next Post