TNPSC Current Affairs May 10, 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
சர்வதேச காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் வரிசை-2019 
 • சீனா முதலிடம்: 2019-ஆம் ஆண்டில், உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO), காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (PCT) வழியாக சர்வதேச காப்புரிமை தாக்கல் (Patent) செய்வதில் சீனா உலகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 
 • 1978-ஆம் ஆண்டில் காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. மொத்தம் 58,990 விண்ணப்பங்களை அனுப்பி சீனா முதலிடத்திற்கு வந்துள்ளது. 
 • இந்தியா 14-வது இடம்: இந்தியா 2,053 விண்ணப்பங்களுடன் 14-வது இடத்தில் உள்ளது.
 • நாடுகள் - தாக்கல் செய்த PCT விண்ணப்பங்கள்
  • 1. சீனா - 58,990
  • 2. அமெரிக்கா - 57,840
  • 3. ஜப்பான் - 52,660
  • 14. இந்தியா - 2,053
 • நிறுவனங்கள் - தாக்கல் செய்த PCT விண்ணப்பங்கள்
  1. ஹவாய் (சீனா) - 4,411 
  2. மிட்சுபிஷி (ஜப்பான்) - 2,661 
  3. சாம்சங் தென் கொரியா - 2,334 
  4. குவால்காம் அமெரிக்கா - 2,127
 • உலக அறிவுசார் சொத்து அமைப்பு (1967)
  • உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) ஐக்கிய நாடுகள் சபையின் 15 சிறப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். 
  • WIPO, உலகளாவிய அறிவுசார் சொத்துக்களுக்கான முதன்மையான ஆதார அமைப்பாகும். 
  • அறிவுசார் சொத்துக்கள் என வகைப்படுத்தப்படுபவை: காப்புரிமை, தொழில்துறை வடிவமைப்புகள், பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள் போன்றவை) தகவல், வளங்கள் மற்றும் சேவைகள்.
  • தலைமையகம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து
  • தலைமை நிர்வாக அதிகாரி: பிரான்சிஸ் குர்ரி 
  • நிறுவப்பட்டது: 14 ஜூலை 1967. 
 • PCT: Patent Cooperation Treaty
 • WIPO: World Intellectual Property Organization.
இந்திய நிகழ்வுகள்
 • 'வந்தே பாரத்' நடவடிக்கை - இரண்டாம் கட்டம் - மே 15-அன்று தொடக்கம் 
 • வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்பதற்காக 'வந்தே பாரத்' என்ற பெயரிலான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 'வந்தே பாரத்' நடவடிக்கையின்கீழ் இரண்டாம் கட்டமாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மே 15-ஆம் தேதி முதல் இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்படவுள்ளனா்.
 • முதல்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, கத்தார், சவூதி அரேபியா, சிங்கப்பூா், மலேசியா, பிலிப்பின்ஸ், வங்கதேசம், பஹ்ரைன், குவைத், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 14,800 இந்தியா்களை தாயகம் அழைத்து வர 64 ஏா்-இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மே 8-அன்று தொடங்கிய இந்த நடவடிக்கை 7 நாள்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. 
கரோனா நோய்த்தொற்று தடுப்பு மருந்து - ICMR-BBIL ஒப்பந்தம்
 • கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை (COVID-19 Vaccine) உருவாக்கும் பணியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR), ஐதராபாத் நகரைச் சேர்ந்த பாரத் பயோடெக் இண்டா்நேஷனல் லிமிடெட் (BBIL) நிறுவனமும் முன்னெடுத்துள்ளன. புணேவில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனமும் இதற்கு ஆதரவு அளிக்கும்.
 • கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குதல், அதனை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்தல், அந்த மருந்தால் ஏற்படும் மாற்றங்களை கண்டறிதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்திய ரயில்வேயின் பூஜ்ஜிய தொடர்பு சோதனைச்சாவடி ‘சாரக்’ 
 • 2020 ஏப்ரல் 4-அன்று, மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள மேற்கு மத்திய ரயில்வேயின் பயிற்சியாளர் மறுவாழ்வு பட்டறை (CRWS), மருத்துவருக்கும் கொரோனா வைரஸுக்கும் இடையிலான உடல் தொடர்புக்கான வாய்ப்பு இல்லாத (Zero-Contact), “சாரக்” (CHARAK) என்ற மொபைல் மருத்துவர் சோதனைச்சாவடியை (Mobile Doctor Booth) உருவாக்கியுள்ளது.
 • இரயில்வே பெட்டியில் ஒரு வைரஸ் தடுப்பு அறை கட்டப்பட்டுள்ளது, இதன் மூலம் மருத்துவர்கள் நேரடி உடல் தொடர்பு இல்லாமல் நோயாளிகளை பரிசோதிக்க முடியும். 
விருதுகள் 
விஸ்டன் கிரிக்கெட் விருதுகள் 2019
 • 'கிரிக்கெட்டின் பைபிள்' என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ‘விஸ்டன்’ பத்திரிகை 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் முன்னணி வீரர்-வீராங்கனை பட்டியலை, ஏப்ரல் 8-அன்று தனது விஸ்டன் 
 • பஞ்சாங்கம் 2020 இதழ் பதிப்பில் (Wisden Almanack 2020) வெளியிட்டுள்ளது. விருதுகள், விருது பெற்றோர் விவரம்:
 • விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகள் 2020 (Leading Cricketers in the World)
  1. சிறந்த முன்னணி வீரர் விருது - பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 
  2. சிறந்த முன்னணி வீராங்கனை விருது - எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
  3. சிறந்த முன்னணி T20 வீரர் விருது - ஆண்ட்ரே ரஸ்ஸல் (மேற்கு இந்திய தீவுகள்) 
 • ஐந்து சிறந்த கிரிக்கெட் வீரர்/வீராங்கனைகள் விருதுகள் 2020(Wisden Five Cricketers of the Year)
  1. ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) 
  2. பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
  3. சைமன் ஹார்மர் (தென்னாப்பிரிக்கா) 
  4. மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா)
  5. எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா).
 • விஸ்டன் கிரிக்கெட் இதழ், ஆங்கில கிரிக்கெட் வீரர் ஜான் விஸ்டன் (John Wisden) என்பவரால் 1864-இல் நிறுவப்பட்டது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாடு நிதிநிலை மேம்பாடு - சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு
 • வரி உயர்வு உள்பட மாநில நிதிநிலை மேம்பாட்டுக்காக தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 • இக்குழவில் பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட 24 பேர் இடம் பெறுவார்கள்.
முக்கிய தினங்கள்
மே 10 - அன்னையர் தினம்
 • அன்னையர் தினம், ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை (10/05/2020) கொண்டாடப்படுகிறது. 
Download this article as PDF Format
Previous Post Next Post