TNPSC Current Affairs April 5-6, 2020 (GK Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs 7th April 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 7, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.

TNPSC Current Affairs April 5-6, 2020 (GK Tamil) - Download as PDF
TNPSC Current Affairs April 5-6, 2020 (GK Tamil) - Download as PDF
சர்வதேச நிகழ்வுகள்
ஆபரேஷன் சஞ்சீவனி: மாலத்தீவுக்கு அத்தியாவசிய மருந்துகள் 
  • கொரோனா வைரசை (COVID 19) எதிர்த்துப் போராடுவதில் குறைந்த திறன் கொண்ட நாடுகளுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
  • இந்த வகையில், ஏப்ரல் 2 அன்று, இந்திய விமானப்படை (IAF) ‘ஆபரேஷன் சஞ்சீவனி’ (Operation Sanjeevani) என்ற பெயரில் 6.2 டன் மதிப்பிலான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை மாலத்தீவு நாட்டுக்கு போக்குவரத்து விமானம் C-130J வழியாக கோட்னு சென்று உதவியுள்ளது.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை - ஏப்ரல் 4, 2020
  • சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் 2019 டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, 2020 ஏப்ரல் 4-அன்று நிலவரப்படி உலகின் 219 நாடுகளில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களை பாதித்துள்ளது. அந்த நோய்த்தொற்று பாதிப்பால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனர். 
  • இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,072-ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75-ஆக வும் உள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஏப்ரல் 4-வரை 485 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 7 லட்சத்து 23 ஆயிரத்து 491 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவா் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) 
  • உலக வங்கித் தலைவா் - கிரிஸ்டாலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva)
இந்திய நிகழ்வுகள்
சிவில் சர்வீசஸ் சங்கங்களின் ‘கருணா’ முன்முயற்சி திட்டம்
  • இந்திய நிர்வாக சேவை (IAS) மற்றும் இந்திய காவல்துறை சேவை (IPS) உள்ளிட்ட மத்திய சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் இணைந்த சங்கங்கள் 'கருணா' (Caruna) என்ற ஒரு முயற்சி திட்டத்தை ஏப்ரல் 04 அன்று உருவாக்கியுள்ளன. கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு (COVID-19) இந்த முன்முயற்சி ஒத்துழைப்பை வழங்க உள்ளது.
  • Caruna: Civil Services Associations Reach to Support in Natural Disasters.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி தடை 'அதிகரிப்பு' 
  • மலேரியாவைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பல நாடுகளில் 
  • கரோனா நோயாளிகளுக்கு கொடுத்தபோது, அவா்களிடம் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து (Hydroxychloroquine, C18H26ClN3O) ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தடை விதித்தது.
  • ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு அரசு ஏப்ரல் 5-அன்று, மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, மத்திய சிறப்பு பொருளாதார மண்டலங்கள்(SEEZ), ஏற்றுமதிக்கான உற்பத்தி தொழிற்சாலைகள்(EOU) ஆகிய இடங்களில் தயாரிக்கப்படும் மருந்துகளின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் எதிர்ப்பு: நாடு முழுதும் விளக்கு ஏற்றல்
  • உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
  • கைதட்டல்: கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்படி மார்ச் மாதம் 22-ந் தேதி நாட்டு முழுதும் கைதட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  • விளக்கு ஏற்றல்: கொரோனாவால் வந்த இருளை அகற்றும் வகையில், பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளுக்கிணங்க ஏப்ரல் 5 அன்று இரவு 9 மணி முதல் 9.09 மணி வரை, மூலம் மக்கள் வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.
கொரோனா எதிர்ப்பு 'e-NAM தளத்தில் 3 புதிய அம்சங்கள்' - அறிமுகம் 
  • மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யப்பட்ட பொருட்களை நேரடியாக கிடங்கிலிருந்து விற்க உதவும் வகையில் தேசிய வேளாண் சந்தை (e-NAM) தளத்தின் மூன்று புதிய அம்சங்களை ஏப்ரல் 3-அன்று அறிமுகப்படுத்தினார். 
  • கொரோனா வைரஸ் (COVID-19) வேளாண் மண்டிகளில் மக்கள் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
  • 3 அம்சங்கள் விவரம்:
    • 1. பேச்சுவார்த்தைக்குட்பட்ட கிடங்கு ரசீது (e-NWRs) தொகுதி
    • 2.பார்மர் தயாரிப்பாளர் அமைப்பு (FPO) வர்த்தக தொகுதி
    • 3. லாஜிஸ்டிக் தொகுதி
  • e-NAM என்பது இந்தியாவில் உள்ள விவசாய பொருட்களுக்கான இணையதள வர்த்தக தளமாகும். இது 
  • 2016 ஏப்ரல் 16-அன்று நிறுவப்பட்டது.
  • e-NAM: National Agriculture Market, Electronic-NAM, e-NWRs: Negotiable Warehouse Receipt, FPO: Farmer Producer Organisation.
ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் 'கொரோனா'சிகிச்சை'
  • கொரோனா வைரசுக்கான பரிசோதனையும், சிகிச்சையும் அரசு துறையில் இலவசமாக கிடைக்கிறது. ‘ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனா’ (AB PM-JAY) என்ற சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறுகிற 50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு தனியார் பரிசோதனைக்கூடங்களில் (COVID-19 tests) இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என தேசிய சுகாதார ஆணையம் ஏப்ரல் 4-அன்று அறிவித்துள்ளது. 
  • ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டம் (PM-JAY): 
    • ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டம், 2018 செப்டம்பர் 23 அன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.
    • உலகின் மிகப்பெரிய மருத்துவத் திட்டமாக கருதப்படும் இந்த தேசிய சுகாதாரத் திட்டம் மூலம் ஒட்டு மொத்தமாக 50 கோடி மக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் திட்டம் செய்லபடுத்தப்படுகிறது. 
  • AB PM-JAY: Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. 

COVID-19 எதிர்ப்பில் தேசிய சாரணர் படையின் 'NCC யோக்டன் பயிற்சி'
  • தேசிய சாரணர் படை (NCC) தனது தன்னார்வலர்களை ‘என்.சி.சி யோக்டன் பயிற்சி’ (Exercise NCC Yogdan) கீழ் கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பில் உடன் போராட அரசு அதிகாரிகளுக்கு உதவ ஏப்ரல் 2, 2020 அன்று, முடிவு செய்துள்ளது.
விருதுகள் 
சமூக தொழில்முனைவோருக்கான 'ஸ்கோல் விருது' 2020 
  • 2020-ஆம் ஆண்டுக்கான சமூக தொழில்முனைவோருக்கான 'ஸ்கோல் விருது' (Skoll Award for Social Entrepreneurship 2020) இந்தியாவை சேர்ந்த 'அர்மான்' என்ற அமைப்பு உள்ளிட்ட 5 சசர்வதேச அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. 
  • 'அர்மான்' (ARMMAN) என்பது இந்தியாவை தளமாகக் கொண்ட மரு. அபர்ணா ஹெக்டே (Dr. Aparna Hegde) அவர்கள் நிறுவிய, தாய், செய் சுகாதாரப் பணிகளை அங்கீகரிக்கும் ஒரு இலாப நோக்கற்ற (NPO) அமைப்பாகும். 
மாநாடுகள்
பைசாகி பண்டிகை 2020
  • சீக்கியா்களின் புத்தாண்டு தொடக்கமாக பைசாகி பண்டிகை (Vaisakhi 2020), ஏப்ரல் 13 அன்று கொண்டாடப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறு 
  • உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் ஏப்ரல் 5-அன்று குருத்தோலை ஞாயிறை கொண்டாடினர். 
விளையாட்டு நிகழ்வுகள்
ஜூனியர் (U-17) உலக கோப்பை கால்பந்து - தள்ளிவைப்பு 
  • சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) சார்பில் பெண்களுக்கான 7-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) 2020 நவம்பர் 2-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை இந்தியாவில் முதல்முறையாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை தள்ளிவைப்பதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஏப்ரல் 4-அன்று அறிவித்தது. 
  • 2020 ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடைபெற இருந்த பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்டோருக்கான) உலக கோப்பை கால்பந்து போட்டியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
மார்ச் 31 - சர்வதேச திருநங்கைகளுக்கான தெரிவுநிலை நாள் (International Transgender Day of Visibility)

ஏப்ரல் 5 - சம்தா திவாஸ் (பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள்) 
  • முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் "பாபு ஜெகஜீவன் ராம்" அவர்களின் 112-ஆவது பிறந்த நாள் 2020 ஏப்ரல் 5 அன்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நாள் "சம்தா திவாஸ்" என்று அழைக்கப்படுகிறது. 
  • பாபு என அழைக்கப்படும் ஜெகஜீவன்ராம், பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் பிறந்தவர். 
  • 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். 24 மார்ச் 1977 – 28 ஜூலை 1979 வரை இந்தியத் துணை பிரதமர் பதவி வகித்தவர்.
  • இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.
ஏப்ரல் 5 - தேசிய கடல்சார் தினம் 
  • இந்தியாவில் 57-வது ஆண்டு தேசிய கடல்சார் தினம், 2020 ஏப்ரல் 5 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் SS Loyalty, 1919, ஏப்ரல் 5-ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. இதை நினைவுகூறும் வகையில் 1964 ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் 5 ஆம் தேதி, தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) கொண்டாடப்படுகிறது. 
  • 2020 தேசிய கடல்சார் தின கருப்பொருள்: “Sustainable shipping for a sustainable plane" என்பதாகும்.
  • 7,517 கி.மீ.: இந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ., நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 90 சதவீதம், துறைமுகங்கள் மூலமே நடைபெறுகிறது. 
  • துறைமுகங்கள்: இந்தியாவில் ஹல்டியா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணுார், துாத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, பனாஜி, நேரு துறைமுகம் (மும்பை), கண்ட்லா என 13 பெரிய துறைமுகங்கள், 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் செயல்படுகின்றன.
ஏப்ரல் 5 - சர்வதேச மனசாட்சி தினம் (International Day of Conscience).
Download this article as PDF Format
Previous Post Next Post