TNPSC Current Affairs April 24-25, 2020 - Download PDF

Current Affairs and GK Today 24-25 April, 2020 

TNPSC Current Affairs April 2020 - Daily Download PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 24th and 25th, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.

TNPSC Current Affairs April 24-25, 2020 - Download PDF
TNPSC Current Affairs April 24-25, 2020 - Download PDF
உலக நிகழ்வுகள்
மரிஜுவானா சாகுபடியை சட்டப்பூர்வமாக்கிய முதல் அரபு நாடு 'லெபனான்' 
  • மரிஜுவானா (Marijuana) என்ற கஞ்சா பயிர் சாகுபடியை சட்டப்பூர்வமாக்கிய முதல் அரபு நாடு என்ற பெயரை லெபனான் நாடு (Lebanon) பெற்றுள்ளது.
  • கஞ்சா பயிர் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு லெபனான் நாடாளுமன்றத்தால் 2020 ஏப்ரல் 23-அன்று, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • லெபனானைத் தவிர, உலகில் வேறு இரண்டு பகுதிகளில் கஞ்சா ஆலைகளில் இருந்து அபின் (Opium) உற்பத்தி செய்யப்படுகிறது. 
  • அவை தங்க முக்கோணம் மற்றும் தங்கப்பிறை என்றழைக்கபடும் நாடுகள் ஆகும். 
  • தங்கப்பிறை நாடுகள் (Golden Triangle): 
    • ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளடக்கிய மூன்று நாடுகள் தங்கப்பிறை நாடுகள் என்றழைக்கப்படுகின்றன. 
  • தங்க முக்கோண நாடுகள் (Golden Crescent): 
    • தாய்லாந்து, மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய பிராந்தியங்கள் தங்க முக்கோணம் என்றழைக்கப்படுகின்றன.
சௌதி அரேபியா: கைவிடப்படும் 'பிரம்படி தண்டனை' 
  • சௌதி அரேபியாவில் 'புகழ்பெற்ற' பிரம்படி தண்டனைக்கு விடை கொடுக்கப்படுகிறது. பன்னாட்டு மனித உரிமை வரன்முறைகளுக்கு உள்பட்டு சித்திரவதைத் தண்டனைகளைக் கைவிடும் முடிவுக்கு சௌதி அரசு வந்திருக்கிறது.
  • இனி பிரம்படிக்குப் பதிலாக, அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது சிறைக்குச் செல்ல வேண்டியல்லாத சமுதாய சேவைகள் போன்றவற்றைத் தண்டனைகளாக விதிக்கப்படவுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
பிரதமரின் கரீப் கல்யாண் பேக்கேஜ் திட்டம் - ரூ.31, 235 வழங்கல்
  • 2020 மார்ச் 26-ந் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பிரதமரின மந்திரி கரீப் கல்யாண் பேக்கேஜ்' (PMGKP) என்ற இத்திட்டத்தை அறிவித்தார்.
  • இத்திட்டத்தின்படி, ஏப்ரல் 23-வரை 33 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி, வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 
  • PMGKP: Pradhan Mantri Garib Kalyan Package.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் - 20%
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்தவர்கள் குணம் அடைகிற விகிதாசாரம் சீராக ஏறத்தாழ இது 20 சதவீதமாக உள்ளது. நாட்டில் 21 ஆயிரத்து 393 பேருக்கு பாதிப்பு இருக்கிறது. 4 ஆயிரத்து 257 பேர் குணம் அடைந்துள்ளனர் என மத்திய அரசு ஏப்ரல் 23-அன்று தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் கட்டிமுடிக்கப்பட்ட 'கசோவல் பாலம்'
  • இராவி ஆற்றின் (Ravi River) குறுக்கே கசோவல் பாலம் Kasowal bridge என்ற நிரந்தர பாலத்தை எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) கட்டி முடித்துள்ளது
  • கசோவால் பாலம் பஞ்சாப் மாநில விவசாயிகள் அறுவடையை வசதியாக கொண்டு செல்ல உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • எல்லைச் சாலைகள் அமைப்பு (Project Chetak) என்ற திட்டத்தின் கீழ் இந்த பாலத்தை செலவு ரூ .17.89 கோடி செலவில் கட்டி முடித்துள்ளது.
'பெலூடா' என்ற கொரானா வைரஸ் சோதனை - அறிமுகம்
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) கீழ் இயங்கும் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (IGIB) “பெலூடா” (Feluda) என்ற கொரானா வைரஸ் சோதனையை (COVID-19 test) அறிமுகம் செய்துள்ளது.
  • CSIR: Council of Scientific and Industrial Research.
மெய்நிகர் நீதிமன்ற உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்ற மாநிலம் 'உத்தரப்பிரதேசம்'
  • மெய்நிகர் நீதிமன்றங்களின் (Virtual Courts) மென்பொருள் அடிப்படையிலான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ள முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் 2020 ஏப்ரல் 23-அன்று முதல் மாறியுள்ளது. 
  • உத்தரபிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும், அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க தேவையான உள்கட்டமைப்பு கொரானா COVID-19 தொற்றுநோய் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு - அகவிலைப்படி உயர்வு ரத்து
  • கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக வருகிற 2020 ஜூலை 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.
  • 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் இதன்மூலம் பாதிக்கப்படுவர். 
  • இதன் மூலம் இந்த நிதி ஆண்டிலும், 2021-2022-ம் நிதி ஆண்டிலும் மத்திய அரசு ரூ.37 ஆயிரத்து 530 கோடி சேமிக்க முடியும்.
இந்தியாவின் முதல் 'நடமாடும் கொரானா வைரஸ் சோதனை ஆய்வகம்'
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் நடமாடும் கொரானா வைரஸ் சோதனை ஆய்வக வசதியை (Mobile BSL-3 VRDL Lab/mobile COVID-19 testing lab) ஏப்ரல் 24, 2020 அன்று ஐதராபாத் நகரில் திறந்து வைத்தார். இந்த வசதி ஒரு நாளில் 1000 மாதிரிகளை சோதிக்கும் திறன் கொண்டது.
  • ஐதராபாத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது மொபைல் வைராலஜி ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகமான (MVRDL), பாதுகாப்பு ஆராயச்சி வளர்ச்சி நிறுவனம் (ESIC) மருத்துவமனையுடன் இணைந்து உருவாக்கியது.
  • MVRDL:Mobile Virology Research and Diagnostics Laboratory.
2020 செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் - நிபுணர் குழு பரிந்துரை 
  • நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.
  • வரும் 2020-2021 கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு (UGC) நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி
சீனாவின் முதல் செவ்வாய் கிரக ஆய்வுத்திட்டம் 'தியான்வென்-1'
  • சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) தனது முதல் செவ்வாய் கிரக ஆய்வு பயணத்தை தியான்வென்-1 (Tianwen-1) என்ற பெயரில் அறிவித்துள்ளது. 
  • இனி, சீனாவின் அனைத்து கிரக பயணத்திட்டங்களும் 'தியான்வென் தொடர்' (Tianwen series) என்று பெயரிடப்படும் அறிவித்துள்ளது.
  • 2020 ஏப்ரல் 24-அன்று, சீனா தனது தேசிய விண்வெளி தின (National Space Day) கொண்டாட்டத்தில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
  • சீனா தனது முதல் செயற்கைக்கோள் டோங்ஃபாங்ஹாங் -1 (Dongfanghong-1) ஏவப்பட்டதைக் குறிக்கும் வகையில் விண்வெளி தினத்தை கொண்டாடுகிறது.
  • CNSA: Chinese National Space Administration.
விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் '60 செயற்கைகோள்கள்' 
  • அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ‘ஸ்டார் லிங்க்’ (Starlink satellites) என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின்படி 2024-ம் ஆண்டுக்குள் 12 ஆயிரம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் முடிவு செய்துள்ளது.
  • 2020 மே மாதம் முதற்கட்டமாக தலா 260 கிலோ எடையிலான 60 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தியது. 
  • தற்போது 7-வது கட்டமாக மேலும் 60 செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏப்ரல் 23-அன்று விண்ணில் செலுத்தியது. புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து ‘பால்கான் 9’ ராக்கெட் மூலம் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
ஈரானின் முதல் இராணுவ செயற்கைக்கோள் "நூர்" 
  • ஈரான் நாடு, "நூர்" (Noor) என்ற தனது முதல் இராணுவ செயற்கைக்கோளை, குசேட் (Qased) என்ற ஏவு வாகனத்தின் மூலம் புவிசுற்றுப்பாதையில் ஏப்ரல் 22-அன்று ஈரானின் மிகப்பெரிய பாலைவனமான டாஷ்ட்-இ கவீரில் (Dasht-e Kavir) உள்ள ஒரு விண்வெளி மையத்திலிருந்து. செலுத்தியது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
காற்று சுத்திகரிப்பு மலர் - 'அந்தூரியம்' 
  • கேரளாவைச் சேர்ந்த வாசினி பாய் (Vasini Bai) என்ற பெண் கண்டுபிடிப்பாளர் 10 வகையான அந்தூரியம் (Anthurium) மலர்களை உருவாக்கியுள்ளார்.
  • அந்தூரியம் மலர் ஒரு உட்புற அலங்கார பயன்பாட்டிற்காக (Indoor Decorative) அதிக சந்தை மதிப்பைக் கொண்டது. மேலும் காற்று சுத்திகரிப்பு (Air Purifying) தன்மை கொண்டது இந்த மலர் ஆகும்.
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) இந்த மலரை காற்று சுத்திகரிப்பு தாவரப் பட்டியலில் air purifier plant சேர்த்துள்ளது.
  • அதன் முக்கிய பயன்பாட்டிற்கு அதிக சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. புதுமைப்பித்தன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நுட்பத்தின் அதிக தேவையை பூர்த்தி செய்ய முடியாததால், இம்மலர்களை அதிவேகமாக அதிக மலர்களை உருவாக்க தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை (National Innovation Foundation) அடியெடுத்து வைத்துள்ளது. 
  • பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IIHR) இவை உற்பத்தி செய்யப்பட உள்ளன. 
  • IIHR: Indian Institute of Horticultural Research (Bangalore).
இந்தியாவில் '20 ஆண்டுகளில் குறைவான காற்று மாசுபாடு' 
  • இந்தியாவில் காற்று மாசுபாடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA 2020 ஏப்ரல் 22-அன்று, அறிவித்துள்ளது.
  • தூசுபடலத்தின் அளவு: நாசா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2016 முதல் 2019 வரையிலான சராசரியுடன் ஒப்பிடும்போது 2020-ஆம் ஆண்டில் தூசுபடலத்தின் அளவு (Aerosol Optical Depth) மிகக் குறைவு ஆகும், 2016-இல் 0.7 ஆகவும், தற்போது 0.1 ஆவவும் உள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
நானோ-இயந்திரங்களை விவரணையாக்கும் 'Nano Blitz 3D' கருவி 
  • ஐதராபாத் நகரில் உள்ள, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், தூகள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மையம் (ARCI) நானோ-இயந்திர பொருட்களை விவரணையாக்கம் (Mapping) நானோ பிளிட்ஸ் 3D என்ற புதிய கருவியை (Nano Blitz 3D) உருவாக்கியுள்ளது.
  • ARCI: Advanced Research Centre for Powder Metallurgy and New Materials.
கர்நாடக அரசின் 'ஆப்தமித்ரா' மொபைல் செயலி - அறிமுகம் 
  • கொரானா வைரஸ் (COVID-19) தொற்றை எதிர்த்து கர்நாடக மாநில அரசு 'ஆப்தமித்ரா' (Apthamitra) மொபைல் செயலி மற்றும் ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. 
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 'வித்யாதான் 2.0' - அறிமுகம்
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020 ஏப்ரல் 22-அன்று, வித்யாதான் 2.0 (VidyaDaan 2.0) என்ற மின் கற்றல் தளத்தை e-learning தேசிய மெய்நிகர் உள்கட்டமைப்பு தளமான DIKSHA-வில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நாட்டில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இந்நேரத்தில் குழந்தைகள் எங்கும் எந்த நேரத்திலும் தங்கள் கற்றலைத் தொடர உதவும் வகையில் வித்யாதான் 2.0 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
  • DIKSHA: National Digital Infrastructure. 
தமிழ்நாடு நிகழ்வுகள்
ஆரோக்கியம் என்ற 'கபசுர குடிநீர் வழங்கும் திட்டம்'
  • தமிழ்நாட்டு பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்ற பின் உடல்நலத்தைப் பேணவும் ஏப்ரல் 23-அன்று ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரண பொட்டலங்கள் வழங்கப்பட்டது. 
சென்னை அம்மா உணவகங்களில் 'இலவச உணவு'
  • சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்திலும் இலவச உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
  • சென்னை மாநகர பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் உள்பட 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
  • இதுதவிர மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
விளையாட்டு நிகழ்வுகள்
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தூரதரான 'பி.வி.சிந்து'
  • இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து (P V Sindhu), “நான் பேட்மிண்டன்” (I am Badminton) என்ற உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் பிரச்சார தூதராக (Badminton World Federation campaign), 2020 ஏப்ரல் 22-அன்று நியமிக்கப்பட்டார்
  • இந்த பிரச்சாரம் பூப்பந்து வீரர்களுக்கு நேர்மை, தூய்மையான விளையாட்டை அர்ப்பணிப்பதற்கு ஒரு தளத்தை வழங்குகிறது. 
  • பி வி சிந்து தவிர, பல்வேறு நாடுகளின் வீரர்/வீராங்கனைகள் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் விவரம்: 
  • மைக்கேல் லி (கனடா) , ஹுவாங் யா கியோங் மற்றும் ஜெங் சி வீ (சீனா), வலெஸ்கா நோப்லாச் (ஜெர்மனி), சான் ஹோ யுயென் (ஹாங்காங்).
உலக விளையாட்டு போட்டிகள் 2022 (பர்மிங்காம்)
  • 2022 உலக விளையாட்டு போட்டிகள் (World Games 2022 Birmingham), அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் பர்மிங்காம் நகரில் 2022 ஜூலை 7 முதல் 17 வரை நடைபெறவுள்ளது.
முக்கிய தினங்கள்

ஏப்ரல் 14 - தேசிய தீயணைப்பு சேவை தினம் (National Fire Service Day, April 14 2020).

ஏப்ரல் 23 - ஆங்கில மொழி நாள் (English Language Day 23 April).

ஏப்ரல் 23 - ஸ்பானிஷ் மொழி நாள் (Spanish Language Day 23 April).

ஏப்ரல் 23 - (ஏப்ரல் நான்காவது வியாழன்) சர்வதேச ICT பெண்கள் தினம் (International Girls in ICT Day 23 April, fourth Thursday of April). 

ஏப்ரல் 23 - கோங்ஜோம் தினம் 
  • 2020 ஏப்ரல் 23, அன்று மணிப்பூர் மாநிலத்தில் "கோங்ஜோம் தினம்" (Khongjom Day) கடைபிடிக்கப்பட்டது. 
  • 1891 ம் ஆண்டு ஆங்கிலோ-மணிப்பூர் போரில் ஈடுபட்ட வீரர்களின் நினைவாக இந்த நிகழ்வு நடைபெற்றது. 
ஏப்ரல் 23 - சர்வதேச ICT பெண்கள் தினம் 
  • 2020 சர்வதேச ICT பெண்கள் தின கருப்பொருள்:‘Expand horizons, change attitudes’.
  • ICT: Information and Communication Technology.
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்
  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (National Panchayati Raj Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று இந்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது.
  • இது தேசிய உள்ளூர் சுயநிர்வாக நாள் (National Local Self-Government day) என்றும் அழைக்கப்படுகிறது. 1993-இல், இந்த நாளில், 73-வது அரசியலமைப்பு திருத்தம் சட்டம்-1992 நடைமுறைக்கு வந்தது.
ஏப்ரல் 24 - சர்வதேச அமைதிக்கான பன்னாட்டு பங்கேற்பு தினம் (International Day of Multilateralism and Diplomacy for Peace).


ஏப்ரல் 24 - உலக ஆய்வக விலங்குகள் தினம் (World day of laboratory animals, April 24 2020)

ஏப்ரல் 20-26, 2020 - ஆய்வக விலங்குகள் வாரம் (Lab Animal Week, 20th-26th April 2020)

ஏப்ரல் 25 - மலேரியா ஒழிப்பு தினம் 
  • ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ம் நாள் ‘மலேரியா ஒழிப்பு தினமாக’ (World Malaria Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகமெங்கும் மக்களுக்கு மலேரியா நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2020 உலக மலேரியா ஒழிப்பு தின கருப்பொருள்: “Zero malaria starts with me”
ஏப்ரல் 25 - சர்வதேச பிரதிநிதிகள் தினம்
  • 2020 ஏப்ரல் 25-அன்று, முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பிரதிநிதிகள் தினத்தைக் (International Delegate’s Day) கொண்டாடுகிறது. குறித்தது. சான் பிரான்சிஸ்கோ மாநாட்டின் (San Francisco Conference) 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
  • இது சர்வதேச அமைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Conference on International Organization) என்றும் அழைக்கப்பட்ட இந்த மாநாடு 1945 ஏப்ரல் 25-அன்று நடைபெற்றது.
Download this article as PDF Format
Previous Post Next Post