TNPSC Current Affairs April 2-3, 2020 (GK Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs 2nd and 3rd Arpil 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge Arpil 2 and April 3, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.

Current Affairs April 2-3, 2020 Download as PDF
TNPSC Current Affairs April 2-3, 2020 (GK Tamil) - Download as PDF
சர்வதேச நிகழ்வுகள்
'இந்தியா அப்ராட்' இந்திய செய்தித்தாள் அச்சுப்பதிப்பு - நிறுத்தம்
  • அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக வெளிவந்த 'இந்தியா அப்ராட்' (India Abroad) என்ற இந்திய செய்தித்தாள் அதன் அச்சுப்பதிப்பை சமீபத்தில் நிறுத்தியது.
  • இந்திய செய்திகளை மையமாகக் கொண்டு வெளிவந்த இந்த செய்தித்தாள், 1970-ஆம் ஆண்டில் இந்திய-அமெரிக்க வெளியீட்டாளர் கோபால் ராஜு (Gopal Raju) அவர்களால் நிறுவப்பட்டது.
கொரோனா வைரஸ்: இரண்டாம் உலகப்போருக்கு பின்பான பெரிய நெருக்கடி
  • ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், கொரோனா வைரசின் சமூக பொருளாதார தாக்கம் பற்றிய அறிக்கையை வெளியிட்டார். அவற்றின் விவரம்:
  • இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நாம் சந்திக்கும் மிகவும் சவாலான நெருக்கடி இந்த கொரோனா வைரஸ் பரவல் ஆகும்.
  • அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல் மைய புள்ளிவிவரப்படி இது 8.5 லட்சம் பேருக்கு அதிகமானோரை பாதித்திருக்கிறது.
  • 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள்.
  • ஐ.நா.சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் நாம் உலகளாவிய சுகாதார நெருக்கடியை சந்தித்து வருகிறோம்.
  • ஐ.நா.சபையின் 2 தீர்மானங்கள் கொண்டுவரவுள்ளது. அவற்றின் விவரம்:
  • ஒரு தீர்மானம், கொரோனா வைரஸ் தொற்று நோயை தணிக்கவும், கட்டுப்படுத்தவும், தோற்கடிக்கவும் தீவிரமான சர்வதேச ஒத்துழைப்பை கோருகிறது. மற்றொரு தீர்மானம் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராடுவதில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னணி பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
சீனா-சென்ஷேன் மாகாணத்தில் பூனை, நாய் - சாப்பிடத் தடைவிதிப்பு
  • சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் வூஹான் மாகாணத்தில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் சந்தை ஒன்றில் இருந்துதான் கரோனா வைரஸ், மிருகங்களிடம் இருந்து மனிதனுக்குப் பரவியுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து உடனடியாக வன விலங்குகள் விற்பனை மற்றும் உட்கொள்ளுதலுக்குத் தடை விதித்து சீன அரசாங்கம் உத்தரவிட்டது. இந்தத் தடையானது வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
LPG தடையின்றி வழங்க சவூதி அரேபியா உறுதி
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்தியாவுக்கு திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) தடையின்றி வழங்க சவூதி அரேபியா நாடு உறுதி அளித்துள்ளது.
  • நாடு முழுவதும் அமல்படுபடுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சமையல் எரிவாயு தேவை அதிகரித்ததால், வரவிருக்கும் நாட்களில் உள்நாட்டுத் தேவையை பூர்த்திசெய்வதற்காக LPG வழங்க சவுதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
திவால்தன்மை தீர்மானக் காலக்கெடு - 330 நாட்கள்
  • இந்திய திவால் மற்றும் திவால் வாரியத்தின் (IBBI) விதிமுறைகளின்படி, திவால் நிலை மற்றும் திவால் குறியீட்டு (Insolvency and Bankruptcy code regulations)
  • விதிமுறைகளின்படி, நொடித்துத் தீர்க்கும் செயல்முறைகளை நிறைவு (Insolvency Resolution Processes) செய்வதற்கான ஒட்டுமொத்த காலக்கெடு என்பது 330 நாட்கள் ஆகும்.
  • IBBI: Insolvency and Bankruptcy Board of India.
பிரதமா் மோடி மாநில முதல்வா்களுடன் 'காணொளி உரையாடல்'
  • கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வா்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடினார்.
கரோனா பாதிப்பு - விப்ரோ, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,125 கோடி நிதி
  • விப்ரோ நிறுவனம், விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து ரூ.1,125 கோடியை கரோனா சிகிச்சைக்கான உதவி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளன.
கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள் - கவுகாத்தி ஐ.ஐ.டி. உருவாக்கம்
  • தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுப்பதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் 2 ரோபோக்களை உருவாக்கும் பணியில் கவுகாத்தி IIT
  • ஈடுபட்டுள்ளது.
  • ஒரு ரோபோ, தனிமை வார்டுகளில் உணவு, மருந்து ஆகியவற்றை கொடுக்க உதவும். இதை ஆஸ்பத்திரியின் தேவைக்கேற்ப பழக்கப்படுத்திக் கொள்ள முடியும். மற்றொரு ரோபோ, தனிமை வார்டுகளில் மருந்து மற்றும் இதர கழிவுகளை அகற்ற உதவும்.
வேளாண் அமைச்சகத்தின் குறுகிய கால பயிர் கடன் வரம்பு - ரூ. 3 லட்சம்
  • வேளாண் அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஆண்டுக்கு இரண்டு சதவீதம் துணை மானியம் வழங்கல் திட்டத்தின் (Interest Subvention Scheme) கீழ் ஒரு விவசாயிக்கு ரூ. 3 லட்சம் குறுகிய கால பயிர் கடனாக வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு/விண்வெளி 
இராட்சத சூரிய துகள் புயல்களை ஆராயும் 'SunRISE' தொலைநோக்கி
  • இராட்சத சூரிய துகள் புயல்களை ஆய்வு செய்ய அமெரிக்காவின் NASA விண்வெளி அமைப்பு புதிய பணித்திட்டத்தை ‘சன்ரைஸ்’ (SunRISE) என்ற பெயரில் தொடங்க உள்ளது. 
  • இந்த SunRISE ஒரு பெரிய வானொலி தொலைநோக்கி ஆகும், இது கிரகங்கள் இடையே சூரியன் எவ்வாறு மாபெரும் விண்வெளி வானிலை புயல்களை உருவாக்குகிறது என்பது தொடர்பாக ஆராயவுள்ளது.
நிலவின் விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை அனுப்பும் 'ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)'
  • NASA-வின் நிலவை ஆராயும் விண்வெளி நிலையத்திற்கு சரக்கு மற்றும் பொருட்களை அனுப்பும் ஒப்பந்தத்தை ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) என்ற விண்வெளி நிறுவனம் பெற்றுள்ளது.
  • NASA-வின் நிலவை ஆராயும் விண்வெளி நிலையம் சந்திரனில் ஒரு நிரந்தர மையத்தை உருவாக்குவதையும், செவ்வாய் கிரகத்திற்கு எதிர்கால பயணங்களை ஏற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொருளாதார நிகழ்வுகள் 
தேசிய முதலீட்டு, உள்கட்டமைப்பு நிதியத்துடன் இணைந்த 'ஆசிய வளர்ச்சி வங்கி'
  • தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தின் (NIIF) நிதியில் சுமார் 100 மில்லியன் டாலர் சமமாக எந்த உலகளாவிய நிதி நிறுவனம் முதலீடு செய்ய, மணிலாவை தளமாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) முடிவு செய்துள்ளது.
  • ஆசிய வளர்ச்சி வங்கி, இந்திய அரசு மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவின் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தின் முதலீட்டாளராக இணைகிறது.
  • ADB: Asian Development Bank, AIIB: Asian Infrastructure Investment Bank, NIIF: National Investment and Infrastructure Fund.
ஏப்ரல் 1-முதல் நடைமுறைக்கு வந்த வங்கிகள் இணைப்பு
  • நாட்டில் உள்ள 10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக ஏப்ரல்-1 முதல் செயல்படத் தொடங்கின.
  • இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை இணைந்துள்ளன.
  • கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், காா்ப்பரேஷன் வங்கியும் இணைந்துள்ளன.
2019-இல் சதவீத நிறுவனங்களின் தரவு இழப்பு 42%
  • சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அக்ரோனிஸ் (Acronis) நிறுவனத்தின் ‘2020 உலக இணைய பாதுகாப்பு வார ஆய்வின்படி (World Cyber Protection Week Survey), கடந்த (2019) ஆண்டு 42 சதவீத நிறுவனங்கள் தரவு இழப்பை (Data Loss) சந்தித்தன என்று தெரியவந்துள்ளது.
COVID-19 உலக பொருளாதார மந்தநிலை: இந்தியா, சீனா பாதிக்கப்படாது
  • வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் (UNCTAD), சமீபத்திய அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயால் ஏற்படும் உலக பொருளாதார மந்தநிலையால் இந்தியாவும் சீனாவும் தவிர மற்ற வளருமுலக நாடுகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • UNCTAD: United Nations Conference on Trade and Development
FPI கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீட்டு புதிய வரம்பு - 15%
  • இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, வெளிநாட்டு பத்திர முதலீட்டாளர்கள் (FPI) கார்ப்பரேட் பத்திரங்களில் (Corporate Bonds) முதலீடு செய்வதற்கான புதிய வரம்பு 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • FPI: Foreign portfolio investors.
SBI காப்பீடு நிறுவனத்திற்கு 26% பங்குகளை விற்ற ஆஸ்திரேலிய IAG நிறுவனம்
  • நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஆஸ்திரேலிய பொது காப்பீட்டு நிறுவனம் (IAG), இந்தியாவின் SBI பொது காப்பீடு நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளது.
  • IAG, தனது 26 சதவீத பங்குகளை SBI பொது காப்பீட்டு நிறுவனத்திற்கு விற்றுள்ளது.
  • IAG: Insurance Australia General.
Ind-Ra-வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு - 3.6%
  • உள்நாட்டு சந்தை மதிப்பீட்டு நிறுவனமான இந்த்-ரா-வின் (Ind-Ra) சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2020-21 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
  • Ind-Ra: India Ratings and Research, GDP: Gross Domestic Product.
மாநாடுகள் 
இரண்டாவது சிறப்பு G20 FMCBG மெய்நிகர் கூட்டம் 2020
  • G20 அமைப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) பங்கேற்ற இரண்டாவது சிறப்பு மெய்நிகர் கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் 31 அன்று காணொலி கட்சி மூலம் பங்கேற்றார்.
  • சவூதி அரேபியா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், உலக பொருளாதாரத்தில் கொரோனா வைரஸின் (COVID-19) தாக்கம் குறித்த விவாதம் மற்றும் இதற்கு பதிலளிக்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • FMCBG: Finance Ministers and Central Bank Governors (FMCBG) virtual meeting-2020
அறிவியல் தொழில்நுட்பம்
புதிய காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள ‘Scitech park’
  • இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை காற்று சுத்திகரிப்பான் (Air Purifier) தயாரிக்க, ரூ. 1 கோடியை புனேவை தளமாகக் கொண்ட ‘Scitech park’ என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
  • 'சைடெக் பூங்கா' ஒரு புதிய காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, இது கொரோன வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் அரசின் 'PRAGYAAM' என்ற மொபைல் செயலி
  • ஜார்க்கண்ட் மாநில அரசு, ஊரடங்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இ-பாஸ் வழங்க 'PRAGYAAM' என்ற மொபைல் செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள் 
தமிழ்நாடு முழுவதும் 'கரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ள பகுதியாக' அறிவிப்பு
  • தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு ஏப்ரல் 1-அன்று அறிவித்துள்ளது.
  • கரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரிவு 76ன் படி தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம் 1897ன்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மருத்துவ சாதன உற்பத்தி - 30 சதவீதம் மானியம்
  • கரோனா நோய் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உற்பத்தியை தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 2-அன்று அறிவித்துள்ளார்.

விளையாட்டு நிகழ்வுகள்
டக்வொர்த் லூயிஸ் முறை - டோனி லூயிஸ் மறைவு
  • கிரிக்கெட் போட்டிகளில் டக்வொர்த் லூயிஸ் மழை விதிமுறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி லூயிஸ் (Tony Lewis) ஏப்ரல் 2-அன்று காலமானார். அவருக்கு வயது, 78.
  • 1999-ல் பிராங்க் டக்வொர்த் - டோனி லூயிஸ் ஆகிய இருவரும் கண்டுபிடித்த மழை விதிமுறையை DL என்கிற பெயரில் சர்வதேச கிரிக்கெட்டில் அமல்படுத்தியது ICC. கிரிக்கெட் ஆட்டங்களில் மழையால் ஆட்டம் தடைபடும்போது மீதமுள்ள ஓவர்களைக் கொண்டு ஆட்டத்தை முடிக்க டக்வொர்த் லூயிஸ் விதிமுறை உதவியது.
  • 2014-ல் ஆஸ்திரேலிய பேராசிரியர் ஸ்டீவ் ஸ்டேர்ன், டக்வொர்த் லூயிஸ் விதிமுறையில் சிறிய மாற்றம் கொண்டு வந்தார். இதையடுத்து புதிய மழை விதிமுறை டிஎல்எஸ் என மாற்றி அழைக்கப்படுகிறது.
  • DLS Method: Duckworth–Lewis method, Duckworth–Lewis–Stern method.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 2020 - ரத்து
  • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 2020 ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது.
  • கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்திலும் வேகமாக பரவுவதால் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் ளப் ஏப்ரல்-1அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
  • நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதற்கு முன்பு முதலாவது மற்றும் 2-வது உலகப்போரின் போது ரத்து செய்யப்பட்டது.
சர்வதேச மல்யுத்த தரவரிசை - பஜ்ரங் பூனியா 2-வது இடம்
  • சர்வதேச மல்யுத்த சம்மேளனம் ஏப்ரல் 1-அன்று வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் 65 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 2-வது இடம் வகிக்கிறார்.
  • 57 கிலோப்பிரிவில் இந்திய வீரர் ரவி தாஹியா 4-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய நபர்கள்
ஜப்பானிய நகைச்சுவை ஆளுமை கென் ஷிமுரா
  • ஜப்பானின் மூத்த நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா (Ken Shimura) கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 70 வயதில் சமீபத்தில் காலமானர்.
முக்கிய தினங்கள்
மார்ச் 30 - இராஜஸ்தான் தினம்
  • ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 30-அன்று ‘இராஜஸ்தான் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது.
  • இராஜஸ்தான் மாநிலம் மார்ச் 30, 1949 இல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்னர் ராஜ்புதானா என்று அழைக்கப்பட்ட அரசு உருவான நாளின் நினைவாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
  • பரப்பளவில் ராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாகும்.
  • இராஜஸ்தான், சுதந்திரத்திற்கு முன்னர் சுமார் 21 சிறிய மற்றும் பெரிய சுதேச மாநிலங்களை உள்ளடக்கி இருந்தது. ராஜஸ்தான் ஒரு ஒருங்கிணைந்த மாநிலமாக முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் 1948 ஏப்ரல் 18 அன்று தொடங்கப்பட்டது.
ஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
  • ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு ஆகும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக ஆட்டிசம் தினம் (World Autism Awareness Day 2020), ஏப்ரல் 2 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • ஆட்டிசம் என்பது மூளைத் தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாத காரணங்களால் அவர்களின் நடவடிக்கைகளில் காணப்படும் வித்தியாசங்கள் ஆட்டிசம் என்பதாகும்.
  • 2020 உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள் மையக்கருத்து (Theme): “வயதுவந்தோருக்கான மாற்றம்” (The Transition to Adulthood) என்பதாகும்.
ஏப்ரல் 2 - உலக குழந்தைகள் புத்தகத் தினம்
  • குழந்தைகளுக்காகத் தங்கள் நல்வாழ்வை அர்ப்பணித்த டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் நினைவாக, அவர் பிறந்த ஏப்ரல் 2-ந்தேதி உலகக் குழந்தைகள் புத்தகத் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • வாசிப்பு பழக்கத்தின் இன்றியமையாமையைக் குழந்தைகள்உணரச்செய்வது, இந்த நாளின் நோக்கமாகும்.
Download this article as PDF Format
Previous Post Next Post